செவ்வாய்க்கிழமை, மே 19
Shadow

விடா முயற்சி கோடங்கி விமர்சனம் 3/5

 

விடா முயற்சி கோடங்கி விமர்சனம்

 

 

அஜீத் நடிப்பில் மகிழ் திருமேனி இயக்கத்தில் லைகா தயாரிப்பில் இன்று ரிலீஸ் ஆன படம் விடா முயற்சி.

அஜீத் ஜோடியாக த்ரிஷா, அர்ஜுன் ஜோடியாக ரெஜினா கசெண்ட்ரா, ஆரவ் உட்பட பல நடித்திருக்கிறார்கள்.

ஒரு வரிக்கதை: காதலித்து செய்த கல்யாணம் கசந்து போகும் ஹீரோயின். ஹீரோயினை வழியனுப்ப போகும் வழியில் கடத்தப்படும் ஹீரோயினை மீட்கும் ஹீரோ. ஆங்கில பட பாணியில் முழுமையான ஆக்‌ஷன் த்ரில்லர் கதை.

அஜீத் ரொம்ப நாளைக்கு பிறகு ரொம்ப ஸ்டெயிலாக வருகிறார். உருகி உருகி காதலிக்க முயற்சிக்கிறார். காதல் மனைவியை கடத்தல்காரர்களிடம் இருந்து காப்பாற்ற அப்பாவியாக  கெஞ்சுகிறார்… ஒரு கட்ட்த்தில் ஆக்ரோஷமாக இறங்கி அடிக்கிறார். படு பயங்கரமாக கார் ஓட்டுகிறார்… கடைசியில் கட்த்தப்பட்ட மனைவியை மீட்டாரா? பிரிய நினைத்த மனைவி மீண்டும் சேர்ந்தாரா? என்பதை விறுவிறுப்பாக சொல்ல முயற்சித்திருக்கிறார் இயக்குனர் மகிழ்.

த்ரிஷா கொஞ்ச நேரமே வந்தாலும் வழக்கம் போலத்தான் ஸ்பெஷலாக எதுவும் அந்த ரோலுக்கு இல்லை.

ஆனால் வில்லன் அர்ஜுன் காதலியாக வரும் ரெஜினா குரூரத்திலும், வில்லத்தனத்திலும் ரசிக்க வைக்கிறார். ஆக்‌ஷன் கிங் அர்ஜுன் இன்னும் இளமையாகவே இருக்கிறார். ஆக்‌ஷனிலும் மிரட்டுகிறார். கிளைமாக்சில் ஷாக் கொடுக்கிறார்.

ஆரவ் நெகட்டிவ் ரோலுக்கு சரியான நபர்… இன்னும் அவரை பயன் படுத்தி இருக்கலாம் இயக்குனர்.

பாடலை விட இசை ஆங்கிலபடம் பார்க்கிற உணர்வை தருகிறது.

சந்தேகம்: இந்த கதையை கம்மி பட்ஜெட்டில் நம்மூர்லயே எடுத்திருக்கலாமே? அஜர்பைஜான் நாடு எதற்கு?

அஜீத் உட்பட நடித்த பலரும் ஓவர் ஆக்டிங் ஆக தோன்றியது எனக்கு மட்டுமா?

பல நேரங்களில் நாம் பார்ப்பது தமிழ் சினிமாவா அல்லது ஹாலிவுட் பட்த்தின் டப்பிங் படமா என யோசிக்கும் அளவுக்கு அநியாயத்துக்கு அஜர்பைஜான் மொழியும், ஆங்கில மொழி டயலாக் வருவதால்…

இயக்குனர் மகிழ்திருமேனியின் முந்தைய படங்களில் இருந்த அழுத்தமான திரைக்கதை இதில் மிஸ் ஆகி இருக்கிறது. மகிழ் இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டு முயற்சி எடுத்திருக்க வேண்டும்.

மொத்தத்தில் அஜீத்தின் விடாமுயற்சி முதல்பாதி சினிமா ரகம்… இரண்டாம் பாதி  ஆக்‌ஷன் அடிதடி ரகம்!

 

கோடங்கி

3/5

 

 

 

 

 

371 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன