வெள்ளிக்கிழமை, ஜூலை 3
Shadow

நாளை நமதே விமர்சனம்

 

நாளை நமதே விமர்சனம்

வெண்பா கதிரேசன் இயக்கத்தில் வெளியாகி உள்ள நாளை நமதே படத்தின் மைய கருவே பட்டியலின மக்களுக்கு அதிகாரம் மறுக்கப்படுவதும், ஆதீக்க சாதியின் அடக்குமுறைகளும்தான்.
கதைப்படி ஆண்டாண்டு காலமாக உள்ளாட்சி தேர்தல்களில் ஒரே சாதியை சேர்ந்தவரே தலைவராக ஏலம் எடுத்து வெற்றி பெற்று வருகிறார்.

இந்த சூழலில் அந்த உள்ளாட்சி தலைவர் பதவி பட்டியலினத்தவருக்காக ஒதுக்கப்படுகிறது. இதனால் அங்கே பெரும் மோதல் ஏற்ப்பட்டு பல உயிர்கள் பலியாகிறது.

அதனால் தேர்தல் நடைபெறாமல் மீண்டும் அது பொதுத் தொகுதி ஆகிறது.

பல ஆண்டுகளுக்கு பின் மீண்டும் அது தனித் தொகுதி ஆக அறிவிக்கப்படுகிறது.

இந்த முறையாவது தேர்தல் நடந்ததா? யார் வெற்றி பெற்றார்கள்? என்ன நடந்தது என்பதே நாளை நமதே படத்தின் கதை.

மதுமிதா மிக யதார்த்தமாக நடித்திருக்கிறார். இன்னும் பல கிராமங்களில் உள்ள தனித் தொகுதிகளின் நிலை இப்படி தான் இருக்கிறது என்பதை வெளிச்சம் போட்டு காட்ட முயற்சி செய்திருக்கிறார் இயக்குனர் வெண்பா கதிரேசன்.

தெரியாத முகங்கள் அதிகம் என்பதாலும், திரைக்கதையில் இன்னமும் கொஞ்சம் கவனம் செலுத்தி முக்கிய நடிகர்கள் நடித்திருந்தால் நாளை நமதே இன்னும் கவனம் பெற்றிருக்கும்.

சின்ன சின்ன குறைகள் லாஜிக் மீறுதல்கள் இருந்தாலும் சொல்ல வேண்டிய கதை தான் நாளை நமதே.

 

 

 

328 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன