சனிக்கிழமை, ஜூன் 13
Shadow

Tag: ஊரடங்கு

உணவின்றி தவித்த ஏழை மக்களுக்கு உதவிக்கரம் நீட்டிய நடிகை ஷகிலா!

உணவின்றி தவித்த ஏழை மக்களுக்கு உதவிக்கரம் நீட்டிய நடிகை ஷகிலா!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகைகள்
உணவின்றி தவித்த ஏழை மக்களுக்கு உதவிக்கரம் நீட்டிய நடிகை ஷகிலா! மலையாளத்தில் நடிகையாக அறிமுகமான ஷகிலா தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தியில் பல படங்களில் நடித்துள்ளார். கவர்ச்சி நடிகையாக அறியப்பட்ட இவரது, இமேஜை குக் வித் கோமாளி நிகழ்ச்சி முற்றிலும் மாற்றியது. இந்நிலையில், குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்குப் பின்னர் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் நடிகை ஷகிலா, தற்போது சமூக சேவையிலும் ஈடுபட்டு வருகிறார். ஊரடங்கு காரணமாக சாலையோரம் உணவின்றி தவிக்கும் ஏழை எளிய மக்களுக்கு உணவு வழங்கி உள்ளார். இது குறித்த புகைப்படங்களையும் அவர் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார். அந்த பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது: “உங்களுக்கு இருக்கும் இரண்டு கைகளில், ஒன்றை உங்களுக்காகவும், மற்றொரு கையை பிறருக்கு உதவுவதற்காகவும் பயன்படுத்துங்கள். உங்களால் இயன்ற அளவுக்கு ஏழை எளிய மக்களுக்கு உதவி செய்யுங்கள்” என...
7,500 வியாபாரிகளுக்கு மாநகராட்சி அனுமதி- சென்னையில் புதிய திட்டம் நாளை முதல் அமல்!

7,500 வியாபாரிகளுக்கு மாநகராட்சி அனுமதி- சென்னையில் புதிய திட்டம் நாளை முதல் அமல்!

HOME SLIDER, NEWS, செய்திகள்
7,500 வியாபாரிகளுக்கு மாநகராட்சி அனுமதி- சென்னையில் புதிய திட்டம் நாளை முதல் அமல்! கொரோனா பரவாமல் இருப்பதற்காக தமிழக அரசு ஊரடங்கு உத்தரவை வருகிற 7-ந்தேதி வரை நீட்டித்துள்ளது. இந்த நிலையில் பொது மக்களுக்கு தேவையான மளிகை பொருட்களை உள்ளாட்சி அமைப்புகளின் அனுமதியுடன் அந்தந்த பகுதிகளில் உள்ள மளிகை கடை வியாபாரிகள் தங்களது வாகனங்கள் மற்றும் தள்ளுவண்டிகள் மூலம் நாளை (திங்கட்கிழமை) முதல் தெருத்தெருவாக சென்று விற்பனை செய்ய அரசு அனுமதி அளித்துள்ளது. பொதுமக்கள் தங்கள் வீடுகளுக்கு அருகே உள்ள கடைகளுக்கு சென்று சீட்டு எழுதி கொடுத்து விட்டு வந்து விடலாம் அல்லது செல்போன் மூலமும் மளிகைப் பொருட்களை வாங்க தகவல் கொடுக்கலாம். கடைக்காரர்கள் இந்த பொருட்களை வீடுகளுக்கே சென்று வழங்குவதற்கும் அரசு அனுமதி கொடுத்துள்ளது. காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை மளிகைப் பொருட்களை விநியோகிக்க நேரம் ஒதுக்கி உள்ளது. இ...
ஆதரவற்றோர் இல்லத்துக்கு 1 மாதத்துக்கு தேவையான உணவு பொருட்களை வழங்கிய போலீஸ் தம்பதி!

ஆதரவற்றோர் இல்லத்துக்கு 1 மாதத்துக்கு தேவையான உணவு பொருட்களை வழங்கிய போலீஸ் தம்பதி!

HOME SLIDER, NEWS, செய்திகள்
ஆதரவற்றோர் இல்லத்துக்கு 1 மாதத்துக்கு தேவையான உணவு பொருட்களை வழங்கிய போலீஸ் தம்பதி! தமிழகத்தில் கொரோனா 2ம் அலை மிக தீவிரமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த அரசு ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இதனால் ஏழை எளிய மக்கள் மற்றும் ஆதரவற்றோர் உணவுக்கே கஷ்டப்படும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இவர்களுக்காக பல்வேறு தரப்பினரும் ஆதரவு கரம் நீட்டி வருகின்றனர். பல இடங்களில் தன்னார்வலர்கள் தங்களால் இயன்ற உதவிகளை செய்து வருகின்றனர். இந்நிலையில் திண்டுக்கல்லைச் சேர்ந்த போலீஸ் தம்பதி தங்களது ஒரு மாத சம்பளத்தில் ஆதரவற்றோர் இல்லத்துக்கு தேவையான அனைத்து பொருட்களையும் வழங்கி உதவிக்கரம் நீட்டியுள்ளனர். https://www.youtube.com/watch?v=VeXk-fRr0tM திண்டுக்கல் அருகே உள்ள கல்லடிப்பட்டியைச் சேர்ந்தவர் அன்பழகன். இவர் அம்மையநாயக்கனூர் போலீஸ் நிலையத்திலும், இவரது மனைவி செல்வரத்தினம் விளா...
தமிழகத்தில் கடைகள் மூடப்பட்டன- பஸ், வாகனங்கள் ஓடினாலும் இயல்புநிலை பாதிப்பு!

தமிழகத்தில் கடைகள் மூடப்பட்டன- பஸ், வாகனங்கள் ஓடினாலும் இயல்புநிலை பாதிப்பு!

HOME SLIDER, NEWS, செய்திகள்
தமிழகத்தில் கடைகள் மூடப்பட்டன- பஸ், வாகனங்கள் ஓடினாலும் இயல்புநிலை பாதிப்பு! தமிழகத்தில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருவதையடுத்து தமிழக அரசு தொடர்ந்து பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. கடந்த 20-ந்தேதி முதல் இரவு நேர ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில் ஞாயிற்றுக்கிழமை தோறும் முழு ஊரடங்கு கடை பிடிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இன்று (வியாழக்கிழமை) முதல் கூடுதல் கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்துள்ளன. தனியாக செயல்படும் மளிகை, காய்கறி கடைகள் காலை 6 மணியில் இருந்து மதியம் 12 மணி வரை மட்டுமே திறந்திருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதன்படி இன்று காலையில் மளிகை மற்றும் காய்கறி கடைகள் மட்டுமே 6 மணியில் இருந்து செயல்பட்டன. இந்த கடைகளில் பொருட்களை வாங்குவதற்கு மக்கள் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது. மளிகை மற்றும் காய்கறி கடைகளிலும் 50 சதவீத வாடிக்கையாளர்கள் மட்டு...
10 சதவீதத்துக்கும் மேல் பாதிப்புள்ள மாவட்டங்களில் முழு ஊரடங்கு வேண்டாம்- மத்திய அரசு அறிவுறுத்தல்!

10 சதவீதத்துக்கும் மேல் பாதிப்புள்ள மாவட்டங்களில் முழு ஊரடங்கு வேண்டாம்- மத்திய அரசு அறிவுறுத்தல்!

HOME SLIDER, NEWS, செய்திகள்
10 சதவீதத்துக்கும் மேல் பாதிப்புள்ள மாவட்டங்களில் முழு ஊரடங்கு வேண்டாம்- மத்திய அரசு அறிவுறுத்தல்! நாடுமுழுவதும் 10 சதவீதத்துக்கு மேல் கொரோனா தொற்று பாதிப்பு உள்ளதாக சுமார் 150 மாவட்டங்கள் கண்டறியப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் 6 மாவட்டங்கள் அந்த பட்டியலில் இடம்பெற்று உள்ளன. இந்த மாவட்டங்களில் கொரோனாவை கட்டுப்படுத்தினால் 2-வது அலை பரவலை தடுத்து நிறுத்தி விடலாம் என்று மத்திய அரசு கருதுகிறது. இதுதொடர்பாக கடந்த சில தினங்களாக மத்திய அரசும், மாநில அரசுகளும் தீவிர ஆலோசனை நடத்தி வருகின்றன. 150 மாவட்டங்களிலும் முழு ஊரடங்கு கொண்டு வரப்படலாம் என்று கடந்த 2 நாட்களாக தகவல்கள் வெளியானது. முழு ஊரடங்கு அமல்படுத்தப்படாவிட்டால் முன்பு போல பச்சை, சிவப்பு, மஞ்சள் என 3 மண்டலங்களாக மாவட்டங்களை பிரித்து அதற்கேற்ப நடவடிக்கைகளை மேற்கொள்ள திட்டமிடப்படுவதாக கூறப்பட்டது. இந்தநிலையில் மாநிலங்களுக்கு நேற்று இர...
தமிழகத்தில் முழு ஊரடங்கு – எந்தெந்த பணிகளுக்கு அனுமதி?

தமிழகத்தில் முழு ஊரடங்கு – எந்தெந்த பணிகளுக்கு அனுமதி?

HOME SLIDER, NEWS, செய்திகள்
தமிழகத்தில் முழு ஊரடங்கு - எந்தெந்த பணிகளுக்கு அனுமதி? தமிழகத்தில் கொரோனாவை கட்டுப்படுத்துவதற்காக இன்று அமலில் இருக்கும் முழு ஊரடங்கில் அரசு விலக்கு அளித்துள்ள பணிகள் விவரம் வருமாறு: பால் வினியோகம், தினசரி பத்திரிகை வினியோகம் வழக்கம்போல் நடைபெறலாம். ஊடகம் மற்றும் பத்திரிகைத் துறையினர் வழக்கம்போல் பணியாற்றலாம். மருத்துவமனைகள், மருத்துவ பரிசோதனை கூடங்கள், மருத்தகங்கள், ஆம்புலன்ஸ் மற்றும் அமரர் ஊர்தி சேவைகள் போன்ற மருத்துவத்துறை சார்ந்த பணிகள் நடைபெறலாம். அனைத்து சரக்கு வாகனங்கள், விவசாயிகளின் விளைப்பொருட்களை எடுத்து செல்லும் வாகனங்கள், பெட்ரோல்-டீசல், எல்.பி.ஜி. கியாஸ் போன்ற எரிபொருளை எடுத்துச் செல்லும் வாகனங்கள் வழக்கம்போல் இயங்கலாம். தடையின்றி தொடர்ந்து செயல்பட வேண்டிய தொடர் செயல்முறை தொழிற்சாலைகள் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள் செயல்படலாம். ஓட்டல்...
தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு – மின்சார ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட வாய்ப்பு!

தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு – மின்சார ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட வாய்ப்பு!

HOME SLIDER, NEWS, செய்திகள்
தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு - மின்சார ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட வாய்ப்பு! தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நேற்று முன்தினம் 10 ஆயிரத்தைக் கடந்து, பொதுமக்கள் மத்தியில் பீதியைக் கிளப்பியது. முககவசம் அணிவதை தீவிரப்படுத்த அபராதம் உள்ளிட்ட நடவடிக்கைகள் ஒரு பக்கம் நடந்தாலும், மற்றொரு பக்கம் தடுப்பூசி போடும் பணிகளும் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. என்றாலும், கொரோனா பரவல் தீவிரத்தைக் கட்டுப்படுத்தமுடியாத நிலை ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து, ஏற்கனவே உள்ள கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்த முடிவு எடுக்கப்பட்டது. அதன் அடிப்படையில், இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் தமிழகம் முழுவதும் இரவு நேர ஊரடங்கு விதிக்கப்பட இருக்கிறது. இந்த ஊரடங்கு இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை அமலில் இருக்கும். இந்த நேரத்தில், அரசு மற்றும் தனியார் பஸ் போக்குவரத்து, வாடகை கார், ஆட்டோ மற்றும் தனியார் வா...
ஊரடங்கை மீறி காரில் ஊர் சுற்றிய மந்திரி மகனை தடுத்து நிறுத்திய  பெண் போலீஸ் இடமாற்றம்!

ஊரடங்கை மீறி காரில் ஊர் சுற்றிய மந்திரி மகனை தடுத்து நிறுத்திய பெண் போலீஸ் இடமாற்றம்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், வீடியோ
ஊரடங்கை மீறி காரில் சுற்றிய மந்திரி மகனை மடக்கிய பெண் போலீஸ் மீது நடவடிக்கை எடுத்து சர்ச்சையில் சிக்கிய குஜராத் போலீஸ்!   குஜராத்தில் ஊரடங்கை மீறி இரவு நேரத்தில் வெளியே வந்த பாஜக அமைச்சர் மகனிடம் பெண் காவலர் ஆவேசமாக பேசிய வீடியோ வைரலாகியுள்ளது.. அதாவது குஜராத்தைச் சேர்ந்த ஹெல்த் மினிஸ்டர் குமார் கனானி.. இவரோட மவன் பிரகாஷ் கனானி... போன புதன்கிழமை இவர் காரில் ஊரை சுற்றி வந்துருக்கான்.. அந்த காரில் ஃப்ரண்டுகளும் இருந்துருக்கானுஹ.. லாக்டவுன் விதிகளை மீறி, ரொம்ப நேரமாக சுற்றிக் கொண்டு இருக்கவும், அந்த காரை வாகன போலீசார் தடுத்து நிறுத்தி விசாரித்தனர். விசாரணை செஞ்சது சுனிதா என்ற லேடி போலீஸ்.. இதனால் ஆத்திரமடைந்த பிரகாஷ், 'நான் யார் தெரியுமா?.. எம்எல்ஏ மகன்' என்றார்.. உடனே சுனிதா, "நீ யாரா வேணும்னாலும் இருந்துட்டு போ.. எம்எல்ஏ மகன்-ன்னா, உனக்கு கொரோனா வராதா? லாக்டவுனில் இப்படி தே...
ஊரடங்கு விதி மீறல் 7.63 கோடி அபராதம் வசூல்!

ஊரடங்கு விதி மீறல் 7.63 கோடி அபராதம் வசூல்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  ஊரடங்கு விதி மீறல் 7.63 கோடி அபராதம் வசூல்! கொரானா வைரஸ் பரவலை தடுக்க தமிழகம் உள்பட நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது.  இந்த உத்தரவு வரும் 31ந்தேதி வரை அமலில் இருக்கும்.  தமிழகத்தில் உள்ள 144 தடை உத்தரவை மீறி பல இடங்களில் மக்கள் வாகனங்களில் சென்று வருகின்றனர். அத்தகைய நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது நடவடிக்கை எடுக்கப்படுகிறது. வாகனங்களில் சுற்றினால், அந்த வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு, அபராதமும் விதிக்கப்படுகிறது. இந்த நிலையில், 144 தடை உத்தரவை மீறியதாக தமிழகம் முழுவதும் 5 லட்சத்து 26 ஆயிரத்து 507 பேர் கைதாகி விடுதலை செய்யப்பட்டு உள்ளனர்.  ஊரடங்கு உத்தரவை மீறியதாக 4 லட்சத்து 94 ஆயிரத்து 770 வழக்குகள் இதுவரை பதிவாகியுள்ளன. தமிழகம் முழுவதும் 4 லட்சத்து 20 ஆயிரத்து 688 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.  இதுவரை ரூ.7.63 கோடி அபராதம்...
மே18ல் பொது போக்குவரத்து தொடங்க வாய்ப்பு!?

மே18ல் பொது போக்குவரத்து தொடங்க வாய்ப்பு!?

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
    மே17க்கு பின் பொது போக்குவரத்து தொடங்க வாய்ப்பு!? கொரானா பரவலை தடுக்க பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக பொது போக்குவரத்து முடங்கி உள்ளது. இந்த நிலையில் வரும் 17ம் தேதியுடன் 3ம் கட்ட ஊரடங்கு முடிவுக்கு வருகிறது. அடிப்படை தேவைகள், வேலையில்லா பணியாளர்கள் , கடுமையாக உயர்ந்து வரும் விலைவாசி ஆகியவைகளால் மீண்டும் ஊரடங்கு நீடிக்கப்பட்டால் அது பெரும் சிக்கலுக்கு வழி வகுத்து விடும் என்பதால் சில கட்டுப்பாடுகளோடு ஊரடங்கு விலக்கிக் கொள்ளப்படலாம் என தெரிகிறது. தமிழக போக்குவரத்து கழகங்களுக்கு, போக்குவரத்து துறை செயலாளர் மூலமாக சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அதில், தமிழகத்தில் பொது முடக்கம் முடிவடையும் போது 50% பேருந்துகளை இயக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஓட்டுனர் மற்றும் நடத்துனருக்கு முகக்கவசம், கையுறை மற்றும் சானிட்டைசர் ஆகியவற்றை வழங்க வேண்டும் என்றும் அறிவுறுத...