சனிக்கிழமை, ஜூன் 13
Shadow

Tag: திமுக

கொரானா கால ஊழலை அம்பலப்படுத்தியதால் RS.பாரதி கைது- ஸ்டாலின் கண்டனம்

கொரானா கால ஊழலை அம்பலப்படுத்தியதால் RS.பாரதி கைது- ஸ்டாலின் கண்டனம்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  கொரானா கால ஊழலை அம்பலப்படுத்தியதால் RS.பாரதி கைது- ஸ்டாலின் கண்டனம் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில் எடப்பாடி போன்றவர்களின் கைது சலசலப்புக்கு எல்லாம் திமுக என்றைக்கும் அஞ்சாது என குறிப்பிட்டுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- மூன்று மாதங்களுக்கு முன்பு கொடுக்கப்பட்ட ஒரு புகாரை தூசுதட்டி எடுத்து அதிகாலையில் திமுகவின் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி எம்பியை வன்கொடுமை தடுப்பு சட்டத்தின்கீழ் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கைது செய்திருக்கிறார். அன்பகம் உள்ளரங்கத்தில் பேசியதாக ஒரு சர்ச்சையை எழுப்பி, அது தொடர்பாக ஆர்.எஸ்.பாரதி விளக்கம் அளித்து மனப்பூர்வமான வருத்தமும் தெரிவித்துள்ள நிலையில் கைது செய்யப்பட்டிருக்கிறார். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேல...
ஆர்.எஸ்.பாரதி கைது… பாஜகவில் இணைந்த வி.பி துரைசாமி… திமுக பரபரப்பு!

ஆர்.எஸ்.பாரதி கைது… பாஜகவில் இணைந்த வி.பி துரைசாமி… திமுக பரபரப்பு!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
    ஆர்.எஸ்.பாரதி கைது... பாஜகவில் இணைந்த வி.பி துரைசாமி... திமுக பரபரப்பு! தி.மு.க. அமைப்பு ஆர்.எஸ்.பாரதி இன்று காலை திடீரென கைது செய்யப்பட்டார். கலைஞர் வாசகர் வட்ட விழாவில் கலந்து கொண்டு ஆர்.எஸ். பாரதி பேசிய போது சர்ச்சை கருத்தை பேசியதால் கைதாம். அந்த கூட்டத்தில் அவர் நீதிபதிகள் நியமனம் தொடர்பாக தெரிவித்த கருத்துக்கள், தாழ்த்தப்பட்ட மக்களை அவமதிக்கும் வகையில் இருந்ததாக குற்றம் சாட்டப்பட்டிருந்தது. இதுதொடர்பாக, ஆதி தமிழர் மக்கள் கட்சி தலைவர் கல்யாண சுந்தரம் தேனாம்பேட்டை போலீசில் புகார் அளித்தார். அதில் ஆர்.எஸ்.பாரதி மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதையடுத்து, ஆர்.எஸ். பாரதி மீது தேனாம்பேட்டை போலீசார் எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்நிலையில், ஆலந்தூரில் உள்ள ஆர்.எஸ்.பா...
மனிதநேயத்திற்கும் மனிதாபிமானத்திற்கும் மதிப்பளித்து ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.5 ஆயிரம் வழங்குங்கள் – ஸ்டாலின் அறிக்கை

மனிதநேயத்திற்கும் மனிதாபிமானத்திற்கும் மதிப்பளித்து ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.5 ஆயிரம் வழங்குங்கள் – ஸ்டாலின் அறிக்கை

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
மனிதநேயத்திற்கும் மனிதாபிமானத்திற்கும் மதிப்பளித்து ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.5 ஆயிரம் வழங்குங்கள் - ஸ்டாலின் அறிக்கை தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- கொரானா நோய்த் தொற்றினால் கடந்த மூன்று மாதங்களாக வாழ்வாதாரத்தை அடியோடு தொலைத்துவிட்டுத் துயரத்தில் மூழ்கியிருக்கும் ஏழை-எளிய மக்கள், புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், சிறு குறு நடுத்தர நிறுவனங்களின் தொழிலாளர்கள், விவசாயிகள், நடுத்தரப் பிரிவு மக்கள் ஆகியோருக்கு, நெருக்கடி மிகுந்த இந்தக் காலக்கட்டத்தில் கூட மனிதநேயத்துடன் உதவி செய்ய மத்திய பா.ஜ.க. அரசு மனமிரங்கவில்லை என்பது உள்ளபடியே மிகுந்த வேதனையளிக்கிறது. மாநிலங்கள் வரலாறு காணாத நிதி நெருக்கடியில் சிக்கிச் சீரழிந்து கிடக்கின்றன. ஒவ்வொரு மாநிலமும் ஒரு லட்சம் கோடி வரை நிவாரணம் வேண்டும் என்று கோரியுள்ள நிலையில் மாநில நிதி ஆதாரத்தை வலுப்படுத்த ஏற்ற...
சென்னையில் பிரபாகரன் கைதின் போது காப்பாற்றியது கலைஞரா? வரலாறை மாத்தாதீங்கப்பா ஆதங்கப்படும் பத்திரிகையாளர் ஏகலைவன்

சென்னையில் பிரபாகரன் கைதின் போது காப்பாற்றியது கலைஞரா? வரலாறை மாத்தாதீங்கப்பா ஆதங்கப்படும் பத்திரிகையாளர் ஏகலைவன்

HOME SLIDER, NEWS, politics, உலக செய்திகள், செய்திகள்
    வரலாறு தெரியலைன்னா கேட்டாவது தெரிந்து கொள்ளுங்கப்பு. பா. ஏகலைவன் அவர்களின் பதிவு. என் பெயர் #கரிகாலன் என்கிற... 19.5.1982 அன்று #சென்னை_பாண்டிபஜாரில் நடந்த துப்பாக்கிக் சண்டைக்கு முன்பு... #மயிலாப்பூரில் உள்ள சாலைத் தெருவில் தான் பிரபாகரன் தங்கிருந்தார். அதற்கு முன்பு வேறு சில இடங்களில் இருந்தார்கள். (கைதுக்கு பிந்தைய காலத்தில் இந்திராநகரிலும், #திருவான்மீயூரிலும் இருந்தார்கள்). அந்த ஏற்பாட்டை எல்லாம் செய்தது #பழ_நெடுமாறன் அவர்களும், அவரோடு இருந்த வழக்கறிஞர் கே.எஸ். #ராதாகிருஷ்ணனும்தான். அதன் பிறகுதான், வழக்கறிஞர் கே.எஸ். ராதாகிருஷ்ணன் தங்கியிருந்த மயிலாப்பூர் சாலைத்தெருவிற்கு இடமாற்றமானார் தலைவர். அப்போது #முகுந்தன் என்கிற #உமா_மகேஸ்வரனுக்கும், #தலைவர்_பிரபாகரன் அவர்களுக்கும் முரண்பாடு முற்றி மோதலில் நகர்ந்துகொண்டிருந்தது. உமா மகேஸ்வரன் #கோடம்பாக...
திமுகவிலிருந்து கே.பி.ராமலிங்கம் டிஸ்மிஸ் – ஸ்டாலின் அதிரடி

திமுகவிலிருந்து கே.பி.ராமலிங்கம் டிஸ்மிஸ் – ஸ்டாலின் அதிரடி

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
    திமுகவிலிருந்து கே.பி.ராமலிங்கம் டிஸ்மிஸ் - ஸ்டாலின் அதிரடி திமுக விவசாய அணி மாநில செயலாளராக இருந்த கே.பி.ராமலிங்கம் சமீபத்தில் அந்த பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டார். அனைத்துக் கட்சி கூட்டம் நடத்துவது தொடர்பான விஷயத்தில், கட்சி தலைமைக்கு எதிராக கருத்து தெரிவித்திருந்தார். இந்த சூழலில் அவரது பதவி பறிக்கப்பட்டது. இதற்கிடையே, கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் கே.பி.ராமலிங்கம் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார் என அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் கடந்த 2-ம் தேதி அறிவித்தார்.   மேலும், கட்சியின் கட்டுப்பாட்டை மீறியும், கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் நடந்து கொண்டதாலும் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதாக ஸ்டாலின் தெரிவித்தார். இந் நிலையில், தி.மு.க.வில் இருந்து கே.பி.ராமலிங்கத்தை டிஸ்மிஸ் செய்து மு.க.ஸ்டாலின...
இந்த சூழலில்கூட சந்தர்ப்பவாத அரசியல் செய்து இரட்டை வேடம் போடுகிறார் ஸ்டாலின் – முதல்வர் பழனிச்சாமி காட்டமான பதில்

இந்த சூழலில்கூட சந்தர்ப்பவாத அரசியல் செய்து இரட்டை வேடம் போடுகிறார் ஸ்டாலின் – முதல்வர் பழனிச்சாமி காட்டமான பதில்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
      கொரானா தடுப்பு நடவடிக்கைகளில் தன்னலமற்று பணியாற்றுகிறவர்களை கொச்சைப்படுத்தும் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் - முதல்வர் பழனிச்சாமி பதில் அறிக்கை கொரானா தடுப்பு நடவடிக்கைகளில் தமிழக அரசு மெத்தனமாக இருப்பதாக எதிர்க் கட்சித் தலைவர் ஸ்டாலின் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு கடிதம் எழுதி இருந்தார். அதற்கு முதல்வர் பழனிச்சாமி பதில் அளித்து அறிக்கை வெளியிட்டார். அதில் கூறியுள்ளதாவது: இந்தியாவில் கொரானா வைரஸ் நோய்த் தொற்று முதன் முதலாக கேரளாவில் வந்தபோதே, அ.தி.மு.க. அரசு அனைத்து விதமான முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் எடுத்து வருகின்றது. நோய்த் தொற்று சம்பந்தமாக நாள்தோறும் நடைபெறும் தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் புள்ளி விவரங்கள் எந்தவித ஒளிவுமறைவும் இன்றி வெளியிடப்பட்டு வருகின்றது. அது மட்டுமல்லாமல், மூத்த அதிகாரிகள் த...
திமுகவை கூட்டத்துக்கு அழைத்து மு.க.ஸ்டாலினிடம் தொலைபேசியில் பேசிய பிரதமர் மோடி!

திமுகவை கூட்டத்துக்கு அழைத்து மு.க.ஸ்டாலினிடம் தொலைபேசியில் பேசிய பிரதமர் மோடி!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
    திமுகவை கூட்டத்துக்கு அழைத்து மு.க.ஸ்டாலினிடம் தொலைபேசியில் பேசிய பிரதமர் மோடி! கொரோனா பாதிப்பை தொடர்ந்து மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து மாநில முதல்-மந்திரிகளுடன் பிரதமர் மோடி அவ்வப்போது ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த நிலையில், வருகிற 8ந்தேதி புதன்கிழமை காலையில் நாடு முழுதும் உள்ள எதிர்க்கட்சித் தலைவர்களுடன் ஆலோசனை மேற்கொள்ள இருக்கிறார். பாராளுமன்றத்தில் 5 எம்.பி.க்களுக்கு மேல் இருக்கும் கட்சிகளின் நாடாளுமன்ற குழு தலைவர்களுடன் புதன்கிழமை காலை 11 மணிக்கு வீடியோ கான்பரன்ஸ் மூலம் பிரதமர் மோடி ஆலோசனை நடத்துகிறார். நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருப்பதை தொடர்ந்து எழுந்துள்ள அசாதாரணமான சூழ்நிலைகள் குறித்து விவாதிக்கவும் எதிர்க்கட்சி தலைவர்களின் கருத்தை கேட்கவும் திட்டம். இந்நிலையில், தி.மு.க. தலைவர் ஸ்டாலினிடம், தொலைபேசியில் பேசி உட...
தமிழகத்தில் காலியாகும் மேல்சபை எம்.பி.தேர்தலில் அதிமுக, திமுக சார்பில் போட்டியிட்ட 6 பேரும் வெற்றி!

தமிழகத்தில் காலியாகும் மேல்சபை எம்.பி.தேர்தலில் அதிமுக, திமுக சார்பில் போட்டியிட்ட 6 பேரும் வெற்றி!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
    தமிழகத்தில் காலியாகும் மேல்சபை எம்.பி.தேர்தலில் அதிமுக, திமுக சார்பில் போட்டியிட்ட 6 பேரும் வெற்றி! பாராளுமன்ற மாநிலங்களவையில் தற்போது எம்.பி.க்களாக இருக்கும் 55 பேரின் பதவிக்காலம் அடுத்த மாதம் (ஏப்ரல்) 2-ம் தேதியுடன் முடிவடைகிறது. தமிழகத்தில் இருந்து மாநிலங்களவை உறுப்பினர்களாக இருக்கும் திருச்சி சிவா (தி.மு.க.), டி.கே.ரங்கராஜன் (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு), சசிகலா புஷ்பா (அ.தி.மு.க.), விஜிலா சத்யானந்த் (அ.தி.மு.க.), மேட்டுப்பாளையம் செல்வராஜ் (அ.தி.மு.க.), முத்துக்கருப்பன் (அ.தி.மு.க.) ஆகிய 6 பேரின் பதவிக்காலமும் நிறைவடைகிறது. இதற்கிடையே, மாநிலங்களவை தேர்தலுக்காக தமிழகத்தில் அ.தி.மு.க. சார்பில் கே.பி.முனுசாமி, தம்பிதுரை, ஜி.கே.வாசன் மற்றும் தி.மு.க. சார்பில் திருச்சி சிவா, என்.ஆர்.இளங்கோ மற்றும் அந்தியூர் செல்வராஜ் ஆகியோர் போட்டியிட்டனர், இந்நிலையில், மாநி...
தமிழகத்தில் இருந்து மேல்சபை எம்பிக்களாக திமுக, அதிமுக சார்பில் 6 பேர் தேர்வு!

தமிழகத்தில் இருந்து மேல்சபை எம்பிக்களாக திமுக, அதிமுக சார்பில் 6 பேர் தேர்வு!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  தமிழகத்தில் இருந்து மேல்சபை எம்பிக்களாக திமுக, அதிமுக சார்பில் 6 பேர் தேர்வு! தமிழகத்தை சேர்ந்த பாராளுமன்ற மேல்சபை எம்பிக்கள் 6 பேரின் பதவிகாலம் முடிவடைந்ததால் தற்போது உள்ள உறுப்பினர்கள் அடிப்படையில் திமுக, அதிமுக சார்பில் தலா 3 பேரை தேர்வு செய்யும் நிலை ஏற்பட்டது. திமுக சார்பில் திருச்சி சிவா, இளங்கோ, அந்தியூர் செல்வராஜ் ஆகியோர் அறிவிக்கபட்டனர். அதிமுக சார்பில் கே.பி.முனுசாமி, தம்பிதுரை இவர்களோடு ஜி.கே.வாசன் ஆகியோர் அறிவிக்கப்பட்டுள்ளனர். ஜி.கே.வாசன், தம்பிதுரை இருவரும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து வாழ்த்து பெற்றனர்....
திமுகவில் துரைமுருகன், ஆ.ராசாவுக்கு புதிய பதவிகள்!

திமுகவில் துரைமுருகன், ஆ.ராசாவுக்கு புதிய பதவிகள்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  திமுகவை பொறுத்தவரை கட்சித் தலைவர் பதவிதான் முதன்மையானதாக இருந்தாலும்  பொதுச்செயலாளர் பதவி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படும். கட்சித் தலைவருக்கு அடுத்த நிலையில் அதிகாரம் கொண்ட பதவியாகும். 1977-ம் ஆண்டில் இருந்து பொதுச்செயலாளராக க.அன்பழகன் இருந்து வந்தார். கிட்டத்தட்ட 43 ஆண்டுகள் அசைக்க முடியாத அளவுக்கு அந்த பதவியில் நீடித்து வந்த அவர் காலமானதைத் தொடர்ந்து அவர் வகித்த  பொதுச்செயலாளர் பதவி யாருக்கு கொடுக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இதில் கட்சியில் அனுபவம் வாய்ந்த மூத்த உறுப்பினராக உள்ள கட்சியின்  பொருளாளர் துரை முருகனுக்கு பொதுச்செயலாளர் பதவி வழங்கப்படும் என கூறப்படுகிறது. அதே நேரம் ஸ்டாலின் நிழலாக எப்போதும் அவரோடே இருந்து மிக முக்கியமான நிகழ்வுகளில் அதிரடியாக செயல்படும் ஆ.ராசாவும் பொதுச் செயலாளர் போட்டியில் இருப்பதாக தெரிகிறது. துரைமுருகனை போட்டியின்ற...