புதன்கிழமை, ஏப்ரல் 29
Shadow

Tag: விஷ்ணு விஷால்

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் படத்தில் இணையும் பிரபல நடிகை!

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் படத்தில் இணையும் பிரபல நடிகை!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
2012-ல் வெளியான 3 படம் மூலம் இயக்குனராக ஐஸ்வர்யா ரஜினிகாந்த் அறிமுகமானார். இந்த படத்தில் தனுஷ், சுருதிஹாசன் ஜோடியாக நடித்து இருந்தனர். அதனை தொடர்ந்து வை ராஜா வை படத்தையும் ஐஸ்வர்யா இயக்கினார். இதில் கவுதம் கார்த்திக், பிரியா ஆனந்த் ஜோடியாக நடித்தனர். அதன் பிறகு பயணி என்ற இசை வீடியோ ஆல்பத்தை இயக்கி நல்ல வரவேற்பை பெற்றார். இதனிடையே ஐஸ்வர்யா ரஜினிகாந்த் மீனு அரோரா தயாரிப்பில் 'ஓ சாத்தி சால்' என்ற இந்தி படத்தை இயக்கவுள்ளதாக தனது சமூக வலைதளத்தில் அறிவித்திருந்தார். ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தற்போது 'லால் சலாம்' என்ற படத்தை இயக்கவுள்ளார். இதில் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். நடிகர் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார். லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைக்கிறார். இப்படம் 2023-ஆம் ஆண்டு வெளியாகவுள்ளது. இதன்...
சத்யஜோதி ஃபிலிம்ஸ் T.G. தியாகராஜன் வழங்கும் பிளாக்பஸ்டர் வெற்றிக்கூட்டணி!

சத்யஜோதி ஃபிலிம்ஸ் T.G. தியாகராஜன் வழங்கும் பிளாக்பஸ்டர் வெற்றிக்கூட்டணி!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  நடிகர் விஷ்ணு விஷால் & இயக்குநர் ராம்குமார் மூன்றாவது முறையாக இணையும் திரைப்படம் பிளாக்பஸ்டர் வெற்றிக்கூட்டணி. நடிகர் விஷ்ணு விஷால் எஃப்ஐஆர் மற்றும் கட்டா குஸ்தி உள்ளிட்ட தொடர்ச்சியான வெற்றிகளின் மூலம் வெற்றிகரமான நாயகனாக வலம் வருகிறார்.  தொடர் வெற்றியைத் தரும் திரைப்படங்களைத் தருவதன் மூலம், தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள் மற்றும் வர்த்தக வட்டாரங்களால் மிகவும் மதிப்புமிக்க  நட்சத்திரமாகப் பாராட்டப்படுகிறார் . இயக்குநர் ராம் குமார் திரையில் தனித்துவமான உள்ளடக்கத்துடன் கூடிய திரைக்கதைகளைப் படைத்து வெற்றி பெற்றுள்ளார். அவரது முதல் இயக்கமான  'முண்டாசுப்பட்டி' நகைச்சுவை திரைப்படமாக இருந்தபோதிலும், அவர் தனது இரண்டாவது திரைப்படமான 'ராட்சசன்' மூலம் அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார், அப்படம் இதயத்தை அதிரச்செய்யும் உளவியல் திரில்லராக அசத்தியது. சத்யஜோதி ஃபிலிம்ஸ் அவர்களின் ...
நடிகர் சூரியின் நிலமோசடி வழக்கிற்காக விஷ்ணு விஷாலிடம் விசாரணை!

நடிகர் சூரியின் நிலமோசடி வழக்கிற்காக விஷ்ணு விஷாலிடம் விசாரணை!

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகைகள்
நிலம் வாங்கி தருவதாக நகைச்சுவை நடிகர் சூரியிடம் பண மோசடி செய்யப்பட்ட வழக்கை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். சென்னை ஐகோர்ட்டு உத்தரவின் பேரில் இந்த விசாரணை நடந்து வருகிறது. ஏற்கனவே இது தொடர்பாக ஓய்வு பெற்ற போலீஸ் டி.ஜி.பி. ரமேஷ்கொடவாலா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. நடிகர் சூரி இந்த வழக்கு தொடர்பாக 3 முறை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் ஆஜராகி விளக்கம் அளித்தார். இந்தநிலையில் இந்த வழக்கு தொடர்பாக நேரில் விசாரணைக்கு ஆஜராகுமாறு நடிகர் விஷ்ணு விஷால் மற்றும் அவரது தந்தை ரமேஷ் கொடவாலா ஆகியோருக்கு மத்திய குற்றப்பிரிவு போலீசார் சம்மன் அனுப்பினார்கள். அதை ஏற்று நடிகர் விஷ்ணுவிஷால் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் ஆஜர் ஆனார். அவரிடம் மத்திய குற்றப்பிரிவு போலீசார் நீண்ட நேரம் விசாரணை நடத்தினார்கள். அவரது தந்தை ரமேஷ்கொடவாலாவிடமும் மத்திய குற்றப...
‘எப்.ஐ.ஆர்’ படத்தின் ரிலீஸ் தேதி வெளியானது!

‘எப்.ஐ.ஆர்’ படத்தின் ரிலீஸ் தேதி வெளியானது!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள்
'எப்.ஐ.ஆர்' படத்தின் ரிலீஸ் தேதி வெளியானது! வெண்ணிலா கபடி குழு படத்தின் மூலம் அறிமுகமாகி பிறகு முண்டாசுப்பட்டி, ஜீவா, ராட்சசன் போன்ற பல படங்களில் நடித்த விஷ்ணு விஷால் அடுத்து நடித்துள்ள திரைப்படம் எப்.ஐ.ஆர். இந்த படத்தை இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனனின் உதவி இயக்குனர்களில் ஒருவரான மனு ஆனந்த் இயக்கத்தில் நடிகர் விஷ்ணு விஷால் நடித்துள்ள திரைப்படம் 'எப்.ஐ.ஆர்'. மஞ்சிமா மோகன், ரைசா வில்சன், ரேபா மோனிகா போன்ற பல முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர். ரசிகர்களால் பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்ட இப்படத்தின் ரிலீஸ் தேதி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. வருகிற பிப்ரவரி 11-ந்தேதி 'எப்.ஐ.ஆர்' திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது. கொரோனா பாதிப்பின் காரணமாக முதலில் ஓடிடியில் வெளியிட படக்குழு திட்டமிட்டிருந்த நிலையில் தற்போது தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளதால் திரையரங்குகளில் வெளியிட...
தனுஷுக்கு தம்பியாக நடிக்கும் விஷ்ணு விஷால்!

தனுஷுக்கு தம்பியாக நடிக்கும் விஷ்ணு விஷால்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
தனுஷுக்கு தம்பியாக நடிக்கும் விஷ்ணு விஷால்! தமிழ் சினிமாவில் தனித்துவமான இயக்குனர்களுள் ஒருவர் செல்வராகவன். இவர் தனுஷை வைத்து இயக்கிய காதல் கொண்டேன், புதுப்பேட்டை, மயக்கம் என்ன போன்ற படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன. இவர்கள் இருவரும் தற்போது 10 ஆண்டுகளுக்கு பின் ‘நானே வருவேன்’ படத்தின் மூலம் மீண்டும் இணைந்து பணியாற்ற உள்ளனர். வி கிரியேசன்ஸ் சார்பில் தாணு தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு வருகிற ஆகஸ்ட் மாதம் தொடங்க உள்ளது. இந்நிலையில், கேங்ஸ்டர் கதையம்சம் கொண்ட படமாக உருவாகும் இதில், நடிகர் விஷ்ணு விஷாலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அவர் தனுஷுக்கு தம்பியாக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது....
ஓடிடி ரிலீசுக்கு தயாராகும் ‘எப்.ஐ.ஆர்’ !

ஓடிடி ரிலீசுக்கு தயாராகும் ‘எப்.ஐ.ஆர்’ !

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
ஓடிடி ரிலீசுக்கு தயாராகும் ‘எப்.ஐ.ஆர்’ ! தமிழில் தனித்துவமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருபவர் விஷ்ணு விஷால். இவர் நடிப்பில் தற்போது உருவாகி உள்ள திரைப்படம் ‘எப்.ஐ.ஆர்’. அறிமுக இயக்குனர் மனு ஆனந்த் இயக்கும் இப்படத்தில் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக மஞ்சிமா மோகன், ரைசா வில்சன், ரெபா மோனிகா ஜான் ஆகிய 3 ஹீரோயின்கள் நடித்துள்ளனர். இயக்குனர் கவுதம் மேனன் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அஷ்வந்த் இசையமைத்துள்ள இப்படத்திற்கு, கிருமி பட புகழ் அருள் வின்செண்ட் ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், ‘எப்.ஐ.ஆர்’ படம் நேரடியாக ஓடிடி-யில் வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கொரோனா தொற்றின் இரண்டாவது அலை வேகமாக பரவி வருவதன் காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டுள்ளதால், இப்படத்தை ஓடிடி-யில் வெளியிட...
காதலியை கரம்பிடித்தார் விஷ்ணு விஷால்!

காதலியை கரம்பிடித்தார் விஷ்ணு விஷால்!

CINI NEWS, HOME SLIDER, sports, சினி நிகழ்வுகள், நடிகைகள்
காதலியை கரம்பிடித்தார் விஷ்ணு விஷால்! வெண்ணிலா கபடிக்குழு’ படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர், விஷ்ணு விஷால். ‘பலே பாண்டியா,’ ‘ராட்சசன்,’ ‘முண்டாசுப்பட்டி’ உள்பட பல படங்களில் நடித்து இருக்கிறார். இவர், ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரி ரமேஷ்குடவாலாவின் மகன். சில வருடங்களுக்கு முன்பு நடிகர் கே.நட்ராஜின் மகளை திருமணம் செய்து, பின்னர் விவாகரத்து செய்தார். அதைத்தொடர்ந்து பேட்மிண்டன் வீராங்கனை ஜுவாலா கட்டாவை காதலிப்பதாக விஷ்ணு விஷால் தெரிவித்தார். கடந்தாண்டு இவர்கள் இருவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. இவர்களின் திருமணம் ஏப்ரல் 22ஆம் தேதி நடைபெற இருப்பதாக சில தினங்களுக்கு முன்பு அறிவிப்பு வெளியானது. இந்நிலையில் இவர்கள் இருவரும் இன்று திருமணம் செய்து கொண்டுள்ளனர். இதன் புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது....
காடன் படத்தின் ஒளிப்பதிவாளரை பாராட்டிய  ராணா, விஷ்ணு விஷால்!

காடன் படத்தின் ஒளிப்பதிவாளரை பாராட்டிய ராணா, விஷ்ணு விஷால்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
காடன் படத்தின் ஒளிப்பதிவாளரை பாராட்டிய ராணா, விஷ்ணு விஷால்! பிரபுசாலமன் இயக்கத்தில் ராணா, விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியாகி இருக்கும் படம் காடன். இப்படத்தில் ஏ.ஆர்.அசோக்குமார் ஒளிப்பதிவாளராக அறிமுகமாகி இறுக்கிறார். முதல் படமே ஒருவருக்கு பெயர் சொல்லும் அளவிற்கு அமைவது கடினம். ஆனால் ஒளிப்பதிவாளர் அசோக்குமாருக்கு முதல் படமே நல்ல பெயரை பெற்று தந்திருக்கிறது. விவசாய குடும்பத்தில் பிறந்த ஏ.ஆர்.அசோக்குமார், ஒளிப்பதிவு மீது உள்ள ஆர்வத்தால் ஒளிப்பதிவாளர் நீரவ்ஷாவின் உதவியாளராக தன்னுடைய பயணத்தை தொடங்கினார். இவருடன் மதராசப்பட்டினம், தெய்வத்திருமகள், வேட்டை, தலைவா, தாண்டவம், சைவம், காவியத் தலைவன் ஆகிய படங்களுக்கு உதவியாளராக ஏ.ஆர்.அசோக்குமார் பணியாற்றி இருக்கிறார். மேலும், ஒளிப்பதிவாளர் சுகுமாருடன் தர்மதுரை, ஸ்கெட்ச், கும்கி 2 படங்களுக்கு உதவியாளராக ஏ.ஆர்.அசோக்குமார் பணியாற்றி இருக்கிறார். இப...
ஜூவாலா கட்டாவுடன் இப்போதைக்கு நட்பு மட்டுமே காதல் இல்லையாம் – வழக்கம் போல விஷ்ணு விஷால் மறுப்பு

ஜூவாலா கட்டாவுடன் இப்போதைக்கு நட்பு மட்டுமே காதல் இல்லையாம் – வழக்கம் போல விஷ்ணு விஷால் மறுப்பு

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், நடிகர்கள், நடிகைகள்
  ஜூவாலா கட்டாவுடன் இப்போதைக்கு நட்பு மட்டுமே காதல் இல்லையாம் - வழக்கம் போல விஷ்ணு விஷால் விஷ்ணுவிஷால் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் தனது டுவிட்டர் பக்கத்தில் இந்தியாவின் பிரபல பேட்மிண்டன் வீராங்கனை ஜூவாலா கட்டாவுடன் எடுத்து கொண்ட இரண்டு செல்பி புகைப்படங்களை பதிவு செய்தார். மனைவியை விவாகரத்து செய்துவிட்டு தனியாக வாழ்ந்து வரும் விஷ்ணு, அடுத்த திருமணத்திற்கு தயாராகிவிட்டதாகவும் விரைவில் ஜூவாலாவை விஷ்ணு திருமணம் செய்து கொள்ளப்போகிறார் என செய்திகள் வைரலாக பரவியது. இதற்கு ஆதாரமாக ஜுவாலா கட்டாவுடன் விஷ்ணு விஷால் நெருக்கமாக இருந்த படங்கள் பரவியது. ஆனால் இப்போது எங்களுக்குள் இருப்பது நட்பு மட்டுமே. இந்த நட்பு அடுத்த கட்டத்தை நோக்கி போகுமா என்பது எங்களுக்கு தெரியவில்லை என்று விஷ்ணு விஷால் இந்த முறையும் காதல் இல்லை என்று மறுத்திருக்கிறார். அப்படி இருந்தாலும் காதல் என்...
சிலுக்குவார்பட்டி சிங்கம் விஷ்ணு விஷாலுக்கு கைகொடுத்த உதயநிதி ஸ்டாலின்

சிலுக்குவார்பட்டி சிங்கம் விஷ்ணு விஷாலுக்கு கைகொடுத்த உதயநிதி ஸ்டாலின்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
ராட்சசன் படத்தின் வெற்றிக்குப் பிறகு விஷ்ணு விஷால் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘சிலுக்குவார்பட்டி சிங்கம்’. இதில் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக ரெஜினா, ஓவியா நடித்துள்ளார்கள். மேலும் யோகி பாபு, ஆனந்த் ராஜ், கருணாகரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். லியோன் ஜேம்ஸ் இசையமைத்துள்ள இப்படத்தை செல்லா அய்யாவு இயக்கியுள்ளார். விஷ்ணு விஷால் தனது சொந்த தயாரிப்பு நிறுவனம் மூலம் இப்படத்தை தயாரித்துள்ளார். இப்படம் கிறிஸ்துமஸ் விடுமுறையை முன்னிட்டு டிசம்பர் 21ம் தேதி வெளியாக இருக்கிறது. இந்நிலையில், இப்படத்தை வெளியிடும் உரிமையை உதயநிதி ஸ்டாலின் தனது ரெட் ஜெயன்ட் நிறுவனம் மூலம் பெற்றிருக்கிறார்.  https://twitter.com/Udhaystalin/status/1072123302687072256 அன்றைய தினத்தில் ‘அடங்க மறு’, ‘சீதக்காதி’, ‘மாரி 2’, ‘கனா’ உள்ளிட்ட படங்கள் வெளியாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது....