புதன்கிழமை, ஏப்ரல் 29
Shadow

Tag: Arun Vijay

வணங்கான் கோடங்கி விமர்சனம் 3.5/5 vanangaan review

வணங்கான் கோடங்கி விமர்சனம் 3.5/5 vanangaan review

HOME SLIDER, MOVIES, REVIEWS, திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள், விமர்சனம்
  வணங்கான் கோடங்கி விமர்சனம் 3.5/5   அழகான ஹீரோவை அழுக்காக காட்டுவது, வாய் பேச முடியாமல், காது கேட்காத ஹீரோவை துரத்தி துரத்தி காதலிக்கும் ஹீரோயின்,  குரூர கொடூர கொலை, பாலியல் சீண்டல்கள், தங்கை செண்டிமெண்ட், ஆண்களின் வக்கிரபுத்தி, மாற்றுத்திறனாளிகளின் வாழ்க்கை, இந்து கிறித்துவ மத கலவை என இயக்குனர் பாலாவின் வழக்கமான படம்தான் வணங்கான். கதைப்படி வாய் பேச முடியாத காது கேட்காத அருண்விஜய் தன் தங்கை மீது அதிக பாசத்தோடு இருக்கிறார். அதே நேரம் கடும் முன்கோபகாரனாக இருக்கிறார். அவரை ஹீரோயின் விரட்டி விரட்டி காதலிக்கிறார். ஒரு கட்டத்தில் மாற்று திறனாளிகள் தங்கியிருக்கும் ஒரு விடுதியில் வாட்ச்மேனாக சேருகிறார் அருண்விஜய். அங்கே பார்வையற்ற மாணவிகள் குளிப்பதை ஒரு சிலர் ஒளிந்திருந்து பார்த்து ரசிக்கிறார்கள். அதை ஒரு மாணவி எப்படியோ கவனித்து அவர்களை பாத்ரூமில் வைத்து அடைத்துவிட...
‘வணங்கான்’ கொடுத்த துணிச்சல் ” ; நாயகி ரோஷினி பிரகாஷ்

‘வணங்கான்’ கொடுத்த துணிச்சல் ” ; நாயகி ரோஷினி பிரகாஷ்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
சுரேஷ் காமாட்சியின் வி ஹவுஸ் புரொடக்சன்ஸ் தயாரிப்பில் இயக்குநர் பாலாவின் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘வணங்கான்’. அருண்விஜய் கதாநாயகனாக நடித்துள்ள இந்த படத்தில் கதாநாயகியாக ரோஷினி பிரகாஷ் நடித்துள்ளார். பொங்கல் பண்டிகை ரிலீஸாக வரும் ஜனவரி 10ஆம் தேதி இந்த படம் வெளியாக இருக்கிறது.. பொதுவாகவே இயக்குநர் பாலாவின் படங்களில் நடிக்கும் கதாநாயகர்கள் அதன்பிறகு எந்த அளவிற்கு திரையுலகப் பயணத்தில் உச்சத்தை நோக்கிச் செல்வார்களோ, அதே போல கதாநாயகிகளும் மிகப்பெரிய அளவில் கவனம் பெறவே செய்கிறார்கள். அபிதா, லைலா, பூஜா, ஜனனி ஐயர், வரலட்சுமி என இதற்கு முந்தைய பல உதாரணங்களை சொல்லிக் கொண்டே போகலாம். அந்த வகையில் ‘வணங்கான்’ திரைப்படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார் என அறிவிப்பு வெளியானதில் இருந்தே பரபரப்பு வளையத்திற்குள் வந்துவிட்டார் நடிகை ரோஷினி பிரகாஷ். 2016ல் இருந்து தெலுங்கு, கன்னடம், தமிழ் என மு...
பார்டர் படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்த அருண் விஜய் !

பார்டர் படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்த அருண் விஜய் !

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
இயக்குனர் அறிவழகன் மற்றும் அருண் விஜய் கூட்டணியில் உருவாகியுள்ள படம் 'பார்டர்'. இப்படத்தில் நடிகைகள் ரெஜினா கசன்ட்ரா, ஸ்டெபி பட்டேல் ஆகிய இருவரும் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். விஜய ராகவேந்திரா தயாரித்துள்ள இப்படத்திற்கு சாம் சி.எஸ். இசையமைத்துள்ளார். ராஜசேகர் ஒளிப்பதிவு செய்ய படத்தொகுப்பு பணிகளை சாபு ஜோசப் மேற்கொண்டுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்புகள் கடந்த வருடம் முடிந்து ரிலீசுக்கு தயாராகி வந்த சமயத்தில் சில காரணங்களால் படம் வெளியாகாமல் தள்ளிப் போனது. அதன்பின்னர் படத்தை ஓடிடியில் வெளியிட முடிவு செய்ய பேச்சுவார்த்தை நடத்தி வந்தனர். பார்டர் படத்தின் ரிலீஸ் தேதி பலமுறை அறிவிக்கப்பட்டு தள்ளிப்போன நிலையில், தற்போது இப்படத்தின் ரிலீஸ் தேதியை நீண்ட இடைவெளிக்கு பிறகு படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி இப்படம் வருகிற அக்டோபர் 5-ஆம் தேதி வெளியாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. https://t...
நெஞ்செல்லாம் மோதி, மோதி.. வைரலாகும் அருண் விஜய் படத்தின் புதிய பாடல்!

நெஞ்செல்லாம் மோதி, மோதி.. வைரலாகும் அருண் விஜய் படத்தின் புதிய பாடல்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
1995-ல் வெளியான 'முறை மாப்பிள்ளை' படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் கதாநாயகனாக அறிமுகமானவர் அருண் விஜய். இவர் தற்போது நல்ல கதையம்சம் கொண்ட படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். கவுதம் மேனன் இயக்கிய 'என்னை அறிந்தால்' படத்தில் அஜித்துக்கு வில்லனாக நடித்த பின் அவருடைய கதை தேர்வு வித்யாசமானதாக இருந்தது. தொடர்ந்து அவர் நடித்த 'தடம்', 'குற்றம் 23', 'செக்கச் சிவந்த வானம்', 'மாஃபியா' ஆகிய படங்களின் வெற்றி, அருண் விஜய்க்கு திருப்பங்களாக அமைந்தன. தற்போது அருண் விஜய், ஹரிதாஸ் படத்தை இயக்கிய ஜி.என்.ஆர்.குமாரவேலன் இயக்கியிருக்கும் சினம் படத்தில் நடித்திருக்கிறார். இப்படத்தின் கதாநாயகியாக பாலக் லால்வாணி நடித்திருக்கிறார். இந்த படத்தின் பின்னணி இசையை ஷமீர் இசையமைத்துள்ளார். ஆக்ஷன் திரில்லர் படமாக உருவாகும் இந்த படத்தில் அருண் விஜய் சப் இன்ஸ்பெக்டராக பாரி வெங்கட் என்ற கதாப்பாத்தி...
வெப்சீரியஸில் தனக்கென தனி முத்திரை பதித்த தமிழ்ராக்கர்ஸ்

வெப்சீரியஸில் தனக்கென தனி முத்திரை பதித்த தமிழ்ராக்கர்ஸ்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  தமிழ் சினிமாவில் சொல்ல முடியாத கதைகளையும்,  காட்ட முடியாத காட்சிகளையும் மிக வெளிப்படையாக பிரதிபலிக்கும் ஒரு இடமாக மாறியுள்ளதுதான் வெப் சீரியஸ். இந்திய மொழிகளில் இந்தியில் மிகசுதந்திரமாக உலா வந்த காமம், காதல், ஆக்ரோஷம், கொலை, ஆபாசங்கள் அனைத்தும் இப்போது தமிழையும் ஆக்ரமித்துள்ளது. சம்பத்தில் ஒரு வெப் சீரியஸ் பார்த்தேன் . அதை அப்படி சொல்வதற்கு பதில் “நீலப் படத்தை” கொஞ்சம் ஆடைகளோடு பார்த்தேன் என சொல்லலாம். ஆனால் இந்த  "தமிழ்ராக்கர்ஸ்"  வெப் சீரியஸ் கொஞ்சம் புதுசாய் ஒரு தினுசாய் இருக்கிறது . வெப் சீரிஸ் என்றால் முழு படைப்பு சுதந்திரம் என்று நினைத்துகொண்டு அசிங்க அசிங்கமாக கெட்ட வார்த்தை பேசுவது, பாலியல் காட்சிகளை திணிப்பது, ரத்தம் தெறிக்க தெறிக்க காட்சிகளை ஓட விடுவது, சம்மந்தமே இல்லாமல் அலற விடுவது என்றில்லாமல்  பார்க்கிற அனைவரையும் அடுத்த எபிசோடு என்ன என்று ஒரு ஆவலை தூண்...
யானை பட மேகிங் வீடியோ!

யானை பட மேகிங் வீடியோ!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
இயக்குனர் ஹரி இயக்கத்தில் அருண் விஜய் நடித்திருந்த படம் யானை. இப்படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடித்திருக்கிறார். நகைச்சுவை வேடத்தில் யோகிபாபு நடிக்க, பிரகாஷ் ராஜ், ராதிகா, தலைவாசல் விஜய், குக் வித் கோமாளி புகழ், அம்மு அபிராமி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இத்திரைப்படம் ஜூலை 1-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் மேக்கிங் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. ஆக்‌ஷன் காட்சிகள் படமாக்கப்பட்ட விதங்களை தொகுத்து இந்த வீடியோவை வெளியிட்டுள்ளனர். விறுவிறுப்பாக நடைபெற்ற இப்படத்தின் படப்பிடிப்பு மேக்கிங் வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.   https://youtu.be/gNp1Q426uNw...
வைரலாகும் அக்னிக் சிறகுகள் டீசர்!

வைரலாகும் அக்னிக் சிறகுகள் டீசர்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
விஜய் ஆண்டனி, அருண் விஜய் நடிப்பில் உருவாகி உள்ள படம் ‘அக்னிச்சிறகுகள்’. ஆக்‌ஷன், திரில்லராக உருவாகும் இப்படத்தில் அக்‌ஷரா ஹாசன், ஷாலினி பாண்டே, பிரகாஷ் ராஜ், ஜே.எஸ்.கே.சதீஷ் ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளார்கள். மூடர்கூடம் நவீன் இயக்கி உள்ள இப்படத்தை அம்மா கிரியேசன்ஸ் சார்பாக டி.சிவா தயாரித்துள்ளார். இப்படம் தமிழ் தெலுங்கு ஆகிய மொழிகளில் உருவாகிறது. இந்நிலையில் 'அக்னிக் சிறகுகள்' படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. இதனை நடிகர் சூர்யா தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். பெரும் எதிர்ப்பார்ப்பில் உருவாகியுள்ள 'அக்னிக் சிறகுகள்' படத்தின் டீசர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வைரலாகி வருகிறது. இந்த படத்தின் ட்ரைலர் விரைவில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது....
பிரபல நடிகரின் மகனை வாழ்த்திய சூர்யா – ஜோதிகா!

பிரபல நடிகரின் மகனை வாழ்த்திய சூர்யா – ஜோதிகா!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  நடிகர் அருண் விஜய் தற்போது 'ஓ மை டாக்' என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படத்தை ஷரோவ் சண்முகம் என்பவர் இயக்கியுள்ளார். இதில் அருண் விஜய், அவரது தந்தை விஜயகுமார் மற்றும் அவரது மகன் அர்னவ் என ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 தலைமுறையினர் நடித்துள்ளனர். இத்திரைப்படம் வருகிற ஏப்ரல் 21 ஆம் தேதி நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாகிறது. செல்லப்பிராணியான நாயை மையமாக வைத்து உருவாகி இருக்கும் இந்த படத்தை சூர்யா-ஜோதிகாவின் 2டி நிறுவனம் தயாரித்துள்ளது. இந்நிலையில் ஓ மை டாக் படத்தில் அறிமுகமாகியுள்ள அருண் விஜய் மகன் ஆர்னவ் விஜய்க்கு சூர்யாவும், ஜோதிகாவும் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். பட வெளியீட்டையொட்டி தனது செல்லப்பிராணிகளுடன் இதனை பகிர்ந்துள்ளனர்....
யானை படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

யானை படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
அருண் விஜய்யின் 33-வது படம் ‘யானை’. ஹரி இயக்கி வரும் இப்படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடிக்கிறார். நகைச்சுவை வேடத்தில் யோகிபாபு நடிக்க, பிரகாஷ் ராஜ், ராதிகா, தலைவாசல் விஜய், குக் வித் கோமாளி புகழ், அம்மு அபிராமி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ஜிவி பிரகாஷ் இசையமைக்கும் இப்படத்திற்கு கோபிநாத் ஒளிப்பதிவு செய்கிறார். கிராமத்து பின்னணியில் தயாராகி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு தூத்துக்குடி, பழனி, ராமேஸ்வரம் ஆகிய இடங்களில் நடைபெற்றுள்ளது. சமீபத்தில் இப்படத்தின் டீசர் மற்றும் சிங்கிள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது. இந்நிலையில், இப்படத்தை மே 6 ஆம் தேதி வெளியிட இருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்....
அருண் விஜய் பட அப்டேட்!

அருண் விஜய் பட அப்டேட்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
நடிகர் அருண் விஜய் நடிப்பில் இயக்குனர் ஹரி இயக்கும் திரைப்படம் யானை. இதில் அருண் விஜய்க்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடிக்கிறார். இதற்குமுன் இந்த ஜோடி மாபியா படத்தில் இணைந்து நடித்திருந்தனர். இவர்களுடன் பிரகாஷ் ராஜ், கே.ஜி.எப் பிரபலம் ராம், ராதிகா, இமான் அண்ணாச்சி, யோகிபாபு  ஆகியோர் யானை படத்தில் நடிக்கின்றனர். இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். கிராமத்துக் கதையை மையமாக வைத்து ஆக்சன் படமாக யானை உருவாகிறது. தமிழகத்தில் உள்ள முக்கிய இடங்களில் இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் இப்படத்தின் பாடல் வெளியாகி அனைவரையும் கவர்ந்தது. இந்நிலையில் அடுத்த பாடலான "போதைய விட்டு வாலே” என்ற பாடலை பிப்ரவரி 11ஆம் தேதி காலை 11 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்து ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது. https://twitter.com/arunvijayno1/status/1491312799502704640?ref_src=twsrc%5Etfw%7Ctw...