செவ்வாய்க்கிழமை, ஜூலை 28
Shadow

Tag: கொரோனா தொற்று

ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் 16 டாக்டர்கள், 4 நர்சுகளுக்கு கொரோனா!

ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் 16 டாக்டர்கள், 4 நர்சுகளுக்கு கொரோனா!

HOME SLIDER, NEWS, செய்திகள்
ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் 16 டாக்டர்கள், 4 நர்சுகளுக்கு கொரோனா! சென்னையில் கொரோனா தொற்று வேகமாக அதிகரித்து வருகிறது. கடந்த ஒரு வாரத்தில் தொற்று பாதிப்பு இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது. நேற்று ஒரே நாளில் 2 ஆயிரத்து 481 பேருக்கு தொற்று பரவியுள்ளது. சென்னையில் ராயபுரம் மண்டலத்தில் குடிசை பகுதியில் தொற்று அதிகரித்துள்ளது. இது தவிர 52-வது வார்டில் மிண்ட் மருத்துவமனை குடியிருப்பில் 14 பேருக்கும், ஏழு கிணறில் 13 பேருக்கும் தொற்று பரவி உள்ளது. ஈ.வே.ரா. பெரியார் சாலை நால்ரோடு பகுதியிலும் தொற்று அதிகரித்துள்ளது. ஸ்டான்லி மருத்துவமனையில் பணியாற்றும் 2 டாக்டர்கள், 14 பயிற்சி மருத்துவர்கள், 4 நர்சுகள் ஆகியோருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. பாதிக்கப்பட்ட மருத்துவ பணியாளர்களுக்கு கொரோனா வார்டில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. ஸ்டான்லி மருத்துவமனையில் 138 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று...
கோவா வந்த உல்லாச பயண கப்பலில் 66 பேருக்கு கொரோனா

கோவா வந்த உல்லாச பயண கப்பலில் 66 பேருக்கு கொரோனா

HOME SLIDER, NEWS, செய்திகள்
மும்பையில் இருந்து கோவா உள்ளிட்ட இந்தியாவின் பல்வேறு இடங்களுக்கு கார்டேலியா குரூஸ் எம்ப்ரஸ் என்ற உல்லாச பயண கப்பல் இயக்கப்பட்டு வருகிறது. இந்தியாவிலேயே பெரியதாக கருதப்படும் இந்த உல்லாச கப்பலை ஒரு தனியார் நிறுவனம் இயக்குகிறது. இந்த கப்பலில் கடந்த அக்டோபரில் நடந்த போதை பார்ட்டி தொடர்பாகத்தான் இந்தி நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன்கான் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் புத்தாண்டையொட்டி பல உல்லாச பயணிகள் இந்த கப்பலில் மும்பையில் இருந்து கோவா வந்தனர். மர்மகோவா துறைமுகத்துக்கு நேற்று முன்தினம் வந்து சேர்ந்த அக்கப்பல் அங்கு நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டது. அப்போது கப்பல் சிப்பந்தி ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியானது. அதைத்தொடர்ந்து, கப்பலில் இருந்த பயணிகள், சிப்பந்திகள் ஆகிய 2 ஆயிரம் பேருக்கும் ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை செய்யப்பட்டது. அதற்காக ஒரு மருத்துவக்குழு கப்பலுக்கு வ...
ஒமைக்ரானை கட்டுப்படுத்த ஒத்துழைப்பு தாருங்கள்- மு.க.ஸ்டாலின் காணொலியில் வேண்டுகோள்!

ஒமைக்ரானை கட்டுப்படுத்த ஒத்துழைப்பு தாருங்கள்- மு.க.ஸ்டாலின் காணொலியில் வேண்டுகோள்!

HOME SLIDER, NEWS, செய்திகள்
ஒமைக்ரானை கட்டுப்படுத்த ஒத்துழைப்பு தாருங்கள்- மு.க.ஸ்டாலின் காணொலியில் வேண்டுகோள்! முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி பதிவில் ஆங்கில புத்தாண்டு வாழ்த்து செய்தி வெளியிட்டுள்ளார். வணக்கம் உங்கள் எல்லோருக்கும், என் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். இந்த 2022-ம் ஆண்டு மிகவும் நன்றாக இருக்க வேண்டும் என்பதுதான் எல்லோருடைய எதிர்ப்பார்ப்பு, நம்பிக்கை. அப்படி நன்றாக இருக்க வேண்டும் என்றால் கடந்த ஆண்டுகள் தந்த பாடங்களை நாம் மறந்துவிடக்கூடாது. கொரோனா என்ற நோய் தொற்றின் முதலாவது அலை மற்றும் இரண்டாவது அலையில் இருந்து நாம் மீண்டு வந்திருக்கிறோம். குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால், இரண்டாவது அலை உச்சகட்டத்தில் இருந்த போது தான் உங்களுடைய முதல்- அமைச்சராக மட்டும் அல்ல. உங்களுடைய நலனுக்கும் நான் பொறுப்பேற்றுக் கொண்டேன். இரண்டாவது அலையை கட்டுப்படுத்துவது தான் என்னுடைய முதல் வேலையாக இர...
சீனாவில் கட்டுப்பாடு அதிகரிப்பு- மக்கள் உணவு கிடைக்காமல் அவதி!

சீனாவில் கட்டுப்பாடு அதிகரிப்பு- மக்கள் உணவு கிடைக்காமல் அவதி!

HOME SLIDER, NEWS, உலக செய்திகள், செய்திகள்
சீனாவில் கட்டுப்பாடு அதிகரிப்பு- மக்கள் உணவு கிடைக்காமல் அவதி! உலகை அச்சுறுத்தும் கொரோனா முதல் முறையாக சீனாவில் உகான் நகரில் கண்டறியப்பட்டது. அதன்பிறகு உலகம் முழுவதும் இந்த நோய் வேகமாக பரவி பலரை காவு வாங்கியது. தற்போது உருமாறிய கொரோனா வைரசான ஒமைக்ரான் பொதுமக்களை மீண்டும் பயமுறுத்தி வருகிறது. சீனாவில் கடந்த 20 மாதங்களில் இல்லாத அளவு கொரோனா பாதிப்பு தற்போது இருந்து வருகிறது. இதனால் சீனாவில் கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. சீனாவின் ஷான்சி மாகாணத்தின் தலைநகரான சியான் உள்பட பல நகரங்களில் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேற தடை விதிக்கப்பட்டுள்ளது. பொது மக்கள் வீடுகளுக்குள்ளேயே இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். 3 நாட்களுக்கு ஒருமுறை வீட்டுக்கு ஒருவர் வெளியே வந்து அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடப்பதால்...
தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு மேலும் நீட்டிப்பு -முதலமைச்சர் அறிவிப்பு!

தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு மேலும் நீட்டிப்பு -முதலமைச்சர் அறிவிப்பு!

HOME SLIDER, NEWS, செய்திகள்
தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு மேலும் நீட்டிப்பு -முதலமைச்சர் அறிவிப்பு! தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வருவதால் ஊரடங்கில் மேலும் தளர்வுகள் அளிப்பது குறித்து அதிகாரிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார். தீபாவளி பண்டிகையையொட்டி பொது இடங்களில் கூட்டத்தை தவிர்ப்பது குறித்தும் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார். இந்நிலையில், தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை நவம்பர் 15 ஆம் தேதி வரை நீட்டித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பாக முதலமைச்சர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:- தமிழ்நாட்டில், கரோனா நோய்த் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில், 31.10.2021 காலை 6.00 மணி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நடைமுறையில் இருந்து வருகிறது. பண்டிகைக் காலங்களில், கொரோனா நோய்த் தொற்று பரவலைத் கட்டுப்படுத்த எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் கு...
100 கோடி தடுப்பூசி செலுத்தி இந்தியா வரலாற்று சாதனை- முன்கள பணியாளர்களுக்கு மோடி பாராட்டு!

100 கோடி தடுப்பூசி செலுத்தி இந்தியா வரலாற்று சாதனை- முன்கள பணியாளர்களுக்கு மோடி பாராட்டு!

HOME SLIDER, NEWS, செய்திகள்
100 கோடி தடுப்பூசி செலுத்தி இந்தியா வரலாற்று சாதனை- முன்கள பணியாளர்களுக்கு மோடி பாராட்டு! சீனாவில் உருவான கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் பரவத் தொடங்கியது. இந்தியாவில் மார்ச் மாத வாக்கில் கொரோனா தொற்று பரவியது. இதைதொடர்ந்து அனைத்து மாநிலங்களிலும் பலர் நோய் தாக்குதலுக்கு ஆளானார்கள். அதில் பலர் உயிரிழந்தனர். கொரோனா  பரவலை தடுக்க உடனடியாக மருந்து கண்டுபிடிக்கும் முயற்சிகள் உலகின் பல நாடுகளில் நடந்து வந்தது. இந்தியாவிலும் மருந்தை கண்டுபிடிக்க மத்திய அரசு தீவிர முயற்சிகளை மேற்கொண்டது. முதலில் ரஷ்யா தடுப்பூசி மருந்தை கண்டுபிடித்தது. அதை தொடர்ந்து அமெரிக்கா, சீனா, இங்கிலாந்து உள்ளிட்ட பல நாடுகளும் தடுப்பூசி மருந்துகளை உருவாக்கின. இங்கிலாந்தில் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் கண்டுபிடித்த அஸ்ட்ராசெனேகா தடுப்பூசி மருந்தை இந்தியாவில் தயாரிக்க முடிவு செய்யப்பட்டது. ப...
புதிய ‘நீட்’ வினாத்தாள் வடிவமைப்பு உதவியாக இருந்ததா?: மாணவ-மாணவிகள் கருத்து!

புதிய ‘நீட்’ வினாத்தாள் வடிவமைப்பு உதவியாக இருந்ததா?: மாணவ-மாணவிகள் கருத்து!

HOME SLIDER, NEWS, செய்திகள்
புதிய ‘நீட்’ வினாத்தாள் வடிவமைப்பு உதவியாக இருந்ததா?: மாணவ-மாணவிகள் கருத்து! மாணவ-மாணவிகளின் பள்ளி பாடத்திட்டத்தின் அடிப்படையில்தான் நீட் தேர்வு நடைபெறுகிறது. கொரோனா தொற்றுக்கு மத்தியில் பள்ளிகள் திறக்கப்பட்டு இருந்தாலும், மாணவ-மாணவிகளின் சுமையைக் குறைக்கும் வகையில் அனைத்து கல்வி வாரியங்களிலும் பாடத்திட்டங்கள் குறைக்கப்பட்டு இருந்தன. அதை கருத்தில்கொண்டும், கொரோனா  தொற்றை மனதில் வைத்தும் தேசிய தேர்வு முகமை, நீட் தேர்வு வினாத்தாள் வடிவமைப்பில் சிறிய மாற்றத்தைக் கொண்டுவந்தது. அதன்படி, முன்பு இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல் பாடப்பிரிவுகளில் இருந்து தலா 45 வினாக்கள் கேட்கப்பட்டு, ஒவ்வொரு வினாவுக்கும் 4 மதிப்பெண் அடிப்படையில் மொத்தம் 720 (180x4) மதிப்பெண்களுக்கு தேர்வு நடத்தப்பட்டது. இந்த ஆண்டு மேற்சொன்ன 4 பாடப்பிரிவுகளில் தலா 50 வினாக்கள் கேட்கப்பட்டு, ஒவ்வொரு பாடப்பிரிவுகளின...
1 முதல் 8-ம் வகுப்பு வரை பள்ளிகளை திறக்க முடிவு: அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தகவல்!

1 முதல் 8-ம் வகுப்பு வரை பள்ளிகளை திறக்க முடிவு: அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தகவல்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், தமிழக அரசியல்
1 முதல் 8-ம் வகுப்பு வரை பள்ளிகளை திறக்க முடிவு: அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தகவல்! தமிழ்நாட்டில் கொரோனா பரவல் காரணமாக கடந்த ஓராண்டாகவே பள்ளி, கல்லூரிகள் இயங்கவில்லை. ஆன்லைன் மூலமாகவே வகுப்புகள் நடத்தப்பட்டன. இடையில் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டாலும் மீண்டும் கொரோனா தொற்று பரவியதால் மூடப்பட்டது. 2-வது அலை கொரோனா தாக்கத்துக்கு பிறகு படிப்படியாக தொற்று குறையத் தொடங்கி உள்ளது. பல மாவட்டங்களில் தொற்று மிகவும் குறைந்துள்ளது. இதையடுத்து பள்ளி, கல்லூரிகளை திறப்பது என்று தமிழக அரசு முடிவு எடுத்தது. அதன்படி கடந்த 1-ந் தேதி பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளன. முதல் கட்டமாக 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்புவரை வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. கல்லூரிகளும் திறக்கப்பட்டுள்ளன. வகுப்புகள் நடந்து வரும் அனைத்து பகுதிகளிலும் இதுவரை எந்த பிரச்சனையும் வரவில்லை. நோய் தொற்றும் தொடர்ந்து குறை...
7 டன் வெண்டைக்காயை பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கிய வியாபாரிகள்!

7 டன் வெண்டைக்காயை பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கிய வியாபாரிகள்!

HOME SLIDER, NEWS, செய்திகள்
7 டன் வெண்டைக்காயை பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கிய வியாபாரிகள்! கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள சின்னகுப்பம், வண்டிப்பாளையம், சேந்தமங்கலம் உள்பட 30-க்கும் மேற்பட்ட கிராமங்களில் விவசாயிகள் அதிக அளவில் வெண்டைக்காய் சாகுபடி செய்துள்ளனர். தற்போது அறுவடை பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் விவசாயிகளிடம் இருந்து ஒரு கிலோ ரூ.5 என்ற விலையில் சுமார் 7 டன் வெண்டைக்காயை அப்பகுதியை சேர்ந்த வியாபாரியான இளங்கோ மற்றும் அவரது குழுவை சேர்ந்த வியாபாரிகள் கொள்முதல் செய்தனர். ஆனால் திடீரென வெண்டைக்காய் விலை வீழ்ச்சி அடைந்ததால், இவர்களிடம் இருந்து வெளிமாநில மற்றும் வெளிமாவட்ட வியாபாரிகள் யாரும் கொள்முதல் செய்யவில்லை. இதனால் வெண்டைக்காயை விற்பனை செய்ய முடியாமல் வியாபாரிகள் தவித்து வந்தனர். இதனிடையே குடானில் தேக்கமடைந்த வெண்டைக்காய் யாருக்கும் பயனின்றி வீணாகி ...
கோவையில் இன்று முக்கிய வீதிகளில் கடைகள் அடைப்பு – பஸ்கள் வழக்கம்போல் இயங்கின!

கோவையில் இன்று முக்கிய வீதிகளில் கடைகள் அடைப்பு – பஸ்கள் வழக்கம்போல் இயங்கின!

helth tips, NEWS, செய்திகள்
கோவையில் இன்று முக்கிய வீதிகளில் கடைகள் அடைப்பு - பஸ்கள் வழக்கம்போல் இயங்கின! கோவை மாவட்டத்தில் மெல்ல, மெல்ல குறைந்து வந்த கொரோனா தொற்று, தற்போது மீண்டும் தலைதூக்க தொடங்கியுள்ளது. இதையடுத்து கொரோனா பரவலை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அத்தியாவசிய கடைகளை தவிர மற்ற அனைத்து கடைகளும் மாலை 5 மணி வரை மட்டுமே செயல்பட அனுமதித்துள்ளது. ஞாயிற்றுக்கிழமைகளில் மக்கள் அதிகம் கூடக்கூடிய வீதிகள் மூடப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டது. அதன்படி இன்று கோவை கிராஸ்கட் ரோடு, ஒப்பணக்கார வீதி, 100 அடி ரோடு, காந்திபுரம் 5,6,7-வது வீதிகள், ராமமூர்த்தி சாலை, சாரமேடு சாலை(ராயல்நகர் சந்திப்பு), ரைஸ்மில் சாலை, என்.பி.இட்டேரி சாலை, எல்லை தோட்ட சந்திப்பு, துடியலூர் சந்திப்பு பகுதிகளில் உள்ள அனைத்து கடைகளும் மூடப்பட்டன. இதனால் அந்த பகுதி முழுவதும் ஆட்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி க...