ஞாயிற்றுக்கிழமை, ஏப்ரல் 28
Shadow

செய்திகள்

தமிழகத்தில் வாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகள் என்னென்ன? தலைமை தேர்தல் அதிகாரி பேட்டி!

தமிழகத்தில் வாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகள் என்னென்ன? தலைமை தேர்தல் அதிகாரி பேட்டி!

HOME SLIDER, NEWS, செய்திகள்
தமிழகத்தில் வாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகள் என்னென்ன? தலைமை தேர்தல் அதிகாரி பேட்டி! சென்னையில் தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: * தமிழகத்தில் காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும். * வாக்குச்சாவடி பணியாளர்களுக்கு கொரோனா பாதுகாப்பு கவச உடை வழங்கப்படும். * வாக்குச்சாவடிகளில் காய்ச்சல் பரிசோதனை செய்யவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. * தமிழகத்தில் 50% வாக்குச்சாவடிகள் வெப் கேமரா மூலம் கண்காணிக்கப்படும். * வாக்குச்சாவடிகளில் எத்தனை பேர் வரிசையில் இருக்கின்றனர் என்பதை தேர்தல் ஆணைய இணையதளம் மூலம் தெரிந்து கொள்ளலாம். * 21 லட்சம் புதிய வாக்காளர்களுக்கு வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளன. * பூத் சிலிப் இல்லையென்றாலும் வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்தால் உரிய ஆவணத்துடன் வாக்களிக்கலாம். * ...
மே.,வங்கத்தில் பா.ஜ.,வெற்றி பெறும் என கணிக்க கடவுளா மோடி? மம்தா கேள்வி

மே.,வங்கத்தில் பா.ஜ.,வெற்றி பெறும் என கணிக்க கடவுளா மோடி? மம்தா கேள்வி

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
மேற்கு வங்கத்தில் பா.ஜ.,வெற்றி பெறும் என கணிக்க கடவுளா மோடி? மம்தா கேள்வி மேற்கு வங்கத்தில் இன்னும் 6 கட்ட வாக்குப்பதிவு மீதமிருக்கும் நிலையில், அங்கு பா.ஜனதா வெற்றி பெறும் என கணிப்பதற்கு நீங்கள் கடவுளா? என பிரதமர் மோடிக்கு மம்தா பானர்ஜி கேள்வி எழுப்பியுள்ளார் மேற்கு வங்கத்தில் சட்டசபை தேர்தல் களத்தில் அனல் பறக்கும் பிரசாரம் நடந்து வருகிறது. இதில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் பா.ஜனதா இடையே தொடர்ந்து வார்த்தை மோதல்கள் வெளிப்பட்டு வருகின்றன. அந்தவகையில் நேற்றுமுன்தினம் மேற்கு வங்கத்தில் பா.ஜனதா வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்த பிரதமர் மோடி, அங்கு தேர்தலுக்குப்பின் பா.ஜனதா அரசு அமையும் என கூறினார். புதிய அரசு பதவியேற்பு விழாவில் தான் பங்கேற்பேன் எனவும், மாநிலத்தில் பிரதமர் கிசான் நிதி திட்டத்தை வெகு விரைவில் அமல்படுத்துமாறு அப்போது வலியுறுத்துவேன் என்றும் கூறியிருந்த...
மு.க.ஸ்டாலினுக்கு எதிராக கோர்ட்டு அவமதிப்பு வழக்கு தொடர ஒப்புதல் வழங்க முடியாது – அட்டர்னி ஜெனரல் 

மு.க.ஸ்டாலினுக்கு எதிராக கோர்ட்டு அவமதிப்பு வழக்கு தொடர ஒப்புதல் வழங்க முடியாது – அட்டர்னி ஜெனரல் 

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
மு.க.ஸ்டாலினுக்கு எதிராக கோர்ட்டு அவமதிப்பு வழக்கு தொடர ஒப்புதல் வழங்க முடியாது - அட்டர்னி ஜெனரல் தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நாளை (செவ்வாய்க்கிழமை) நடைபெறுகிறது. இதை முன்னிட்டு தி.மு.க தலைவர் மு.க. ஸ்டாலின் ஆங்கில செய்தி தொலைக்காட்சி ஒன்றுக்கு கடந்த 23-ந் தேதி பேட்டி அளித்தார். அப்போது அவர், ‘பல்வேறு மாநிலங்களில் பெரும்பான்மை பலம் பெற்ற ஆட்சியையும் பா.ஜ.க. கவிழ்த்துள்ளது. மத்திய அரசு ஜனநாயக ரீதியில் இயங்கவில்லை. நாடாளுமன்றத்தில் பலம் பொருந்தியதாக பா.ஜ.க உள்ளது. சி.பி.ஐ., வருமான வரித்துறை, தேர்தல் கமிஷன், சுப்ரீம் கோர்ட்டையும் கூட மத்திய அரசு பயன்படுத்தி மக்களை அச்சுறுத்தி வருகிறது’ என குற்றம் சாட்டினார். இதில் மக்களை அச்சுறுத்த சுப்ரீம் கோர்ட்டை மத்திய அரசு பயன்படுத்தி வருகிறது என ஸ்டாலின் தெரிவித்திருப்பது சுப்ரீம் கோர்ட்டை அவமதிக்கும் செயல் எனவும், அதன் சுதந்திரத்தன்மை அதி...
பாலிவுட் நடிகர் அக்சய் குமாருக்கு கொரோனா தொற்று!

பாலிவுட் நடிகர் அக்சய் குமாருக்கு கொரோனா தொற்று!

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
பாலிவுட் நடிகர் அக்சய் குமாருக்கு கொரோனா தொற்று! இந்தியாவில் கொரோனா வைரசின் இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. புதிய பாதிப்புகள் தொடர்ந்து அதிகரித்தவண்ணம் உள்ளது. பொது நிகழ்வுகளில் பங்கேற்கும் பிரபலங்கள் கொரோனாவால் பாதிக்கப்படுகின்றனர். அவ்வகையில், பாலிவுட் சூப்பர் ஸ்டார் அக்சய் குமாருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து மருத்துவர்களின் ஆலோசனையின்பேரில், கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி அவர் வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டுள்ளார். நடிகர் அக்சய் குமார், ராம்சேது என்கிற படத்தில் நடித்துவருகிறார். ராமஜென்ம பூமியை மையமாக வைத்து உருவாகும் இந்தப்படத்தின் பெரும்பாலான காட்சிகளை நிஜமான கதைக்களமான அயோத்தியில் படமாக்க இருக்கிறார்கள். சமீபத்தில் படப்பிடிப்பு தொடங்கிய நிலையில், அக்சய் குமாருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. தன்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் அனைவரும் ...
கொரோனா அதிகரிப்பால் ஐ.பி.எல். போட்டிக்கு அச்சுறுத்தல்!

கொரோனா அதிகரிப்பால் ஐ.பி.எல். போட்டிக்கு அச்சுறுத்தல்!

HOME SLIDER, sports, உலக செய்திகள், செய்திகள்
கொரோனா அதிகரிப்பால் ஐ.பி.எல். போட்டிக்கு அச்சுறுத்தல்! 14-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி வருகிற 9-ந் தேதி முதல் மே 30-ந் தேதி வரை சென்னை, மும்பை, டெல்லி, கொல்கத்தா, அகமதாபாத் ஆகிய நகரங்களில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. தொடக்க ஆட்டம் சென்னை சேப்பாக்கம் எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் நடக்கிறது. இதில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ்- ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதுகின்றன. 2-வது ஆட்டம் மும்பையில் நடைபெறுகிறது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ்- டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதுகின்றன. இதற்கிடையே மும்பை வான்கடே மைதான ஊழியர் கள் 10 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதோடு 2 வீரர்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். டெல்லி அணியை சேர்ந்த அக்‌ஷர்பட்டேல், பெங்களூர் அணியை சேர்ந்த படிக்கல் ஆகியோருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அக்‌ஷர்படேலுக்கு மு...
எவர்கிவன் பிரமாண்ட கப்பல் மீட்பு- சூயஸ் கால்வாயில் போக்குவரத்து முழுமையாக சீரடைந்தது!

எவர்கிவன் பிரமாண்ட கப்பல் மீட்பு- சூயஸ் கால்வாயில் போக்குவரத்து முழுமையாக சீரடைந்தது!

HOME SLIDER, NEWS, உலக செய்திகள், செய்திகள்
எவர்கிவன் பிரமாண்ட கப்பல் மீட்பு- சூயஸ் கால்வாயில் போக்குவரத்து முழுமையாக சீரடைந்தது! உலகின் கடல் வழித்தடத்தின் முக்கிய பாதையான எகிப்தில் உள்ள சூயஸ் கால்வாயில், கடந்த மாதம் 23-ந் தேதி ‘எவர் கிவன்’ என்ற பிரமாண்ட சரக்கு கப்பல் குறுக்கே சிக்கியது. கால்வாயை கடந்து சென்றபோது பலத்த காற்றால் கப்பல் திசைமாறி இருபுறமும் தரை தட்டியது. ஆனால் சூயஸ் கால்வாயில் போக்குவரத்து முற்றிலும் முடங்கியது. ஏராளமான சரக்கு கப்பல்கள் நடுவழியில் காத்து கிடந்தன. கால்வாய் குறுக்கே சிக்கிய 2.20 லட்சம் டன் எடை கொண்ட எவர் கிவன் கப்பலை மீட்கும் பணியை தீவிரப்படுத்தினர். தரை தட்டிய பகுதியில் மணல்களை அகற்றியும், இழுவை கப்பல்கள் மூலமும் மீட்பு பணி நடந்தது. 6 நாட்களுக்கு பிறகு எவர் கிவன் கப்பல் மீட்கப்பட்டது. பலத்த காற்று, ராட்சத அலை மற்றும் மீட்பு பணி காரணமாக கப்பல் மிதக்க தொடங்கியது. பின்னர் கப்பலை இழுவை கப...
இன்று முதல் 3 நாட்களுக்கு கடைகள் மூடல்- ஒரே நாளில் ரூ.160 கோடிக்கு மதுபானங்கள் விற்பனை!

இன்று முதல் 3 நாட்களுக்கு கடைகள் மூடல்- ஒரே நாளில் ரூ.160 கோடிக்கு மதுபானங்கள் விற்பனை!

HOME SLIDER, NEWS, செய்திகள்
இன்று முதல் 3 நாட்களுக்கு கடைகள் மூடல்- ஒரே நாளில் ரூ.160 கோடிக்கு மதுபானங்கள் விற்பனை! தமிழ்நாட்டில் நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதையொட்டி தமிழ்நாடு முழுவதும் இன்று முதல் 6-ந்தேதி வரை 3 நாட்களுக்கு 'டாஸ்மாக்' கடைகள் மூடப்பட்டிருக்கும். 'டாஸ்மாக்' கடைகள் மூடப்படும் தகவல் நேற்று அறிவிப்பாக விளம்பரப்படுத்தப்பட்டிருந்ததால் குடிமகன்கள் கூட்டம் ஒவ்வொரு மதுக்கடைகளிலும் அதிகம் காணப்பட்டது. துரைப்பாக்கம், கிண்டி, குன்றத்தூர், அம்பத்தூர், டி.பி.சத்திரம், புழல், மாதவரம், திருவொற்றியூர், வண்ணாரப்பேட்டை, சிந்தாதிரிப்பேட்டை, கோடம்பாக்கம், கோயம்பேடு, மதுரவாயல், பூந்தமல்லி, ஆவடி, திருமுல்லைவாயல் உள்பட பல இடங்களில் மதுக்கடைகளில் முண்டியடித்தபடி மதுபாட்டில்கள் வாங்கினார்கள். ஒருசில இடங்களில்தான் வரிசையில் நின்று மதுபாட்டில்கள் வாங்கினார்கள...
ஒரே நாளில் விருது பெறும் ரஜினி, தனுஷ்!

ஒரே நாளில் விருது பெறும் ரஜினி, தனுஷ்!

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
ஒரே நாளில் விருது பெறும் ரஜினி, தனுஷ்! இந்திய திரைத்துறையில் உயரிய விருதான, தாதா சாகேப் பால்கே விருது, இந்தாண்டு நடிகர் ரஜினிகாந்துக்கு வழங்கப்படும் என கடந்த சில தினங்களுக்கு முன் அறிவிக்கப்பட்டது. முன்னதாக நடிகர் ரஜினியின் மருமகனும், நடிகருமான தனுஷுக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டது. அசுரன் படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதற்காக அவருக்கு இவ்விருது வழங்கப்பட உள்ளது. இந்நிலையில், 67-வது தேசிய விருது வழங்கும் விழா, வருகிற மே மாதம் 3-ந் தேதி நடைபெறும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. அன்றைய தினமே நடிகர் ரஜினிகாந்துக்கும் தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்பட இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் ரஜினி, தனுஷ் இருவரும் ஒரே நாளில் விருது பெற உள்ளனர். இது அவர்களது குடும்பத்தினர் மற்றுமின்றி, ரசிகர்களையும் உற்சாகத்தில் ஆழ்த்தி உள்ளது....
தேர்தல் பிரசாரம் நாளை ஓய்கிறது- வேட்பாளர்கள் இறுதிகட்ட ஓட்டுவேட்டை!

தேர்தல் பிரசாரம் நாளை ஓய்கிறது- வேட்பாளர்கள் இறுதிகட்ட ஓட்டுவேட்டை!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
தேர்தல் பிரசாரம் நாளை ஓய்கிறது- வேட்பாளர்கள் இறுதிகட்ட ஓட்டுவேட்டை! தமிழக சட்டசபைக்கு தேர்தல் பிரசாரம் உச்சக்கட்டத்தை எட்டி உள்ளது. இந்த தேர்தலில் அ.தி.மு.க. ஒரு கூட்டணியாகவும், தி.மு.க. ஒரு கூட்டணியாகவும், களத்தில் நிற்கின்றன. இதுதவிர அம்மா மக்கள் முன்னேற்ற கழக கூட்டணி, மக்கள் நீதி மய்யம் கூட்டணி, நாம் தமிழர் கட்சி ஆகியவையும் நிற்பதால் தேர்தலில் 5 முனை போட்டி ஏற்பட்டுள்ளது. தங்கள் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தலைவர்கள் சூறாவளி சுற்றுப்பயணம் செய்து பிரசாரம் செய்து வருகிறார்கள். அ.தி.மு.க. கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தமிழ்நாடு முழுவதும் சென்று பிரசாரம் செய்து வருகின்றனர். பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை மந்திரி அமித்ஷா, மத்திய மந்திரிகள் நிர்மலா சீதாராமன், ராஜ்நாத்சிங், கி‌ஷன்ரெட்டி மற்றும் உத்த...
கர்நாடகத்தில் பள்ளி-கல்லூரிகள் மூடல்: தியேட்டர்களில் 50 சதவீத இருக்கைகளுக்கு தடை!

கர்நாடகத்தில் பள்ளி-கல்லூரிகள் மூடல்: தியேட்டர்களில் 50 சதவீத இருக்கைகளுக்கு தடை!

HOME SLIDER, NEWS, செய்திகள்
கர்நாடகத்தில் பள்ளி-கல்லூரிகள் மூடல்: தியேட்டர்களில் 50 சதவீத இருக்கைகளுக்கு தடை! கர்நாடகத்தில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதனால் மாநில அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை ஏற்கனவே விதித்துள்ளது. இந்த நிலையில் கர்நாடக அரசு மேலும் சில புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இதுகுறித்து தலைமை செயலாளர் ரவிக்குமார் புதிய வழிகாட்டுதலை வெளியிட்டுள்ளார். அதில் கூறி இருப்பதாவது:- 1. கர்நாடகத்தில் 6 முதல் 9-ம் வகுப்பு வரையில் நேரடி வகுப்பு மற்றும் வித்யாகம வகுப்புகள் ரத்து செய்யப்படுகின்றன. அதே நேரத்தில் 10 முதல் பி.யூ.கல்லூாி வரை நேரடி வகுப்புகள் தொடர்ந்து நடைபெறும். ஆனால் இதில் மாணவர்களின் வருகை கட்டாயமல்ல. 2. கல்லூரிகள், தொழில்நுட்ப கல்லூரிகளின் வகுப்புகளும் ரத்து செய்யப்படுகின்றன. அதே நேரத்தில் தேர்வு நடைபெறும் பல்கலைக்கழகம், மருத்துவ அறிவியல் படிப்புகளுக்கான வகுப்புகள் தொடர்ந்து நடைபெறு...