வியாழக்கிழமை, மார்ச் 28
Shadow

செய்திகள்

கொரோனா பரவல் எதிரொலி – இங்கிலாந்தின் சிவப்பு பட்டியலில் பாகிஸ்தான் உள்பட 4 நாடுகள்!

கொரோனா பரவல் எதிரொலி – இங்கிலாந்தின் சிவப்பு பட்டியலில் பாகிஸ்தான் உள்பட 4 நாடுகள்!

HOME SLIDER, NEWS, உலக செய்திகள், செய்திகள்
கொரோனா பரவல் எதிரொலி - இங்கிலாந்தின் சிவப்பு பட்டியலில் பாகிஸ்தான் உள்பட 4 நாடுகள்! இங்கிலாந்து நாட்டில் இதுவரை 43 லட்சத்து 53 ஆயிரத்து 547 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.  அவர்களில் 1 லட்சத்து 27 ஆயிரத்து 6 பேர் உயிரிழந்து உள்ளனர் என ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. இதற்கிடையே, ஆப்பிரிக்கா, மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் தென் அமெரிக்கா உள்ளிட்ட 30 நாடுகளை சேர்ந்த மக்களுக்கு இங்கிலாந்தில் நுழைய தடை விதித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பாகிஸ்தான், கென்யா, பிலிப்பைன்ஸ் மற்றும் வங்காளதேசம் ஆகிய நாடுகளை இங்கிலாந்து சிவப்பு பட்டியலில் சேர்த்துள்ளது. இதன்படி, இந்த நாடுகளில் இருந்து இங்கிலாந்து மற்றும் அயர்லாந்து நாட்டு மக்களை தவிர்த்து பிறர் வருவதற்கு தடை விதிக்கப்படும். இந்த பயண தடையானது, வரும் ஏப்ரல் 9-ம் தேதி காலை 4 மணியில் இருந்து அம...
வாரிசு நடிகருடன் நடிகை அனு இம்மானுவேல் காதல்!

வாரிசு நடிகருடன் நடிகை அனு இம்மானுவேல் காதல்!

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள், நடிகைகள்
வாரிசு நடிகருடன் நடிகை அனு இம்மானுவேல் காதல்! நடிகை அனு இம்மானுவேல், தமிழில் விஷாலுடன் துப்பறிவாளன், சிவகார்த்திகேயனுடன் நம்ம வீட்டு பிள்ளை போன்ற படங்களில் நடித்துள்ளார். அடுத்ததாக சர்வானந்த், சித்தார்த் நடிப்பில் தமிழ், தெலுங்கில் தயாராகும் மகாசமுத்திரம் படத்தில் நாயகியாக நடித்து வருகிறார். இந்நிலையில், நடிகை அனு இம்மானுவேலும், தெலுங்கு நடிகர் அல்லு சிரிசும் ரகசியமாக காதலித்து வருவது அம்பலமாகி உள்ளது. சமீபத்தில் அனு இம்மானுவேல் பிறந்தநாள் கொண்டாடினார். அப்போது அவரை வாழ்த்தி அல்லு சிரிஷ் ஒரு வீடியோ வெளியிட்டார். அந்த வீடியோவில் இருவரும் நெருக்கமாக உள்ளனர். அதில் அனுவை சைக்கோ என்றும் செல்லமாக அழைத்து உள்ளார் அல்லு சிரிஷ். இந்த வீடியோ அவர்கள் காதலை உறுதிப்படுத்தி இருப்பதாக தெலுங்கு பட உலகினர் பேசுகிறார்கள். நடிகர் அல்லு சிரிஷ் தெலுங்கில் இளம் கதாநாயகனாக வளர்ந்து வருகிறார். த...
இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்!

இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்!

HOME SLIDER, NEWS, உலக செய்திகள், செய்திகள்
இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்! சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலையின் அடிப்படையில், பெட்ரோல், டீசல் விலைகளை, எண்ணெய் உற்பத்தி நிறுவனங்கள் நிர்ணயம் செய்கின்றன. நாடு முழுதும், வைரஸ் பரவலை தடுக்க, மார்ச் இறுதியில், ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால், மே வரை, பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாறுதலும் செய்யாமல் இருந்த பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், தற்போது, அவற்றின் விலையை உயர்த்தி வருகின்றன. சென்னையில் நேற்று பெட்ரோல், லிட்டர் 92.58 ரூபாய், டீசல் லிட்டர் 85.88 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில், இன்று பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமின்றி அதே விலையில் நீடிக்கிறது. ...
புதுவை மாநிலத்தில் 330 வாக்குச்சாவடிகள் பதட்டமானவை- தலைமை தேர்தல் அதிகாரி தகவல்!

புதுவை மாநிலத்தில் 330 வாக்குச்சாவடிகள் பதட்டமானவை- தலைமை தேர்தல் அதிகாரி தகவல்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
புதுவை மாநிலத்தில் 330 வாக்குச்சாவடிகள் பதட்டமானவை- தலைமை தேர்தல் அதிகாரி தகவல்! புதுவை மாநில தலைமை தேர்தல் அதிகாரி சுர்பீர்சிங் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- புதுவை சட்டசபை தேர்தல் வருகிற 6-ந் தேதி நடக்கிறது. இதனையொட்டி கடந்த 25-ந்தேதி முதல் 80 வயதுக்கு மேற்பட்டோர், கொரோனா நோயாளிகள், அத்தியாவசிய பணியில் ஈடுபடுவோரிடம் தபால் வாக்குகள் பெறப்பட்டது. அதன்படி நேற்று முன்தினம் வரை புதுவை, காரைக்கால், மாகி, ஏனாம் பகுதிகளில் 5 ஆயிரத்து 501 தபால் வாக்குகள் பெறப்பட்டுள்ளது. புதுவை மாநிலத்தில் மொத்தம் ஆயிரத்து 558 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளது. இதில் 330 வாக்குச்சாவடிகள் பதட்டமானவை என கண்டறியப்பட்டு உள்ளது. அனைத்து வாக்குச்சாவடிகளையும் இணையவழி மூலம் கண்காணிக்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட் டுள்ளது. பதட்டமான வாக்குச்சாவடிகளின் நுழைவு வாயில்களில் கண்காணிப்பு...
பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஷகிலா மகள்!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஷகிலா மகள்!

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகைகள்
பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஷகிலா மகள்! தமிழில் கடந்த 2017-ம் ஆண்டு முதல் பிக்பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. முதல் சீசனில் நடிகர் ஆரவ்வும், இரண்டாவது சீசனில் ரித்விகாவும், மூன்றாவது சீசனில் முகென் ராவும், 4-வது சீசனில் நடிகர் ஆரியும் வெற்றி பெற்றுள்ளனர். தமிழில் முதல் மூன்று சீசன்களும் ஜூன் அல்லது ஜூலை மாதங்களில் தொடங்கப்பட்ட நிலையில், 4-வது சீசன் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்கப்பட்டு இந்த ஆண்டு ஜனவரி மாதம் முடிவடைந்தது. இந்நிலையில் பிக்பாஸ் ஐந்தாவது சீசனை ஜூன் மாதம் 3 வாரத்திலிருந்து ஒளிபரப்ப திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் பிக்பாஸ் 5 நிகழ்ச்சிக்கான முதற்கட்ட பணிகள் தொடங்கியிருப்பதாகவும் சமீபத்தில் தகவல் வெளியானது. இதனிடையே இந்தமுறை கலந்து கொள்ள இருப்பதாக ஒரு சில திரைபிரபலங்களின் பெயரும் அடிபட தொடங்கியுள்ளது. ஏற்கனவே நடிகர்கள் ராதாரவி, ம...
நடிகர் மாதவனின் குடும்பத்தினருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி!

நடிகர் மாதவனின் குடும்பத்தினருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி!

HOME SLIDER, NEWS, செய்திகள், நடிகர்கள்
நடிகர் மாதவனின் குடும்பத்தினருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி! இந்தியா முழுவதும் கொரோனா தொற்றின் 2-வது அலை வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக மகாராஷ்டிரா மாநிலத்தில் ஆரம்பக் கட்டத்தில் இருந்ததைப் போலவே பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மும்பையில் வசித்து வரும் திரைப்பிரபலங்கள் பலரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அந்த வகையில் நடிகர் மாதவனுக்கும் கடந்த வாரம் கொரோனா இருப்பது உறுதியானது. இதையடுத்து அவர் சிகிச்சை பெற்று வருகிறார். மாதவனுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து அவரது குடும்பத்தினருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில், தனது குடும்பத்தினர் 5 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக, மாதவன் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். நடிகர் மாதவன் நடிப்பில் தற்போது ராக்கெட்ரி எனும் படம் உருவாகி உள்ளது. இப்படத்தை அவரே இயக்கியும் உ...
கொலை மிரட்டல் வழக்கில் சிக்கிய பாஜக அண்ணாமலை!

கொலை மிரட்டல் வழக்கில் சிக்கிய பாஜக அண்ணாமலை!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  கொலை மிரட்டல் வழக்கில் சிக்கிய பாஜக அண்ணாமலை! திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜியை மிரட்டிய புகாரில் பாஜக வேட்பாளர் அண்ணாமலை மீது வழக்குப்பதிவு. அரவக்குறிச்சி தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் அண்ணாமலை, தேர்தல் பிரச்சாரத்தின்போது, கரூர் தொகுதி திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜியை தூக்கிப் போட்டு மிதிப்பேன் என்றும் நான் வன்மத்தை கையிலெடுக்க தயாராக இல்லை. அகிம்சைவாதியாக அரசியல் போராட்டத்தை நடத்திக் கொண்டிருக்கிறேன். எனக்கு இன்னொரு முகம் இருக்கிறது என மிரட்டல் விடுத்திருந்தார். இதற்கு திமுக மகளிரணி தலைவர் கனிமொழி எம்பி திமுகவினர் மீது நீ கை வைத்து பார். உங்கள போல் நாங்கள் எத்தனை பேரை பார்த்துவிட்டு வந்திருப்போம்.எங்களது உடன்பிறப்புகளை யாரும் மிரட்டி விட முடியாது. நாங்கள் எழுந்து நின்றால் தாங்க மாட்டீர்கள் என்று அதிரடியாக பதிலடி கொடுத்திருந்தார். இந்த நிலையில், கரூர் தி...
ராஜீவ்காந்தி கொலை வழக்கு- ரவிச்சந்திரனுக்கு 30 நாட்கள் விடுப்பு வழங்க சிறை நிர்வாகம் மறுப்பு!

ராஜீவ்காந்தி கொலை வழக்கு- ரவிச்சந்திரனுக்கு 30 நாட்கள் விடுப்பு வழங்க சிறை நிர்வாகம் மறுப்பு!

HOME SLIDER, NEWS, செய்திகள்
ராஜீவ்காந்தி கொலை வழக்கு- ரவிச்சந்திரனுக்கு 30 நாட்கள் விடுப்பு வழங்க சிறை நிர்வாகம் மறுப்பு! முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைதான ரவிச்சந்திரன் மதுரை மத்திய சிறையில் உள்ளார். இவருக்கு 30 நாட்கள் விடுமுறை வழங்க கேட்டு அவரது தாய் ராஜேஸ்வரி சிறை நிர்வாகத்திற்கு ஒரு மனு அனுப்பியிருந்தார். அதில் தனக்கு கண் அறுவை சிகிச்சை செய்ய இருப்பதால் துணைக்காக ரவிச்சந்திரனை ஒரு மாதம் விடுப்பில் அனுப்ப வேண்டும் என குறிப்பிட்டிருந்தார். இந்த மனுவை பரிசீலித்த சிறை நிர்வாகம் விடுமுறை அளிக்க மறுத்து விட்டது. தற்போது தேர்தல் நேரம் என்பதால் ரவிச்சந்திரனுக்கு வழி பாதுகாப்பு தர இயலாது என்றும் அவர் தங்குவதாக குறிப்பிட்டுள்ள முகவரி அருகே இலங்கை அகதிகள் முகாம் இருப்பதால் ரவிச்சந்திரன் அங்கு தங்கினால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளது என்றும் சிறை நிர்வாகம் தெரிவித்துள்ளது....
இந்தியாவில் இருந்து சர்க்கரை, பருத்தி இறக்குமதி செய்ய பாகிஸ்தான் அரசு அனுமதி!

இந்தியாவில் இருந்து சர்க்கரை, பருத்தி இறக்குமதி செய்ய பாகிஸ்தான் அரசு அனுமதி!

HOME SLIDER, NEWS, உலக செய்திகள், செய்திகள்
இந்தியாவில் இருந்து சர்க்கரை, பருத்தி இறக்குமதி செய்ய பாகிஸ்தான் அரசு அனுமதி! காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா-பாகிஸ்தான் இடையே நீண்ட காலமாகவே மோதல் போக்கு நிலவி வருகிறது. இந்த சூழலில் கடந்த 2019-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் காஷ்மீர் மாநிலத்துக்கான சிறப்பு அந்தஸ்தை இந்தியா ரத்து செய்தது. இதனால் இந்தியாவிலிருந்து சர்க்கரை மற்றும் பருத்தி இறக்குமதி செய்வதற்கு பாகிஸ்தான் தடை விதித்தது. இந்த நிலையில் கடந்த மாதம் இரு நாடுகளின் எல்லையில் உள்ள சர்வதேச கட்டுப்பாட்டு கோட்டு பகுதியில் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீட்டெடுத்ததன் இருநாடுகள் இடையிலான பதற்றம் தணிந்தது. இந்த நிலையில் இந்தியாவில் இருந்து சர்க்கரை மற்றும் பருத்தி இறக்குமதி செய்வதற்கு விதிக்கப்பட்டிருந்த தடையை பாகிஸ்தான் தற்போது நீக்கியுள்ளது....
அமெரிக்காவின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த புதிய திட்டம் – ஜோ பைடன் அறிவிப்பு!

அமெரிக்காவின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த புதிய திட்டம் – ஜோ பைடன் அறிவிப்பு!

HOME SLIDER, NEWS, உலக செய்திகள், செய்திகள்
அமெரிக்காவின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த புதிய திட்டம் - ஜோ பைடன் அறிவிப்பு! அமெரிக்காவில் தொற்று நோய் பாதிப்புகளை கட்டுப்படுத்த அதிபர் ஜோ பைடன் தலைமையிலான அரசு தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதே சமயம் பொருளாதாரத்தை மேம்படுத்தவும் அவர் பல்வேறு திட்டங்களை அறிவித்து வருகிறார். இந்நிலையில், அமெரிக்காவின் உள்கட்டமைப்பு மற்றும் வேலைவாய்ப்பு வசதிகளை மேம்படுத்த சுமார் 2 டிரில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவில் அதிபர் ஜோ பைடன்  புதிய திட்டத்தை அறிவித்துள்ளார். இதுதொடர்பாக, பென்சில்வேனியாவின் பிட்ஸ்பர்க்கில் பேசிய போது ஜோ பைடன் கூறியதாவது: உள்கட்டமைப்பு வசதிகள், தட்பவெப்ப மாற்றம், கொரோனா தொற்று போன்றவற்றால் அமெரிக்காவின் பொருளாதாரம் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது. அவற்றை மீண்டும் கட்டமைக்க வேண்டியது அவசியம். அதனால், உள்கட்டமைப்பு மற்றும் பொருளாதாரத்தை மேம்படுத்த இதுவரை இல்...