கொரானா தடுப்பு நடவடிக்கையில் எடப்பாடி பழனிச்சாமி தோற்றுப் போய்விட்டார் – ஸ்டாலின் குற்றச்சாட்டு
தமிழகத்தில் கொரானா சமூக பரவலாக மாறியதை மறைக்கும் எடப்பாடிபழனிச்சாமி வைரஸ் தடுப்பு நடவடிக்கையில் தோல்வி அடைந்துவிட்டார் - ஸ்டாலின் குற்றச்சாட்டு.
சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள இல்லத்தில் இருந்து தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலமாக செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
கொரானாவால் 2 மாதங்களாக தமிழகம் கடும் சிரமத்தை சந்தித்து வருகிறது. சென்னையில் கொரானா தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. அரசின் அலட்சியத்தால் கொரானா பரவல் அதிகரித்து வருகிறது.
நாட்டிலேயே கொரானா தொற்று பரவல் அதிகரிக்கும் மாநிலங்களில் தமிழகம் 2வது இடத்தில் உள்ளது. தமிழகத்தில் கொரானா சமூகப் பரவலாக மாறியதற்கு ஆதாரம் இருக்கிறது.
கொரானா இறப்பு விவரங்களை தமிழக அரசு வெளிப்படையாக கூற வேண்டும். சென்னையில் கொரானாவால் இறந்த 236 பேரின் மரணம் மறைக்கப்பட்டது கவலை அளிக்கிறது. அரசு உயர் அதி...









