அடுத்து திமுக ஆட்சிதான் தேர்தல் பணிக்கு தயாராகுங்கள் – ஸ்டாலின் பேச்சு
கடலூர் மாவட்டம் நெய்வேலியில் என்.எல்.சி. தொ.மு.ச. சார்பில் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் 9 அடி உயர முழுஉருவ சிலை அமைக்கப்பட்டுள்ளது.
இதனை தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் காணொளி மூலம் திறந்து வைத்து பேசினார். அவர் பேசியதாவது:-
மத்திய-மாநில அரசுகள் தொழிலாளர்களின் துரோக அரசுகளாக உள்ளன. கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவாக மட்டுமே 2 அரசுகளும் செயல்படுகிறது.
தொழிலாளர்களுக்காக பிரதமர் அறிவிக்கும் பல கோடி ரூபாய் திட்டங்கள் வாக்குறுதிகளாகவே உள்ளது. நானும் விவசாயிதான் என்று கூறும் தமிழக முதல்-அமைச்சர் பழனிசாமி, தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு மற்றும் 8 வழிச்சாலை போராட்டங்களில் ஈடுபட்ட விவசாயிகளை கைது செய்தவர்.
நீட் தேர்வு காரணமாக இறந்த மாணவர்களின் மரணம் தற்கொலை அல்ல. அது மத்திய-மாநில அரசுகள் நடத்திய கொலைகள். ஆனால், இந்த தற்கொலைக்கு காரணம் தி.மு.க.தான் என்று சட்டசபையில் ம...







