சனிக்கிழமை, ஜூன் 13
Shadow

Tag: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

வாட்ஸ் அப் காலில் உக்ரைன் தமிழக மாணவர்களிடம்  முதலமைச்சர் பேச்சு!

வாட்ஸ் அப் காலில் உக்ரைன் தமிழக மாணவர்களிடம் முதலமைச்சர் பேச்சு!

HOME SLIDER, NEWS, politics, அரசியல், உலக செய்திகள், செய்திகள், தமிழக அரசியல்
உக்ரைன் மீது ரஷியா நேற்று முன்தினம் படையெடுத்தது. இதனை தொடர்ந்து, உக்ரைனை பலமுனைகளில் இருந்து ரஷிய படைகள் தாக்க தொடங்கின. உக்ரைனில் ரஷிய படைகள் 3-வது நாளாக தொடர்ந்து போரில் ஈடுபட்டு வருகின்றது. இதனால் உக்ரைனில் உள்ள பல இந்திய மாணவர்கள் சொந்த ஊர் திரும்ப கடும் சவால்களை சந்திக்கவேண்டிய சூழல் உருவாகியுள்ளது. உக்ரைனில் உள்ள முக்கிய நகரங்களை ரஷ்யா கைப்பற்றிவரும் நிலையில், அங்குள்ள இந்திய மாணவர்கள் ஊர்திரும்ப முடியாமல் சிக்கித் தவித்து  வருகின்றனர். இந்நிலையில், உக்ரைனில் உள்ள தமிழக மாணவர்களை மீட்பதற்காக சென்னையில் அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறையை முதலமைச்சர் ஸ்டாலின் இன்று நேரில் ஆய்வு செய்தார். உக்ரைனில் சிக்கித் தவிக்கும் மாணவர்களிடம் வீடியோ கால் மூலம் உரையாடிய மு.க.ஸ்டாலின், அங்குள்ள சூழ்நிலை குறித்து கேட்டறிந்தார். அவர்களை தைரியமாக இருக்கும்படி கூறிய முதல்வர்  , அவர்கள் அன...
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாக்களித்தார்!

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாக்களித்தார்!

HOME SLIDER, NEWS, politics, அரசியல், செய்திகள், தமிழக அரசியல்
தமிழகத்தில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் இன்று காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. காலை முதலே அரசியல் கட்சிகளின் தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள், பொதுமக்களுடன் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர். தேனாம்பேட்டையில் உள்ள வாக்குப் பதிவு மையத்திற்கு வருகை தந்த  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  பொதுமக்களுடன் வரிசையில் நின்று வாக்களித்தார். அவருடன் வந்திருந்த துர்கா ஸ்டாலினும் தமது வாக்கை பதிவு செய்தார். பின்னர் செய்தியாளர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேட்டியளித்தார். அப்போது அவர் பேசியதாவது: வாக்காளர்கள் அனைவரும் தவறாமல் ஜனநாயக கடமையை ஆற்ற வேண்டும்.  உள்ளாட்சி அமைப்புகள் மூலமே அரசின் திட்டங்களை செயல்படுத்த முடியும். ராணுவம் வரக் கூடிய அளவிற்கு கோவையில் எந்த சம்பவமும் நடை பெறவில்லை. தோல்வி பயம் காரணமாக அதிமுகவினர் போராட்டம் நடத...
தமிழக மீனவர்களின் படகுகளை ஏலம்விடுவதை தடுத்துநிறுத்த வேண்டும் – பிரதமருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்!

தமிழக மீனவர்களின் படகுகளை ஏலம்விடுவதை தடுத்துநிறுத்த வேண்டும் – பிரதமருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்!

Assembly news, HOME SLIDER, NEWS, politics, செய்திகள், தமிழக அரசியல்
இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்களின் படகுகள் பறிமுதல் செய்யப்பட்டு இலங்கை அரசின் கட்டுப்பாட்டில் இருந்தது. இந்த படகுகளை இலங்கை அரசு அரசுடைமையாக்கி தங்கள் வசம் வைத்து இருந்தது. இந்த படகுகளை விடுவிக்க வேண்டும் என மீனவர் சங்கத்தினர் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். தமிழக அரசியல் கட்சிகளும் அதனை வலியுறுத்தின. இதற்கிடையே, இந்த படகுகளை ஏலம் விடும் பணி இன்று தொடங்கியது. முதல் கட்டமாக 65 படகுகள் இன்று ஏலம் விடப்படுகின்றன. இலங்கையில் உள்ள காரை நகரில் ஏலம் விடுவதற்கான பணிகளை இலங்கை அரசு மேற்கொண்டது. அடுத்தடுத்த நாட்களில் மற்ற படகுகளும் ஏலம் விடப்படுகின்றன. வரும் 11-ம் தேதிக்குள் மீதமுள்ள அனைத்து படகுகளையும் ஏலத்தில் விட இலங்கை அரசு முடிவு செய்துள்ளது. இந்நிலையில், இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்களின் படகுகளை ஏலம் விடும் முயற்சிகளை மத்திய அரசு தடுத்து நிறுத்த வ...
நீட் தேர்வு விவகாரம் – இன்று அனைத்துக் கட்சி கூட்டம்!

நீட் தேர்வு விவகாரம் – இன்று அனைத்துக் கட்சி கூட்டம்!

HOME SLIDER, NEWS, செய்திகள்
நீட் தேர்வு விவகாரம் - இன்று அனைத்துக் கட்சி கூட்டம்! மருத்துவ படிப்புகளில் சேர அகில இந்திய அளவில் நீட் தேர்வு நடத்தப்படுகிறது. இதற்கு தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று தமிழக அரசும், அனைத்துக் கட்சிகளும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. இதற்காக தமிழக சட்டசபையில் நீட் விலக்கு மசோதா தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால் தமிழக ஆளுநர் இதுவரை ஒப்புதல் அளிக்கவில்லை. பாராளுமன்ற தி.மு.க. தலைவர் டி.ஆர்.பாலு தலைமையில் தமிழகத்தில் உள்ள பல்வேறு கட்சிகளை சார்ந்த எம்.பி.க்கள் ஜனாதிபதி அலுவலகம் சென்று சட்ட மசோதாவுக்கு ஒப்புதல் பெறப்படுவதில் ஏற்படும் காலதாமதம் குறித்து விரிவாக மனு கொடுத்தனர். இதற்கிடையே, தமிழக சட்டசபையில் விரிவாக பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடுத்தகட்ட நடவடிக்கைகளை மே...
ஒமைக்ரானை கட்டுப்படுத்த ஒத்துழைப்பு தாருங்கள்- மு.க.ஸ்டாலின் காணொலியில் வேண்டுகோள்!

ஒமைக்ரானை கட்டுப்படுத்த ஒத்துழைப்பு தாருங்கள்- மு.க.ஸ்டாலின் காணொலியில் வேண்டுகோள்!

HOME SLIDER, NEWS, செய்திகள்
ஒமைக்ரானை கட்டுப்படுத்த ஒத்துழைப்பு தாருங்கள்- மு.க.ஸ்டாலின் காணொலியில் வேண்டுகோள்! முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி பதிவில் ஆங்கில புத்தாண்டு வாழ்த்து செய்தி வெளியிட்டுள்ளார். வணக்கம் உங்கள் எல்லோருக்கும், என் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். இந்த 2022-ம் ஆண்டு மிகவும் நன்றாக இருக்க வேண்டும் என்பதுதான் எல்லோருடைய எதிர்ப்பார்ப்பு, நம்பிக்கை. அப்படி நன்றாக இருக்க வேண்டும் என்றால் கடந்த ஆண்டுகள் தந்த பாடங்களை நாம் மறந்துவிடக்கூடாது. கொரோனா என்ற நோய் தொற்றின் முதலாவது அலை மற்றும் இரண்டாவது அலையில் இருந்து நாம் மீண்டு வந்திருக்கிறோம். குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால், இரண்டாவது அலை உச்சகட்டத்தில் இருந்த போது தான் உங்களுடைய முதல்- அமைச்சராக மட்டும் அல்ல. உங்களுடைய நலனுக்கும் நான் பொறுப்பேற்றுக் கொண்டேன். இரண்டாவது அலையை கட்டுப்படுத்துவது தான் என்னுடைய முதல் வேலையாக இர...
சைக்கிளிங் சென்ற முதல்வருடன் செல்பி எடுத்த பிரபல நடிகை – வைரலாகும் புகைப்படம்!

சைக்கிளிங் சென்ற முதல்வருடன் செல்பி எடுத்த பிரபல நடிகை – வைரலாகும் புகைப்படம்!

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, sports, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகைகள்
சைக்கிளிங் சென்ற முதல்வருடன் செல்பி எடுத்த பிரபல நடிகை - வைரலாகும் புகைப்படம்! திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பொதுவாக சென்னை கடற்கரை சாலை, ஈசிஆர் சாலையில் சைக்கிளிங் மேற்கொள்வதை விடாமல் செய்து வருகிறார். தற்போது முதல்வர் ஆன பிறகும், பல்வேறு பணிகளுக்கு மத்தியிலும் சைக்கிளிங் செல்வதை வழக்கமாக வைத்துள்ளார். அந்த வகையில் ஞாயிற்றுகிழமையான இன்று கிழக்கு கடற்கரை சாலையில் சைக்கிளிங் சென்றார் மு.க.ஸ்டாலின். வழிநெடுக போலீசார் அவருக்கு பாதுகாப்பு அளித்தனர். கோவளம் முதல் மாமல்லபுரம் வரையிலான இந்த சைக்கிள் பயணத்தில் அவரது நண்பர்கள் சிலரும் பங்கேற்றனர். இந்நிலையில் சைக்கிளிங் சென்ற முதல்வருடன், நடிகை யாஷிகா ஆனந்த் செல்பி எடுத்துள்ளார். அந்த புகைப்படத்தை டுவிட்டரில் பகிர்ந்துள்ள அவர், முதல்வருக்கு நன்றி தெரிவித்துள்ளார். வைரலாகி வரும் இந்த புகைப்படத்திற்கு சமூக வலைதளங்களில் லைக்குகளும் குவிந்து வருகிற...
ஊரடங்கு நீட்டிப்பா?- முதலமைச்சர் நாளை ஆலோசனை!

ஊரடங்கு நீட்டிப்பா?- முதலமைச்சர் நாளை ஆலோசனை!

HOME SLIDER, NEWS, செய்திகள்
ஊரடங்கு நீட்டிப்பா?- முதலமைச்சர் நாளை ஆலோசனை! தமிழகத்தில் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு பதவியேற்ற பின் கொரோனா பரவலை தடுக்க கடந்த மாதம் முதல் ஊரடங்கு  அமல்படுத்தப்பட்டுள்ளது. ஊரடங்கின் காரணமாக தொற்று குறைந்த 27 மாவட்டங்களில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு வருகிற 21-ந்தேதி வரை அமலில் உள்ளது. தொற்று அதிகமாக உள்ள 11 மாவட்டங்களில் கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. இந்த நிலையில் ஊரடங்கு முடிய இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபடுகிறார். ஊரடங்கு நீட்டிக்கலாமா? வேண்டாமா? என்பது குறித்து நாளை காலை 11 மணியளவில் மருத்துவ நிபுணர்கள், சுகாதாரத்துறை மற்றும் அரசு உயர் அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்துகிறார்....
தமிழகத்தில் ஊரடங்கை நீட்டிக்க பரிந்துரை!

தமிழகத்தில் ஊரடங்கை நீட்டிக்க பரிந்துரை!

HOME SLIDER, NEWS, செய்திகள்
தமிழகத்தில் ஊரடங்கை நீட்டிக்க பரிந்துரை! தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் வருகிற 14-ந்தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ளது. கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய 11 மாவட்டங்களில் தொற்று பரவல் தொடர்ந்து கூடுதலாகவே இருந்ததால் முழு ஊரடங்கு முழுமையாக அமல்படுத்தப்பட்டது. ஒருசில தளர்வுகள் மட்டும் அங்கு அறிவிக்கப்பட்டு இருந்தன. இந்நிலையில், தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு  முடிய இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று உயர் அதிகாரிகளுடன்  ஊரடங்கு  குறித்து ஆலோசனையில் ஈடுபட்டார். அப்போது, தமிழகத்தில் மேலும் ஒரு வாரம் ஊரடங்கை நீட்டிக்க உயர் அதிகாரிகள் பரிந்துரைத்ததாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் கொரோனா தொற்று அதிகமாக உள்ள 11 மாவட்டங்களுக்கு தளர்வுகள் இல்லாத ஊரடங்கு  அமல...
பொதுமக்கள் முதலமைச்சரிடம் புகார் அளிக்க  புதிதாக இணையதளம் !

பொதுமக்கள் முதலமைச்சரிடம் புகார் அளிக்க புதிதாக இணையதளம் !

HOME SLIDER, NEWS, செய்திகள்
பொதுமக்கள் முதலமைச்சரிடம் புகார் அளிக்க புதிதாக இணையதளம் ! முதல்வரின் தேர்தல் பிரசாரத்தில் உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற நிகழ்வின் மூலம் பெறப்பட்ட மனுக்களுக்கு 100 நாட்களுக்குள் தீர்வு காணும் பொருட்டு, ‘உங்கள் தொகுதியில் முதலமைச்சர்’ என்ற புதிய துறை உருவாக்கப்பட்டது. இத்துறையில் பெறப்பட்ட மனுக்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் பொதுமக்கள் புகார் அளிக்க முதலமைச்சரின் தனிப்பிரிவு இணையதளம் புதிதாக தொடங்கப்பட்டுள்ளது. http://cmcell.tn.gov.in  என்ற இணையதளம் மூலம் பொதுமக்கள் புகார்களை அளிக்கலாம். புகார்கள் குறித்து எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் இணையத்தில் தெரிந்து கொள்ளலாம்....
ஊரடங்கு நீட்டிப்பு குறித்து முதலமைச்சர் இன்று ஆலோசனை!

ஊரடங்கு நீட்டிப்பு குறித்து முதலமைச்சர் இன்று ஆலோசனை!

HOME SLIDER, NEWS, செய்திகள்
ஊரடங்கு நீட்டிப்பு குறித்து முதலமைச்சர் இன்று ஆலோசனை! தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் வருகிற 7-ந்தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த முழு ஊரடங்கால் கொரோனா பரவல் ஓரளவு கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த நிலையில், தமிழகத்தில் தளர்வுகளற்ற முழு ஊரடங்கை நீட்டிப்பது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனையில் ஈடுபடுகிறார். சென்னை தலைமை செயலகத்தில் இன்று காலை 11.30 மணியளவில் நடைபெற உள்ள ஆலோசனை கூட்டத்தில் தலைமைச் செயலாளர், சுகாதாரச் செயலாளர், டிஜிபி உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்கின்றனர்....