ஞாயிற்றுக்கிழமை, செப்டம்பர் 13
Shadow

Tag: வெற்றிமாறன்

ரைட்டர் “ரைட்” கதை நெகிழ்ந்த வெற்றிமாறன்… கண் கலங்கிய இரஞ்சித்..!

ரைட்டர் “ரைட்” கதை நெகிழ்ந்த வெற்றிமாறன்… கண் கலங்கிய இரஞ்சித்..!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள்
  ரைட்டர் "ரைட்" கதை நெகிழ்ந்த வெற்றிமாறன்... கண் கலங்கிய இரஞ்சித்..! இயக்குனர் பா.இரஞ்சித் தயாரிப்பில் பிராங்ளின் ஜேக்கப் இயக்கத்தில் சமுத்திரக்கனி நடிப்பில் வெளியாகவிருக்கும் ரைட்டர் திரைப்படத்தின் சிறப்புகாட்சி நேற்று சென்னையில் நடைபெற்றது. தமிழ் சினிமாவின் பிரபலங்கள் பலரும் கலந்துகொண்டனர். படம் பார்த்தபிறகு இயக்குனர் வெற்றிமாறன் தயாரிப்பாளர் பா.இரஞ்சித்தையும், இயக்குனர் பிராங்ளினையும் கட்டிப்பிடித்து பாராட்டுக்களை தெரிவித்தார். ரொம்ப முக்கியமான படத்தை தமிழ் சினிமாவிற்கு தந்திருக்கிறீர்கள். சமுத்திரக்கனியின் நடிப்பு தனித்துவமாக இருக்கிறது. இந்த வருடத்தின் மாபெரும் வெற்றிப்பட வரிசையில் ரைட்டரும் இருக்கும். தொழில் நுட்ப கலைஞர்கள், நடிகர்கள் என அனைவரும் சிறப்பாக தங்களது திறமைகளை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். இப்படிப்பட்ட படங்களை தயாரித்துவரும் இரஞ்சித்துக்கு எனது...
வெற்றிமாறனின் ‘விடுதலை’ படத்தில் கவுதம் மேனனுக்கு இப்படி ஒரு வேடமா?

வெற்றிமாறனின் ‘விடுதலை’ படத்தில் கவுதம் மேனனுக்கு இப்படி ஒரு வேடமா?

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
வெற்றிமாறனின் ‘விடுதலை’ படத்தில் கவுதம் மேனனுக்கு இப்படி ஒரு வேடமா? தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம்வரும் வெற்றிமாறன் தற்போது சூரி நாயகனாக நடிக்கும் ‘விடுதலை’ என்கிற படத்தை இயக்கி வருகிறார். எழுத்தாளர் ஜெயமோகனின் துணைவன் என்கிற சிறுகதையை மையமாக வைத்து இப்படம் தயாராகி வருகிறது. இப்படத்தில் சூரிக்கு ஜோடியாக பவானி ஸ்ரீ நடிக்கிறார். நடிகர் விஜய் சேதுபதியும் இதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். எல்ரெட் குமார் தயாரிக்கும் இப்படத்திற்கு இளையராஜா இசையமைக்கிறார். இந்நிலையில், தமிழ் சினிமாவின் ஸ்டைலிஷ் இயக்குனர் என்றழைக்கப்படும் கவுதம் மேனன், வெற்றிமாறனின் ‘விடுதலை’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இப்படத்தில் அவர் போலீஸ் அதிகாரி வேடத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது. வெற்றிமாறன் இயக்கத்தில் அவர் நடிக்கும் முதல் படம் இதுவாகும். இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு விற...
சூர்யாவின் ‘வாடிவாசல்’ படத்தின் முக்கிய அப்டேட்!

சூர்யாவின் ‘வாடிவாசல்’ படத்தின் முக்கிய அப்டேட்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
சூர்யாவின் ‘வாடிவாசல்’ படத்தின் முக்கிய அப்டேட்! வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிக்க உள்ள படம் வாடிவாசல். வி.கிரியேஷன்ஸ் சார்பாக கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கும் இப்படம் ஜல்லிக்கட்டு விளையாட்டை மையமாக வைத்து தயாராக உள்ளது. வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்ய உள்ள இப்படத்திற்கு, ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார். இந்த படத்தில் நடிகர் சூர்யா தந்தை, மகன் என இருவேடங்களில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், வாடிவாசல் படத்தின் ஷூட்டிங் வருகிற செப்டம்பர் மாதம் தொடங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. குறுகிய காலத்தில் இப்படத்தின் படப்பிடிப்பை முடிக்க இயக்குனர் வெற்றிமாறன் திட்டமிட்டுள்ளாராம். இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் தற்போது ‘விடுதலை’ படம் உருவாகி வருகிறது. சூரி நாயகனாக நடிக்கும் இப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு இறுதி...
முக ஸ்டாலினுக்கு 14 கோரிக்கைகள் வைத்த விஜய்சேதுபதி!

முக ஸ்டாலினுக்கு 14 கோரிக்கைகள் வைத்த விஜய்சேதுபதி!

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், நடிகர்கள்
முக ஸ்டாலினுக்கு 14 கோரிக்கைகள் வைத்த விஜய்சேதுபதி! தமிழக முதல்வராக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வரும் 7ஆம் தேதி பதவியேற்க உள்ளார். அவருக்கு பல்வேறு தரப்பினர் வாழ்த்துக்களை குவித்து வருகின்றனர். குறிப்பாக திரையுலகிலிருந்து ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்பட பலரும் அவருக்கு நேரிலும் சமூக வலைதளம் மூலமும், தொலைபேசியிலும் வாழ்த்துக்களை தெரிவித்து உள்ளார்கள். இந்த நிலையில் விஜய் சேதுபதி, வெற்றிமாறன் உள்பட 67 பேர் முதல்வராக பதவி ஏற்க இருக்கும் ஸ்டாலினுக்கு வாழ்த்து கடிதம் ஒன்றை எழுதியுள்ளனர். அதில் அவர்கள் 14 கோரிக்கைகளையும் முன்வைத்துள்ளனர். தூத்துக்குடி ஸ்டெர்லைட், எட்டு வழிச்சாலை, கூடங்குளம் உள்பட 14 கோரிக்கைகள் அவர்களுடைய கடிதத்தில் குறிப்பிட்டு உள்ளதாகவும், அந்த கோரிக்கைகளை கூடிய விரைவில் நிறைவேற்றும்படியும் விஜய் சேதுபதி, வெற்றிமாறன் உள்பட 67 பேர் கையெழுத்து போட்டு கொடுத்திருப்பதாக தகவல்கள்...
‘சூரி – வெற்றிமாறன் – விஜய் சேதுபதி’ இணையும் படத்தின் தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் வெளியீடு!

‘சூரி – வெற்றிமாறன் – விஜய் சேதுபதி’ இணையும் படத்தின் தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் வெளியீடு!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
‘சூரி - வெற்றிமாறன் - விஜய் சேதுபதி’ இணையும் படத்தின் தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் வெளியீடு! தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம்வரும் வெற்றிமாறன் அடுத்ததாக சூரி நாயகனாக நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார். எழுத்தாளர் ஜெயமோகனின் துணைவன் என்கிற சிறுகதையை மையமாக வைத்து இப்படம் தயாராகி வருகிறது. இப்படத்தில் சூரிக்கு ஜோடியாக பவானி ஸ்ரீ நடிக்கிறார். இந்தப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதியும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இளையராஜா இப்படத்திற்கு இசையமைக்கிறார். எல்ரெட் குமார் தயாரிக்கிறார். இந்நிலையில், இப்படத்தின் தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளனர். அதன்படி இப்படத்திற்கு ‘விடுதலை’ என பெயரிட்டுள்ளனர். இப்படத்தில் விஜய் சேதுபதி வாத்தியாராக நடிக்கிறாராம். இப்படத்தின் படப்பிடிப்பு மின்சாரம் மற்றும் தொலைதொடர்பு அற்ற சத்தியமங்கலத்தின் அடர்ந்த காட்டுப்பகுதிகளில் படமாக்கப்ப...
சூர்யா படத்தின் புதிய அப்டேட் கொடுத்த ஜி.வி.பிரகாஷ்!

சூர்யா படத்தின் புதிய அப்டேட் கொடுத்த ஜி.வி.பிரகாஷ்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
சூர்யா படத்தின் புதிய அப்டேட் கொடுத்த ஜி.வி.பிரகாஷ்! சூர்யா நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான படம் ‘சூரரைப் போற்று’. சுதா கொங்கரா இயக்கிய இப்படம் ஓடிடி தளத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்தப் படத்தை அடுத்து நவரசா என்ற ஆந்தாலஜியில் கவுதம்மேனன் கதையில் நடித்துள்ளார் சூர்யா. தற்போது பாண்டிராஜ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஒரு படத்தில் நடித்து வருகிறார் சூர்யா. இதனிடையே கடந்த ஆண்டு ஜூன் மாதம் 23-ம் தேதி வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் ‘வாடிவாசல்’ திரைப்படத்தின் டைட்டில் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டது. ஜல்லிக்கட்டு தொடர்பான படம் என்பதாலும் சூர்யா - வெற்றிமாறன் கூட்டணி முதல்முறையாக இணைந்திருப்பதாலும் இந்தப் படத்தின் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்திருந்தது. பாண்டிராஜ் படத்தை முடித்த பின்னர் வெற்றிமாறன் படத்தில் சூர்யா இணைவார் என தெரிகிறது. இந்நில...
விஜய்-வெற்றிமாறன் காம்போ!

விஜய்-வெற்றிமாறன் காம்போ!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
விஜய்-வெற்றிமாறன் காம்போ! தமிழ் சினிமாவில் தரமான படங்களை கொடுப்பவர் வெற்றிமாறன். தனுஷின் பொல்லாதவன் படம் மூலம் இயக்குனராக அறிமுகமான இவர், ஆடுகளம், விசாரணை, வட சென்னை, அசுரன் என அடுத்தடுத்து ஹிட் படங்களை கொடுத்து முன்னணி இயக்குனராக உயர்ந்தார். இவர் தற்போது சூரி நாயகனாக நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார். எல்ரெட் குமார் தயாரிக்கும் இப்படம், எழுத்தாளர் ஜெயமோகனின் துணைவன் என்கிற சிறுகதையை மையமாக வைத்து தயாராகி வருகிறது. நடிகர் விஜய்சேதுபதியும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்நிலையில், இயக்குனர் வெற்றிமாறன் சமீபத்திய பேட்டியில், நடிகர் விஜய்யை வைத்து விரைவில் படம் இயக்க உள்ளதை உறுதிப்படுத்தி உள்ளார். சூரி நடிக்கும் படத்தை முடித்த பின் சூர்யாவின் வாடிவாசல் படத்தை இயக்க உள்ள வெற்றிமாறன், அதன்பின் விஜய் படத்தை இயக்குவார் என கூறப்படுகிறது....
மகிழ்ச்சியான செய்தியோடு கண் விழித்ததாக தனுஷ் நெகிழ்ச்சி!

மகிழ்ச்சியான செய்தியோடு கண் விழித்ததாக தனுஷ் நெகிழ்ச்சி!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, Photos, உலக செய்திகள், உலகம், சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், முன்னோட்டம்
மகிழ்ச்சியான செய்தியோடு கண் விழித்ததாக தனுஷ் நெகிழ்ச்சி! அசுரன் படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திய நடிகர் தனுஷுக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. அவர் இவ்விருதை பெறுவது இது இரண்டாவது முறை. ஏற்கனவே ஆடுகளம் படத்திற்காக தேசிய விருதை வென்றுள்ளார். இந்நிலையில், தேசிய விருது கிடைத்த மகிழ்ச்சியை நடிகர் தனுஷ் அறிக்கை மூலம் வெளிப்படுத்தி உள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “அசுரன் படத்திற்கு தேசிய விருது கிடைத்திருக்கிறது என்கிற மகிழ்ச்சியான செய்தியோடு கண் விழித்தேன். சிறந்த நடிகராக ஒரு தேசிய விருதை வென்றதே கனவு போல் இருந்தது. ஆனால், தற்போது இரண்டாவது முறையாக அவ்விருதை வென்றிருப்பது உண்மையிலேயே ஆசிர்வாதம்தான். நான் இந்த அளவுக்கு வருவேன் என நினைத்துப் பார்த்ததில்லை. நிறைய பேருக்கு நன்றி சொல்ல வேண்டி உள்ளது. முதலில் அம்மா, அப்பா, என்னுடைய க...