சனிக்கிழமை, செப்டம்பர் 19
Shadow

Tag: Local Body Election

”விலையில்லா விருந்தகம்”, தெருவோர ஏழைகளுக்கு இலவச உணவு என அசத்தல் செயல்களுடன் களமிறங்கிய விஜய் மக்கள் இயக்கம்!

”விலையில்லா விருந்தகம்”, தெருவோர ஏழைகளுக்கு இலவச உணவு என அசத்தல் செயல்களுடன் களமிறங்கிய விஜய் மக்கள் இயக்கம்!

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, செய்திகள், தமிழக அரசியல், நடிகர்கள்
    அரசியலை தனக்கு அணுக்கமான துறையாக விஜய் கருதுகிறார். தன் படங்களிலிருந்தே அரசியலுக்கான விதைகளை தூவி வரும் விஜய், அண்மையில் நடைபெற்று முடிந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் 'விஜய் மக்கள் இயக்கத்தை' களமிறக்கி அரசியல் ஆழம் பார்த்தார். அதில் விஜய்க்கு நல்ல பலனும் கிடைத்தது. இத்தனைக்கும் அந்த தேர்தலில் விஜய்யின் புகைப்படமோ, விஜய் மக்கள் இயக்கத்தின் கட்சி கொடியோ பயன்படுத்த கூடாது என்ற அறிவிப்பு இருந்தபோதிலும் 169 இடங்களில் களமிறங்கி 121 இடங்களை தட்டி தூக்கினர். இதில் அரசியல் தளத்தில் மட்டுமல்லாமல், பொதுமக்களிடையேயும் கவனம் ஈர்த்தது. இந்த தேர்தல் வெற்றி விஜய்க்கு உற்சாகத்தை அளித்திருக்க கூடும்.   அடுத்தடுத்த தேர்தல்களில் களம் காண இந்த தேர்தல் பலமான கடைக்கால் அமைத்துள்ளது. ஊரக உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்றவர்களை நேரில் சந்தித்து விஜய் வாழ்த்தியதாக ச...
பிப்ரவரி 19ல் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்!

பிப்ரவரி 19ல் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், தமிழக அரசியல்
    தமிழக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் தேதியை மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதன்படி பிப்ரவரி 19ம் தேதி வாக்குப் பதிவு நடைபெறுகிறது. தேர்தலில் பதிவான வாக்குகள் பிப்ரவரி 22ம் தேதி தேதி எண்ணப்படவுள்ளது. தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளின் பதவிகாலம் முடிந்தும் அவற்றுக்கு தேர்தல் நடத்தப்படாமல் இருந்தது.   இந்நிலையில், புதிதாக உருவாக்கப்பட்ட 9 மாவட்டங்கள் நீங்கலாக பிற மாவட்டங்களில் முதலில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. அதனை தொடர்ந்து நெல்லை, விழுப்புரம், காஞ்சிபுரம், வேலூர் தென்காசி, கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய 9 மாவட்டங்களுக்கு கடந்த ஆண்டு அக்டோபர் 6 மற்றும் 9ம் தேதிகளில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. இதனை தொடர்ந்து தமிழ்நாட்டில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 490 பேரூராட்சிகள் என அனை...
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: கட்சி, வேட்பாளர் பெயரில் சுவரொட்டி ஒட்ட தடை!

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: கட்சி, வேட்பாளர் பெயரில் சுவரொட்டி ஒட்ட தடை!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், தமிழக அரசியல்
  நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் புதிய கையேட்டை வெளியிட்டுள்ளது.  அதில், வேட்பாளர் மற்றும் கட்சி பெயரில் சுவரொட்டி ஒட்ட தடை விதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் கடந்த ஆண்டு நடைபெற்று முடிந்த நிலையில், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் விரைவில் நடைபெறவுள்ளது. இதற்கான தேதி ஒருசில நாட்களில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், அரசியல் கட்சிகள், தேர்தலில் போட்டியிட விரும்புவர்களிடம் விருப்ப மனுவை பெற்று வேட்பாளர் தேர்வில் மும்முரமாக உள்ளன. இந்நிலையில், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள 18 பக்க அறிக்கையில், இந்த முறை நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வேட்பாளர்கள் செலுத்த வேண்டிய காப்புத் தொகை (டெபாசிட்) இரட்டிப்பாக உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி, மாநகராட்சி உறுப்பினர் பதவிக்கு போட்...
நகர்புற உள்ளாட்சித் தேர்தலுக்கு தயாராகும் விஜய் ரசிகர்கள்..!

நகர்புற உள்ளாட்சித் தேர்தலுக்கு தயாராகும் விஜய் ரசிகர்கள்..!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், நடிகர்கள்
    தமிழகத்தில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் முடிவடைந்த நிலையில், விரைவில் நகர்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை மாநில அரசும், மாநில தேர்தல் ஆணையமும் முடுக்கிவிட்டுள்ளன. இதுதொடர்பான அனைத்துக் கட்சி கூட்டமும் சென்னையில் நடைபெறுகிறது. ஜனவரி 24 ஆம் தேதி உள்ளாட்சி தேர்தல் தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் வர இருப்பதால், அ தற்கு முன்கூட்டியே ஜனவரி 22 ஆம் தேதி தேர்தலுக்கான அறிவிப்பை வெளியிட மாநில தேரதல் ஆணையம் திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.   இந்நிலையில், இந்த தேர்தலிலும் விஜய் மக்கள் இயக்கத்தைச் சேர்ந்த நிர்வாகிகள் போட்டியிட இருப்பதாக கூறப்படுகிறது. நடைபெற்று முடிந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் சுமார் 150க்கும் மேற்பட்ட விஜய் மக்கள் இயக்கத்தைச் சேர்ந்த மன்ற உறுப்பினர்கள் போட்டியிட்டனர். அதில் 120 பேர் வார்டு உறுப்பினர்கள், ஊராட்...
சென்னை, தாம்பரம் மாநகராட்சி மேயர் பதவி பட்டியலின பெண்களுக்கு ஒதுக்கீடு!

சென்னை, தாம்பரம் மாநகராட்சி மேயர் பதவி பட்டியலின பெண்களுக்கு ஒதுக்கீடு!

HOME SLIDER, NEWS, செய்திகள், தமிழக அரசியல்
  தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகள் அடங்கிய நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கு தேர்தல் நடத்த வேண்டியுள்ளது. இதற்காக, புதிதாக உருவாக்கப்பட்ட, விரிவாக்கப்பட்ட உள்ளாட்சிகளின் வார்டுகள் மறுவரையறை செய்யப்பட்டு உள்ளன. இந்த விபரம், விரைவில் அரசிதழில் வெளியிடப்பட உள்ளது.மேயர், நகராட்சி தலைவர் உள்ளிட்ட பதவிகளுக்கு நேரடி தேர்தல் நடத்தப்படும் என்று தெரிகிறது. இதனிடையே, அனைத்து மாவட்டங்களிலும் ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் தயாரித்தல், தேர்தல் அலுவலர்கள் நியமனம் உள்ளிட்ட பல்வேறு பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.     விரைவில் நகர்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தநிலையில், மாநகராட்சி மேயருக்கான இடஒதுக்கீடு தொடர்பான அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, சென்னை மாநகராட்சி பட்டியலின பெண்களுக்கு ஒது...
உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு!

உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு!

Assembly news, HOME SLIDER, NEWS, politics, செய்திகள், தமிழக அரசியல்
உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு! காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும் ஊரக தொழில்துறை அமைச்சருமான தா.மோ. அன்பரசன் காஞ்சிபுரம் வடக்கு மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஊராட்சி குழு, ஊராட்சி ஒன்றிய குழு, வார்டுகளில் வார்டு உறுப்பினர்கள் பொறுப்புக்கு போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளார். அதன் முழு விவரம் வருமாறு: வார்டு எண். 3-ப.ராமமூர்த்தி, குன்னம் வார்டு எண்.4-எஸ்.பாலா (எ) பால்ராஜ், மொளச்சூர் வார்டு எண்.5-வி.அரி, நந்தம்பாக்கம் வார்டு எண்.6-படப்பை ஆ.மனோகரன் வார்டு எண்.7-கூட்டணி கட்சி ம.தி.மு.க.விற்கு ஒதுக்கீடு. செங்கல்பட்டு மாவட்டம் வார்டு எண்.1-ச.மனோகர், கவுல்பஜார் வார்டு எண்.4-கூட்டணி கட்சி காங்கிரசுக்கு ஒதுக்கீடு. வார்டு எண்.5-பூங்கோதை ராஜன், சிங்கப்பெருமாள் கோவில் வார்டு எண்.6-காயத்திரி அன்ப...
உள்ளாட்சி பதவிகளை ஏலம் விடக்கூடாது- மாநில தேர்தல் ஆணையம் உத்தரவு!

உள்ளாட்சி பதவிகளை ஏலம் விடக்கூடாது- மாநில தேர்தல் ஆணையம் உத்தரவு!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், தமிழக அரசியல்
உள்ளாட்சி பதவிகளை ஏலம் விடக்கூடாது- மாநில தேர்தல் ஆணையம் உத்தரவு! தமிழகத்தில் விடுபட்ட 9 மாவட்டங்களில் அக்டோபர் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் தொடங்கி நடைபெறுகிறது. தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ள நிலையில், பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் தலைமையில் தேர்தல் குறித்த ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டு, அறிவுறுத்தல்கள் வழங்கப்படுகின்றன. தேர்தல் பணிகளை தேர்தல் ஆணையம் தொடர்ந்து கண்காணித்து  உரிய உத்தரவுகளை  பிறப்பித்து வருகிறது. அவ்வகையில், உள்ளாட்சி அமைப்புகளுக்கான பதவிகளை ஏலம் விடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என  மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு மாநில தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதுதொடர்பாக தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அற...
உள்ளாட்சி தேர்தல்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை!

உள்ளாட்சி தேர்தல்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
உள்ளாட்சி தேர்தல்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை! தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல்  நடத்துவது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை தலைமை செயலகத்தில் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை நடத்துகிறார். செப்டம்பர் 15ந்தேதிக்குள் உள்ளாட்சி தேர்தல்  நடத்தப்படாத 9 மாவட்டங்களில் தேர்தலை நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் ஆலோசனை நடைபெற உள்ளது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நடத்துவது தொடர்பாகவும் ஆலோசனை நடைபெற உள்ளது....