வெள்ளிக்கிழமை, ஏப்ரல் 26
Shadow

Tag: Local Body Election

மனைவியை கவுன்சிலராக வெற்றி பெறச்செய்த வாக்காளர்களின் காலில் விழுந்து நன்றி சொன்ன விஜய் ரசிகர்!

மனைவியை கவுன்சிலராக வெற்றி பெறச்செய்த வாக்காளர்களின் காலில் விழுந்து நன்றி சொன்ன விஜய் ரசிகர்!

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, செய்திகள், தமிழக அரசியல், நடிகர்கள்
  திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பொன்னேரி நகராட்சி வார்டு கவுன்சிலர் பதவியை விஜய் மக்கள் இயக்க நிர்வாகி கைப்பற்றி உள்ளது. அதிமுக திமுக கூட்டணி கட்சி வேட்பாளர்களின் வெற்றி வாய்ப்பை இழக்க செய்து தங்களது முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது விஜய் மக்கள் இயக்கம். இந்த வெற்றிக்கு காரணமான வாக்காளர்களுக்கு வீடுதோறும் சென்று காலில் விழுந்து நன்றி தெரிவித்தனர் விஜய் மக்கள் இயக்கத்தினர். பொன்னேரி நகராட்சி 16 வது வார்டிற்கு நடைபெற்ற தேர்தலில் விஜய் மக்கள் இயக்க நிர்வாகி சிலம்பரசன் என்பவரின் மனைவி மணிமாலா சுயேட்சையாக போட்டியிட்டு  337 வாக்குகள் பெற்று வெற்றி அடைந்தார். அவரை எதிர்த்து போட்டியிட்ட அ.தி.மு.க கூட்டணி புரட்சிபாரதம் இரட்டை இலை சின்னத்தில் லதா என்பவர் 142 வாக்குகளுடன் இரண்டாம் இடமும் இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் வினோபா 140 வாக்குகள் பெற்று மூன்றாம் இடம் பெற்றார்....
இன்றுடன் ஓய்கிறது பிரச்சாரம்!

இன்றுடன் ஓய்கிறது பிரச்சாரம்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், தமிழக அரசியல்
  நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான பிரசாரம் இன்று மாலையுடன் ஓய்கிறது. இறுதிகட்ட வாக்கு சேகரிப்பில் வேட்பாளர்கள் விறுவிறுப்புடன் ஈடுபட்டு வருகின்றனர். தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை மறு நாள் நடைபெற உள்ளது. மாகராட்சி, நகராட்சி, பேரூராட்சி என மொத்தம் 12 ஆயிரத்து 604 வார்டு பதவி இடங்களை நிரப்புவதற்கான வாக்குப்பதிவு நடைபெறுகிறது. அரசியல் கட்சி வேட்பாளர்கள் தாங்கள் போட்டியிடும் வார்டுகளை சுற்றி, சுற்றி வந்து வாக்கு சேகரித்து வருகின்றனர். அரசியல் கட்சியினர் போல சுயேச்சை வேட்பாளர்களும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். வீதி வீதியாக சென்று மக்களிடம் தங்களின் வாக்குறுதிகளை கூறி பரப்புரை மேற்கொண்டு வருகின்றனர். நாளை மறுநாள் வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், இன்று மாலை 6 மணியுடன் பிரசாரம் ஓய்கிறது. இதன்பிறகு வேட்பாளர்கள...
தேசியக்கொடியை இறக்கி விட்டு காவி கொடியை ஏற்றுவது தான் தேசப்பற்றா? தேர்தல் பிரச்சாரத்தில் கனிமொழி கேள்வி

தேசியக்கொடியை இறக்கி விட்டு காவி கொடியை ஏற்றுவது தான் தேசப்பற்றா? தேர்தல் பிரச்சாரத்தில் கனிமொழி கேள்வி

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், தமிழக அரசியல்
  சென்னை மயிலாப்பூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பல வட்டங்களில்  போட்டியிடும் திமுக வேட்பாளர்களை ஆதரித்து, திமுக மகளிரணி செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி பிரச்சாரம் செய்தார். அப்போது மேடையில் பேசிய அவர், கூறுகையில், திமுக வாக்குறுதிகளை நிறைவேற்ற வில்லை என எதிர்கட்சியினர் குற்றம் சாட்டுகின்றனர். ஆனால், குடும்ப அட்டைக்கு செல்பேசி தருவதாக அவர்கள் ஆட்சியில் சொன்னார்கள் செய்தார்களா?  மகளிருக்கு மானிய விலையில் ஆட்டோ வழங்குவதாக சொன்னார்கள் செய்தார்களா? என கேள்வி எழுப்பினார். கஜானாவை காலி செய்து விட்டு சென்ற பின்பும், பால் விலை குறைவு, மகளிருக்கு பேருந்து பயணம் இலவசம் உள்ளிட்ட  திட்டங்களை முதலமைச்சர் நிறைவேற்றி வருகிறார் என்றும் திமுகவை பார்த்து கேள்வி கேட்பதற்கு அதிமுகவிற்கு அருகதை இல்லை என கூறினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறுகையில்,  தமிழ்நாட்டில்...
திமுக வேட்பாளர்களின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்ட தூத்துக்குடி கடம்பூர் பேரூராட்சியில் தேர்தல் ரத்து!

திமுக வேட்பாளர்களின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்ட தூத்துக்குடி கடம்பூர் பேரூராட்சியில் தேர்தல் ரத்து!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், தமிழக அரசியல்
  தேர்தல் அலுவலர்கள் வழிகாட்டு நெறிமுறைகளை முறையாக பின்பற்றாததன் காரணமாக, தூத்துக்குடி மாவட்டம் கடம்பூர் பேரூராட்சியில் தேர்தலை ரத்து செய்வதாக மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.   இதுதொடர்பான அறிக்கையில், தூத்துக்குடி மாவட்டம் கடம்பூர் பேரூராட்சிக்கான தேர்தல் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறும், தூத்துக்குடி மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள கடம்பூர் பேரூராட்சியில் 12வார்டுகளுக்கு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு  33 பேர் மனுத்தாக்கல் செய்திருந்தனர். கடந்த 5ந்தேதி நடைபெற்ற  வேட்புமனு பரிசீலனையில்  1வது வார்டில் திமுக சார்பில் போட்டியிட்ட  ஜெயராஜ், 2வது வார்டில் தி...
பெண்கள் வார்டு என தெரியாமலேயே பாமக ஆண் வேட்பாளர் மனு தாக்கல்!

பெண்கள் வார்டு என தெரியாமலேயே பாமக ஆண் வேட்பாளர் மனு தாக்கல்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், தமிழக அரசியல்
    பெண்கள் வார்டில் பாமக ஆண் வேட்பாளர் மனு தாக்கல். தமிழகத்தில் நடைபெற உள்ள நகர்புற உள்ளாட்சித்தேர்தலில் பரபரப்புகளுக்கு பஞ்சம் இல்லமல் இல்லை. அதே நேரம் சுவாரஸ்யங்களுக்கும் குறைவில்லை. ஜெயலலிதா போல வேடம் அணிந்த குழந்தயை அழைத்து வந்து மனுத்தாகல் செய்த அமமுக வேட்பாளர். வெட்பு கட்டனத்தை சில்லறைகளாக கொண்டு வந்த வேட்பாளர். இப்போது அந்த வரிசையில் பழனி,ஆயக்குடி 6வது வார்டு பகுதி பெண்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலையில் பாமக சார்பாக ஆறுமுகம் என்பவர் வேட்பு மனு தாக்கல் செய்ததால் பரபரப்பு. கடைசியில் அவரது வேட்பு மனு நிராகரிக்கப்பட்டது தனிக்கதை.  பெண்கள் வார்டு என்று தெரியாமலேயே  வேட்புமனு செய்யும் பாமகவின் அவல நிலை.  ...
உள்ளாட்சி தேர்தலில் விஜய் ரசிகர் மன்றம் திமுகவுக்கு ஆதரவு

உள்ளாட்சி தேர்தலில் விஜய் ரசிகர் மன்றம் திமுகவுக்கு ஆதரவு

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், தமிழக அரசியல், நடிகர்கள்
  தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளிலும் விஜய் ரசிகர் மன்றம் திமுகவிற்கு ஆதரவாக பிரச்சாரத்தில் ஈடுபடும். தூத்துக்குடி மாவட்ட விஜய் ரசிகர் மன்ற தலைவரும், தென் மாவட்ட விஜய் மக்கள் இயக்கம் ஒருங்கிணைப்பாளருமான பில்லா ஜெகன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குப்பதிவு பிப்ரவரி 19ம் தேதி நடைபெறுகிறது. வேட்பு மனு தாக்கல் நேற்றுடன் நிறைவுப்பெற்ற நிலையில், வரும்7ம் தேதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படவுள்ளது. கடந்த ஆண்டு நடைபெற்ற ஊரக உள்ளாட்சித் தேர்தலில் விஜய் மக்கள் இயக்கத்தினர் பல இடங்களில் சுயேச்சையாக போட்டியிட்டனர்.   மொத்தம் 169 பேர் போட்டியிட்ட நிலையில், இதில் 129 பேர் வெற்றி பெற்றனர். வெற்றி பெற்றவர்களை நடிகர் விஜய் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்து புகைப்படம் எடுத்துகொண்டார். இதனை தொடர்ந்து நகர்ப்புற...
பட்டியலில் பெயர் வருவதற்கு முன்பே வேட்பு மனுத்தாக்கல் செய்த திமுக நகர செயலாளர் மனைவி! அதிர்ச்சியில் உ.பி.க்கள்!

பட்டியலில் பெயர் வருவதற்கு முன்பே வேட்பு மனுத்தாக்கல் செய்த திமுக நகர செயலாளர் மனைவி! அதிர்ச்சியில் உ.பி.க்கள்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
    வேட்பாளர் பட்டியல் வெளியாவதற்கு முன்பாகவே மாநகராட்சி தேர்தலுக்கு தி.மு.க நகரச் செயலாளரின் மனைவி வேட்புமனு தாக்கல் செய்த விவகாரம் அக்கட்சியினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது. நகராட்சியாக இருந்த கடலூர், மாநகராட்சியாகத் தரம் உயர்த்தப்பட்ட பின்பு முதல் தேர்தலைச் சந்திக்கவிருக்கிறது. வரும் 19-ம் தேதி நடக்கவிருக்கும் தேர்தலுக்காக, கடந்த ஜனவரி மாதம் 28-ம் தேதி முதல் வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுவருகின்றன. புதிதாகத் தரம் உயர்த்தப்பட்டிருக்கும் கடலூர் மாநகராட்சியில் இருக்கும் 45 வார்டுகளைச் சேர்ந்த 42,479 வாக்காளர்கள் வாக்களிக்கவிருக்கின்றனர். நேற்று முன்தினம் 30-ம் தேதி கடலூர் மாநகராட்சி, ஆறு நகராட்சிகள் மற்றும் 14 பேரூராட்சிகளுக்கான வேட்பாளர் பட்டியலை அ.தி.மு.க வெளியிட்டது. அதையடுத்து அந்த வேட்பாளர்கள் பிரசாரத்தில் இறங்கியிருக்கிறார்கள். அதேசமயம் ...
கவுன்சிலர் தேர்டலில் போட்டியிட திருநங்கைக்கு வாய்ப்பளித்த திமுக!

கவுன்சிலர் தேர்டலில் போட்டியிட திருநங்கைக்கு வாய்ப்பளித்த திமுக!

HOME SLIDER, NEWS, செய்திகள்
    நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக சார்பாக போட்டியிட திருநங்கை ஒருவருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டிருப்பது சமூக வலைதளங்களில் வரவேற்பை பெற்றுள்ளது. தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளின் பதவிகாலம் முடிந்தும் அவற்றுக்கு தேர்தல் நடத்தப்படாமல் இருந்தது. இந்நிலையில், புதிதாக உருவாக்கப்பட்ட 9 மாவட்டங்கள் நீங்கலாக பிற மாவட்டங்களில் முதலில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. அதனை தொடர்ந்து நெல்லை, விழுப்புரம், காஞ்சிபுரம், வேலூர் தென்காசி, கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய 9 மாவட்டங்களுக்கு கடந்த ஆண்டு அக்டோபர் 6 மற்றும் 9ம் தேதிகளில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது.   இதனை தொடர்ந்து தமிழ்நாட்டில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 490 பேரூராட்சிகள் என அனைத்து நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கும் தேர்தலை நடத்த நடவடிக...
சீட் பங்கீடு கலாட்டா… திமுகவினர் மீது காங்., எம்.பி ஜோதிமணி குற்றச்சாட்டு!

சீட் பங்கீடு கலாட்டா… திமுகவினர் மீது காங்., எம்.பி ஜோதிமணி குற்றச்சாட்டு!

HOME SLIDER, kodanki darbar, NEWS, politics, செய்திகள், தமிழக அரசியல், வீடியோ
  நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தைக்கு வந்த தன்னை திமுகவினர் வெளியேற்றிவிட்டதாக காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி குற்றம்சாட்டியுள்ளார். கரூர் மாவட்ட திமுக அலுவலகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான இட ஒதுக்கீடு மற்றும் வேட்பாளரை தேர்வு செய்வது தொடர்பான இறுதி கட்ட ஆலோசனை நடத்தப்பட்டது. மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் காங்கிரஸ் சார்பில் அக்கட்சியின் எம்.பி. ஜோதிமணி கலந்து கொண்டார். அப்போது அவரிடம் கலந்தாலோசிக்காமல் வார்டு பங்கீடு தொடர்பாக இறுதி முடிவு எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் அதிருப்தி அடைந்த ஜோதிமணி இதுபற்றி கேட்டதாகவும், அதற்கு கூட்டத்தை விட்டு வெளியேறும்படி திமுகவினர் கூறியதாகவும் குற்றம்சாட்டியுள்ளார் . இதைத் தொடர்ந்து வெளியே வந்த ஜோதிமணி ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்ள வந்...
தாம்பூல தட்டு நிறைய பணக் கட்டு.. மதுரை மாநகராட்சி சுயேட்சையின் சுவாரஸ்ய வேட்புமனு தாக்கல்!

தாம்பூல தட்டு நிறைய பணக் கட்டு.. மதுரை மாநகராட்சி சுயேட்சையின் சுவாரஸ்ய வேட்புமனு தாக்கல்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், தமிழக அரசியல்
  மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட 24வது வார்டில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிடும் சங்கரபாண்டியன் என்கிற சமூக ஆர்வலர் கட்டுகட்டான டம்மி பணத்துடன் 'வாக்காளர்கள், வாக்களிப்பதற்கு பணம்பெற வேண்டாம்' என்று விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வேட்பு மனுத்தாக்கல் செய்துள்ளார். ஓட்டுக்கு பணம் கொடுப்பதும் வாங்குவதும் குற்றம் என்ற வாசகம் அடங்கிய பதாகையை ஏந்தியபடி கையில் தாம்பூல தட்டு முழுவதும் 2,000, 500 மற்றும் 200 ரூபாய் டம்மி பணத்தை கட்டுகட்டாக அடுக்கிவைத்தபடி வந்து மதுரை ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ள மாநகராட்சி மண்டல அலுவலகத்தில் இன்று வேட்புமனுதாக்கல் செய்தார். மண்டல அலுவலகத்தின் வாசல் முன்பு வரை டம்மி பணம் மற்றும் பாதகைகளுடன் வேட்பாளர் அனுமதிக்கப்பட்ட நிலையில், வேட்புமனு தாக்கல் செய்யும் போது வேட்புமனுவுடன் மட்டும் அனுமதிக்கப்பட்டார். பின் தேர்தல் அலுவலரிடம் வேட்புமனுவை தாக்க...