புதன்கிழமை, மே 15
Shadow

விமர்சனம்

நேர்முகம் விமர்சனம்

நேர்முகம் விமர்சனம்

விமர்சனம்
சிறு வயதில் தாயை இழந்து சித்தி கொடுமைக்கு ஆளான ஆதித்யா மேனன், ஒரு மனோதத்துவ மருத்துவர். இவர் சொந்தமாக கிளினிக் ஒன்றை வைத்திருக்கிறார். இவருக்கு பெண்கள் என்றால் சுத்தமாக பிடிக்காது. அவரிடம் சிகிச்சைக்கு வரும் இளம் ஜோடிகளை இவர் பல நாள் அடித்து உதைத்து, அவர்களை பலவிதங்களில் பயமுறுத்தி பிரித்து அனுப்புகிறார். இந்நிலையில், இவரிடம் நாயகன் ரஃபியும், அவரது காதலியான நாயகி மீனாட்சியும் மாட்டிக் கொள்கிறார்கள். இவர்கள் அந்த மருத்துவமனைக்கு வந்த பிறகு ஆதித்யா மேனன் அடைத்து வைத்துள்ள பல ஜோடிகளில் சிலர் மர்மமான முறையில் கொல்லப்படுகின்றனர். இந்நிலையில், காணாமல் போன காதல் ஜோடிகளை பாண்டியராஜன் தலைமையிலான போலீஸ் குழு தேட ஆரம்பிக்கிறது. இறுதியில், காதல் ஜோடிகளை அடைத்து வைத்திருக்கும் ஆதித்யா மேனனை சட்டத்தின் முன் நிறுத்தியதா? அடைத்து வைக்கப்பட்டிருந்த ஜோடிகளை கொலை செய்த மர்ம நபர் யார்? என்பதை கண்டுபிடித்தார...

தங்கல் – திரை விமர்சனம்

விமர்சனம்
அரியானாவில் உள்ள ஒரு கிராமத்தில் சாதாரண குடும்பத்தை சேர்ந்த அமீர்கானுக்கு மல்யுத்தத்தில் அதிக ஈடுபாடு உண்டு. மல்யுத்தத்தில் சாதித்து நாட்டுக்கு பல பதக்கங்களை பெற்றுக் கொடுக்க வேண்டும் என்பது அவரது ஆசை. தேசிய அளவில் மல்யுத்தத்தில் சாதிக்கும் அமீர்கான் தன்னுடைய குடும்ப சூழ்நிலையால் அடுத்த நிலையை எட்ட முடியாமல் போகிறது. எனவே, திருமணத்திற்கு பிறகு தனக்கு பிறக்கப் போகும் மகனையாவது மல்யுத்தத்தில் சாதிக்க வைக்க வேண்டும் என்று எண்ணுகிறார். ஆனால், அவருக்கோ அடுத்தடுத்து பிறக்கும் நான்கு குழந்தைகளும் பெண் குழந்தைகளாகவே பிறக்கின்றன. பெண் குழந்தைகளால் மல்யுத்தத்தில் சாதிக்க முடியாது என்று நினைத்துக் கொண்டு தனது ஆசை நிறைவேறாத வருத்தத்தில் இருக்கிறார் அமீர்கான். இந்நிலையில், ஒருநாள் அவரது குழந்தைகளில் மூத்த பெண்கள் இருவரும் ஒரு சிறிய தகராறில் இரண்டு பசங்களை புரட்டி எடுக்க, அதை பார்க்கும் அமீர்கான், ப...
சைத்தான் விமர்சனம்

சைத்தான் விமர்சனம்

விமர்சனம்
நடிகர்கள்: விஜய் ஆன்டனி, அருந்ததி நாயர் இசை: விஜய் ஆன்டனி தயாரிப்பு: பாத்திமா விஜய் ஆன்டனி இயக்கம்: பிரதீப் கிருஷ்ணமூர்த்தி   முன்ஜென்ம கதை. அமரர் சுஜாதாவின் 'ஆ' நாவலைத் தழுவி எடுக்கப்பட்டது என்றெல்லாம் வந்த செய்திகள் சைத்தானுக்கு ஒரு வித எதிர்ப்பார்ப்பைக் கிளப்பியது என்னமோ உண்மைதான். எதிர்ப்பார்ப்பை நிறைவேற்றியதா சைத்தான்? சாப்ட்வேர் எஞ்ஜினீயர் விஜய் ஆன்டனிக்கும் அருந்ததி நாயருக்கும் திருமணமாகி, வாழ்க்கை சுமூகமாகப் போய்க் கொண்டிருக்கும் நேரத்தில், விஜய் ஆன்டனி மண்டைக்குள் அடிக்கடி ஒரு குரல். அந்தக் குரல் அவரை திரும்பத் திரும்ப தற்கொலைக்குத் தூண்டுகிறது. நண்பர்களால் பிழைக்கிறார். இந்தக் குரலைப் பற்றி தன் மேலதிகாரியிடம் கூற, அவர் மனோதத்துவ மருத்துவரிடம் அழைத்துப் போகிறார். காமெடியன் இல்லாத குறையைத் தீர்க்கிற மாதிரி ஒரு கேரக்டர் வில்லனுக்கு! பின்னணி இசையில் மிரட்டி இருக்கும் விஜய் ஆ...
கடவுள் இருக்கான் குமாரு விமர்சனம்

கடவுள் இருக்கான் குமாரு விமர்சனம்

விமர்சனம்
நடிப்பு: ஜிவி பிரகாஷ், பிரகாஷ் ராஜ், நிக்கி கல்ராணி, ஆனந்தி, ஆர்ஜெ பாலாஜி, சிங்கம்புலி, ரோபோ சங்கர், ஊர்வசி ஒளிப்பதிவு: சக்தி சரவணன் இசை: ஜிவி பிரகாஷ் தயாரிப்பு: டி சிவா (அம்மா கிரியேஷன்ஸ்) இயக்கம்: ராஜேஷ் எம்   சென்னை டு பாண்டிச்சேரி... அல்லது பாண்டி டு சென்னை... இந்த ஒரு ட்ரிப்பில் ஒரு முழுப்படத்தையே எடுத்துவிடுவார் இயக்குநர் ராஜேஷ் எம். அப்படி எடுக்கப்பட்டுள்ள படம்தான் இந்த கடவுள் இருக்கான் குமாரு. காமெடிப் படத்துக்கு சீரியஸான கதை தேவையில்லை என்று முடிவு செய்து, ஒரு லைன் பிடித்திருக்கிறார். அது...   ஜிவி பிரகாஷுக்கும் ஆனந்திக்கும் காதல். ஆனால் இந்து - கிறிஸ்தவ பிரச்சினையைக் காட்டி ஆனந்தியின் அப்பா எம்எஸ் பாஸ்கர் மறுக்க, அது 'பேசுவதெல்லாம் உண்மை' ஊர்வசியால் நிரந்தரமாக பிரேக் ஆகிறது. கல்யாணத்துக்கு இரண்டு நாட்கள் இருக்கும்போது பாண்டிச்சேரிக்கு ஒரு பேச்சுலர் பார்ட்ட...
மாவீரன் கிட்டு விமர்சனம்

மாவீரன் கிட்டு விமர்சனம்

விமர்சனம்
நடிகர்கள்: விஷ்ணு விஷால், ராதாகிருஷ்ணன் பார்த்திபன், ஸ்ரீதிவ்யா, ஹரீஷ் உத்தமன், நாகி நீடு, ஃபெரேரா ஒளிப்பதிவு: ஏஆர் சூர்யா இசை : டி இமான் வசனம் - பாடல்கள்: யுகபாரதி மக்கள் தொடர்பு: ஜான்சன் தயாரிப்பு: ஐஸ்வர் சந்திரசாமி, தாய் சரவணன், ராஜீவன் எழுத்து - இயக்கம்: சுசீந்திரன் நூறாண்டு தமிழ் சினிமாவில் இப்போதுதான் பொது வழியில் தலித்தின் பிணம் ஏன் போகக் கூடாது? உனக்குச் சமமா நான் கால் மேல் கால் போட்டு உட்கார்ந்தா தப்பா? விருப்பப்பட்ட ஆணும் பெண்ணும் ஒன்று சேர்வதில் சாதிக்கு என்ன வேலையிருக்கிறது? என்ற கேள்விகளுடன் படங்கள் வர ஆரம்பித்துள்ளன. மாவீரன் கிட்டு கதை மிக இயல்பானது... அன்றும் இன்றும் நாம் பார்த்துக் கொண்டிருப்பது, நிகழ்வுகளாக... செய்திகளாக. பள்ளி செல்ல பல மைல் தூரம் நடந்து போக வேண்டிய, பிணத்தை எடுத்துச் செல்லக் கூட பொது வழி மறுக்கப்பட்ட சமூகம் வாழும் கிராமத்தில் பிறந்த கிருஷ்...