வெள்ளிக்கிழமை, ஏப்ரல் 26
Shadow

Tag: கமல்ஹாசன்

கமல்ஹாசனின் பிரசாரம் திடீர் ரத்து!

கமல்ஹாசனின் பிரசாரம் திடீர் ரத்து!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், நடிகர்கள்
கமல்ஹாசனின் பிரசாரம் திடீர் ரத்து! நெல்லை, தூத்துக்குடி, குமரி மாவட்டங்களில் போட்டியிடும் மக்கள் நீதி மய்யம் மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து கமல்ஹாசன் இன்று பிரசாரம் செய்வதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அவர் காலை 11 மணிக்கு தூத்துக்குடியிலும், பிற்பகலில் நெல்லை, பாளை பகுதிகளிலும் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்தும் பிரசாரம் செய்துவிட்டு மாலை கன்னியாகுமரி மாவட்டத்திற்கு செல்ல திட்டமிடப்பட்டிருந்தது. இந்நிலையில் கமல்ஹாசனின் இன்றைய தென்மாவட்ட நிகழ்ச்சிகள் திடீரென்று ரத்து செய்யப்பட்டுள்ளது. இது குறித்து மக்கள் நீதி மய்ய நிர்வாகிகளிடம் கேட்டபோது கூறியதாவது:- கமல்ஹாசன் நேற்று மதுரை மாவட்டத்திற்குட்பட்ட தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து அவனியாபுரம், பெத்தானியாபுரம், ஆரப்பாளையம் குறுக்கு சாலை, கோ.புதூர் பஸ் நிலையம், தெப்பக்குளம் ஆகிய பகுதிகளில் பிரசாரம் மேற்கொண்டார...
நடிகர் கமல்ஹாசன் வாகனத்தை  மறித்த தேர்தல் பறக்கும் படை!

நடிகர் கமல்ஹாசன் வாகனத்தை மறித்த தேர்தல் பறக்கும் படை!

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, செய்திகள், நடிகர்கள், முன்னோட்டம்
நடிகர் கமல்ஹாசன் வாகனத்தை மறித்த தேர்தல் பறக்கும் படை! தமிழக சட்டமன்ற தேர்தல் வருகிற 6-ந் தேதி நடக்கிறது. இதையொட்டி வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசு பொருட்கள் வினியோகம் செய்வதை தடுக்க தேர்தல் பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது. இவர்கள் வாகன சோதனை நடத்தி வாகனங்களில் ரூ.50 ஆயிரத்துக்கு மேல் உரிய ஆவணங்கள் இல்லாமல் பணம் எடுத்து சென்றால் பறிமுதல் செய்து வருகிறார்கள். இந்த நிலையில், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் பயணித்த பிரசார வாகனத்தை மறித்து தேர்தல் பறக்கும் படையினர் சோதனை நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியது. திருச்சியில் பொதுக்கூட்டத்தில் பங்கேற்க சென்ற கமல்ஹாசனின் வாகனத்தை மறித்த தேர்தல் பறக்கும் படையினர் சோதனை செய்தனர். சோதனைக்கு பிறகு கமல் ஹாசன் தனது பயணத்தை தொடர்ந்தார்....
சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட தகுதியான மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டது!

சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட தகுதியான மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டது!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட தகுதியான மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டது! சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடத் தாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனுக்களின் பரிசீலனை முடிந்துள்ள நிலையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆகியோரின் மனுக்கள் உட்படத் தகுதியான மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 234 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு மொத்தம் ஏழாயிரத்து 155 வேட்பு மனுக்களும், கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியில் போட்டியிட 23 வேட்பு மனுக்களும் தாக்கல் செய்யப்பட்டன. தாக்கல் செய்யப்பட்ட மனுக்களின் பரிசீலனை தொகுதிகள் தோறும் இன்று நடைபெற்றது. வேட்பு மனுக்களில் அனைத்து விவரங்களும் உள்ளனவா? முறையாகச் சான்றொப்பம் பெறப்பட்டுள்ளனவா? என்பது குறித்துத் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் பரிசீலித்தனர். அனைத்து விவரங்களும் முற...
நீட் தேர்வுக்கு பதில் ‘சீட்’ தேர்வு -கமல் தேர்தல் அறிக்கை

நீட் தேர்வுக்கு பதில் ‘சீட்’ தேர்வு -கமல் தேர்தல் அறிக்கை

HOME SLIDER, NEWS, politics
நீட் தேர்வுக்கு பதில் ‘சீட்’ தேர்வு கோவையில் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் தங்கள் கட்சியின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார். வளர்ந்த நாடுகளுக்கு இணையாக தமிழ்நாட்டை உயர்த்துவோம் என்ற பெயரில் தேர்தல் அறிக்கை இருந்தது. முன்னதாக தங்கள் கட்சியின் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ள முக்கிய சாராம்சங்களை தனது டுவிட்டர் பக்கத்தில் கமல்ஹாசன் பதிவிட்டார். அதில் கூறியிருப்பதாவது:- 1. ஊழலற்ற, நேர்மையான, விரைந்து செயல்படும் மக்கள் நலம் காக்கும் மக்களாட்சி கொடுக்கப்படும். 2. விவசாயம் தொழில் உற்பத்தி மற்றும் சேவைத்துறை வளர்ச்சியை உயர்த்தி தமிழகத்தின் ஒட்டுமொத்த பொருளாதாரத்தை அடுத்த 10 ஆண்டில் 15 முதல் 20 சதவீத வளர்ச்சியை உறுதி செய்து ரூ.60-70 லட்சம் கோடியாக உயர்த்துவோம். 3. 1 முதல் 2 கோடி பேருக்கு மதிப்பு கூட்டப்பட்ட வேலை வாய்ப்பை உறுதி செய்து, தனிநபர் வருமானத்தை 7 முதல் 10 லட்சமா...
மக்களுக்கு தெரிந்த முகமாக நான் இருக்கிறேன் – ம.நீ.ம. தலைவர் கமல்ஹாசன்

மக்களுக்கு தெரிந்த முகமாக நான் இருக்கிறேன் – ம.நீ.ம. தலைவர் கமல்ஹாசன்

HOME SLIDER, politics, செய்திகள், நடிகர்கள்
மக்களுக்கு தெரிந்த முகமாக நான் இருக்கிறேன் -மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் கோவையில் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது, 234 தொகுதியிலும் மக்களுக்கு தெரிந்த முகமாக நான் இருக்கிறேன். இதனால், பல இடங்களுக்கு செல்கிறேன். ஹெலிகாப்டருக்கான செலவு எனது தேர்தல் செலவின கணக்கில்தான் வரும். எங்களது கட்சி தேர்தல் அறிக்கை விரைவில் வரும். நாங்கள் இரண்டு வருடங்களுக்கு முன் அளித்த அறிக்கையில் கூறி இருப்பதை தற்போது கட்சிகள் வெளியிட்டு வருகின்றன. இது போன்ற நல்ல விஷயம் மக்களுக்கு செல்ல முன்னோடியாக இருக்கிறோம். இல்லத்தரசிகளுக்கு ஊதியம் என்ற எங்களின் திட்டத்தை மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார். "கமல்ஹாசன் அறிவித்த திட்டத்தை பலரும் தேர்தல் அறிக்கையில் பயன்படுத்தி வருகிறார்கள்" என்று காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சசிதரூர் கூறி இருக்க...
ரஜினியின் முடிவு ஏமாற்றம் அளிக்கிறது – கமல்ஹாசன்

ரஜினியின் முடிவு ஏமாற்றம் அளிக்கிறது – கமல்ஹாசன்

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
ரஜினியின் முடிவு ஏமாற்றம் அளிக்கிறது என மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளார். கடந்த 2017 ஆம் ஆண்டு தான் அரசியலுக்கு வருவது உறுதி என கூறிய நடிகர் ரஜினிகாந்த், இன்று உடல்நிலையை கருத்தில் கொண்டு, தான் அரசியலுக்கு வரமுடியவில்லை என பகிரங்கமாக அறிவித்தார். இந்நிலையில், இது குறித்து கருத்து தெரிவித்துள்ள மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன், ‘ ரஜினியின் முடிவு சற்று ஏமாற்றம் இருந்தாலும்; அவரது ஆரோக்கியம் எனக்கு முக்கியம். சென்னை வந்தவுடன் அவரை சந்திப்பேன். அவரது ரசிகர்கள் மனநிலைதான் எனக்கும். அவரது ஆரோக்யம் எனக்கே முக்கியம். என் ரஜினி நலமுடன் இருக்க வேண்டும். எங்கிருந்தாலும் அவர் ஆரோக்யத்துடன் இருக்க வேண்டும்’ என்று கூறினார்....
அரசியலில் கமல்ஹாசன் ஜீரோ – முதல்வர் பழனிசாமி விமர்சனம்

அரசியலில் கமல்ஹாசன் ஜீரோ – முதல்வர் பழனிசாமி விமர்சனம்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், நடிகர்கள்
அரசியலில் கமல்ஹாசன் ஜீரோ - முதல்வர் பழனிசாமி விமர்சனம் தமிழகத்தில் இன்னும் சில மாதங்களில் தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து பல்வேறு அரசியல் கட்சிகளும் பிரசாரத்தை தொடங்கிவிட்டன. இதனால், தமிழக அரசியல் களம் தற்போதே சூடுபிடிக்கத்தொடங்கிவிட்டது. குறிப்பாக, மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தனது தேர்தல் பிரசாரத்தை தொடங்கிவிட்டார். அவர் பல்வேறு மாவட்டங்களில் பிரசாரத்தை மேற்கொண்டு வருகிறார். மேலும், அவர் தொடர்ந்து ஆளும் அதிமுக அரசையும் தொடர்ந்து விமர்சித்து வருகிறார். இதனால், அதிமுக-வுக்கும் கமல்ஹாசனுக்கும் இடையே வார்த்தை மோதல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கோவையில் செய்தியாளர்களை இன்று சந்தித்தார். அப்போது மக்கள் நீதியம் கட்சி தலைவர் கமல்ஹாசன் அதிமுக அரசை விமர்சிப்பது குறித்து முதலமைச்சர் பழனிசாமியிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித...
21 நாள் தொடர் ஊரடங்கு உத்தரவிட்ட பிரதமர் மோடியை கடுமையாக விமர்சித்த கமல்.

21 நாள் தொடர் ஊரடங்கு உத்தரவிட்ட பிரதமர் மோடியை கடுமையாக விமர்சித்த கமல்.

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, செய்திகள், நடிகர்கள்
    21 நாள் தொடர் ஊரடங்கு உத்தரவிட்ட பிரதமர் மோடியை கடுமையாக விமர்சித்த கமல். கொரோனாவை கட்டுப்படுத்துவதற்கு ஒரே வழி வீட்டை விட்டு மக்கள் வெளியேறாமல் தனிமையில் இருப்பதுதான். ஊரடங்கு காலமான 21 நாட்களை ஆக்கப்பூர்வமக்க மக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்” என மோடி கூறியிருக்கிறார். இதற்கு இந்திய மக்கள் அனைவரும் ஆதரவு தெரிவித்து வரும் நிலையில் நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் தன் சமூக வலைதள பக்கத்தில் கூறியுள்ளதாவது… உயிர் காக்க 21 நாட்கள் உள்ளிருக்க சொல்லும் நேரத்தில், அணிசேரா தொழிலாளர்கள் எங்ஙனம் பசியாறுவர் என்பதையும் கவனத்தில் கொள்க. பெருமுதலாளிகளுக்கு மட்டும் உதவும் நேரம் இதுவல்ல. இந்திய நிதிநிலையை என்றும் காத்தவன் சிறுதொழில் செய்பவனே. அவனை உதாசீனித்தவர் பதவி இழப்பர். இது சரித்திரம். என கமல் பதிவிட்டுள்ளார். இ கமலின் இந்த கருத்து ...
என் சகாக்களை இழந்து விட்டேன் – கமல் உருக்கம்

என் சகாக்களை இழந்து விட்டேன் – கமல் உருக்கம்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  என் சகாக்களை இழந்து விட்டேன் - கமல் உருக்கம் இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் நடிகர் கமலஹாசன் நடித்து வரும் படம் ‘இந்தியன் 2’. இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னையில் உள்ள ஈவிபி பிலிம் சிட்டியில் நேற்று இரவு நடந்து வந்தது. அப்போது 150 அடி உயர கிரேன் கீழே விழுந்ததில் மூன்று பேர் பலியானார்கள். 10க்கும் மேற்பட்டோர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விபத்து நிகழ்ந்தது குறித்து தனது ட்விட்டரில் செய்தி வெளியிட்டுள்ள கமலஹாசன் ” எத்தனையோ விபத்துக்களை சந்தித்து, கடந்திருந்தாலும் இன்றைய விபத்து மிகக் கொடூரமானது. மூன்று சகாக்களை இழந்து நிற்கிறேன்.எனது வலியை விட அவர்களை இழந்த குடும்பத்தினரின் துயரம் பன்மடங்கு இருக்கும். அவர்களில் ஒருவனாக அவர்களின் துயரத்தில் பங்கேற்கிறேன்.அவர்களுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்” என...
இந்தியன் 2 ஷூட்டிங்கில் பயங்கர விபத்து கிரேன் கவிழ்ந்து 3 பேர் பலி, இயக்குநர் ஷங்கர் உட்பட 10 பேர் காயம்!

இந்தியன் 2 ஷூட்டிங்கில் பயங்கர விபத்து கிரேன் கவிழ்ந்து 3 பேர் பலி, இயக்குநர் ஷங்கர் உட்பட 10 பேர் காயம்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
    இந்தியன் 2 ஷூட்டிங்கில் பயங்கர விபத்து கிரேன் கவிழ்ந்து 3 பேர் பலி, இயக்குநர் ஷங்கர் உட்பட 10 பேர் காயம்! ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்து வரும் இந்தியன் 2 படத்தின் பிரம்மாண்ட சண்டை காட்சி பூந்தமல்லியை அடுத்த ஈவிபி செட்டுக்குள் எடுக்கப்பட்டு வருகிறது. கலை இயக்குனர் முத்துராஜா பிரமாண்டமான செட் அமைத்து வருகிறார். நேற்று இரவு நடைபெற்ற படப்பிடிப்பின் போது பிரமாண்டமான கிரேன் எதிர்பாராமல் அறுந்து விழுந்து ஒரு உதவி இயக்குனர் உட்பட 3 பேர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்து தனியார் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இயக்குனர் ஷங்கருக்கும் காயம் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. சில தினங்களுக்கு முன்பு அஜீத் நடிக்கும் வலிமை ஷூட்டிங்கில் விபத்து ஏற்பட்டு அஜீத் காயம் அடைந்தார். வலிமை ஷூட்டிங் நிறுத்தப்பட்டது. இதற்கு முன...