சனிக்கிழமை, ஜூன் 13
Shadow

Tag: கொரானா பரவலை தடுக்க

செய்தியாளர்களை தாக்கிய போலீஸ் DSP சஸ்பெண்ட்!

செய்தியாளர்களை தாக்கிய போலீஸ் DSP சஸ்பெண்ட்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
    ஆந்திராவில் செய்தியாளர்களைத் தாக்கிய டி.எஸ்.பியை இடைநீக்கம் செய்து ஆந்திர காவல்துறை உத்தரவிட்டுள்ளது. ஆந்திராவில் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் அதில் பாதிக்கப்பட்டோர்களின் விவரங்கள், வெளியில் நடமாடும் மக்களின் செய்திகள் உள்ளிட்டவற்றைச் சேகரிக்கச் சென்ற செய்தியாளர்களை தங்கள் பணிகள் செய்யவிடாமல் காவலர் தடுத்து அவர்களைத் தாக்கினர். நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் மக்கள் தங்கள் வீடுகளில் முடங்கியுள்ளனர். அத்தியாவசிய பொருட்கள் கொள்முதல் செய்ய மக்கள் வெளியில் வருகின்றனர். ஆனால் ஊடகத்துறை, மருத்துவர்கள், காவல்துறை உள்ளிட்டோர் பாதுகாப்புடன் வெளியில் செல்ல மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இந்நிலையில் ஆந்திர மாநிலம் ஏலூரில் உள்ள அனுமன் சந்திப்பில் செய்தி சேகரிக்கச் செய்தியாளர்கள் சென்றனர். அவர்களைச் செல்லவிடாமல் போலீஸார் தடுத்து ந...
உஷார்… இதே வேகத்தில் போனால் மே மாசத்தில் கொரானா தாக்கம் 10 லட்சத்தை தாண்டுமாம்!

உஷார்… இதே வேகத்தில் போனால் மே மாசத்தில் கொரானா தாக்கம் 10 லட்சத்தை தாண்டுமாம்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  உலகம் முழுதும் பெரும் அச்சத்தையும், நாளுக்கு நாள் ஆயிரக்கணக்கான மக்களின் உயிரை குடித்து வரும் கொரானா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நாடு முழுவதும் தற்போது சுமார் 700 பேர் இந்த வைரஸ் பாதிப்புக்கு ஆளாகி இருக்கின்றனர். இந்தநிலையில் கடந்த 16-ந்தேதி வரை இந்தியாவில் வைரஸ் பரவலின் வேகம் தொடர்பான விவரங்களை வைத்து சர்வதேச விஞ்ஞானிகள் ஆய்வு செய்தனர். இந்த ஆய்வின் முடிவில், ‘இந்தியாவில் வைரஸ் தொற்றின் வேகம் இப்போது இருக்கும் இதே வேகத்தில் சென்றால், மே மாத இடைப்பகுதிக்குள் இந்தியாவில் 1 முதல் 13 லட்சம் வரையிலான நபர்கள் கொரோனாவால் பாதிக்க வாய்ப்பு உள்ளது’ என கடும் எச்சரிக்கை விடுத்திருக்கிறார்கள். இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதை தடுக்க சமூக விலகல் மிகமிக அவசியம் என்றும் எச்சரிக்கை செய்து இருக்கிறார்கள்....
ஊரடங்கு உத்தரவு மூலமாக மட்டுமே கொரானா அழியாது தடுப்பு மருந்து கண்டறிய வேண்டும் – உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை!

ஊரடங்கு உத்தரவு மூலமாக மட்டுமே கொரானா அழியாது தடுப்பு மருந்து கண்டறிய வேண்டும் – உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
    ஊரடங்கு உத்தரவு மூலமாக மட்டுமே கொரானாவை ஒழித்து விட முடியாது - உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை! உலகம் முழுவதும் மனித குலத்திற்கு பெரும் சவாலாக விளங்கி பல லட்சம் மக்களை பாதிப்பில் ஆழ்த்தி, பல்லாயிரக்கணக்கான மக்களை கொன்று குவித்து வரும் கொரோனா வைரஸ் உலகம் முழுவதிலும் மனிதர்கள் மூலமாக வேகமாக பரவி வருவதால், இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு மக்கள் வீடுகளிலேயே முடக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தனித்திருப்பதாலும், சமூக விலகலை பின்பற்றுவதாலும் மட்டுமே வைரசை கட்டுப்படுத்த முடியும் என மருத்துவத்துறை அறிவுறுத்தி உள்ளது. இந்நிலையில், கொரோனாவை ஒழிக்க ஊரங்கு மட்டுமே பலன் தராது உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை செய்துள்ளது. இதுதொடர்பாக உலக சுகாதார அமைப்பின் டைரக்டர் ஜெனரல் டெட்ராஸ் அந்தானம் கேப்ரியசஸ் கூறியதாவது: கொரோனா வைரஸ் பரவலை குறை...
லண்டனில் இருந்து திரும்பியதால் தன்னைத் தானே தனிமைபடுத்திக் கொண்ட மணிரத்னம் – சுஹாசினி மகன்

லண்டனில் இருந்து திரும்பியதால் தன்னைத் தானே தனிமைபடுத்திக் கொண்ட மணிரத்னம் – சுஹாசினி மகன்

CINI NEWS, HOME SLIDER, NEWS, செய்திகள், நடிகைகள்
    லண்டனில் இருந்து திரும்பியதால் தன்னைத் தானே தனிமைபடுத்திக் கொண்ட மணிரத்னம் - சுஹாசினி மகன்! இயக்குனர் மணிரத்னம்-சுஹாசினி தம்பதியின் மகன் நந்தன், கடந்த ஐந்து நாட்களாக தன்னைத்தானே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாகவும், அவருக்கு கொரோனா தொற்று இருப்பதால் இவ்வாறு இருப்பதாக வதந்திகள் பரவி வந்தன. இந்நிலையில், அந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக நடிகை சுஹாசினி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கண்ணாடி அறையில் தனிமைப்படுத்திக் கொண்ட தனது மகனுடன் உரையாடுவதை அவர் வீடியோவாக எடுத்துள்ளார். அதில் தனது மகன் கடந்த 18ந் தேதி லண்டனில் இருந்து வந்ததாகவும், கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவன் தன்னைத்தானே தனிமைப்படுத்திக் கொண்டதாகவும் கூறியுள்ளார்.   https://twitter.com/khushsundar/status/1241557165514444800?s=19 மேலும் நந்தன் கூறுகையில், தற்போது 5 ...
22ம் தேதி முழு ஊரடங்கு… மெட்ரோ ரயில் ஓடாது… பால் இல்லை… கோயம்பேடு மார்க்கெட் லீவு… கொரானா பரவலை தடுக்க..!

22ம் தேதி முழு ஊரடங்கு… மெட்ரோ ரயில் ஓடாது… பால் இல்லை… கோயம்பேடு மார்க்கெட் லீவு… கொரானா பரவலை தடுக்க..!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
    22ம் தேதி முழு ஊரடங்கு... மெட்ரோ ரயில் ஓடாது... பால் இல்லை... கோயம்பேடு மார்க்கெட் லீவு... கொரானா பரவலை தடுக்க..! உலகம் முழுதும் பெரும் பீதியையும், அச்சத்தையும் உயிர்பலியையும் ஏற்படுத்தி வரும் கொரானா வைரஸ் பரவலை தடுக்க உலகம் முழுதும் பல்வேறு நாடுகளில் தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள். பெறுபாலான நாடுகள் பிற நாடுகளுடனான போக்குவரத்தை தடை செய்து விட்டது. வான் வழி போக்குவரத்து, கப்பல் போக்குவரத்து, சாலை மார்க்கமான வழிகள் என எல்லாம் அடைக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலும் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க மத்திய, மாநில அரசுகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றன. வெளிநாட்டில் இருந்து வருபவர்கள் மூலம் நோய் பரவுவதால் அனைத்து விமான பயணிகளையும் முழுமையாக மருத்துவ பரிசோதனை செய்து அனுப்புகின்றனர். சுமார் 130 கோடி மக்கள் தொகை கொண்ட நாட்டில் என்னதான் பாதுகாப்பு முறையை கடை...