புதன்கிழமை, மே 15
Shadow

Tag: கொரோனா வைரஸ்

உலக அளவில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 15 கோடியை தாண்டியது!

உலக அளவில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 15 கோடியை தாண்டியது!

HOME SLIDER, NEWS, உலக செய்திகள், செய்திகள்
உலக அளவில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 15 கோடியை தாண்டியது! சீனாவின் வுகான் நகரில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நாடுகளை உலுக்கி வருகிறது. வைரஸ் தொற்று பரவி ஏறத்தாழ ஒரு ஆண்டு கடந்து விட்டாலும் இதன் வீரியம் குறைந்தபாடில்லை. கொரோனா பாதிப்பு அதிகமுள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, இந்தியா, பிரேசில், பிரான்ஸ், துருக்கி ஆகியவை முதல் 5 இடங்களில் உள்ளன. இந்நிலையில், உலக அளவில் கொரோனா பாதிப்பில் இருந்து 15 கோடிக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர். கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 16.85 கோடியைக் கடந்துள்ளது. மேலும், வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 34.98 லட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். வைரஸ் பரவியவர்களில் 1.49 கோடிக்கும் அதிகமானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கவலைக்கிடமாக உள்ளோரின் நிலைமை 96 ஆயிரத்தை தாண்டியுள்ளது....
கொரோனா நிவாரண நிதி 2வது தவணை – முதல்வர் ஸ்டாலின் ஜூன் 3ல் தொடங்கி வைக்கிறார்!

கொரோனா நிவாரண நிதி 2வது தவணை – முதல்வர் ஸ்டாலின் ஜூன் 3ல் தொடங்கி வைக்கிறார்!

HOME SLIDER, NEWS, செய்திகள்
கொரோனா நிவாரண நிதி 2வது தவணை - முதல்வர் ஸ்டாலின் ஜூன் 3ல் தொடங்கி வைக்கிறார்! தமிழகத்தில் கொரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்த கடந்த 10-ம் தேதியில் இருந்து ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் நேற்று முன்தினம் முதல் தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது. பால், மருந்து பொருட்கள் மற்றும் குடிநீர் ஆகியவை தவிர வேறு எந்த விநியோகத்திற்கும் அனுமதி இல்லை என தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதற்கிடையே, ஊரடங்கு காரணமாக மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படாமல் இருக்க தமிழக அரசு சார்பில் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.4000 அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இந்த மாதம் முதல் தவணையாக ரூ.2000 ரேஷன் கடைகளில் அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், கொரோனா நிவாரண நிதியின் 2-வது தவணை ஜூன் 3ம் தேதி வழங்கப்படவுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இத்திட்டத்தை தொ...
ஆயுர்வேத மருந்து வாங்க அலைமோதிய மக்கள் கூட்டம்!

ஆயுர்வேத மருந்து வாங்க அலைமோதிய மக்கள் கூட்டம்!

helth tips, HOME SLIDER, NEWS, செய்திகள்
 ஆயுர்வேத மருந்து வாங்க அலைமோதிய மக்கள் கூட்டம்! ஆந்திர பிரதேச மாநிலம் நெல்லூர் மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணபட்டினம் என்ற கிராமத்தைச் சேர்ந்த போரிகி ஆனந்தயா என்ற ஆயுர்வேத மருத்துவர் கொரோனாவுக்கு மருந்து வழங்கி வருகிறார். அந்த மருந்து கொரோனா வராமல் தடுப்பது மட்டுமின்றி பாதிக்கப்பட்டவர்களை குணமாக்கும் என்றும் அவர் தெரிவித்தார். மருந்து இலவசம் என்றும் அறிவிப்பு வெளியிட்டதால் அதனை வாங்க மக்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. நீண்ட வரிசையில் நின்று பொதுமக்கள் வாங்கிச் செல்கின்றனர். அந்த கிராமத்திற்கு செல்லும் சாலைகள் கார்கள், ஆம்புலன்சுகளால் நிரம்பி வழிகின்றன. பெருமளவிலான கூட்டத்தால், சுமார் 3 கிலோமீட்டர் தொலைவுக்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால் மேலும் கொரோனா பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனிடையே மருத்துவமனைகளில் இருந்த கொரோனா நோயாளிகளை அழைத்துக்கொண்டு அவர்களின் உறவினர்களும் அங்கு ...
பிரேசிலை உலுக்கும் கொரோனா – ஒரே நாளில் 83,367 பேருக்கு பாதிப்பு உறுதி!

பிரேசிலை உலுக்கும் கொரோனா – ஒரே நாளில் 83,367 பேருக்கு பாதிப்பு உறுதி!

HOME SLIDER, NEWS, உலக செய்திகள், செய்திகள்
பிரேசிலை உலுக்கும் கொரோனா - ஒரே நாளில் 83,367 பேருக்கு பாதிப்பு உறுதி! உலக அளவில் கொரோனா பாதிப்புகளில் அமெரிக்கா முதல் இடத்தில் உள்ளது. அதைத்தொடர்ந்து இந்தியவும், மூன்றாவது இடத்தில் பிரேசிலும் உள்ளது. பிரேசில் நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 83,367 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது என தேசிய சுகாதார அமைச்சகம் தெரிவித்து உள்ளது. இதனால் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1 கோடியே 58 லட்சத்து 98 ஆயிரத்து 558 ஆக உயர்வடைந்து உள்ளது. அந்நாட்டில் 2,527 பேர் உயிரிழந்து உள்ளனர். மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 4 லட்சத்து 44 ஆயிரத்து 391 ஆக உயர்ந்து உள்ளது. கொரோனா பெருந்தொற்று ஏற்பட்ட பின்னர் இதுவரையில் 1 கோடியே 43 லட்சத்துக்கும் மேற்பட்டோர் குணமடைந்துள்ளனர்.  10 லட்சத்துக்கும் அதிகமானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்....
நான் படத்தில் காமெடிக்காக சொன்னது…. இப்போ நிஜத்தில் நடக்குது – வடிவேலு!

நான் படத்தில் காமெடிக்காக சொன்னது…. இப்போ நிஜத்தில் நடக்குது – வடிவேலு!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகர்கள்
நான் படத்தில் காமெடிக்காக சொன்னது.... இப்போ நிஜத்தில் நடக்குது - வடிவேலு! தமிழ் பட உலகில் முன்னணி நகைச்சுவை நடிகராக கலக்கிய வடிவேலுக்கு வயதானவர்கள் முதல் குழந்தைகள் வரை அனைத்து வயதிலும் ரசிகர்கள் உள்ளனர். இம்சை அரசன் 24-ம் புலிகேசி படத்தில் நடிக்க மறுத்ததால் புதிய படங்களில் அவரை ஓப்பந்தம் செய்ய தயாரிப்பாளர் சங்கம் தடை விதித்தது. இதனால் கடந்த சில வருடங்களாக அவர் நடிக்கவில்லை. இந்நிலையில், கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நடிகர் வடிவேலு பேசியிருப்பதாவது: “கொரோனாவால் பீதி ஏற்பட்டு உள்ளது. வெளியே போக கூடாது. யாரையும் தொட்டு பேசக்கூடாது. கை கொடுக்க கூடாது என்கின்றனர். மருத்துவ உலகத்தையும், மனித உலகத்தையும் மிரட்டி வைத்துள்ளது கொரோனா. இந்த மாதிரி யாருமே பார்த்தது இல்லை. என்னிடம் ஒரு அம்மா எப்போது நடிக்க போகிறீர்கள் என்று கேட்டார். இப்போது நடிக்க வருவதற்கும் படம் எடுப்பதற்கும் ஆ...
ஊரடங்கு நீட்டிப்பா?-முதலமைச்சர் மருத்துவ நிபுணர் குழுவுடன் ஆலோசனை!

ஊரடங்கு நீட்டிப்பா?-முதலமைச்சர் மருத்துவ நிபுணர் குழுவுடன் ஆலோசனை!

HOME SLIDER, NEWS, செய்திகள்
ஊரடங்கு நீட்டிப்பா?-முதலமைச்சர் மருத்துவ நிபுணர் குழுவுடன் ஆலோசனை! தமிழகத்தில் வேகமாக பரவி வரும் கொரோனா பரவலை தடுக்க கடந்த 10-ந்தேதி முதல் 24-ந்தேதி வரை முழு ஊரடங்கு அமலில் உள்ளது. வரும் 24-ந்தேதியுடன் முழு ஊரடங்கு நிறைவடைய உள்ள நிலையில் கொரோனா பரவலை தடுக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை மருத்துவ நிபுணர் குழுவுடன் ஆலோசனை நடத்துகிறார். நாளை காலை 10 மணிக்கு மருத்துவ நிபுணர் குழுவுடனும், பின்னர் எம்.எல்.ஏ.க்கள் குழுவுடனும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனையில் ஈடுபடுகிறார். ஆலோசனைக்கு பின்னர் தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிக்கப்படுமா? என்பது குறித்த அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது....
ஆதரவற்றோர் இல்லத்துக்கு 1 மாதத்துக்கு தேவையான உணவு பொருட்களை வழங்கிய போலீஸ் தம்பதி!

ஆதரவற்றோர் இல்லத்துக்கு 1 மாதத்துக்கு தேவையான உணவு பொருட்களை வழங்கிய போலீஸ் தம்பதி!

HOME SLIDER, NEWS, செய்திகள்
ஆதரவற்றோர் இல்லத்துக்கு 1 மாதத்துக்கு தேவையான உணவு பொருட்களை வழங்கிய போலீஸ் தம்பதி! தமிழகத்தில் கொரோனா 2ம் அலை மிக தீவிரமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த அரசு ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இதனால் ஏழை எளிய மக்கள் மற்றும் ஆதரவற்றோர் உணவுக்கே கஷ்டப்படும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இவர்களுக்காக பல்வேறு தரப்பினரும் ஆதரவு கரம் நீட்டி வருகின்றனர். பல இடங்களில் தன்னார்வலர்கள் தங்களால் இயன்ற உதவிகளை செய்து வருகின்றனர். இந்நிலையில் திண்டுக்கல்லைச் சேர்ந்த போலீஸ் தம்பதி தங்களது ஒரு மாத சம்பளத்தில் ஆதரவற்றோர் இல்லத்துக்கு தேவையான அனைத்து பொருட்களையும் வழங்கி உதவிக்கரம் நீட்டியுள்ளனர். https://www.youtube.com/watch?v=VeXk-fRr0tM திண்டுக்கல் அருகே உள்ள கல்லடிப்பட்டியைச் சேர்ந்தவர் அன்பழகன். இவர் அம்மையநாயக்கனூர் போலீஸ் நிலையத்திலும், இவரது மனைவி செல்வரத்தினம் வி...
வெளிநாட்டில் மருத்துவம் பயின்ற 500 பேர் மருத்துவ பணியை தொடங்க தமிழக அரசு அனுமதி!

வெளிநாட்டில் மருத்துவம் பயின்ற 500 பேர் மருத்துவ பணியை தொடங்க தமிழக அரசு அனுமதி!

HOME SLIDER, NEWS, செய்திகள்
வெளிநாட்டில் மருத்துவம் பயின்ற 500 பேர் மருத்துவ பணியை தொடங்க தமிழக அரசு அனுமதி! வெளிநாட்டில் மருத்துவம் படித்தவர்கள் பயிற்சியின்போது ரூ.5 லட்சம் கட்டணம் செலுத்த வேண்டும். அவர்கள் தமிழகத்தில் பயிற்சி பெறும் வகையில் ஓராண்டு பணிபுரிந்த பின்பே மருத்துவ பணி தொடர வேண்டும் என்ற விதி இருந்தது. இந்த நிலையில், கொரோனா தடுப்பு நடவடிக்கையில் மருத்துவர்கள் தேவை காரணமாக இந்த 2 விதிகளையும் தளர்த்தி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தற்போது வெளிநாட்டில் மருத்துவம் படித்து காத்திருக்கும் 500 பேரும் உடனடியாக மருத்துவ பணியை தொடங்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது....
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை கோவை வருகை!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை கோவை வருகை!

HOME SLIDER, NEWS, செய்திகள்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை கோவை வருகை! முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சேலத்தில் இருந்து கார் மூலமாக கோவைக்கு நாளை காலை 11 மணிக்கு வருகிறார். பின்னர் கோவை கலெக்டர் அலுவலகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அனைத்து துறை அதிகாரிகள் பங்கு பெறும் ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்கிறார். கோவை அரசு கலை, அறிவியல் கல்லூரி கொரோனா சிறப்பு சிகிச்சை மையமாக மாற்றப்பட்டு அங்கு 250 படுக்கைகள் அமைக்கப்பட்டு உள்ளது. ஆலோசனை கூட்டம் முடிந்ததும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கோவை கலை, அறிவியல் கல்லூரிக்கு செல்கிறார். அங்கு கொரேனா சிறப்பு சிகிச்சை மையத்தை திறந்து வைத்து பார்வையிடுகிறார். பின்னர் அரசினர் விருந்தினர் மாளிகைக்கு சென்று மதிய உணவு முடித்த பின்னர் விமானம் மூலமாக சென்னைக்கு புறப்பட்டு செல்கிறார். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகையையொட்டி சட்டம், ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி. தாமரை கண்ணன் த...
கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட நயன்தாரா!

கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட நயன்தாரா!

CINI NEWS, helth tips, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகர்கள்
கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட நயன்தாரா! தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருவதை அடுத்து தடுப்பூசி போட்டுக் கொள்ளும் விழிப்புணர்வை மாநில அரசின் சுகாதாரத்துறை ஏற்படுத்தி வருகிறது, முதல் அலையினை காட்டிலும் கொரோனா இரண்டாம் நாட்டில் வேகமாக பரவி வருகிறது. இதனால் அரசியல் தலைவர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் உள்ளிட்டோர் தடுப்பூசி போட்டுக்கொண்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். சமீபத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தடுப்பூசி போட்டுக் கொண்டார். இந்நிலையில், நடிகை நயன்தாரா சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார். இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது....