சனிக்கிழமை, ஏப்ரல் 27
Shadow

CINI NEWS

உறுதிகொள் பட விழாவில் கமலை வம்புக்கிழுத்த மன்சூர்..!

உறுதிகொள் பட விழாவில் கமலை வம்புக்கிழுத்த மன்சூர்..!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள்
  APK பிலிம்ஸ் மற்றும் சிநேகம் பிலிம்ஸ் பட நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள படம்  " உறுதி கொள்"  கோலி சோடா படத்தில் நடித்த கிஷோர் நாயகனாக நடிக்கிறார். நாயகியாக மேகனா நடிக்கிறார். மற்றும் காளி வெங்கட், தென்னவன், மாஸ்டர் சிவசங்கர் கண்ணன் பொன்னையா,  அகிலேஷ், சர்மிளா ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.   இந்தப்படத்தின் இசை விழாவில் பரபரப்பான விஷயங்கள் விவாதிக்கப்பட்டது...   கமலஹாசன் முன்பு எடுத்த முடிவை இப்போது நாம் எடுக்க வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம். திரையரங்கில் மட்டும் படத்தை வெளியிடுவதால்GST மற்றும் மாநில வரி செலுத்த வேண்டி இருக்கும் இதையே தயாரிப்பாளர் சங்கமே ஒரு APP.துவங்கி அதன் மூலம் 100 ரூபாய் பெற்றுக்கொண்டு படங்களை வெளியிடுவது தயாரிப்பாளர்களுக்கு லாபகரமாக இருக்கும் என்று ஆரி பேச. தியேட்டரில் படம் பார்ப்பது மட்டுமே சினிமாவுக்கு சிறப்பு..அது தான் சினி...
கர்நாடக அரசுக்கு  விஷால் நன்றி..!

கர்நாடக அரசுக்கு விஷால் நன்றி..!

CINI NEWS, HOME SLIDER, செய்திகள்
காவிரியில் தண்ணீர் திறந்துவிடப்படும் என அறிவித்த கர்நாடக நீர்பாசனத்துறை அமைச்சருக்கு நடிகர் விஷால் நன்றி கடிதம் அனுப்பியுள்ளார். நடிகரும், நடிகர் சங்க பொதுச்செயலாளரும், தயாரிப்பாளர் சங்க தலைவருமான விஷால், கர்நாடக நீர்பாசனத்துறை அமைச்சருக்கு கடிதம் ஒன்றை எழுதி அனுப்பியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: நாம் அனைவருமே ஒருதாய் வயிற்றுப் பிள்ளைகள். பிறந்த இடத்தாலோ வாழும் மாநிலத்தாலே பேசும் மொழியாலோ வேறுபட்டாலும் இந்திய நாட்டின் பிள்ளைகளாக ஒன்றுபடுகிறோம். ஒவ்வொரு ஆண்டும் ஜுன் 1-ஆம் தேதி முதல் மே 31-ஆம் தேதி வரை நீர்பாசன ஆண்டான கணக்கிடப்படுகிறது. காவிரி நடுவர் மன்ற இடைக்கால தீர்ப்பின்படி ஒவ்வொரு ஆண்டும் கர்நாடக அரசு 205 டிஎம்சி தண்ணீரை தமிழகத்திற்கு வழங்க வேண்டும். இதில் ஜுன் மாதம் 10.16 டிஎம்சி தண்ணீரும், ஜுலை மாதம் 42.76 டிஎம்சி, ஆகஸ்ட் 54.72 டிஎம்சி, செப்டம்பர் 29.36 டிஎம்சி, அ...
கேளிக்கை வரிக்கு எதிர்ப்பு: தமிழகத்தில் 1000 திரையரங்குகள் மூடப்பட்டன

கேளிக்கை வரிக்கு எதிர்ப்பு: தமிழகத்தில் 1000 திரையரங்குகள் மூடப்பட்டன

CINI NEWS, HOME SLIDER, செய்திகள்
சினிமா டிக்கெட்டுக்கு அதிகபட்சமாக 28 சதவீதம் சரக்கு, சேவை வரி விதிக்கப்பட்டு இருக்கிறது. இதனால் சினிமா கட்டணம் உயர்த்தப்பட்டு உள்ளது. இந்த நிலையில் தமிழக அரசு உள்ளாட்சி அமைப்புகள் மூலம் சினிமா டிக்கெட்டுக்கு 30 சதவீதம் கேளிக்கை வரி வசூலிக்க புதிய சட்டம் கொண்டு வந்து இருக்கிறது. இந்த சட்டம் திரையுலகினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கேளிக்கை வரி சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்றும், இல்லாவிட்டால் 3-ந் தேதி (இன்று) முதல் தியேட்டர்களை மூடுவோம் என்றும் திரையரங்கு உரிமையாளர்கள் அறிவித்தனர். இதனால் திரையுலகில் பரபரப்பு ஏற்பட்டது. தியேட்டர்களை மூடினால் தயாரிப்பாளர்கள் பாதிக்கப்படுவார்கள் என்றும், எனவே போராட்டத்துக்கு ஆதரவு தர முடியாது என்றும் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் நடிகர் விஷால் அறிவித்தார். திரையரங்கு உரிமையாளர்கள் வேலைநிறுத்த போராட்ட அறிவிப்பை மறுபரிசீ...
கோலிசோடா கிஷோர் நாயகனாக நடிக்கும்  ” உறுதி கொள் “

கோலிசோடா கிஷோர் நாயகனாக நடிக்கும் ” உறுதி கொள் “

CINI NEWS, HOME SLIDER, செய்திகள்
APK பிலிம்ஸ் மற்றும் சிநேகம் பிலிம்ஸ் பட நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் படத்திற்கு " உறுதி கொள்" என்று பெயரிட்டுள்ளனர். இந்த படத்தில் கோலி சோடா படத்தில் நடித்த கிஷோர் நாயகனாக நடிக்கிறார். நாயகியாக மேகனா நடிக்கிறார். மற்றும் காளி வெங்கட், தென்னவன், மாஸ்டர் சிவசங்கர் கண்ணன் பொன்னையா,  அகிலேஷ், சர்மிளா ஆகியோர் நடிக்கிறார்கள். எழுதி இயக்கி இருப்பவர்   -       R.அய்யனார். இவர் இயக்குனர் கிருஷ்ணாவிடம் நெடுஞ்சாலை படத்தில் உதவியாளராக பணியாற்றியவர். அவரிடம் படம் பற்றி கேட்டோம்... பள்ளியில் படிக்கிற மாணவர்கள், மாணவிகளிடையே உருவாகும் காதல் தவறானது.. சரியான புரிதல் பக்குவம் இல்லாத வயதில் ஏற்படும் காதல் பருவ மாற்றம் ஏற்படுகிற கால கட்டத்தில் உருவாகும் இனக் கவர்ச்சி தானே தவிர அது காதல் இல்லை. காதலன் கூப்பிடுகிற இடத்துக்கெல்லாம் பெண்கள் போகக் கூடாது..அப்படிப்போனால் என்ன ம...
சினிமா சிக்கல் மந்திரியை சந்தித்து விஷால் கோரிக்கை..!

சினிமா சிக்கல் மந்திரியை சந்தித்து விஷால் கோரிக்கை..!

CINI NEWS, HOME SLIDER, செய்திகள்
  தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால் , பொருளாளர் எஸ்.ஆர் பிரபு மற்றும் நிர்வாகிகள் ஜி.எஸ்.டி தொடர்பாகவும் , சினிமா துறை சார்ந்த பிரச்சனைகள் தொடர்பாகவும் செய்தி துறை அமைச்சர் கடம்பூர் ராஜுவை சந்தித்து கோரிக்கை வைத்தனர்.
தியேட்டர்களில் இனி படம் ரீலீஸ் இல்லை – விமர்சகர் ராமானுஜம்

தியேட்டர்களில் இனி படம் ரீலீஸ் இல்லை – விமர்சகர் ராமானுஜம்

CINI NEWS, HOME SLIDER, செய்திகள்
தியேட்டர்களில் இனி படம் ரீலீஸ் இல்லை - விமர்சகர் ராமானுஜம்   தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் பதவியிலிருந்து ராமநாராயனன் ராஜினாமா செய்த பின் தமிழக அரசிடம் நேரடியாக தொடர்பு கொள்ளும் ஆற்றல் வாய்ந்த தலைமை இல்லாமல் போனது. சங்கத்தில் கோஷ்டி பூசல் அதிகமானது. இதனால் தயாரிப்பாளர்கள் நலனுக்கான எந்த செயல் திட்டமும் நிறைவேற்ற முடியாத நிலையை கூறிவிஷால் தலைமையிலான அணி தேர்தலில் வெற்றி பெற்று தலைமையை கைப்பற்றியது. ராமநாராயாணன் ராஜினாமாவுக்கு பின் தமிழ் திரைப்பட துறையில் தயாரிப்பு, பட வெளியீடு, விநியோக துறையில் பைனான்ஸ் கொடுப்பவர்களின் ஆதிக்கம் தலை தூக்கிப்து. தேர்ந்தெடுக்கப்பட்ட சினிமா அமைப்புகளின் முடிவுகள் செல்லாக்காசானது. தயாரிப்பாளர்கள் சங்க தேர்தலில் தோல்வி அடைந்தவர்கள், தியேட்டர் உரிமையாளர்கள் சிலரை ஒருங்கிணைத்து தமிழ் சினிமா வர்த்தக சபை என்கிற அமைப்பை பைனான்ஸ் தரப்பு தொட...
தமன் குமார் & அபி சரவணன் இணைந்து நடிக்கும் கஞ்சா தோட்டத்தின் பின்னணியில் உருவாகும் ‘சூறாவளி’..!

தமன் குமார் & அபி சரவணன் இணைந்து நடிக்கும் கஞ்சா தோட்டத்தின் பின்னணியில் உருவாகும் ‘சூறாவளி’..!

CINI NEWS, HOME SLIDER, செய்திகள்
  கேரளாவின் அடர்ந்த காட்டுக்குள் உருவாகும் ‘சூறாவளி’..! மலையாள இயக்குனர்கள் பலருக்கும் தமிழில் படம் இயக்க வேண்டும் என்கிற ஆர்வம் நிறையவே உண்டு.. இதற்கு முன் பலர் அப்படி வந்து தங்களது திறமையை நிரூபித்துள்ளார்கள்.. அந்தவகையில் மலையாள திரையுலகில் இருந்து புதிய வரவாக தமிழுக்கு வந்திருப்பவர் தான் இயக்குனர் குமார் நந்தா. மலையாளத்தில் ‘கொட்டாரத்தில் குட்டி பூதம்’, ‘முள்ளசேரி மாதவன் குட்டி நேமம் P.O’ ஆகிய படங்களை இயக்கியுள்ள இவர் மலையாள டிவி சீரியல்களில் பிரபல நடிகையான 'பிரஜூஷா (Prajusha)' கதையின் நாயகியாக நடிக்கும் ‘அகதி’ எனும் தமிழ் படத்தையும் இயக்கி முடித்துள்ளார். இந்தப்படம் விரைவில் ரிலீஸாக உள்ளது.. இதை தொடர்ந்து அடுத்ததாக ‘சூறாவளி’ என்கிற படத்தை இயக்கவுள்ளார் குமார் நந்தா. கோல்டன் விங்ஸ் நிறுவனம் சார்பாக ஷ்யாம் மோகன் தயாரிக்கும் இந்தப்படத்திற்கு V.S. சஜி ஒளிப்பதிவு செய்ய...
சென்னையில் மான்யா ஹஸ்தகலாவின் கைவினைப் பொருட்கள் கண்காட்சி

சென்னையில் மான்யா ஹஸ்தகலாவின் கைவினைப் பொருட்கள் கண்காட்சி

CINI NEWS, HOME SLIDER, செய்திகள்
சென்னையில் கலாஷேத்ரா பவுன்டேசன் பிரதான நுழைவு வாயிலின் எதிரே அமைந்துள்ள மைதானத்தில் மான்யா ஹஸ்தகலாவின் கைவினைப் பொருட்களின் கண்காட்சியை பிரபல நடிகை சாக்ஷி அகர்வால் இன்று தொடங்கி வைத்தார். இந்த கண்காட்சியின் சிறப்பு அம்சங்கள் குறித்து இதனை தொடங்கி வைத்த நடிகை சாக்ஷி அகர்வால் பேசும் போது,‘ இந்த கண்காட்சியில் இந்தியாவிலிருந்து பத்தொன்பது மாநிலங்களில் உள்ள கைவினை கலைஞர்களின் படைப்புகள் இடம்பெற்றிருக்கிறது. பாரம்பரியம் மாறாமல் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டகலம்காரி புடவைகள், ஆர்கானிக் மற்றும் இயற்கையான வண்ணங்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட கைவினைப் பொருட்கள், வீட்டின் உள் அலங்காரத்திற்கான பொருட்கள், வரவேற்பறையில் வைக்கக்கூடிய கண்கவர் கலைப்பொருட்கள் என அனைத்து வகையான பொருட்கள் இந்த கண்காட்சியில் இடம்பெற்றிருக்கின்றன. இது ஒரு வித்தியாசமான கண்காட்சியாக நிச்சயமாக இருக்கும். ’ என்றார். இந்த கண்...
காமெடி நடிகர் மயில்சாமி மகன் ஹீரோவாக அறிமுகமாகும் திரிபுரம்..!

காமெடி நடிகர் மயில்சாமி மகன் ஹீரோவாக அறிமுகமாகும் திரிபுரம்..!

CINI NEWS, HOME SLIDER, செய்திகள்
  இந்த உலகை முழுக்க நல்லதாகவே மாற்ற முடியாது. அதேபோல் உலகை முழுக்கவே கெட்டதாகவும் மாற்ற முடியாது என்ற மெசேஜோடு உருவாகி வெளிவரவிருக்கும் படம் திரிபுரம். இந்த படத்தின் இயக்குநரும் தயாரிப்பாளரும் ஆகிய வேதமணியிடம் படம் குறித்து கேட்டோம். ’ஹாரர் த்ரில்லர் சின்ன மெசேஜுடன் படத்தை எடுத்திருக்கிறோம்.  கர்மவினை என்பது நம் எண்ணங்களையும் செயல்பாடுகளையும் பொறுத்தே அமைகிறது.   நகரத்தில் வாழும் ஒரு வாலிபனின் வாழ்க்கையில் விதி நடத்தும் விளையாட்டுகள் தான் படத்தின் கதை.  நான்  20 ஆண்டுகளாக திரைத்துறையில் தான் இருக்கிறேன். நான் டிவி சீரியல்களிலும் சில படங்களிலும் உதவி இயக்குநராக பணிபுரிந்திருக்கிறேன்.   கடும் போராட்டத்துக்கு பிறகு நானே தயாரித்திருக்கிறேன்.  பின்னணி இசை கோர்ப்பு பணி நடக்கிறது. அடுத்த மாதத்தில் படம் ரிலீஸ் ஆகும். விரைவில் இசை வெளியீடு நடக்கும்’ என்றார்.   ஹீரோ - அன்பு மயில்சாமி (...