திங்கட்கிழமை, ஏப்ரல் 29
Shadow

politics

வாக்கு எண்ணும் மையத்தில் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு..!

வாக்கு எண்ணும் மையத்தில் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு..!

HOME SLIDER, NEWS, politics, நடிகர்கள்
சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி சட்டமன்ற தொகுதி வாக்கு எண்ணும் மையத்தில் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு செய்தார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி சட்டமன்ற தொகுதியில் பயன்படுத்தப்பட்ட வாக்குப்பெட்டிகள் வாக்கு எண்ணும் மையமான ராணிமேரி கல்லூரியில் சீலிடப்பட்ட பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டுள்ளன. அந்த அறையை இன்று நேரில் சென்று ஆய்வு செய்தேன். வாக்காளர்களுக்கு என் அன்பும் நன்றியும் என்று குறிப்பிட்டுள்ளார். ...
“அதெப்படி, கோளாறு ஏற்படும் போதெல்லாம் வாக்குகள் தாமரைக்கே செல்கின்றன ?” – ‍‍ஜோதிமணி கேள்வி

“அதெப்படி, கோளாறு ஏற்படும் போதெல்லாம் வாக்குகள் தாமரைக்கே செல்கின்றன ?” – ‍‍ஜோதிமணி கேள்வி

HOME SLIDER, NEWS, politics
“அதெப்படி, கோளாறு ஏற்படும் போதெல்லாம் வாக்குகள் தாமரைக்கே செல்கின்றன ?” – ‍‍ஜோதிமணி கேள்வி மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் கோளாறு நிகழும்போதெல்லாம், வாக்குகள் தாமரை சின்னத்திற்கே விழுவது எப்படி? என்று கேள்வியெழுப்பியுள்ளார் கரூர் மக்களவைத் தொகுதி காங்கிரஸ் உறுப்பினர் ஜோதிமணி. வாக்குப்பதிவு இயந்திரங்களில், கோளாறு நிகழும் சமயங்களில், வாக்குகள் தவறியும்கூட, எதிர்க்கட்சிகளின் சின்னங்களுக்கு விழுவதில்லையே? அனைத்து மாநிலங்களிலும் இதுதான் நிகழ்கிறது. அதற்கு என்ன காரணம்? என்றுள்ளார் அவர். ‍நேற்று, தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில், சில தொகுதிகளில், வாக்குப்பதிவு இயந்திரங்களில் பிரச்சினை ஏற்பட்டதாகவும், வேறு சின்னங்களுக்கு போடப்பட்ட வாக்குகள், தாமரை மற்றும் இரட்டை இலைக்கு விழுந்ததாகவும் புகார்கள் எழுந்தன. மேலும், இதுபோன்ற புகார்கள் வேறு மாநில...
கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் கமல்ஹாசன் திடீர் ஆய்வு!

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் கமல்ஹாசன் திடீர் ஆய்வு!

HOME SLIDER, politics, செய்திகள், நடிகர்கள்
கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் கமல்ஹாசன் திடீர் ஆய்வு! கோவை தெற்கு தொகுதியில் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் போட்டியிடுகிறார். இந்த தொகுதியில் இவரை எதிர்த்து பாரதிய ஜனதா தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன், காங்கிரஸ் மாநில செயல் தலைவர் மயூரா ஜெயக்குமார் ஆகியோர் போட்டியிடுவதால் கடும் போட்டி நிலவியது. நேற்று காலை சென்னையில் தனது வாக்கை பதிவு செய்த கமல்ஹாசன், உடனடியாக அங்கிருந்து தனி விமானத்தில் புறப்பட்டு கோவை வந்தார். கோவையில் தான் போட்டியிடும் தெற்கு தொகுதிக்கு உட்பட்ட வாக்குச்சாவடிகளுக்கு நேரில் சென்று பார்வையிட்டார். வாக்குப்பதிவு விவரம், எதாவது பிரச்சனைகள் உண்டா? என தேர்தல் அலுவலர்களிடம் கேட்டறிந்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில் தோல்வி பயத்தில் உள்ளவர்கள் டோக்கன் வழங்கி பணப்பட்டுவாடா செய்வதாகவும், இதனை தடுத்து நிறுத்த வேண்டும் என தெரிவித்தார். தொட...
வாகன சோதனையில் ஈடுபட்ட கண்காணிப்பு குழு, பறக்கும் படைகள் கலைப்பு!

வாகன சோதனையில் ஈடுபட்ட கண்காணிப்பு குழு, பறக்கும் படைகள் கலைப்பு!

HOME SLIDER, NEWS, politics
வாகன சோதனையில் ஈடுபட்ட கண்காணிப்பு குழு, பறக்கும் படைகள் கலைப்பு! தமிழகத்தின் அனைத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கும் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு அனுப்பிய கடிதத்தில் கூறப்பட்டு இருப்பதாவது:- தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதும் ஒவ்வொரு மாவட்டத்திலும் வாகன சோதனைக்காக கண்காணிப்பு குழு, பறக்கும்படை, வீடியோ கண்காணிப்பு குழு அமைக்க உத்தரவிடப்பட்டது. அவர்கள் செல்லும் வாகனங்களில் ஜி.பி.எஸ். கருவிகள் பொருத்தப்பட்டன. இந்த குழுக்களின் பணி, வாக்குப்பதிவு நடக்கும் வரை தொடர வேண்டும் என்று உத்தரவிடப்பட்டு இருந்தது. இந்த நிலையில் வாக்குப்பதிவு நிறைவடைந்து விட்டது. எனவே கண்காணிப்பு குழு, பறக்கும்படை, வீடியோ கண்காணிப்பு குழு ஆகியவற்றை கலைத்துவிடலாம். மண்டல குழுக்களுக்கான வாகனங்கள், வாக்குப்பதிவு எந்திரம், விவிபாட் எந்திரம் ஆகியவற்றை கொண்டு செல்லும் வாகனங்கள் ஆகியவற்றில் பொருத்தப்பட்டுள்ள ...
உதயநிதி ஸ்டாலினுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்!

உதயநிதி ஸ்டாலினுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்!

HOME SLIDER, NEWS, politics, நடிகர்கள்
உதயநிதி ஸ்டாலினுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், தாராபுரத்தில் தேர்தல் பிரசாரத்தின் போது முன்னாள் மத்திய மந்திரிகள் சுஷ்மா ஸ்வராஜ் மற்றும் அருண் ஜெட்லி ஆகியோரின் மறைவு குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக புகாா்கள் எழுந்தன. இதுதொடர்பாக தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் பா.ஜ.க. சார்பில் ஏப்ரல் 2-ம் தேதி புகார் அளிக்கப்பட்டது. இந்நிலையில், இந்த விவகாரத்தில் உதயநிதி ஸ்டாலினுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதில் 7-ம் தேதி (இன்று) மாலை 5 மணிக்குள் விளக்கமளிக்க வேண்டும் என தெரிவித்துள்ளது....
தமிழகத்தில் 72 சதவீதம் வாக்குப்பதிவு! வாக்கு எண்ணும் மையத்திற்கு 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு!!

தமிழகத்தில் 72 சதவீதம் வாக்குப்பதிவு! வாக்கு எண்ணும் மையத்திற்கு 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு!!

HOME SLIDER, NEWS, politics
தமிழகத்தில் 72 சதவீதம் வாக்குப்பதிவு. வாக்கு எண்ணும் மையத்திற்கு 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு. தமிழ்நாடு, கேரளா மற்றும் புதுச்சேரிக்கு நேற்று ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. தமிழ்நாட்டில் அ.தி.மு.க-தி.மு.க. இடையே போட்டி பலமாக இருந்தாலும் 5 முனைப்போட்டி நிலவியது. மொத்தம் உள்ள 234 தொகுதிகளிலும் 3,998 வேட்பாளர்கள் களத்தில் இருந்தனர். 6 கோடியே 28 லட்சத்து 69 ஆயிரத்து 955 பேர் வாக்களிக்க இருந்தனர். கொரோனா பரவலுக்கு இடையே தேர்தல் நடைபெற்றதால், சமூக இடைவெளியை வாக்காளர்கள் பின்பற்றும் வகையில், 88,937 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. 1 லட்சத்து 29 ஆயிரம் எண்ணிக்கையில் வாக்கு எந்திரங்களும், 91 ஆயிரத்து 180 எண்ணிக்கையில் கட்டுப்பாட்டு எந்திரங்களும், யாருக்கு வாக்களித்தோம் என்பதை தெரிந்துகொள்ளும் “விவிபாட்” எந்திரங்கள் 91 ஆயிரத்து 190 எண்ணிக்கையிலும் பயன்படுத்தப்பட்டன. தமிழகம் முழுவத...
காலை11 மணி நிலவரப்படி 26.29 % வாக்குகள் பதிவு

காலை11 மணி நிலவரப்படி 26.29 % வாக்குகள் பதிவு

HOME SLIDER, politics
காலை11 மணி நிலவரப்படி 26.29 % வாக்குகள் பதிவு தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. தமிழகம் முழுவதும் 234 தொகுதிகளில் 88,394 வாக்குச்சவாடிகளில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 7 மணி வரை நடைபெறும். தமிழக சட்டமன்ற தேர்தலில் காலை11 மணி நிலவரப்படி 26.29 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளது. கொரோனா மற்றும் வெயிலையும் பொருட்படுத்தாமல் பொதுமக்கள் பலர் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். தமிழகத்தில்  தற்போது வைர அதிகபட்சமாக நாமக்கல்லில் 28.33 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன.  இதற்கு அடுத்தப்படியாக திண்டுக்கல்லில் 27.55 சதவீதமும் சென்னையில் 23.67 சதவீத வாக்குகளும் பதிவாகி உள்ளன என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹூ தெரிவித்துள்ளார்....
அரசியலுக்கு சினிமா இடையூறாக இருந்தால் சினிமாவை விட்டு விலகி விடுவேன் – கமல்ஹாசன்

அரசியலுக்கு சினிமா இடையூறாக இருந்தால் சினிமாவை விட்டு விலகி விடுவேன் – கமல்ஹாசன்

HOME SLIDER, NEWS, politics, நடிகர்கள்
அரசியலுக்கு சினிமா இடையூறாக இருந்தால் சினிமாவை விட்டு விலகி விடுவேன் என கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். கோயம்புத்தூர் தெற்கு தொகுதியில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் போயிடுகிறார். அவரை எதிர்த்து பாஜக சார்பில் வானதி ஸ்ரீனிவாசன் மற்றும் காங்கிரஸ் சார்பில் மயூரா ஜெயக்குமார் களம் காணுகின்றனர். இதனால் தற்போதைய தமிழக சட்டப்பேரவை தேர்தல் களத்தில் கோவை தெற்கு தொகுதிக்கு நட்சத்திர அந்தஸ்து கிடைத்துள்ளது. அனைவரும் உற்றுநோக்கும் தொகுதியாக அது உள்ளது. எனினும் இத்தொகுதி  இந்த வேட்பாளர் மூவருக்கும் சவால் மிகுந்த களமாகவே இருக்கும் என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள். இந்நிலையில் பரப்புரை முடித்துவிட்டு கமல்ஹாசன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், அரசியல் வேண்டாம் என்று இருந்த நான் எந்த கடத்தில் அரசியலுக்கு வந்தேன் என்று அனைவருக்கும் தெரியும். நான் மறுபடியும் சினிமாவில்...
சைக்கிளில் வாக்களிக்க வந்து பெட்ரோல் விலை உயர்வை எதிர்த்தாரா விஜய்?

சைக்கிளில் வாக்களிக்க வந்து பெட்ரோல் விலை உயர்வை எதிர்த்தாரா விஜய்?

HOME SLIDER, politics, நடிகர்கள்
சைக்கிளில் வாக்களிக்க வந்து பெட்ரோல் விலை உயர்வை எதிர்த்தாரா விஜய்? தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. வாக்காளர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தங்களது வாக்கினை பதிவு செய்து வருகின்றனர். அரசியல் தலைவர்கள், திரைத்துறை பிரபலங்கள் என பலரும் இன்று காலை முதலே தங்களது தொகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர். நடிகர் விஜய் சைக்கிளில் சென்று வாக்களித்தார். தற்போது பேசு பொருளாக மாறியுள்ளது நடிகர் விஜய் நீலாங்கரையில் உள்ள தனது வீட்டில் இருந்து வாக்குச்சாவடிக்கு சைக்கிளில் புறப்பட்டார். தனது வீட்டுக்கு அருகில் வாக்குச்சாவடி அமைந்திருப்பதாலும் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்பதாலும் அவர் சைக்கிளில் சென்றதாக கூறப்படுகிறது. ஆனால் பெட்ரோல் விலை உயர்வுக்கு மறைமுகமாக எதிர்ப்பு தெரிவிப்பதற்காக நடிகர் விஜய் சைக்கிளில் வாக்...
அழகி போட்டியில் மியான்மர் ராணுவத்துக்கு எதிராக குரல் கொடுத்த அழகி!

அழகி போட்டியில் மியான்மர் ராணுவத்துக்கு எதிராக குரல் கொடுத்த அழகி!

HOME SLIDER, politics, உலக செய்திகள், உலகம்
அழகி போட்டியில் மியான்மர் ராணுவத்துக்கு எதிராக குரல் கொடுத்த அழகி. மியான்மரில் கடந்த பிப்ரவரி மாதம் 1-ந் தேதி முதல் ராணுவ ஆட்சி நடந்து வருகிறது. அதை வேளையில் ராணுவ ஆட்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த நாட்டு மக்கள் 2 மாதங்களுக்கும் மேலாக தொடர்ந்து போராடி வருகின்றனர் இந்தநிலையில் தாய்லாந்தில் நடைபெற்ற அழகி போட்டி ஒன்றில் கலந்து கொண்ட மியான்மர் நாட்டு அழகி ஹான் லே, மியான்மர் ராணுவத்துக்கு எதிராக பேசியது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. அவரது 2 நிமிடப் பேச்சு சர்வதேச பத்திரிக்கைகளில் தலைப்புச் செய்தியாகியுள்ளது தாய்லாந்தில் நடைபெற்ற ‘மிஸ் கிராண்ட் இன்டர்நேஷனல் 2020' அழகி போட்டியில் பேசிய ஹான் லே ‘‘இன்று எனது நாட்டில் பல மக்கள் கொல்லப்பட்டு இருக்கிறார்கள். ஜனநாயகத்துக்காக மியான்மர் மக்கள் சாலைகளில் இறங்கி போராடிக் கொண்டிருக்கிறார்கள். மியான்மருக்கு உதவுங்கள்...