நயன்தாரா பற்றிய சர்ச்சை பேச்சு திமுகவில் இருந்து துரத்தப்பட்ட ராதாரவி..!
சர்ச்சைக்குரிய வகையில் விமர்சித்த நடிகர் ராதாரவி திமுக வில் இருந்து அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டிருக்கிறார்.
நயன்தாராவை விமர்ச்சித்த ராதாரவி
சமீபத்தில் நடந்த 'கொலையுதிர்க்காலம்' திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் நயன்தாரா குறித்து நடிகர் ராதாரவி சர்ச்சைக்குரிய வகையில் பேசி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்போதெல்லாம் சீதையாக யார் வேண்டுமானாலும் நடிக்கலாம் என்றும், நயன்தாரவைப் பற்றி வராத செய்திகளே கிடையாது மக்கள் அதையெல்லாம் மறந்து விடுவார்கள் என்றும் அருவருக்கத்தக்க வகையில் மேடையிலேயே பேசியிருக்கிறார் நடிகர் ராதாரவி. அவரது அடிப்படை நாகரீகமற்ற பேச்சுக்கு ஒட்டுமொத்த திரையுலகினர்களும் கடும் கண்டனங்களைதெரிவித்து வருகின்றனர். அவர் மீது நடிகர் சங்கம், தயாரிப்பாளர் சங்கம் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் விக்னேஷ் சிவன், சின்மயி உள்பட பலர் வலியுறுத்தி வருகி...






