மக்களின் நம்பிக்கைக்கு ஏற்ப பொறுப்பை உணர்ந்து செயல்படுவோம் – மு.க.ஸ்டாலின்
மக்களின் நம்பிக்கைக்கு ஏற்ப பொறுப்பை உணர்ந்து செயல்படுவோம் - மு.க.ஸ்டாலின்
சென்னை கொளத்தூர் தொகுதியில் திமுக சார்பில் அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் களமிறங்கினார். அதிமுக சார்பில் ஆதிராஜாராம், அமமுக சார்பில் ஜெ.ஆறுமுகம், மக்கள் நீதி மய்யம் சார்பில் ஜெகதீஷ்குமார், நாம் தமிழர் கட்சி சார்பில் கெமில்ஸ் செல்வா ஆகியோர் போட்டியிட்டனர்.
வாக்கு எண்ணிக்கை தொடங்கியதில் இருந்தே மு.க.ஸ்டாலின் முன்னிலை வகித்து வந்தார். திமுக தலைவர் முக ஸ்டாலின் ஒரு லட்சத்துக்கும் அதிகமான வாக்குகள் பெற்றார். அதிமுக சார்பில் போட்டியிட்ட ஆதி ராஜாராம் 34,462 வாக்குகள் பெற்றார். இதன்மூலம் 70 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குகள் வித்தியாசத்தில் முக ஸ்டாலின் வெற்றி பெற்றார்
நேற்று நள்ளிரவில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்ற லயோலா கல்லூரிக்கு சென்ற திமுக தலைவர் ஸ்டாலின், கொளத்தூர் தொகுதியில் வெற்றி பெற்றதற்கான சான்றி...








