சனிக்கிழமை, ஆகஸ்ட் 1
Shadow

Tag: இடைத்தேர்தல்

நாடு முழுதும் இடைத்தேர்தல்கள் நடத்த தேர்தல் ஆணையம் முடிவு!

நாடு முழுதும் இடைத்தேர்தல்கள் நடத்த தேர்தல் ஆணையம் முடிவு!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  நாடு முழுதும் இடைத்தேர்தல்கள் நடத்த தேர்தல் ஆணையம் முடிவு! நாடு முழுவதும் 8 மாநிலங்களில் காலியாக உள்ள 56 சட்டமன்ற தொகுதிகளுக்கு தேர்தல் நடத்தப்பட வேண்டும். இதுதொடர்பாக இன்று நடத்தப்பட்ட ஆலோசனை கூட்டத்தில், பாராளுமன்ற, சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல்களை நடத்த முடிவெடுக்கப்பட்டதாக தேர்தல் ஆணைய செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார். தேர்தல் அட்டவணை, வழிகாட்டு நெறிமுறைகள் பின்னர் அறிவிக்கப்படும். மேலும் காலியாக உள்ள தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் தேதி சரியான நேரத்தில் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக வைரஸ் பரவல் காரணமாக குறித்த நேரத்தில் இடைத்தேர்தல் நடத்துவது சிரமம் என்ற கருத்து வெளியானது. அதோடு, அடுத்த ஆண்டு மே மாதத்துடன் தமிழக அரசின் பதவி காலம் முடிவடைவதால் பொதுத் தேர்தல் நடத்த வேண்டிய சூழல் தேர்தல் ஆணையத்துக்கு உள்ளது குறிப்பிடத்தக்கது....
இடைத்தேர்தலில் உதயநிதி  போட்டியிட்டால் காங்கிரஸ் ஆதரவு அளிக்கும்- திருநாவுக்கரசர்

இடைத்தேர்தலில் உதயநிதி போட்டியிட்டால் காங்கிரஸ் ஆதரவு அளிக்கும்- திருநாவுக்கரசர்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
இடைத்தேர்தலில் உதயநிதி போட்டியிட்டால் காங்கிரஸ் ஆதரவு அளிக்கும்- திருநாவுக்கரசர் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவரும், திருச்சி தொகுதி எம்.பி.யுமான திருநாவுக்கரசர் திருச்சி விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது: உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க. தனித்து போட்டியிட வேண்டும் என கே.என்.நேரு பேசியது அவருடைய சொந்த கருத்து. கருத்தை சொல்ல அவருக்கு உரிமை இருக்கிறது. உள்ளாட்சி தேர்தலுக்கான இடங்கள் பங்கீடு குறித்து கட்சிகளின் தலைமைகள் தான் பேசி முடிவு செய்யும். உள்ளாட்சி, சட்டப் பேரவை தேர்தல்களிலும் தி.மு.க.- காங்கிரஸ் கூட்டணி தொடர வேண்டும். ஆனால் தோற்றுவிடுவோம் என்ற பயம் இருப்பதால் அ.தி.மு.க. அரசு உள்ளாட்சி தேர்தலை நடத்துமா? என்பது சந்தேகமே. பாராளுமன்ற தேர்தலில் திருச்சி தொகுதியில் சொந்த செல்வாக்கில் வெற்றி பெற்றேன் என்று நான் எங்கும் கூறவில்லை. என்னுடைய வெற்றிக்கு தி.மு.க- ...
அதிமுக ஆலோசனை கூட்டம் மதுரையில் தொடங்கியது

அதிமுக ஆலோசனை கூட்டம் மதுரையில் தொடங்கியது

HOME SLIDER, politics, செய்திகள்
அதிமுக சார்பில் மதுரையில் நடைபெற்று வரும் ஆலோசனை கூட்டத்தில் முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்கள் பங்கேற்றுள்ளனர். திமுக முன்னாள் தலைவர் கருணாநிதி மறைவையடுத்து அவரது திருவாரூர் தொகுதியும், திருப்பரங்குன்றம் தொகுதி அதிமுக எம்எல்ஏ ஏ.கே. போஸ் காலமானதையடுத்து திருப்பரங்குன்றம் சட்டப்பேரவை தொகுதியும் காலியாக உள்ளது. இதையடுத்து, இந்த இரு தொகுதிகள் உள்பட பல்வேறு மாநிலங்களில் காலியாக உள்ள சட்டமன்ற தொகுதிகளுக்கும் இடைத்தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது. எனவே, திருவாரூர், திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலை எதிர்கொள்ள அரசியல் கட்சிகள் ஆயத்தமாகி வருகின்றன. இந்நிலையில், அதிமுக செயல் வீரர்கள் கூட்டம் மதுரையில் இன்று நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓபிஎஸ், மூத்த அமைச்சர்கள், நிர்வாகிக்க உள்ளிட்ட பலர் கலந்து கொண்டுள்ளனர். தேர்தல் பணிக் குழுக்களை அமைப்...