புதன்கிழமை, ஜூலை 29
Shadow

Tag: உக்ரைன் போர்

உக்ரைனுக்கு இணையதள கருவிகளை அனுப்பிய எலான் மஸ்க்!

உக்ரைனுக்கு இணையதள கருவிகளை அனுப்பிய எலான் மஸ்க்!

HOME SLIDER, NEWS, ukrain war, World News, உக்ரைன் போர், உலக செய்திகள், உலகம், செய்திகள்
உக்ரைன் மீதான ரஷிய படையெடுப்பு 100 நாட்களுக்கு மேலாக நடைபெற்று வருகிறது. இந்த போரில் உக்ரைனுக்கு உதவும் வகையில் நிதி மற்றும் ஆயுத உதவிகளை மேற்கத்திய நாடுகள் வழங்கி வருகின்றன. இதேபோல் உலக பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க்கும் போரினால் பாதிக்கப்பட்டுள்ள உக்ரைன் நாட்டிற்கு தனது ஸ்டார்லிங்க் நிறுவனம் மூலம் செயற்கைக்கோள் வழியாக இணைய சேவைகளை வழங்கி வருகிறார். இந்நிலையில் தற்போது உக்ரைன் ராணுவம் பயன்படுத்தும் வகையில் அவர் மேலும் சில ஸ்டார்லிங் செயற்கைக்கோள் இணையதள கருவிகளை உக்ரைனுக்கு அனுப்பியுள்ளதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் உக்ரைனுக்கு சுமார் 15000 இணையதள கருவிகள் அனுப்பப்பட்டுள்ளன. கடந்த ஏப்ரல் மாதம் 10000 கருவிகள் அனுப்பப்பட்டது. இத்துடன் சூரிய ஆற்றல் மூலம் மின்சாரம் பெறும் டெஸ்லா கருவிகளையும் உக்ரைன் ராணுவத்தின் பயன்பாட்டிற்காக அனுப்பியுள்ளோம் என கூறியுள்ளார்....
அண்டை நாடுகளில் தஞ்சம் அடைந்த உக்ரைன் மக்கள் மீண்டும் சொந்த நாடு திரும்புவதாக தகவல்!

அண்டை நாடுகளில் தஞ்சம் அடைந்த உக்ரைன் மக்கள் மீண்டும் சொந்த நாடு திரும்புவதாக தகவல்!

HOME SLIDER, NEWS, ukrain war, World News, உக்ரைன் போர், உலக செய்திகள், செய்திகள்
போர் காரணமாக அண்டை நாடுகளில் தஞ்சம் அடைந்த உக்ரைன் மக்கள் மீண்டும் சொந்த நாட்டிற்கு திரும்பி வருவதாக உக்ரைன் எல்லை பாதுகாப்பு காவலர்கள் தெரிவித்துள்ளனர். மே 10 முதல் தினசரி 30,000 முதல் 40,000 உக்ரைன் மக்கள் வீடு திரும்புவதை எல்லை அதிகாரிகள் பதிவு செய்துள்ளனர் என்று உக்ரைன் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது....
உக்ரைனின் 2வது பெரிய நகரத்தில் இருந்து பின் வாங்கும் ரஷியா!

உக்ரைனின் 2வது பெரிய நகரத்தில் இருந்து பின் வாங்கும் ரஷியா!

HOME SLIDER, NEWS, ukrain war, World News, உக்ரைன் போர், உலக செய்திகள், செய்திகள்
உக்ரைன் மீதான ரஷிய படையெடுப்பு 81 நாட்களாக நடைபெற்று வருகிறது. உக்ரைனின் முக்கிய நகரங்களை முற்றுகையிட்டுள்ள ரஷியா பல்வேறு வகையான தாக்குதல்களை நடத்தி வருகிறது. உக்ரைனும் மேற்கத்திய நாடுகளின் ஆயுத உதவிகளை கொண்டு ரஷியாவிற்கு தொடர்ந்து பதிலடி கொடுத்து வருகிறது. ரஷியா சில வாரங்களுக்கு முன் மரியுபோல் நகரத்தை பிடித்ததாக அறிவித்தது. அதேபோன்று உக்ரைனின் 2வது மிகப்பெரிய நகரமான கார்கீவ் நகரத்தின் மீது ரஷியா தொடர் தாக்குதல்களை நடத்தியது. ஏவுகணை தாக்குதல், டாங்கிகள் மூலம் தாக்குதல் என பல்வேறு தாக்குதல்களை கார்கீவ் நகர் மீது நடத்திய நிலையில், தற்போது அந்நகரத்தில் இருந்து தனது துருப்புகளை பின்வாங்குவதாக ரஷியா அறிவித்துள்ளது. கார்கீவ்வில் இருந்து பின்வாங்கும் ரஷியா, தனது வணிக பாதைகளை காப்பதற்காக, கிழக்கு மாகாணத்தில் அமைந்திருக்கும் டொனெட்ஸ்க் மீது பல்முனை தாக்குதல் நடத்த உள்ளதாக தெரிவித்துள்ளது...
உக்ரைன் ரஷியா இடையே சமாதான பேச்சுவார்த்தை- இத்தாலி வலியுறுத்தல்!

உக்ரைன் ரஷியா இடையே சமாதான பேச்சுவார்த்தை- இத்தாலி வலியுறுத்தல்!

HOME SLIDER, NEWS, ukrain war, World News, உக்ரைன் போர், உலக செய்திகள், செய்திகள்
உக்ரைன் மீது தாக்குதல் நடத்தும் ரஷியா மற்றும் அந்நாட்டிற்கு ஆதரவு தெரிவித்துள்ள பெலாரஸ் நாட்டின் மீதும் பொருளாதார வர்த்தக தடைகளை பிரிட்டன் அறிவித்துள்ளது.  1.7 பில்லியன் பவுண்டகள் மதிப்பில் இந்த பொருளாதார தடைகள் விதிக்கப்பட்டுள்ளன. இறக்குமதி வரிகள் அதிகரிப்பு மற்றும் ஏற்றுமதி தடைகள் உள்ளிட்டவை இதில் அடங்கும். இது புதின் போர் நடவடிக்கைகளை பலவீனப்படுத்தும் என்றும்,  உக்ரைன் மக்களுக்கு எதிரான அவரது சட்டவிரோதப் படையெடுப்பை தடுக்க எங்களால் முடிந்த அனைத்தையும் செய்ய நாங்கள் உறுதியாக உள்ளோம் என்றும் சர்வதேச வர்த்தகத்திற்கான இங்கிலாந்து வெளியுறவுத்துறை செயலாளர் ஆன்-மேரி ட்ரெவெல்யன் தெரிவித்தார். ரஷியா-உக்ரைன் போரை விரைவில் முடிவுக்கு கொண்டுவரும் வகையில், இரு நாடுகள் இடையே சமாதான பேச்சுவார்த்தை மீண்டும் தொடர எல்லா முயற்சிகளையும் எடுக்க வேண்டும் என்று ஜி-7 நாடுகள் ஆலோசனை கூட்டத்தில் பேசிய இத...
கீவ் புறநகரில் குப்பை தொட்டியில் வீசப்பட்ட உடல்கள்!

கீவ் புறநகரில் குப்பை தொட்டியில் வீசப்பட்ட உடல்கள்!

HOME SLIDER, NEWS, ukrain war, World News, உக்ரைன் போர், உலக செய்திகள், செய்திகள்
உக்ரைன் மீது கடந்த பிப்ரவரி மாதம் 24-ந் தேதி ரஷியா தனது தாக்குதலை தொடங்கியது. வான்வெளி, தரைவழி கடல்வழி என பலமுனைகளில் தனது தாக்குதலை உக்கிரமாக நடத்தி வருகிறது. இந்த போர் ஆரம்பித்து 6 வாரங்களுக்கு மேல் ஆகிவிட்டாலும் இன்னும் முடிவுக்கு வரவில்லை. உக்ரைன் தலைநகர் கீவ் உள்பட பல நகரங்களை கைப்பற்ற ரஷியா கடுமையாக போராடி வருகிறது. ஆனால் உக்ரைன் படை வீரர்களும் அவர்களுக்கு நாங்களும் சளைத்தவர்கள் இல்லை என எதிர்த்து சண்டையிடுகின்றனர். இதனால் ரஷியா படைகளும் திணறி வருகிறது. கீவ் புறநகர் பகுதியான புச்சா நகரை ரஷியா படைகள் கைப்பற்றினார்கள். இந்த நிலையில் கிழக்கு மற்றும் தெற்கு உக்ரைன் பகுதியில் ஆதிக்கம் செலுத்த ரஷியா முழு கவனம் செலுத்தி வருகிறது. போர் உச்சகட்டதை எட்டி உள்ள நிலையில் புச்சா நகரை மீண்டும் உக்ரைன் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளது. ஆனால் இந்த நகரை விட்டு ரஷியா...
மரியுபோல் நகரம் மீது வெடிகுண்டு தாக்குதல் நடத்தும் ரஷிய போர் கப்பல்கள்!

மரியுபோல் நகரம் மீது வெடிகுண்டு தாக்குதல் நடத்தும் ரஷிய போர் கப்பல்கள்!

HOME SLIDER, NEWS, ukrain war, World News, உக்ரைன் போர், உலக செய்திகள், செய்திகள்
உக்ரைன் நகரங்கள் மீது  ரஷிய படைகள் வான்வெளி, தரைவழி தாக்குதல்கள் நடத்தி வரும் நிலையில், துறைமுக நகரமான மரியபோல் மீது ரஷிய போர் கப்பல்கள் வெடிகுண்டு தாக்குதல்களை நிகழ்த்தி உள்ளதாக அமெரிக்க பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது. அசோவ் கடல்  பகுதியில் ரஷிய போர் கப்பல்களின் செயல்பாடுகளை அமெரிக்கா தொடர்ந்து கண்காணித்து வருவதாக அந்நாட்டு பாதுகாப்புத் துறை மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். அந்த பகுதியில் ஏழு ரஷிய கப்பல்கள் இருப்பதாகவும், கருங்கடலில் ரஷியா 21 கப்பல்களை நிறுத்தியிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதனிடையே உக்ரைனில் உள்ள ரஷிய படையினர் உணவு மற்றும் எரிபொருளைப் பெறுவதில் கடும் சிரமத்தை சந்தித்து வருவதாகவும் உறைபனி மற்றும் கடும் குளிரை சமாளிக்க அவர்களிடம் போதுமான உபகரணங்கள் இல்லை என்றும் அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்....
உக்ரைன் மீதான தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்: ரஷியாவில் இன்று 936 பேர் கைது!

உக்ரைன் மீதான தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்: ரஷியாவில் இன்று 936 பேர் கைது!

HOME SLIDER, NEWS, ukrain war, World News, உக்ரைன் போர், உலக செய்திகள், செய்திகள்
உக்ரைன் மீது கடந்த 24-ந்தேதி ரஷியா தாக்குதலை தொடங்கிறது. கிரிமியாவை தன்னுடன் இணைக்க ரஷியா தாக்குதல் நடத்தியதுபோல், இதுவும் எளிதாக முடியவடையும் என ரஷியா மக்கள் எதிர்பார்த்தனர். ஆனால், தாக்குதல் நீண்டு கொண்டே செல்கிறது. ரஷியாவுக்கு எதிராக அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் கடுமையாக தடைகளை விதித்துள்ளதால், ரஷியாவில் அத்தியாவசிய பொருட்களுக்கான தேவை அதிகரித்து வருகிறது. இதனிடையே உக்ரைன் மீதாக தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து ரஷியாவில் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போலீசார் அவர்களை கைது செய்து போராட்டத்தை ஒடுக்கி வருகின்றன. இன்று போராட்டத்தில் ஈடுபட்ட 936 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். கடந்த மாதம் 24-ந்தேதியில் இருந்து தற்போது வரை 15 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்....
21-வது நாளாக நீடிக்கும் போர்: கீவ் நகரில் ரஷிய ராணுவம் தொடர்ந்து தாக்குதல்!

21-வது நாளாக நீடிக்கும் போர்: கீவ் நகரில் ரஷிய ராணுவம் தொடர்ந்து தாக்குதல்!

HOME SLIDER, NEWS, ukrain war, World News, உக்ரைன் போர், உலக செய்திகள், செய்திகள்
உக்ரைன்  மீது ரஷியா கடந்த 24-ந்தேதி தொடங்கிய போர் இன்று 21-வது நாளாக நீடித்து வருகிறது. உக்ரைனை சுற்றியுள்ள எல்லைகளில் இருந்து ரஷிய படைகள் அந்நாட்டுக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தி வருகின்றன. ஏவுகணை மற்றும் வான்வழி தாக்குதல்கள் நடத்தப்படுகிறது. தொடக்கத்தில் உக்ரைனின் ராணுவ நிலைகளை அழிக்க ஏவுகணைகள் வீசப்பட்டன. பின்னர் முக்கிய அணு உலை நிலையங்களை ரஷிய படையினர் கைப்பற்றினர். தற்போது குடியிருப்பு பகுதிகளை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருவதாக உக்ரைன் தெரிவித்துள்ளது. உக்ரைனில் சில நகரங்களை கைப்பற்றியுள்ள ரஷிய ராணுவம், தலைநகர் கீவ் மற்றும் கார்கிவ் உள்ளிட்ட நகரங்களை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வர தீவிரமாக தாக்குதல் நடத்தி வருகிறது. ரஷிய படைக்கு எதிராக உக்ரைன் ராணுவ வீரர்களும் கடுமையாக போரிட்டு வருகின்றனர். இதனால் ரஷிய படை தலைநகர் கிவ்வுக்குள் முழு பலத்துடன் செல்ல முடியாமல் திணறி வருகிறத...
உக்ரைனுக்கு ஆயுதங்களை வழங்குவோம் – அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அதிரடி அறிவிப்பு!!

உக்ரைனுக்கு ஆயுதங்களை வழங்குவோம் – அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அதிரடி அறிவிப்பு!!

HOME SLIDER, NEWS, ukrain war, World News, உலக செய்திகள், செய்திகள்
உக்ரைன் மற்றும் ரஷியா இடையேயான போர் 19-வது நாளாக நீடித்து வருகிறது. இந்த போரை நிறுத்த வேண்டும் என்று ஒருபுறம் இந்தியா தொடர்ந்து வேண்டுகோள் விடுத்து வரும் நிலையில், இரு நாடுகளின் அதிபர்கள் இடையே நேரடி பேச்சுவார்த்தை நடைபெறுவதற்கான முயற்சிகளை இஸ்ரேல் மேற்கொண்டு வருகிறது. மறுபுறம் ரஷியாவிற்கு எதிராக போரிட ஐரோப்பிய நட்பு நாடுகள் ஆயுத உதவிகளை வழங்கி வருகின்றன. இந்நிலையில், உக்ரைனுக்கு அமெரிக்கா ஆயுதங்களை வழங்கும் என்று அந்நாட்டு அதிபர் ஜோ பைடன்  அறிவித்துள்ளார். ஆக்கிரமிப்பு ரஷிய படைக்கு எதிராக உக்ரைனுக்கு ஆயுதங்களை வழங்குவோம் என்று தமது ட்விட்டர் பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளார். உக்ரைனில் இருந்து வெளியேறும் அகதிகள் அமெரிக்காவிற்குள் அனுமதிக்கப்படுவார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் உக்ரைனில் உள்ள மக்களுக்கு பணம், உணவு மற்றும் பிற மனிதாபிமான உதவிகளை அமெரிக்கா வழங்...
எங்களை உக்ரேனியர்கள் அடிக்கிறார்கள்- கார்கிவ் ரெயில் நிலையத்தில் தவிக்கும் இந்திய மாணவர்கள்!

எங்களை உக்ரேனியர்கள் அடிக்கிறார்கள்- கார்கிவ் ரெயில் நிலையத்தில் தவிக்கும் இந்திய மாணவர்கள்!

HOME SLIDER, NEWS, உலக செய்திகள், செய்திகள்
உக்ரைனின் இரண்டாவது பெரிய நகரமான கார்கிவ் நகரில் ரஷிய படைகள் தொடர் தாக்குதலில் ஈடுபட்டுள்ளதால், அங்குள்ள இந்தியர்கள் உடனே வெளியேறும்படி இந்திய தூதரகம் உத்தரவிட்டுள்ளது. இதனால் இந்தியர்கள் கார்கிவ் நகரில் இருந்து வெளியேறியவண்ணம் உள்ளனர். ஆனால் அவர்கள் கார்கிவ் ரெயில் நிலையத்தில் இருந்து வெளியேற முடியாமல் தவிக்கின்றனர். கார்கிவ் ரெயில் நிலையத்தில் உள்ள  நிலவரம், தங்களின் நிலை குறித்து இந்திய மாணவர்கள் வீடியோக்கள் மூலம் தெரியப்படுத்தி வருகின்றனர். கடும் சிரமங்களை சந்தித்து ரெயில் நிலையத்திற்கு வந்தால் அங்கிருந்து ரெயிலில் ஏற உக்ரைன் போலீசார் அனுமதிக்கவில்லை என்றும், கேட்டால் தங்களை அடித்து உதைப்பதாகவும் கண்ணீர்மல்க கூறுகின்றனர் மாணவர்கள். உக்ரைனில் தங்களுக்கு ஏதாவது நேர்ந்தால்,  குடும்பத்தைக் கவனித்துக் கொள்ளுங்கள் என மத்திய அரசுக்கு ஒரு மாணவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். ரெயி...