வியாழக்கிழமை, ஜூன் 1
Shadow

Tag: கொரோனா

அமிதாப் பச்சனுக்கு இரண்டாவது முறையாக கொரோனா பாதிப்பு !

அமிதாப் பச்சனுக்கு இரண்டாவது முறையாக கொரோனா பாதிப்பு !

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
உலகம் முழுவதும் கொரோனா தொற்றுக்கு பல்வேறு நாடுகளின் தலைவர்கள், திரைப் பிரபலங்கள் பாதிக்கப்பட்டு வருவது தொடர் கதையாகி உள்ளது. இந்நிலையில் இந்தி திரையுல சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் இரண்டாவது முறையாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். 79 வயதான அமிதாப் பச்சனுக்கு நேற்று நடத்தப்பட்ட பரிசோதனையில் கொரானா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது குறித்து தமது டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ள அமிதாப், தன்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் தயவு கூர்ந்து பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார். எனினும் அவர் வீட்டில் தனிமைப்படுத்தப் பட்டுள்ளாரா அல்லது மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டாரா என்பது குறித்து தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை. முன்னதாக கடந்த 2020 ஆம் ஆண்டு முதல்முறையாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட அமிதாப், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றபின் குணமடைந...
நடிகர் அக்சய் குமாருக்கு கொரோனா!

நடிகர் அக்சய் குமாருக்கு கொரோனா!

CINI NEWS, HOME SLIDER, NEWS, செய்திகள், நடிகர்கள்
அடுத்த வார தொடக்கத்தில் நடைபெற உள்ள கேன்ஸ் 2022 திரைப்பட திருவிழாவில், ஏஆர் ரஹ்மான், ஆர் மாதவன், நவாசுதீன் சித்திக், நயன்தாரா, தமன்னா, சேகர் கபூர் உள்பட பலருடன் பாலிவுட் நடிகர் அக்சய்குமார் இணைந்து பங்கேற்பார் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் அக்சய்குமார் கொரோனா பரிசோதனை செய்திருந்தார். இதன் முடிவில் பாசிட்டிவ் என தெரிய வந்துள்ளது. இதையடுத்து கேன்ஸ் திரைப்பட விழாவில் பங்கேற்பதை தவிர்க்க உள்ளதாக தமது டுவிட்டர் பதிவில் அவர் கூறியுள்ளார். நேற்று காலையில், நான் மேற்கொண்ட கொரோனா பரிசோதனையில் எனக்கு தொற்று இருப்பதை அனைவருக்கும் தெரிவிக்க விரும்புகிறேன். அனைத்து நெறிமுறைகளையும் பின்பற்றி, நான் உடனடியாக என்னை தனிமைப்படுத்திக் கொண்டேன். நான் வீட்டு தனிமைப்படுத்தலில் உள்ளேன், என்னுடன் தொடர்பு கொண்டவர்கள் அனைவரும் தங்களைப் பரிசோதித்து பார்த்துக்கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்க...
கொரோனா 3-ம் அலை பாதிப்பு ஒரே வாரத்தில் 45 சதவீதம் குறைந்தது!

கொரோனா 3-ம் அலை பாதிப்பு ஒரே வாரத்தில் 45 சதவீதம் குறைந்தது!

HOME SLIDER, NEWS, செய்திகள்
கொரோனாவின் உருமாறிய வடிவமான ஒமைக்ரான் வைரஸ் பரவலால் கடந்த டிசம்பர் இறுதியில் இருந்து இந்தியாவில் தினசரி பாதிப்பு மீண்டும் உயரத் தொடங்கியது. தினசரி பாதிப்பு 6 ஆயிரத்தில் இருந்து நாள்தோறும் படுவேகமாக உயர்ந்தது. முதல் 2 அலைகளை விட 6 மடங்கு வேகத்தில் தினசரி பாதிப்பு அதிகரித்ததால் சுகாதாரத்துறையினர் அதிர்ச்சி அடைந்தனர். அதே நேரம் நாடு முழுவதும் மக்களுக்கு 160 கோடி டோசுக்கும் மேல் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டிருந்ததால் உயிரிழப்புகள் குறைவாகவே இருந்தது. மேலும் நோயின் தீவிரமும் குறைவாகவே காணப்பட்டதால் தொற்று பாதிப்புக்கு உள்ளானவர்களில் பெரும்பாலானோர் வீட்டு தனிமையிலேயே குணம் அடைந்தனர். இதனால் 3-ம் அலை குறுகிய காலத்தில் உச்சம் அடைந்தது. கடந்த மாதம் 21-ந்தேதி 3.47 லட்சம் பேர் பாதிப்புக்குள்ளானதே இந்த அலையின் உச்சமாக சுகாதாரத்துறையினர் அறிவித்தனர். அதன் பிறகு தினசரி பாதிப்பு நாள்...
நடிகர் சரத்குமாருக்கு கொரோனா!

நடிகர் சரத்குமாருக்கு கொரோனா!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகர்கள்
கொரோனா தொற்றின் மூன்றாவது அலை நாட்டை கடுமையாக பாதித்து வருகிறது. சமீப காலங்களில் பல பிரபலங்கள் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு, அதிலிருந்து மீண்டு வந்துள்ளனர். இந்நிலையில் நடிகரும், சமத்துவ மக்கள் கட்சி தலைவருமான சரத்குமாருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து அவர் கூறுகையில், தனக்கு 2 நாட்கள் அறிகுறி இருந்ததாகவும், பரிசோதனையில் கொரோனா பாதித்துள்ளது தெரியவந்ததாகவும் கூறினார். மேலும் தான் தனிமைப்படுத்திக்கொண்டுள்ளதாகவும் தன்னுடன் தொடர்பில் இருந்தவர்களை பரிசோதனை செய்துகொள்ளவும் கோரிக்கை விடுத்துள்ளார்....
உலக அழகி இறுதிப் போட்டி தள்ளிவைப்பு: இந்திய அழகி உள்பட 17 பேருக்கு கொரோனா!

உலக அழகி இறுதிப் போட்டி தள்ளிவைப்பு: இந்திய அழகி உள்பட 17 பேருக்கு கொரோனா!

HOME SLIDER, NEWS, செய்திகள்
உலக அழகி இறுதிப் போட்டி தள்ளிவைப்பு: இந்திய அழகி உள்பட 17 பேருக்கு கொரோனா! 2021-ம் ஆண்டுக்கான உலக அழகிப் போட்டி போர்டோரிகோ நாட்டில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. இதற்காக பல்வேறு நாட்டு அழகிகள் அங்கு குவிந்தனர். இதில் இந்தியா சார்பில் மானசா வாரணாசி பங்கேற்றுள்ளார். உலக அழகி பட்டத்துக்கான இறுதிப்போட்டி நேற்று இரவு நடைபெறுவதாக இருந்தது. இந்தநிலையில் உலக அழகிப்போட்டி தள்ளி வைக்கப்படுவதாக போட்டி அமைப்பாளர்கள் திடீரென்று அறிவித்தனர். போட்டியில் பங்கேற்றுள்ள அழகிகளில் 17 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு இருப்பது உறுதி படுத்தப்பட்டது. இதில் இந்திய அழகி மானசா வாரணாசிக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டு இருப்பது தெரிய வந்துள்ளது. இது குறித்து உலுக அழகி போட்டி அமைப்பாளர்கள் விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- 2021-ம் ஆண்டுக்கான உலக அழகி போட்டியில் பங்கேற்பாளர்களில் சிலருக்கு கொர...
இந்தியாவில் கொரோனா நிலவரம்- தினசரி பலி எண்ணிக்கை 181 ஆக சரிவு!

இந்தியாவில் கொரோனா நிலவரம்- தினசரி பலி எண்ணிக்கை 181 ஆக சரிவு!

helth tips, HOME SLIDER, NEWS, செய்திகள்
இந்தியாவில் கொரோனா நிலவரம்- தினசரி பலி எண்ணிக்கை 181 ஆக சரிவு! இந்தியாவில் கொரோனா தினசரி பாதிப்பு 14 ஆயிரமாக குறைந்துள்ளது. இன்று காலை 8 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 14,313 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை கூறி உள்ளது. கடந்த மார்ச் 1-ந்தேதி நிலவரப்படி பாதிப்பு 12,286 ஆக இருந்தது. மறுநாள் 15 ஆயிரத்தை நெருங்கியது. இதன் மூலம் கடந்த 224 நாட்களில் இல்லாத அளவில் ஒரு நாள் பாதிப்பு நேற்று குறைந்திருப்பது புள்ளிவிபரங்களில் தெரியவந்துள்ளது. நேற்று அதிகபட்சமாக கேரளாவில் 6,996 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டது. அம்மாநிலத்தில் கடந்த ஏப்ரல் 12-ந் தேதி நிலவரப்படி தினசரி பாதிப்பு 5,692 ஆக இருந்தது. அதன்பிறகு சுமார் 6 மாதங்களில் இல்லாத அளவில் நேற்று குறைந்துள்ளது. இதே போல மகாராஷ்டிராவில் கடந்த 15 மாதங்களில் இல்லாத அளவாக பாதிப்பு நேற்று 1,736 ஆக குறைந்துள்ளது. இந்த இர...
ஐ.நா. பொதுசபை கூட்டத்தில் பிரதமர் மோடி உரை- தடுப்பூசி உற்பத்தி நிறுவனங்களுக்கு அழைப்பு!

ஐ.நா. பொதுசபை கூட்டத்தில் பிரதமர் மோடி உரை- தடுப்பூசி உற்பத்தி நிறுவனங்களுக்கு அழைப்பு!

Assembly news, HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
ஐ.நா. பொதுசபை கூட்டத்தில் பிரதமர் மோடி உரை- தடுப்பூசி உற்பத்தி நிறுவனங்களுக்கு அழைப்பு! அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய பிரதமர் மோடி, இன்று ஐ.நா. பொதுசபை கூட்டத்தின் 76வது அமர்வில் உரையாற்றினார். அவர் பேசியதாவது:- கடந்த ஒன்றரை ஆண்டாக உலகம் முழுவதும் கொரோனாவால் கடும் பாதிப்பு ஏற்பட்டது. 100 ஆண்டுகளில் இல்லாத பேரிடரை ஒன்றரை ஆண்டில் உலகம் சந்தித்துள்ளது. கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கிறேன். உலகின் முதல் டிஎன்ஏ தடுப்பூசியை இந்தியா உருவாக்கியுள்ளது என்பதை நான் இந்த ஐ.நா. பொது சபைக்கு தெரிவிக்க விரும்புகிறேன். இதை 12 வயதிற்கு மேற்பட்ட எவருக்கும் செலுத்தலாம். ஒரு எம்ஆர்என்ஏ தடுப்பூசி தயாரிப்பு இறுதிக் கட்டத்தில் உள்ளது. மூக்கு வழியாக செலுத்தும் தடுப்பூசியை இந்திய விஞ்ஞானிகளும் உருவாக்கி வருகின்றனர். இந்தியாவில் தடுப்பூசிகளை தய...
தடுப்பூசிகள் போட்டும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட பராகான்!

தடுப்பூசிகள் போட்டும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட பராகான்!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள்
தடுப்பூசிகள் போட்டும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட பராகான்! இந்தி திரையுலக பிரபல பெண் இயக்குனர் பராகான். இவர் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் நடுவராகவும் பங்கேற்று வருகிறார். இதற்கான படப்பிடிப்பில் பராகான் கலந்து கொண்டார். அவரோடு படப்பிடிப்பில் இன்னொரு நடுவராக இருக்கும் நடிகை ஷில்பா ஷெட்டியும் பங்கேற்றார். இந்த நிலையில் பராகானுக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டு பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. 2 தடுப்பூசிகள் போட்ட பிறகும் அவருக்கு தொற்று ஏற்பட்டு உள்ளது. இதையடுத்து தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து பராகான் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள பதிவில், “நான் இரண்டு தடவை கொரோனா தடுப்பூசி போட்டு இருக்கிறேன். தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுடன் தான் பணியாற்றினேன். ஆனாலும் எனக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது. என்னுடன் தொடர்பில் இருந்த அனைவரு...
ஊரடங்கை நீட்டிப்பது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை ஆலோசனை!

ஊரடங்கை நீட்டிப்பது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை ஆலோசனை!

CINI NEWS, HOME SLIDER, NEWS, செய்திகள், தமிழக அரசியல்
ஊரடங்கை நீட்டிப்பது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை ஆலோசனை! கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் பொது ஊரடங்கு அமலில் உள்ளது. முதல் அலை ஓய்ந்த பிறகு கொரோனா ஊரடங்கு நடவடிக்கைகளில் தளர்வுகள் கொண்டு வரப்பட்டன. ஆனால் மக்கள் முறையானபடி தடுப்பு விதிமுறைகளை கடைப்பிடிக்காததால் இந்த ஆண்டு தொடக்கத்தில் மிக கடுமையான கொரோனா 2-வது அலை தாக்கியது. தமிழகத்தில் கடந்த மே மாதம் கொரோனா தொற்று பரவல் கட்டுப்படுத்த முடியாதபடி அதிகரித்தது. அந்த சமயத்தில்தான் சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று தி.மு.க. ஆட்சியை பிடித்து இருந்தது. மே மாதம் 2-வது வாரத்தில் தமிழகத்தில் கொரோனாவால் பாதித்தவர்களின் எண்ணிக்கை சுமார் 40 ஆயிரத்தை எட்டும் அளவுக்கு சென்றது. தினசரி உயிர்ப்பலி நூற்றுக்கணக்கில் இருந்தது. இதைத்தொடர்ந்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. அரசு தமிழகம் முழ...
கொரோனா சிகிச்சை கட்டணம் மாற்றியமைப்பு: தமிழக அரசு!

கொரோனா சிகிச்சை கட்டணம் மாற்றியமைப்பு: தமிழக அரசு!

HOME SLIDER, NEWS, செய்திகள்
கொரோனா சிகிச்சை கட்டணம் மாற்றியமைப்பு: தமிழக அரசு! தனியார் மருத்துவமனையில் முதலமைச்சர் மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோருக்கான கட்டணத்தை தமிழக அரசு மாற்றி அமைத்துள்ளது. அதன் அடிப்படையில் தீவிரம் இல்லாத கொரோனா சிகிச்சைக்கு நாளொன்றுக்கு ரூ. 5000 என்று நிர்ணயம் செய்துள்ளது. ஆக்சிஜனுடன் கூடிய சிகிச்சைக்கு தினமும் ரூ. 15,000 என இருந்த நிலையில் தொகுப்பாக ரூ. 7,500 என மாற்றியமைக்கப்பட்டுள்ளது. மேலும் வெண்டிலேட்டர் அல்லாத தீவிர சிகிச்சைக்கு நாளொன்றுக்கு ரூ. 30,000 மற்றும் தீவிர சிகிச்சை பிரிவில் நாளொன்றுக்கு ரூ. 25,000 என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கடுமையான சுவாச செயலிழப்பு ஏற்பட்டு வெண்டிலேட்டர் தேவையில்லையெனில் தொகுப்பு கட்டணம் ரூ. 27,100 என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. ...