புதன்கிழமை, ஏப்ரல் 29
Shadow

Tag: ஜோ பைடன்

உக்ரைனுக்கு ஆயுதங்களை வழங்குவோம் – அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அதிரடி அறிவிப்பு!!

உக்ரைனுக்கு ஆயுதங்களை வழங்குவோம் – அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அதிரடி அறிவிப்பு!!

HOME SLIDER, NEWS, ukrain war, World News, உலக செய்திகள், செய்திகள்
உக்ரைன் மற்றும் ரஷியா இடையேயான போர் 19-வது நாளாக நீடித்து வருகிறது. இந்த போரை நிறுத்த வேண்டும் என்று ஒருபுறம் இந்தியா தொடர்ந்து வேண்டுகோள் விடுத்து வரும் நிலையில், இரு நாடுகளின் அதிபர்கள் இடையே நேரடி பேச்சுவார்த்தை நடைபெறுவதற்கான முயற்சிகளை இஸ்ரேல் மேற்கொண்டு வருகிறது. மறுபுறம் ரஷியாவிற்கு எதிராக போரிட ஐரோப்பிய நட்பு நாடுகள் ஆயுத உதவிகளை வழங்கி வருகின்றன. இந்நிலையில், உக்ரைனுக்கு அமெரிக்கா ஆயுதங்களை வழங்கும் என்று அந்நாட்டு அதிபர் ஜோ பைடன்  அறிவித்துள்ளார். ஆக்கிரமிப்பு ரஷிய படைக்கு எதிராக உக்ரைனுக்கு ஆயுதங்களை வழங்குவோம் என்று தமது ட்விட்டர் பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளார். உக்ரைனில் இருந்து வெளியேறும் அகதிகள் அமெரிக்காவிற்குள் அனுமதிக்கப்படுவார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் உக்ரைனில் உள்ள மக்களுக்கு பணம், உணவு மற்றும் பிற மனிதாபிமான உதவிகளை அமெரிக்கா வழங்...
உக்ரைன் விவகாரம்: பேச்சு வார்த்தை நடத்த அமெரிக்கா-ரஷியா அதிபர்கள் சம்மதம்!

உக்ரைன் விவகாரம்: பேச்சு வார்த்தை நடத்த அமெரிக்கா-ரஷியா அதிபர்கள் சம்மதம்!

HOME SLIDER, NEWS, அரசியல், உலக செய்திகள், சினி நிகழ்வுகள், செய்திகள்
உக்ரைன் - ரஷியா இடையேயான பதற்றம் குறித்து பிரான்ஸ் அதிபர்  இம்மானுவேல் மேக்ரோன், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் ரஷிய அதிபர் விளாடிமிர் புதினுடன்  தொலைபேசி மூலம் தனித்தனியாக விவாதித்தார். ரஷியா படையெடுப்பை தடுக்கும் நடவடிக்கை குறித்து இரு தலைவர்களுடன் அவர் பேசினார் உக்ரைன் சூழலால் ஐரோப்பாவில் பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மை குறித்து அமெரிக்கா, ரஷியா அதிபர்கள் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று பிரான்ஸ் அதிபர் அப்போது கேட்டுக் கொண்டார்.  இதை ஜே பைடனும், விளாடிமிர் புதினும் ஏற்றுக் கொண்டதாக வெள்ளை மாளிகை செய்தி தொடர்புத்துறை செயலாளர் ஜென்சாகி தெரிவித்துள்ளார். இதையடுத்து அமெரிக்கா, ரஷியா அதிபர்கள் சந்திக்கும் உச்சி மாநாடு குறித்தும், அதில் விவாதிக்கப்படும் பொருள் குறித்த அறிக்கைகைளை தயாரிப்பது தொடர்பாக அமெரிக்க வெளியுறவு மந்திரி ஆண்டனி பிளிங்கன் மற்றும் ரஷ்ய வெளியுறவு மந்...
நைஜீரியா, தென் ஆப்பிரிக்கா நாடுகளுக்கு சுமார் 1 கோடி தடுப்பூசிகளை அனுப்பி வைக்கும் அமெரிக்கா!

நைஜீரியா, தென் ஆப்பிரிக்கா நாடுகளுக்கு சுமார் 1 கோடி தடுப்பூசிகளை அனுப்பி வைக்கும் அமெரிக்கா!

HOME SLIDER, NEWS, உலக செய்திகள், செய்திகள்
நைஜீரியா, தென் ஆப்பிரிக்கா நாடுகளுக்கு சுமார் 1 கோடி தடுப்பூசிகளை அனுப்பி வைக்கும் அமெரிக்கா! கொரோனா வைரசுக்கு எதிரான போரில் உலக நாடுகளுக்கு உதவும் வகையில் தங்கள் வசம் உள்ள 8 கோடி கொரோனா தடுப்பூசிகளை உலக நாடுகளுக்கு பகிர்ந்தளிக்க உள்ளதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிவித்திருந்தார். தடுப்பூசி பற்றாக்குறை நிலவி வரும் நாடுகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்றும் அடுத்த 6 மாதங்களுக்குள் தடுப்பூசி மற்ற நாடுகளுக்கு அனுப்பிவைக்கப்படும் என்றும் அவர் கூறினார். அந்த வகையில் ஆசிய நாடுகளான மலேசியா, இந்தோனேசியா, நேப்பாள், பூட்டான் ஆகிய நாடுகளுக்கு அமெரிக்க அரசு கொரோனா தடுப்பூசிகளை அனுப்பி வைத்தது. இது தவிர பிற ஆசிய நாடுகளான பிலிப்பைன்ஸ், வியட்நாம், தாய்லாந்து, லாவோஸ், பப்புவா நியூகினியா, கம்போடியா ஆகிய நாடுகளுக்கும், வறுமை கோட்டிற்கு கீழ் இருக்கும் 92 நாடுகளுக்கும் தடுப்பூசி வழங்க திட்டமிடப்பட்டுள்ள...
தீங்கு செய்தால் வலுவான பதிலடி… ரஷியாவுக்கு ஜோ பைடன் கடும் எச்சரிக்கை!

தீங்கு செய்தால் வலுவான பதிலடி… ரஷியாவுக்கு ஜோ பைடன் கடும் எச்சரிக்கை!

HOME SLIDER, NEWS, உலக செய்திகள், செய்திகள்
தீங்கு செய்தால் வலுவான பதிலடி... ரஷியாவுக்கு ஜோ பைடன் கடும் எச்சரிக்கை! அமெரிக்க ஜனாதிபதியாக ஜோ பைடன் கடந்த ஜனவரி 20-ந் தேதி பதவி ஏற்றார். அப்போது அந்த நாட்டை கொரோனா தொற்று ஆட்டிப்படைத்துக் கொண்டிருந்தது. இப்போது அந்த தொற்றில் இருந்து அமெரிக்கா மீண்டுவந்து விட்டது. இந்த நிலையில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தனது முதல் வெளிநாட்டுப்பயணத்தை மேற்கொண்டுள்ளார். 8 நாள் ஐரோப்பிய பயணத்தில் முதல் கட்டமாக அவர் நேற்று இங்கிலாந்து சென்றார். மனைவி ஜில் பைடனுடன் ஏர் போர்ஸ் ஒன் விமானத்தில் அவர் சபோல்கில் உள்ள அமெரிக்க விமானப்படை தளமான மில்டன்ஹாலில் வந்து தரை இறங்கினார்.அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. ஐரோப்பிய பயணத்தின் இறுதிகட்டமாக சுவிட்சர்லாந்தில் உள்ள ஜெனீவா நகருக்கு செல்லும் ஜோ பைடன், அங்கு ரஷிய அதிபர் விளாடிமிர் புதினை சந்தித்து பேசுகிறார். பருவநிலை மாற்றம், உக்ரைனில் ரஷிய ராணுவ த...
50 கோடி கொரோனா தடுப்பூசிகளை 92 நாடுகளுக்கு நன்கொடையாக அனுப்ப உள்ளோம் – ஜோ பைடன்!

50 கோடி கொரோனா தடுப்பூசிகளை 92 நாடுகளுக்கு நன்கொடையாக அனுப்ப உள்ளோம் – ஜோ பைடன்!

HOME SLIDER, NEWS, உலக செய்திகள், செய்திகள்
50 கோடி கொரோனா தடுப்பூசிகளை 92 நாடுகளுக்கு நன்கொடையாக அனுப்ப உள்ளோம் - ஜோ பைடன்! 50 கோடி பைசர் தடுப்பூசிகளை வாங்கி 92 நாடுகளுக்கு வழங்குவது குறித்த அறிவிப்பை அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வெளியிட்டு உள்ளார். இதுதொடர்பாக, வெள்ளை மாளிகையில் அதிபர் பைடன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியுள்ளதாவது: அமெரிக்கா 50 கோடி பைசர் தடுப்பூசிகளை வாங்கி அதை குறைந்த மற்றும் நடுத்தரத்துக்கும் குறைவான வருவாய் உள்ள நாடுகள் மற்றும் ஆப்பிரிக்க ஒன்றியம் என 92 நாடுகளுக்கு வழங்க உள்ளது. இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நடவடிக்கை மூலம் பல மில்லியன் நபர்களின் உயிர்கள் காப்பாற்றப்படும் என தெரிவித்துள்ளார்....
அமெரிக்காவின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த புதிய திட்டம் – ஜோ பைடன் அறிவிப்பு!

அமெரிக்காவின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த புதிய திட்டம் – ஜோ பைடன் அறிவிப்பு!

HOME SLIDER, NEWS, உலக செய்திகள், செய்திகள்
அமெரிக்காவின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த புதிய திட்டம் - ஜோ பைடன் அறிவிப்பு! அமெரிக்காவில் தொற்று நோய் பாதிப்புகளை கட்டுப்படுத்த அதிபர் ஜோ பைடன் தலைமையிலான அரசு தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதே சமயம் பொருளாதாரத்தை மேம்படுத்தவும் அவர் பல்வேறு திட்டங்களை அறிவித்து வருகிறார். இந்நிலையில், அமெரிக்காவின் உள்கட்டமைப்பு மற்றும் வேலைவாய்ப்பு வசதிகளை மேம்படுத்த சுமார் 2 டிரில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவில் அதிபர் ஜோ பைடன்  புதிய திட்டத்தை அறிவித்துள்ளார். இதுதொடர்பாக, பென்சில்வேனியாவின் பிட்ஸ்பர்க்கில் பேசிய போது ஜோ பைடன் கூறியதாவது: உள்கட்டமைப்பு வசதிகள், தட்பவெப்ப மாற்றம், கொரோனா தொற்று போன்றவற்றால் அமெரிக்காவின் பொருளாதாரம் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது. அவற்றை மீண்டும் கட்டமைக்க வேண்டியது அவசியம். அதனால், உள்கட்டமைப்பு மற்றும் பொருளாதாரத்தை மேம்படுத்த இதுவரை இல்லா...
அமெரிக்க அதிபராக நாளை பதவி ஏற்க உள்ள ஜோ பைடன்

அமெரிக்க அதிபராக நாளை பதவி ஏற்க உள்ள ஜோ பைடன்

HOME SLIDER, politics, உலக செய்திகள், உலகம்
  நாளை அமெரிக்க அதிபராகப் பதவி ஏற்க உள்ள ஜோ பைடன் அதிக வயதான அதிபர் என்னும் பெருமையைப் பெற்றுள்ளார். நடந்து முடிந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சி வேட்பாளரும் தற்போதைய அதிபருமான டொனால்ட் டிரம்ப் தோல்வி அடைந்து ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன் வெற்றி பெற்றார்.  நாளை ஜோ பைடன் பதவி ஏற்க உள்ளார்.  இதற்காக மிகத் தீவிரமாக ஏற்பாடுகள் நடந்து  வருகின்றன.  அவர் தேர்தலில் வெற்றி பெற்றும் டொனால்ட் டிரம்ப் தனது தோல்வியை ஒப்புக் கொள்ளாமல் மிகவும் இழுத்தடித்து தற்போது வேறு வழியில்லாமல் ஒதுங்கி உள்ளார். தற்போது பதவி ஏற்க உள்ள ஜோ பைடனுக்கு நவம்பர் மாதம் 78 வயதை எட்டி உள்ளார்.  இதனால் அவர் மிகவும் வயதான அதிபர் என்னும் பெருமையைப் பெற்றுள்ளார்.  இதற்கு முன்பு டொனால்ட் டிரம்ப் கடந்த 2017 ஆம் ஆண்டு ஜனவரியில் டிரம்ப் பதவி ஏற்ற போது அவருக்கு 70 வயதாகி இருந்தது.   இதற்கு முன்பு ரொனால்ட...