வெள்ளிக்கிழமை, ஜூலை 31
Shadow

Tag: நிலநடுக்கம்

டெல்லியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்- ரிக்டர் அளவில் 5.8ஆக பதிவு!

டெல்லியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்- ரிக்டர் அளவில் 5.8ஆக பதிவு!

HOME SLIDER, NEWS, செய்திகள்
டெல்லியில் பல்வேறு பகுதிகளில் இன்று மதியம் 2.28 மணிக்கு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. நிலநடுக்கம் நேபாளத்தை மையமாக கொண்டு ரிக்டர் அளவில் 5.8ஆக பதிவாகியுள்ளது. தலைநகர் டெல்லியில் உணரப்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் மக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியது. டெல்லி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உணரப்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் மக்கள் வீடுகளில் இருந்து சாலைகளுக்கு அவசரமாக வெளியேறினர்....
சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில்  நிலநடுக்கம்!

சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் நிலநடுக்கம்!

HOME SLIDER, NEWS, World News, உலக செய்திகள், செய்திகள்
சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் 6.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. பீஜிங், தென்மேற்கு சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் உள்ள யான் நகரில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக சீன நிலநடுக்க மையம் தெரித்தது. பெய்ஜிங் நேரப்படி நேற்று மாலை 5 மணியளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 6.1 ஆகப் பதிவாகி உள்ளது. 17 கிமீ ஆழம் கொண்ட இந்த நிலநடுக்கம் 30.37 டிகிரி வடக்கு அட்சரேகை மற்றும் 102.94 டிகிரி கிழக்கு தீர்க்கரேகையில் கண்காணிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அடுத்த 3 நிமிடங்களுக்குப் பிறகு, யானிலும் 4.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ சின்ஹுவா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் சீனாவின் அடுத்தடுத்த ஏற்பட்ட இரண்டு நிலநடுக்கங்களில் குறைந்தது நான்கு பேர் உயிரிழந்ததுடன் வீடுகளும் சேதமடைந்துள்ளதாக அதிகாரிகள் மற்றும் அரசு ஊடகங்கள் தகவல் தெரிவித்த...
அருணாச்சலப் பிரதேசத்தில் நில அதிர்வு!

அருணாச்சலப் பிரதேசத்தில் நில அதிர்வு!

HOME SLIDER, NEWS, செய்திகள்
அருணாச்சலப் பிரதேசத்தில் இன்று காலை 5.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. அருணாச்சலப் பிரதேசம் பாங்கினுக்கு வடக்கே 1176 கிமீ தொலைவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தேசிய நில அதிர்வு மையம் தனது அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. சீனா பெய்ஜிங்கில் இன்று காலை 9.26 மணிக்கு (பெய்ஜிங் நேரப்படி) நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும், அதன் அதிர்வு அருணாச்சலப் பிரதேசத்தில் உணரப்பட்டதாகவும் கூறப்படுகிறது. நிலநடுக்கத்தில் உயிர்ச்சேதமோ, பொருள் சேதமோ ஏற்பட்டதாக இதுவரை தகவல் இல்லை....
சீனாவில் 5.8 ரிக்டர் அளவில் கடும் நிலநடுக்கம்!

சீனாவில் 5.8 ரிக்டர் அளவில் கடும் நிலநடுக்கம்!

HOME SLIDER, NEWS, உலக செய்திகள், செய்திகள்
சீனாவில் 5.8 ரிக்டர் அளவில் கடும் நிலநடுக்கம்! சீன நாட்டில் வடமேற்கே அமைந்துள்ள குயிங்காய் மாகாணத்தில் டெலிங்கா நகரில் இன்று கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. இந்த நில நடுக்கம் ரிக்டரில் 5.8 ஆக பதிவாகியுள்ளதாக சீன நிலநடுக்க நெட்வொர்க் மையம் தெரிவித்து உள்ளது. இந்நிலநடுக்கம் 8 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. நில நடுக்கத்தில் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த விவரங்கள் எதுவும் வெளியாகவில்லை. கடந்த 12-ம் தேதியும் குயிங்காய் மாகாணத்தில் மென்யுவான் கவுன்டி பகுதியில் ரிக்டரில் 5.2 அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது.  ஒரே மாதத்தில் குயிங்காய் மாகாணத்தில் 2-வது முறையாக நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது....
அருணாசல பிரதேசத்தில் 4.9 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்!

அருணாசல பிரதேசத்தில் 4.9 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்!

HOME SLIDER, NEWS, செய்திகள்
அருணாசல பிரதேசத்தில் 4.9 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்! அருணாசல பிரதேசத்தின் பர்சாவில் இருந்து தென்மேற்கே இன்று காலை 4.30 மணியளவில் மித அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.9 ஆக பதிவாகி உள்ளது என தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது. இதனால் ஏற்பட்ட பொருள் இழப்புகள் உள்ளிட்ட விவரங்கள் எதுவும் உடனடியாக வெளிவரவில்லை. கடந்த சில நாட்களாக வடகிழக்கு மாநிலங்களில் தொடர்ச்சியாக நிலநடுக்கங்கள் ஏற்பட்டு வருவதால் அந்தந்தப் பகுதிகளைச் சேர்ந்த மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்....
மெக்சிகோவில் 5.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்!

மெக்சிகோவில் 5.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்!

HOME SLIDER, NEWS, உலக செய்திகள், உலகம், செய்திகள்
மெக்சிகோவில் 5.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்! மெக்சிகோ நாட்டின் பவிஸ்பே நகருக்கு மேற்கு-தென்மேற்கில் இருந்து 26 கி.மீ. தொலைவில் நேற்றிரவு 9.19 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டரில் 5.2 ஆக பதிவாகி உள்ளது.  இந்த நிலநடுக்கம் 10 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது என அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது....
ஜப்பானில் 6.6 ரிக்டர் அளவில் கடும் நிலநடுக்கம்!

ஜப்பானில் 6.6 ரிக்டர் அளவில் கடும் நிலநடுக்கம்!

HOME SLIDER, NEWS, உலக செய்திகள், உலகம், செய்திகள்
ஜப்பானில் 6.6 ரிக்டர் அளவில் கடும் நிலநடுக்கம்! ஜப்பானின் ஹோன்சு நகரில் கிழக்கு கடற்கரையோர பகுதியில் இன்று காலை 6.57 மணியளவில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. இது ரிக்டரில் 6.6 ஆக பதிவாகி உள்ளது என தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்து உள்ளது.  இதனால் ஏற்பட்ட பாதிப்புகள் பற்றிய விவரங்கள் எதுவும் உடனடியாக...
பிலிப்பைன்சில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

பிலிப்பைன்சில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

HOME SLIDER, NEWS, உலக செய்திகள், உலகம்
பிலிப்பைன்சில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் பிலிப்பைன்ஸ் நாட்டின் போன்டாகைடன் நகரில் இருநது தென்கிழக்கே 219 மீட்டர் தொலைவில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 7.0ஆக பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் 139 கி.மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டுள்ளது. இந்த நடுநடுக்கம் பிலிப்பைன்ஸின் முக்கிய வணிக மையமான கருதப்படும் தவாயோ நகரில் உணரப்பட்டுள்ளதுது. இங்குள்ள வீடுகள் ஆட்டம் கண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்திய நேரப்படி இன்று மாலை 6 மணியளவில் உண்டான இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்பு குறித்து உடனடியாக தகவல்கள் ஏதும் இல்லை....