வெள்ளிக்கிழமை, ஜூன் 19
Shadow

Tag: நேட்டோ

ஸ்வீடன், ஃபின்லாந்து நாடுகள் நேட்டோவில் இணைவதற்கு ஆதரவு: கனடா பிரதமர்!

ஸ்வீடன், ஃபின்லாந்து நாடுகள் நேட்டோவில் இணைவதற்கு ஆதரவு: கனடா பிரதமர்!

HOME SLIDER, NEWS, ukrain war, World News, அரசியல், உலக செய்திகள், செய்திகள்
நேட்டோவில் இணைவதற்கு உக்ரைன் விருப்பம் தெரிவித்ததை தொடர்ந்து, அந்நாட்டின் மீது ரஷியா படையெடுத்து 56 நாட்களாக போர் செய்து வருகிறது. இதனால் அச்சமடைந்துள்ள ஸ்வீடன் மற்றும் பின்லாந்து ஆகிய நாடுகள்  நேட்டோ ராணுவக் கூட்டணியில் இணையும் நடவடிக்கையில் இறங்கியுள்ளன. இந்த நடவடிக்கைக்கு ரஷியா தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், கனடா தனது ஆதரவினை தெரிவித்துள்ளது. இதுகுறித்து பேசிய கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, நேட்டோவில் சேருவதற்கு ஸ்வீடன் மற்றும் ஃபின்லாந்து ஆகிய நாடுகள் விருப்பம் காட்டுவதாக உரையாடல்கள் நடைபெற்று வருகின்றன. அந்த இரு நாடுகளின் முடிவிற்கும் கனடா நிச்சயமாக தனது ஆதரவை அளிக்கும் என்று கூறினார்....
உக்ரைனில் ரசாயன ஆயுத தாக்குதலை நடத்த ரஷியா தயாராகி வருகிறது – நேட்டோ கூட்டமைப்பு தகவல்!

உக்ரைனில் ரசாயன ஆயுத தாக்குதலை நடத்த ரஷியா தயாராகி வருகிறது – நேட்டோ கூட்டமைப்பு தகவல்!

HOME SLIDER, NEWS, ukrain war, World News, உக்ரைன் போர், உலக செய்திகள், செய்திகள்
உக்ரைன் மீதான ரஷிய படையெடுப்பு குறித்து விவாதிக்க பெரும்பாலான நேட்டோ உறுப்பினர்களைக் கொண்ட ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவர்கள் மற்றும் பிரதமர்கள் பங்கேற்கும் உச்சி மாநாடு அடுத்த வாரம் நடைபெறுகிறது. இந்நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய நேட்டோ கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் ஜென்ஸ் ஸ்டோல்டன்பெர்க், உக்ரைனில் ரசாயன தாக்குதலை நடத்த ரஷியா தயாராகி வருவதாக தெரிவித்தார். இதனால் நேட்டோ உறுப்பு நாடுகள் கவலை அடைந்துள்ளதாக அவர் கூறினார். உக்ரைனில் உயிரி ஆயுத ஆய்வகங்கள் இருப்பதாக ரஷியா தவறான குற்றச்சாட்டுக்களை கூறியுள்ளதாக அவர் குறிப்பிட்டார். இதை காரணம் காட்டி ரஷியா ரசாயன தாக்குதலை நடத்தலாம் என்றும், நேட்டோ இது குறித்து மிகவும் விழிப்புடன் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். ரஷ்யா அத்தகைய சர்வதேச சட்டத்தை மீறினால் அதிக விலை கொடுக்க வேண்டியிருக்கும் என்றும் அவர் எச்சரித்தார். எனினும், ரஷியா உக்ரைனி...