சனிக்கிழமை, மே 2
Shadow

Tag: லடாக் அத்துமீறல்

பலியான சீன வீரர்களின் உடலை கூட காட்டாமல் அஸ்தியை அனுப்பியதாம் சீன அரசு!

பலியான சீன வீரர்களின் உடலை கூட காட்டாமல் அஸ்தியை அனுப்பியதாம் சீன அரசு!

HOME SLIDER, NEWS, politics, உலக செய்திகள், உலகம், செய்திகள்
  பலியான சீன வீரர்களின் உடலை கூட காட்டாமல் அஸ்தியை அனுப்பியதாம் சீன அரசு! லடாக் பகுதியில் சீன அத்துமீறலில் 20 இந்திய ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். இது இந்தியா முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அதோ மட்டுமில்லாமல் நமது வீரர்களின் உடல்களுக்கு முழு அரசு மரியாதை செலுத்தப்பட்டது. அதே நேரம் இந்திய வீரர்கள் எதிர்த்தாக்குதலில் 43 சீன வீரர்கள் பலியானதாக உறுதியற்ற தகவல்கள் தெரிவித்தன. ஆனால், சீன அரசு பலி எண்ணிக்கை எதையும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்காமல் இருந்தது. சீன கம்யூனிஸ்ட் கட்சி தங்கள் நாட்டு ராணுவ வீரர்களின் மரணத்தை கூட  உலக நாடுகளிடம் இருந்து மறைத்துள்ளது. அதோடு மட்டுமில்லாமல் பலியான ராணுவ வீரர்களின் உடல்களை கூட சம்மந்தப்பட்ட உறவினர்கள், பெற்றோர்கள் என யாரையும் பார்க்க அனுமதிக்காமல். வெறும் அஸ்தியை மட்டுமே வீட்டிற்கு அனுப்பியுள்ளது. உடலை கூட காட்...
சீனாவின் அத்துமீறல் குறித்து பேச 19ம் தேதி அனைத்து கட்சி கூட்டத்துக்கு மோடி அழைப்பு!

சீனாவின் அத்துமீறல் குறித்து பேச 19ம் தேதி அனைத்து கட்சி கூட்டத்துக்கு மோடி அழைப்பு!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
    லடாக் எல்லை மோதல் சீனாவின் அத்துமீறல் குறித்து பேச 19ம் தேதி அனைத்து கட்சி கூட்டத்துக்கு மோடி அழைப்பு! இந்தியா-சீனா இடையே நீண்டகாலமாக தீர்க்கப்படாத எல்லைப் பிரச்சினை இப்போது பூதாகரமக வெடித்துள்ளது.  எல்லையில் நேற்று முன்தினம் இரவு இரு தரப்பு படைகளுக்கு இடையே கடுமையான மோதல் ஏற்பட்டது. லடாக் எல்லையின் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் இரு நாட்டு படைகளையும் விலக்கிக் கொள்ளும் நடவடிக்கையின்போது, இரு தரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இந்த மோதலில் இந்திய தரப்பில் இதுவரை 20 வீரர்கள் வீரமரணம் அடைந்திருப்பதாக இந்திய ராணுவம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்திருக்கிறது. மேலும் சிலர் பலத்த காயமடைந்திருப்பதால், உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் உயரலாம் என அஞ்சப்படுகிறது. இதேபோல் சீனா தரப்பில் 43 வீரர்களின் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. எல்லை மோதலைத் தொடர்ந்து பாதுகாப்...