திங்கட்கிழமை, ஏப்ரல் 29
Shadow

Tag: சிலம்பம்

சிலம்பம் விளையாட்டு வீரர்களுக்கு இடஒதுக்கீடு- அரசாணை வெளியீடு!

சிலம்பம் விளையாட்டு வீரர்களுக்கு இடஒதுக்கீடு- அரசாணை வெளியீடு!

HOME SLIDER, NEWS, politics, sports, செய்திகள், விளையாட்டு செய்திகள்
சிலம்பம் விளையாட்டு வீரர்களுக்கு இடஒதுக்கீடு- அரசாணை வெளியீடு! தமிழ்நாடு அரசு மற்றும் பொதுத்துறை நிறுவன பணியிடங்களில் சிறந்த சிலம்பம் விளையாட்டு வீரர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கப்படும் என சட்டசபையில் அரசு அறிவித்தது. சிலம்பம் விளையாட்டை 3 சதவீத விளையாட்டு இட ஒதுக்கீட்டின் கீழ் சேர்ப்பதற்கு அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை கொள்கை விளக்க குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி சிலம்பம் விளையாட்டு வீரர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக அரசாணை வெளியிடப்பட்டு உள்ளதாக அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்துள்ளார். தேசிய மற்றும் மாநில அளவில் சிலம்பப் போட்டியில் வெற்றி பெற்றவர்கள் இந்த இட ஒதுக்கீடு பெற தகுதியானவர்கள். மத்திய அரசின் புதிய கேலோ இந்தியா திட்டத்தின் கீழ் சிலம்பம் விளையாட்டு சேர்க்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது....
சிலம்பம் கற்கும் தேவயானி!

சிலம்பம் கற்கும் தேவயானி!

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகைகள், வீடியோ
    சிலம்பம் கற்கும் தேவயானி! கொரானா பரவலை தடுக்க உலகம் முழுதும் பல நாடுகளில் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டு உள்ளது. பள்ளி கல்லூரிகள் காலவரையறை இல்லாமல் மூடப்பட்ட நிலையில் அனைவரும் வீடுகளில் முடங்கி உள்ளனர். திரைத்துறை முற்றிலும் முடங்கி இருப்பதால் தொழிலாளர்கள், நடிகர் நடிகைகள் பணிகள் எதுவும் இல்லாமல் இருக்கிறார்கள. ஒருசிலர் தினமும் ஏதாவது ஒரு வீடியோ போடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். அந்த வகையில் பிரபல நடிகையும் பள்ளி ஆசிரியருமான தேவயானி இந்த ஊரடங்கு நேரத்தில் தன் மகள்களுடன் சிலம்பம் கற்று வருகிறார். அவர் சிலம்பம் கற்றுகொள்ளும் வீடியோ தற்போது வைரல் ஆகி உள்ளது.   ...