செவ்வாய்க்கிழமை, மே 21
Shadow

Tag: Arya

சிசிஎல் சென்னை ரைனோஸ் அணியினரின் பத்திரிக்கையாளர் சந்திப்பு !

சிசிஎல் சென்னை ரைனோஸ் அணியினரின் பத்திரிக்கையாளர் சந்திப்பு !

CINI NEWS, HOME SLIDER, NEWS, sports, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள், விளையாட்டு செய்திகள்
      *(Celebrity Cricket League) சிசிஎல் சென்னை ரைனோஸ் அணியினரின் பத்திரிக்கையாளர் சந்திப்பு !!* *இந்தியத் திரைப்பட நட்சத்திரங்கள் பங்கேற்கும் செலிபிரிட்டி கிரிக்கெட் லீக் (Celebrity Cricket League) தொடர் ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்பட்டு வருகிறது*. *இந்த ஆண்டு இப்போட்டியில் கலந்துகொள்ளும், சென்னை ரைனோஸ் அணியினர் பத்திரிக்கை ஊடக நண்பர்களைச் சந்தித்தனர்*. செலிபிரிட்டி கிரிக்கெட் லீக்கில், சென்னை ரைனோஸ், மும்பை ஹீரோஸ், கர்நாடகா புல்டோசர்ஸ், தெலுங்கு வாரியர்ஸ், போஜ்புரி தபாங்ஸ், பெங்கால் டைகர்ஸ், கேரளா ஸ்டிரைக்கர்ஸ், பஞ்சாப் தி ஷெர் ஆகிய 8 அணிகள் பங்கேற்கின்றன‌ர். திரை நட்சத்திரங்கள் பங்கேற்கும் கிரிக்கெட் போட்டி என்பதால், ஆண்டுதோறும் இதற்கான எதிர்பார்ப்பு, மேலும் மேலும் அதிகரித்து கொண்டு தான் வருகிறது. சென்னை அணியின் கேப்டனாக ஆர்யா செயல்பட்டு வருகிறார் மற்...
நடிகர் ஆர்யா நடிக்கும் “கேப்டன்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது!

நடிகர் ஆர்யா நடிக்கும் “கேப்டன்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
நடிகர் ஆர்யா நடிக்கும் “கேப்டன்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது! நடிகர் ஆர்யா, டெடி மற்றும் சார்ப்பட்டா பரம்பரை போன்ற தொடர்ச்சியாக அழுத்தமான கதையம்சங்கள் கொண்ட, பிளாக்பஸ்டர் திரைப்படங்களை வழங்கியதன் மூலம் புகழின் உச்சத்தை எட்டியுள்ளார். அவரது நடிப்பில் அடுத்ததாக வரவிருக்கும் கேப்டன் படத்திற்கு வர்த்தக வட்டாரங்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றன. “டெடி” என்ற பிரமாண்டமான படத்திற்குப் பிறகு ஆர்யா-சக்தி சௌந்தர் ராஜன் ஜோடி மீண்டும் இணைந்து செயல்படுவதால், இப்படம் ஏற்கனவே ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் தயாரிப்பாளர்கள் தற்போது இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளனர், இந்த ஃபர்ஸ்ட் லுக், பார்வையாளர்களை ஆச்சர்யத்தின் உச்சிக்கு இட்டு செல்லும் வகையில், அனைவரையும் ஈர்க்கும் படி அமைந்துள்ளது. நம்பமுடியாத ஆச்சர்யமான உண்மை என்னவென்றால்...
பூஜையுடன் தொடங்கிய ஆர்யாவின் அடுத்த படம்!

பூஜையுடன் தொடங்கிய ஆர்யாவின் அடுத்த படம்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
பூஜையுடன் தொடங்கிய ஆர்யாவின் அடுத்த படம்! ’சார்பட்டா பரம்பரை’, ‘அரண்மனை 3’ படங்களுக்குப் பிறகு, ஆர்யா நடித்துள்ள ‘எனிமி’ திரைப்படம் தீபாவளி தினத்தில் வெளியாகிறது. இந்த நிலையில் ஆர்யாவின் அடுத்தபடம் இன்று பூஜையுடன் தொடங்கியுள்ளது. ஏற்கெனவே ஆர்யாவை வைத்து ‘டெடி’ படத்தை இயக்கிய சக்தி செளந்தர்ராஜன் இப்படத்தை இயக்குகிறார். இப்படத்தை ஆர்யாவும் திங்க் ஸ்டுடியோஸும் இணைந்து தயாரிக்கின்றனர். இன்று பூஜையுடன் தொடங்கிய இப்படத்தில் கதாநாயகியாக ’ஜகமே தந்திரம்’ படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்த ஐஸ்வர்யா லக்‌ஷ்மி நடிக்கிறார். மேலும் சிம்ரன், காவ்யா ஷெட்டி, ஹரிஷ் உத்தமன், கோகுல், பரத் ராஜ் மற்றும் பலர் இப்படத்தில் நடிக்கிறார்கள். இமான் இசையமைக்க மதன் கார்க்கி பாடல்கள் எழுதியுள்ளார்....
ஆர்யாவை பண மோசடி வழக்கில் தப்ப வைக்க முயற்சியா? ஜெர்மனி வாழ் இலங்கை பெண் கோர்ட்டில் மனு தாக்கல்!

ஆர்யாவை பண மோசடி வழக்கில் தப்ப வைக்க முயற்சியா? ஜெர்மனி வாழ் இலங்கை பெண் கோர்ட்டில் மனு தாக்கல்!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகர்கள்
ஆர்யாவை பண மோசடி வழக்கில் தப்ப வைக்க முயற்சியா? ஜெர்மனி வாழ் இலங்கை பெண் கோர்ட்டில் மனு தாக்கல்! ஜெர்மனி நாட்டில் வசிக்கும் இலங்கை பெண் ஒருவர், நடிகர் ஆர்யா தன்னிடம் பழகி திருமணம் செய்வதாக கூறி, ரூ.70 லட்சத்தை மோசடி செய்துவிட்டதாகவும், அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ‘ஆன்லைன்’ வழியாக புகார் அனுப்பி இருந்தார். இதுகுறித்து சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி நடிகர் ஆர்யா, அவரது தாயார் ஜமீலா, புளியந்தோப்பைச் சேர்ந்த முகமது அர்மான், அவரது உறவினர் ஹூசைனி ஆகியோர் மீது கடந்த மாதம் 19-ந்தேதி வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் ஆர்யா போன்று பேசி அந்த பெண்ணிடம் மோசடி செய்ததாக முகமது அர்மான், ஹூசைனி ஆகியோரை சமீபத்தில் போலீசார் கைது செய்தனர். இந்தநிலையில் அவர்கள் 2 பேரும் ஜாமீன்கோரி சென்னை எழும்பூர் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனு நேற்று விசாரணைக்க...
ஜெர்மனி பெண் அளித்த மோசடி புகார் – நடிகர் ஆர்யாவிடம் சைபர் கிரைம் போலீசார் அதிரடி விசாரணை!

ஜெர்மனி பெண் அளித்த மோசடி புகார் – நடிகர் ஆர்யாவிடம் சைபர் கிரைம் போலீசார் அதிரடி விசாரணை!

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
ஜெர்மனி பெண் அளித்த மோசடி புகார் - நடிகர் ஆர்யாவிடம் சைபர் கிரைம் போலீசார் அதிரடி விசாரணை! ஜெர்மனியில் வசிக்கும் இலங்கை பெண் ஒருவர் பிரதமர் நரேந்திர மோடிக்கு புகார் மனு ஒன்றை அனுப்பி இருந்தார். அந்த புகாரில் தமிழ் திரைப்பட நடிகர் ஆர்யா, தன்னை திருமணம் செய்துகொள்வதாக கூறி தன்னிடம் 70 லட்சம் பணம் வாங்கிக்கொண்டு ஏமாற்றி விட்டதாக அவர் குறிப்பிட்டிருந்தார். இந்த புகார் மனு உரிய விசாரணைக்காக தமிழக அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அது தொடர்பான வழக்கு சென்னை ஐகோர்ட்டிலும் நிலுவையில் உள்ளது. இந்நிலையில், இது தொடர்பாக சென்னை மத்திய குற்றப்பிரிவின் சைபர் கிரைம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். நடிகர் ஆர்யாவை விசாரணைக்கு ஆஜராகுமாறு சைபர் கிரைம் போலீசார் சம்மன் அனுப்பி இருந்தனர். அதை ஏற்றுக்கொண்ட நடிகர் ஆர்யா, நேற்று இரவு சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகம் வந்தார்....
எனிமி படத்தின் டீசர் ரிலீஸ் அறிவிப்பு… ரசிகர்கள் உற்சாகம்!

எனிமி படத்தின் டீசர் ரிலீஸ் அறிவிப்பு… ரசிகர்கள் உற்சாகம்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
எனிமி படத்தின் டீசர் ரிலீஸ் அறிவிப்பு... ரசிகர்கள் உற்சாகம்! பாலா இயக்கத்தில் ஆர்யா, விஷால் நடிப்பில் வெளியான திரைப்படம் ‘அவன் இவன்’. இப்படத்தில் இருவரும் நெருங்கிய நண்பர்களாக நடித்திருந்தார்கள். தற்போது நீண்ட இடைவெளிக்கு பிறகு இருவரும் இணைந்து ‘எனிமி’ என்ற படத்தில் நடித்து வருகிறார்கள். இப்படத்தை அரிமா நம்பி, இருமுகன், நோட்டா போன்ற படங்களை இயக்கிய ஆனந்த் சங்கர் இயக்கி வருகிறார். இதில் விஷாலுக்கு ஜோடியாக மிருணாளினியும், ஆர்யாவுக்கு ஜோடியாக மம்தா மோகன்தாஸும் நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு சில தினங்களுக்கு முன்பு நிறைவடைந்தது. இந்நிலையில், எனிமி படத்தின் டீசரை ஜூலை 24 ஆம் தேதி (நாளை) மாலை 6 மணிக்கு வெளியிட இருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்....
நடிகர் ஆர்யாவும் ‘சூதுகவ்வும்’ பட இயக்குனரும் கூட்டணி!

நடிகர் ஆர்யாவும் ‘சூதுகவ்வும்’ பட இயக்குனரும் கூட்டணி!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
நடிகர் ஆர்யாவும் ‘சூதுகவ்வும்’ பட இயக்குனரும் கூட்டணி! விஜய் சேதுபதியின் சூதுகவ்வும் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் நலன் குமாரசாமி. இந்த படத்தை அடுத்து விஜய் சேதுபதியை வைத்து ‘காதலும் கடந்து போகும்’ என்ற திரைப்படத்தை இயக்கினார். இந்தப் படம் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை. சமீபத்தில் குட்டி ஸ்டோரி என்ற ஆந்தாலஜி திரைப்படத்தை இயக்கிய நலன் குமாரசாமி, அதிலும் விஜய் சேதுபதியை தான் ஹீரோவாக நடிக்க வைத்தார். இவ்வாறு வரிசையாக விஜய் சேதுபதியுடன் கூட்டணி அமைத்து வந்த நலன் குமாரசாமி, தற்போது முதன்முறையாக ஆர்யாவுடன் கூட்டணி அமைக்க உள்ளார். ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்கும் இப்படம் ஒரு பேண்டஸி திரில்லர் கதையம்சம் கொண்டதாம். கொரோனா பரவல் குறைந்த பின் இப்படத்தின் படப்பிடிப்பை தொடங்க திட்டமிட்டுள்ளார்களாம். விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது....
மெளனகுரு சாந்தகுமார் இயக்கத்தில் ஆர்யாவின் “மகாமுனி” படத்தை தயாரிக்கிறார் ஞானவேல் ராஜா!

மெளனகுரு சாந்தகுமார் இயக்கத்தில் ஆர்யாவின் “மகாமுனி” படத்தை தயாரிக்கிறார் ஞானவேல் ராஜா!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
ஸ்டூடியோ கிரீன் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் K E  ஞானவேல்ராஜா தயாரிக்கும் புதிய திரைப்படம் ‘மகாமுனி’. இதில் நடிகர் ஆர்யா, நடிகை மஹிமா நம்பியார், இந்துஜா, ஜுனியர் பாலையா, ஜெயப்ரகாஷ், அருள் தாஸ், ஜி எம் சுந்தர், காளி வெங்கட் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். இப்படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் சாந்தகுமார். இவர் ஏற்கனவே மௌனகுரு என்ற வெற்றிப்படத்தை இயக்கியவர். இந்த படத்தின் ஒளிப்பதிவை அருண் பத்மநாபன் கவனிக்க, எஸ் எஸ் தமன் இசையமைக்கிறார். பாடல்களை கவிஞர் முத்துலிங்கம் எழுதுகிறார். தேசிய விருதுப்பெற்ற VJ சாபு ஜோசப் படத்தை தொகுக்க, ரெம்போன் பால்ராஜ் கலை இயக்குநராக பணியாற்றுகிறார். சண்டை பயிற்சியை ஆக்சன் பிரகாஷ் மேற்கொள்கிறார். படத்தைப் பற்றி இயக்குநர் பேசுகையில்,“க்ரைம் திரில்லர் ஜேனரில் ‘மகாமுனி ’ தயாராகிறது. படத்தின் திரைக்கதை அனைத்து தரப்பினரையும் கவரும் வகையில் பரபரப்...