செவ்வாய்க்கிழமை, ஏப்ரல் 23
Shadow

Tag: Asuran

நேரடியாக ஓடிடி-யில் ரிலீசாகும் தெலுங்கு அசுரன்!

நேரடியாக ஓடிடி-யில் ரிலீசாகும் தெலுங்கு அசுரன்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
நேரடியாக ஓடிடி-யில் ரிலீசாகும் தெலுங்கு அசுரன்! பூமணி எழுதிய வெக்கை நாவலை அடிப்படையாக கொண்டு வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த படம் அசுரன். தீண்டாமை உள்ளிட்ட அடக்குமுறைக்கு எதிராக பேசிய இப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. 100 நாட்கள் வெற்றிகரமாக ஓடிய இப்படம் 100 கோடிக்கு மேல் வசூல் சாதனையும் படைத்தது. அசுரன் படம் தெலுங்கில் ‘நாரப்பா’ என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது. இதில் தனுஷ் வேடத்தில் வெங்கடேஷும், மஞ்சு வாரியர் வேடத்தில் பிரியாமணியும் நடித்துள்ளார். மேலும் அம்மு அபிராமி வேடத்தில் அமலா பால் நடித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து ரிலீசுக்கு தயாராக இருந்த சமயத்தில் கொரோனா 2-வது அலை காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டதால் படத்தை திட்டமிட்டபடி வெளியிட முடியவில்லை. இந்நிலையில், இப்படம் நேரடியாக ஓடிடி-யில் வெளியிடப்பட உள்ளதாக தகவல் வெள...
மகிழ்ச்சியான செய்தியோடு கண் விழித்ததாக தனுஷ் நெகிழ்ச்சி!

மகிழ்ச்சியான செய்தியோடு கண் விழித்ததாக தனுஷ் நெகிழ்ச்சி!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, Photos, உலக செய்திகள், உலகம், சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், முன்னோட்டம்
மகிழ்ச்சியான செய்தியோடு கண் விழித்ததாக தனுஷ் நெகிழ்ச்சி! அசுரன் படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திய நடிகர் தனுஷுக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. அவர் இவ்விருதை பெறுவது இது இரண்டாவது முறை. ஏற்கனவே ஆடுகளம் படத்திற்காக தேசிய விருதை வென்றுள்ளார். இந்நிலையில், தேசிய விருது கிடைத்த மகிழ்ச்சியை நடிகர் தனுஷ் அறிக்கை மூலம் வெளிப்படுத்தி உள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “அசுரன் படத்திற்கு தேசிய விருது கிடைத்திருக்கிறது என்கிற மகிழ்ச்சியான செய்தியோடு கண் விழித்தேன். சிறந்த நடிகராக ஒரு தேசிய விருதை வென்றதே கனவு போல் இருந்தது. ஆனால், தற்போது இரண்டாவது முறையாக அவ்விருதை வென்றிருப்பது உண்மையிலேயே ஆசிர்வாதம்தான். நான் இந்த அளவுக்கு வருவேன் என நினைத்துப் பார்த்ததில்லை. நிறைய பேருக்கு நன்றி சொல்ல வேண்டி உள்ளது. முதலில் அம்மா, அப்பா, என்னுடைய...
கோவா சர்வதேச திரைப்பட விழாவில் வெளியிட தேர்வாகிய ‘அசுரன்’, ‘தேன்’ படங்கள்!

கோவா சர்வதேச திரைப்பட விழாவில் வெளியிட தேர்வாகிய ‘அசுரன்’, ‘தேன்’ படங்கள்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
கோவா சர்வதேச திரைப்பட விழாவில் வெளியிட தேர்வாகிய 'அசுரன்', 'தேன்' படங்கள்! இந்திய அரசின் திரைப்படத்துறை (IFFI) சார்பில் வருடம்தோறும் நடத்தப்படும் ’கோவா சர்வதேச திரைப்பட விழா’ அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் நடைபெறவுள்ளது. வரும் நவம்பர் மாதம் 20 ஆம் தேதி முதல் 28 ஆம் தேதிவரை நடக்கவிருந்த நிலையில் கொரோனா சூழலில் உலக நாடுகளின் இயக்குநர்கள், நடிகர்கள் என்று பலரும் வருவதற்கு சிக்கல் எழும் என்பதால் கோவா சர்வதேச திரைப்பட விழா ஜனவரி 16 ஆம் தேதிமுதல் 24 ஆம் தேதி வரை நடத்தப்படும் என்று சமீபத்தில் அறிவித்தார்கள் இந்நிலையில், கடந்த ஆண்டு வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான அசுரன் படம் வெகுஜன பிரிவில் கோவா சர்வதேச திரைப்பட விழாவில் வெளியிட தேர்வாகியுள்ளது. இந்தப் படம் சாதிய மனநிலையை மிகக் கடுமையாக சாடி எடுக்கப்பட்ட நிலையில், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. கடந்த வருடம் வெளியான படங்களில் அ...
அசுரன் படத்தில் ஜிவி இசையில் பாடிய தனுஷ்..!

அசுரன் படத்தில் ஜிவி இசையில் பாடிய தனுஷ்..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  வடசென்னை படத்திற்கு பிறகு மீண்டும் வெற்றி மாறன் இயக்கத்தில் அசுரன் படத்தில் நடித்து வருகிறார் தனுஷ். இந்த படத்தை பிரமாண்ட தயாரிப்பாளர் தாணு தயாரித்து வருகிறார். பரபரப்பாக நடந்த அசுரன் படப்பிடிப்பு முடிந்து இப்போது டப்பிங் பணிகள் நடந்து வருகிறது. அதே நேரம் ஜிவி பிரகாஷ் இசையில் "பொல்லாத பூமி" என்ற பாடலையும் தனுஷ் பாடி பாடகராகவும் இந்த படத்தில் பணியாற்றி உள்ளார். அக்டோபர் 2ம் தேதி காந்தி ஜெயந்தி நாளில் படத்தை ரிலீஸ் செய்ய திட்டம்....