சனிக்கிழமை, ஏப்ரல் 20
Shadow

Tag: Keerthi suresh

குடிசை கொளுத்திய சாதி அரசியலுக்கு சங்கு ஊதும் “சைரன்” கோடங்கி விமர்சனம் 4/5

குடிசை கொளுத்திய சாதி அரசியலுக்கு சங்கு ஊதும் “சைரன்” கோடங்கி விமர்சனம் 4/5

HOME SLIDER, MOVIES, REVIEWS, திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள், விமர்சனம்
  குடிசை கொளுத்திய சாதி அரசியலுக்கு சங்கு ஊதும் “சைரன்” கோடங்கி விமர்சனம் 4/5   ஆயுள் தண்டனைக் கைதியாக 14 ஆண்டுகளாக சிறையில் இருக்கும்  ஜெயம் ரவி, பல வருட சிறை தண்டனைக்குப் பிறகு சீரியசாக இருக்கும் அப்பாவை பார்க்க  இரண்டு வாரம் பரோலில் வெளியே வருகிறார். தாய் இல்லாத அவரது மகள் ஜெயம்ரவி  மீது கடும்போகத்தில் இருப்பதோடு, அவரை பார்க்கவே விரும்பாமல் தனது உறவினர் வீட்டுக்கு சென்றுவிடுகிறார். அதே நேரம் லாக்கப் டெத் காரணமாக சஸ்பெண்ட் ஆகியிருந்த கீர்த்திசுரேஷ் மீண்டும் போலீஸ் இன்ஸ்பெக்டராக பணியில் சேருகிறார். அவர் ஸ்டேஷனில் தான் பரோலில் வெளியே வந்திருக்கும் ஜெயம்ரவி தினமும் கையெழுத்து போடுகிறார். பரோலில் இருக்கும் அந்த கால கட்டத்தில் ஜெயம் ரவி சந்திக்கும் சில முக்கியஸ்தர்கள் அடுத்தடுத்து மர்மமாக கொல்லப்படுகிறார்கள். அதற்கு அவர் தான் காரணம் என்று போலீஸ் இன்ஸ்பெக்டர் கீர்த...
விஜய்யுடன் மீண்டும் இணையும் கீர்த்தி சுரேஷ்!

விஜய்யுடன் மீண்டும் இணையும் கீர்த்தி சுரேஷ்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
விஜய் தற்போது வாரிசு படத்தில் நடித்து வருகிறார். இதில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். இந்த படத்துக்கு பிறகு விஜய் நடிக்கும் 67-வது படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க இருக்கிறார். ஏற்கனவே மாஸ்டர் படம் இவர்கள் கூட்டணியில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்து சமீபத்தில் வெளியான விக்ரம் படம் வசூல் சாதனை நிகழ்த்தியதால் விஜய்யின் 67-வது படத்துக்கும் ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு உள்ளது. இப்படத்தில் விஜய்க்கு 50 வயது தாதா கதாபாத்திரம் என்றும் அவருக்கு வில்லன்களாக 6 முன்னணி நடிகர்கள் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த படத்தை தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னட, மலையாள மொழிகளில் எடுக்க இருப்பதால் ஒவ்வொரு மொழியில் இருந்து ஒரு வில்லன் நடிகர்களை தேர்வு செய்ய படக்குழு திட்டமிட்டிருப்பதாக தெரிகிறது. இந்தி நடிகர் ச...
மேலாடையை துறந்த நடிகையின் கவர்ச்சியால் ஷாக் ஆன ரசிகர்கள்!

மேலாடையை துறந்த நடிகையின் கவர்ச்சியால் ஷாக் ஆன ரசிகர்கள்!

CINI NEWS, HOME SLIDER, Photos, நடிகைகள்
  அட இந்த நடிகையா இப்படி? மேலாடையை துறந்த நடிகையின் கவர்ச்சியால் ஷாக் ஆன ரசிகர்கள்! நான் கவர்ச்சியாக நடிக்க மாட்டேன், எப்போதும் கவர்ச்சியாக நடிக்க மாட்டேன் என்று வாய் கிழிய வசனம் பேசி வந்த நடிகை கீர்த்தி சுரேஷ் இப்போது படு கவர்ச்சிக்கு தாவி விட்டார். காரணம், சமீப காலமாக பட வாய்ப்பு சுத்தமாக இல்லை. பிரபல நடிகர்களும் புது நாயகிகளுக்கு முக்கியத்துவம் தரத் தொடங்கி விட்டனர். இதற்கு காரணம் கிளாமர் ரோல் என்றாலே காத தூரம் ஓடிய கீர்த்தி சுரேஷின் அட்ராசிட்டிதான் என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள். இதன் காரணமாக பட வாய்ப்புகள் இல்லாமல் போனதால் அதற்கான காரணத்தை கண்டுபிடித்து மீண்டும் அடுத்த ரவுண்ட்டாக தன்னுடைய கவர்ச்சி அவதாரத்தை கட்டவிழ்த்து விட்டுள்ளார் அம்மணி. அந்த வகையில் தற்போது வெள்ளை நிற ஆடை அணிந்து கொண்டு தன்னுடைய மேலாடையை கழற்றிவிட்டு படு கிளாமரான போஸ் கொடுத்துள்ள இ...
கீர்த்தி சுரேஷ் அறிக்கை!

கீர்த்தி சுரேஷ் அறிக்கை!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகைகள்
‘இது என்ன மாயம்’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை கீர்த்தி சுரேஷ். குறுகிய காலத்திலேயே விஜய், சூர்யா, விக்ரம் ஆகியோரின் படங்களில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகியாக வளர்ந்தார். பின்னர் 2018-ல் தெலுங்கில் வெளியான ‘மகாநதி’ படத்தில் நடித்து தேசிய விருதும் பெற்றார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான ‘சாணிக் காயிதம்’ மற்றும் ‘சர்காரு வாரி பாட்டா’ படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று, கீர்த்தி சுரேஷ் நடிப்பை பலரும் பாராட்டினர். இந்நிலையில், கீர்த்தி சுரேஷ் நீண்ட அறிக்கை ஒன்றை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், “ஒரு நடிகராக இருப்பது என்பது கடினமான பயணம், நாங்கள் முழுவதும் உயர்வையும் தாழ்வையும் காண்கிறோம். அதுவே பெரும்பாலும் நமது இலக்கைத் தீர்மானிக்கிறது. சமீபகாலம் எனக்கு ஒரு சோதனையான காலகட்டமாகும், மேலும் எனது சிறப்பை உலகிற்...
“சாணி காயிதம் படத்தில் நடிக்கும்வரை நடிப்பு என்பது சலிப்பான ஒன்று என்றே கருதினேன்” – செல்வராகவன்!

“சாணி காயிதம் படத்தில் நடிக்கும்வரை நடிப்பு என்பது சலிப்பான ஒன்று என்றே கருதினேன்” – செல்வராகவன்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
பழிக்குப் பழிவாங்கும் கதைக்களம் கொண்ட, விரைவில் வெளிவரவுள்ள அதிரடி தமிழ் சித்திரமான ’சாணி காயிதம்’ திரைப்படத்தின் டிரெய்லரை பிரைம் வீடியோ வெளியிட்டது. தேசிய விருது பெற்ற நடிகை கீர்த்தி சுரேஷுடன் இணைந்து நடிக்கும் வெற்றி இயக்குனராக இருந்து நடிகராக மாறிய செல்வராகவன் ஒரு நடிகராக மீண்டும் வருவதைக் காண்பது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. புதுப்பேட்டை, 7ஜி ரெயின்போ காலனி, மயக்கம் என்ன போன்ற தமிழ் திரைப்படங்களை இயக்கியுள்ள பிரபல எழுத்தாளரும் இயக்குனருமான செல்வராகவன் இப்படத்தில் சங்கையா கதாபாத்திரத்தை சித்தரிக்கிறார். தான் நடிக்க வந்ததைக் குறித்து அவர் கூறுகையில், “நான் இயக்குனராக இருக்கும் காலத்தில் இருந்தே நேரத்தைப் பார்த்து வேலை செய்வது கூடாது என்ற ஒரு கொள்கை எனக்கு இருந்தது. செய்யும் பணியில் முழு கவனத்தோடு செயல்படும்போது நேரம் போவதே தெரியாது. அனைத்தும...
ஜெய்பீமை போல் கீர்த்தி சுரேஷின் அடுத்த படம்!

ஜெய்பீமை போல் கீர்த்தி சுரேஷின் அடுத்த படம்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
தமிழில் இயக்குனர் செல்வராகன் நடிக்கும் சாணிக்காயிதம் படத்தில் நடித்து வரும் நடிகை கீர்த்தி சுரேஷ் தற்போது மலையாளத்தில் நடிகர் டொவினோ தாமசுடன் இணைந்து 'வாசி' என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படத்தை இயக்குனர் விஷ்ணு ஜி.ராகவ் இயக்கியுள்ளார். கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொண்ட இந்த திரைப்படத்தில் கீர்த்தி சுரேஷ் மற்றும் டொவினோ தாமஸ் இருவரும் வக்கீல் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். 'வாசி' திரைப்படத்தை கீர்த்தி சுரேசின் அக்கா தன்னுடைய ரேவதி கலாமந்திர் என்ற நிறுவனத்தின் மூலம் தயாரித்துள்ளார். இந்நிலையில் தற்போது இந்த திரைப்படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த போஸ்டர் நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான ஜெய்பீம் போலவுள்ளது என ரசிகர்கள் பலர் பதிவிட்டு வருகின்றனர்....
நீண்ட இடைவேளைக்கு பிறகு வெளியான கீர்த்தி சுரேஷ் படத்தின் டிரைலர்!

நீண்ட இடைவேளைக்கு பிறகு வெளியான கீர்த்தி சுரேஷ் படத்தின் டிரைலர்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
நீண்ட இடைவேளைக்கு பிறகு வெளியான கீர்த்தி சுரேஷ் படத்தின் டிரைலர்! கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகி உள்ள திரைப்படம் ‘குட்லக் சகி’. நாகேஷ் குக்குனூர் இயக்கத்தில் உருவாகி இருக்கும் இப்படம் ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு, மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் எடுக்கப்பட்டுள்ளது. பிரபல தயாரிப்பாளர் தில் ராஜு வழங்கும் இந்தத் திரைப்படத்தை வொர்த் எ ஷாட் மோஷன் ஆர்ட்ஸ் பேனர் நிறுவனத்தின் கீழ் சுதீர் சந்திர பதிரி தயாரித்துள்ளார். விளையாட்டு, காதல், நகைச்சுவைப் பின்னணியில் உருவாகியுள்ள இந்த படத்தில் ஆதி பினிஷெட்டி மற்றும் ஜகபதி பாபு ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இதில் கீர்த்தி சுரேஷ் துப்பாக்கி சுடும் வீராங்கனையாக நடித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து கடந்த ஆண்டு ஜூன் மாதமே வெளியாக வேண்டிய இப்படம் கொரோனா அச்சுறுத்தலால் டிசம்பர் 31ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது. ...
என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள், தங்களை பரிசோதனை செய்து கொள்ளுங்கள் – கீர்த்தி சுரேஷ்

என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள், தங்களை பரிசோதனை செய்து கொள்ளுங்கள் – கீர்த்தி சுரேஷ்

HOME SLIDER, NEWS, நடிகைகள்
  நடிகை கீர்த்தி சுரேஷ்க்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து அவர் சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- லேசான அறிகுறிகளுடன் எனக்கு இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மிகுந்த கவனமாக இருந்து அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொண்டும், கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. நான் இப்போது என்னை தனிமைப்படுத்திக்கொண்டு, சிகிச்சை எடுத்து வருகிறேன். என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள், தங்களை பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். வைரஸ் பரவலின் வேகம் அச்சுறுத்துகிறது. தயவு செய்து அனைவரும் கொரோனா தடுப்பு விதிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும். இதுவரைக்கும் தடுப்பூசி போட்டுக் கொள்ளாமல் இருந்தால், அவசியம் தடுப்பூசி செலுத்திக் கொள்ளுங்கள். இதை செய்தால் மட்டுமே உங்களையும், உங்கள் அன்புக்கு உரியவர்களையும் பாதுகாக்க முடியும். கொரோனா தொற்றிலிர...
குவியும் பட வாய்ப்பு… சம்பளத்தை உயர்த்திய கீர்த்தி சுரேஷ்!

குவியும் பட வாய்ப்பு… சம்பளத்தை உயர்த்திய கீர்த்தி சுரேஷ்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகைகள்
குவியும் பட வாய்ப்பு... சம்பளத்தை உயர்த்திய கீர்த்தி சுரேஷ்! தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வரும் கீர்த்தி சுரேஷ், மறைந்த நடிகை சாவித்திரி வாழ்க்கை கதையான ‘மகாநடி’ படத்தில் நடித்ததன் மூலம் தேசிய விருது பெற்றார். தற்போது தமிழில் ரஜினியுடன் ‘அண்ணாத்த’, செல்வராகவனுடன் ‘சாணிக்காயிதம்’ ஆகிய படங்களில் நடித்து முடித்துள்ளார். இதில் அண்ணாத்த படம் தீபாவளிக்கு திரைக்கு வருகிறது. இதுதவிர மலையாளத்தில் மோகன்லால் உடன் ‘அரபிக்கடலின் சிங்கம்’, தெலுங்கில் மகேஷ்பாபு உடன் ‘சர்காரு வாரி பாட்டா’, சிரஞ்சீவியுடன் ‘போலா சங்கர்’, நானிக்கு ஜோடியாக ‘தசரா’ போன்ற படங்களையும் கைவசம் வைத்துள்ளார். இவ்வாறு தொடர்ந்து முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து வருவதால், நடிகை கீர்த்தி சுரேஷ், சம்பளத்தை உயர்த்தி உள்ளதாக கூறப்படுகிறது. நானி ஜோடியாக தசரா படத்தில் நடிக்க கீர்த்தி சுரேஷ் அதிக சம்பளம் கேட்டதாகவும்...
3வது முறையாக விஜய்யுடன் இணையும் பிரபல நடிகை!

3வது முறையாக விஜய்யுடன் இணையும் பிரபல நடிகை!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
3வது முறையாக விஜய்யுடன் இணையும் பிரபல நடிகை! ‘மாஸ்டர்’ படத்தின் வெற்றிக்குப்பிறகு நடிகர் விஜய், நெல்சன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘பீஸ்ட்’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், அடுத்ததாக தெலுங்கு இயக்குனர் வம்சி பைடிப்பல்லி இயக்கத்தில் விஜய் நடிக்க இருக்கிறார். தமிழ், தெலுங்கில் உருவாகும் இப்படத்தை தெலுங்கு சினிமா தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிக்கிறார். இப்படத்தின் நாயகி யார் என்பது குறித்த அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. இந்த நிலையில், விஜய்க்கு ஜோடியாக நடிகை கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார் என்று தகவல் வெளியாகி இருக்கிறது. ஏற்கனவே, கீர்த்தி சுரேஷ் விஜய்யுடன் ‘பைரவா’, ‘சர்கார்’ படங்களில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது....