ஞாயிற்றுக்கிழமை, ஏப்ரல் 28
Shadow

குடிசை கொளுத்திய சாதி அரசியலுக்கு சங்கு ஊதும் “சைரன்” கோடங்கி விமர்சனம் 4/5

 

குடிசை கொளுத்திய சாதி அரசியலுக்கு சங்கு ஊதும் “சைரன்” கோடங்கி விமர்சனம் 4/5

 

ஆயுள் தண்டனைக் கைதியாக 14 ஆண்டுகளாக சிறையில் இருக்கும்  ஜெயம் ரவி, பல வருட சிறை தண்டனைக்குப் பிறகு சீரியசாக இருக்கும் அப்பாவை பார்க்க  இரண்டு வாரம் பரோலில் வெளியே வருகிறார். தாய் இல்லாத அவரது மகள் ஜெயம்ரவி  மீது கடும்போகத்தில் இருப்பதோடு, அவரை பார்க்கவே விரும்பாமல் தனது உறவினர் வீட்டுக்கு சென்றுவிடுகிறார்.

அதே நேரம் லாக்கப் டெத் காரணமாக சஸ்பெண்ட் ஆகியிருந்த கீர்த்திசுரேஷ் மீண்டும் போலீஸ் இன்ஸ்பெக்டராக பணியில் சேருகிறார். அவர் ஸ்டேஷனில் தான் பரோலில் வெளியே வந்திருக்கும் ஜெயம்ரவி தினமும் கையெழுத்து போடுகிறார்.

பரோலில் இருக்கும் அந்த கால கட்டத்தில் ஜெயம் ரவி சந்திக்கும் சில முக்கியஸ்தர்கள் அடுத்தடுத்து மர்மமாக கொல்லப்படுகிறார்கள். அதற்கு அவர் தான் காரணம் என்று போலீஸ் இன்ஸ்பெக்டர் கீர்த்தி சுரேஷ் நினைத்து ஜெயம்ரவியை பிடித்து பரோலை கேன்சல் செய்து மீண்டும் ஜெயம்ரவியை சிறையில் அடைக்க முயற்சிக்கிறார். ஆனால், அந்த கொலைகளை தான் செய்யவில்லை என சொல்லி அதற்கான சரியான ஆதரங்களை நீதிபதி முன்பு சமர்ப்பித்து தப்பித்துவிடுகிறார்.

ஜெயம் ரவி தான் கொலையாளி என்பதில் உறுதியாக இருக்கும் கீர்த்தி சுரேஷ், அவர் பரோலை கேன்சல் செய்யும் முயற்சியில் தீவிரம் காட்டுகிறார். இறுதியில் வெற்றி பெற்றது ஜெயம் ரவியா? அல்லது கீர்த்தி சுரேஷா?, ஜெயம் ரவி கொலை குற்றவாளியானது எப்படி?, அவரது மகள் அவரை வெறுப்பது ஏன்? போன்ற பல கேள்விகளுக்கான பதில்களை மிக சுவாரஸ்யமாக ஷாக்கிங் மூடில் சொல்வது தான் ‘சைரன்’.

சால்ட் & பெப்பர் லுக்கில் வித்தியாசத்தை காட்டியிருக்கும் ஜெயம் ரவி, அதிகம் பேசாமல் அமைதியாக வலம் வந்தாலும், பெரிய சம்பவம் இருக்கிறது, என்ற எதிர்பார்ப்பை படம் முழுவதும் கொடுத்திருக்கிறார். மகள் செண்டிமெண்ட் காட்சிகளில் ரசிகர்களை கண்கலங்க வைத்துவிடுகிறார்.

பலம் வாய்ந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் வேடத்தில் நடித்திருக்கும் கீர்த்தி சுரேஷ், கம்பீரத்தையும், திமிரையும் நடிப்பில் கொண்டு வர அதிகம் மெனக்கெட்டிருக்கிறார். அவருடைய பேச்சு, உடல் மொழி என அனைத்திலும் ஏற்கனவே பார்த்த பிரபல நடிகரின் சாயல் ஒளிந்திருப்பதை பார்க்க முடிகிறது. அது எந்த நடிகர்னு நீங்க படம் பாத்தா புரியும்.

ஜெயம் ரவியின் மனைவியாக நடித்திருக்கும் அனுபமா பரமேஸ்வரன், வரும் காட்சிகள் குறைவு என்றாலும் ஸ்கோர் எடுகிறார்.

இதுவரை காக்கி சட்டைப் போட்டுக் கொண்டு கருத்து பேசிய சமுத்திரக்கனி இதில் அதே காக்கிச்சட்டையில் வில்லதனம் செய்வது நல்லாவே எடுபடுகிறது.

ஜெயம் ரவிக்கு நிழல் காவலராக வரும் யோகி பாபு, படம் முழுவதும் நம்மை சிரிக்க வைக்கிறார். ஜெயம் ரவியுடனான அவரது புதிய கூட்டணிக்கு வெற்றி கிடைத்திருக்கிறது.

மனைவியை கொன்றவர்களை பழிவாங்கும் வழக்கமான கதை என்றாலும் அதை அப்பா – மகள் செண்டிமெண்ட், குடிசை கொளுத்திய சாதி அரசியல், கைதிகளின் சிக்கல், நேர்மையான போலீஸ், சாதி வெறிபிடித்த போலீஸ் என பலவற்றை திரைக்கதையில் கொண்டு வந்து, அதை பக்கா கமர்ஷியலாக கையாண்டிருக்கும் அறிமுக இயக்குநர் அந்தோணி பாக்யராஜ் சபாஷ் பெறுகிறார்.

“ஒரு நல்லவனை நல்லவனாக நடிக்க வச்சிட்டீங்களே”, “சாதி இல்லனு சொல்றவன் என்ன சாதி என்று தேடாதீங்க” போன்ற வசனங்கள் மூலம் தனி கவனம் பெறுகிறார்.

ஜி.வி.இசையில் பாடல்களும், சாம்சி.எஸ்.பின்னணி இசையும் பட்த்துக்கு பலம் சேர்க்கிறது.

 

கோடங்கி

4/5

 

https://x.com/onlykodanki/status/1758759779692925304?s=20

 

 

51 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன