புதன்கிழமை, ஏப்ரல் 24
Shadow

Tag: Makkalneethimaiyam

கோவை சப்-இன்ஸ்பெக்டர் தாக்கிய சம்பவம் குறித்து கமல்ஹாசன் கண்டனம்!

கோவை சப்-இன்ஸ்பெக்டர் தாக்கிய சம்பவம் குறித்து கமல்ஹாசன் கண்டனம்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், நடிகர்கள்
கோவை சப்-இன்ஸ்பெக்டர் தாக்கிய சம்பவம் குறித்து கமல்ஹாசன் கண்டனம்! கோவையில் ஓட்டலில் புகுந்து சப்-இன்ஸ்பெக்டர் தாக்கிய சம்பவம் குறித்து கமல்ஹாசன் கூறியிருப்பதாவது, இரவு 11 மணியை தாண்டி உணவகங்கள் செயல்படக்கூடாது என்பதே அரசின் ஆணை. கோவை காந்திபுரத்தில் 10.30 மணிக்கு முன்னதாகவே போலீசார் உணவகத்துக்குள் புகுந்து அங்கிருந்தோரை தாக்கியது சாத்தான்குளம் படுகொலைகளை நினைவு படுத்துகிறார்களா? பதிலளிக்க வேண்டியது, அரசு நிர்வாகத்தின் கடமை என குறிப்பிட்டுள்ளார். இதேபோல கோவை எம்.பி. நடராஜன் உள்ளிட்டோரும் சப்-இன்ஸ்பெக்டருக்கு கண்டனத்தை தெரிவித்துள்ளனர். அவர் கூறுகையில் பெண்கள், குழந்தைகள் மேல் நடத்தப்பட்ட தடியடி கண்டிக்க கூடியது. தற்போது சப்-இன்ஸ்பெக்டர் வேறுதுறைக்கு மாற்றப்பட்டுள்ளார். இது கண் துடைப்பு போல் உள்ளது. சட்ட விரோதமாக செயல்பட்ட சப்-இன்ஸ்பெக்டர் மீது சட்டப்படி வழக்குப்பதிவு செய்ய போலீ...
சென்னையில் கொரானாவை ஒழிக்க கமல்ஹாசன் தொடங்கிய நாமே தீர்வு..!

சென்னையில் கொரானாவை ஒழிக்க கமல்ஹாசன் தொடங்கிய நாமே தீர்வு..!

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
  கொரானா பிடியில் இருந்து சென்னையை மீட்க நாமே தீர்வு திட்டத்தை தொடங்கினார் மக்கள் நீதி மய்யத் தலைவர கமல்ஹாசன்.   ஜூன் 5ம் தேதியான இன்று உலக சுற்றுச் சூழல் தினம் உலகமெங்கும் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் 'நாமே தீர்வு' என்ற தன்னார்வலர்கள் திட்டத்தைத் தொடங்கியுள்ளார் கமல். இது தொடர்பாக கமல்ஹாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: "இன்று உலக சுற்றுச்‌ சூழல்‌ தினம்‌. உலகத்தைப் பசுமையாக மாற்றப் பல வருடங்களாகப் போராடிக்கொண்டிருக்கும்‌ நாம்‌, இன்று நம்‌ சென்னையையும்‌ வேறு ஒரு பச்சைக்கு மாற்ற வேண்டியதிருக்கிறது. கரோனாவுக்கு எதிரான இன்று நடக்கும்‌ போரில்‌ என்ன செய்வார்கள்‌ என்று காத்திருந்தும்‌, ஏதாவது செய்வார்கள்‌ என்று பார்த்திருந்தும்‌ களைத்தவர்களின்‌, நாமாவது ஏதாவது செய்ய வேண்டும்‌ என்ற சிந்தனை தான்‌ நாமே தீர்வு. இந்த நோயின்‌ தீவிரத்தை மருத்துவர்கள்‌ கட்டு...
கமலுக்கு ஆதரவாக பேசியதற்கு  திருமாவளவன் மீது 2 பிரிவின் கீழ் வழக்கு..!

கமலுக்கு ஆதரவாக பேசியதற்கு திருமாவளவன் மீது 2 பிரிவின் கீழ் வழக்கு..!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் நடிகர் கமல்ஹாசன், காந்தியை சுட்டுக் கொன்ற கோட்சே பற்றி தேர்தல் பிரசாரத்தில் கமல் கூறிய கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியது. “சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து. அவர் பெயர் கோட்சே” என்று கூறிய கமல் மீது பல புகார்கள் குவிந்தன. இது தொடர்பாக கமல் மீது வழக்குபதிவு செய்யப்பட்ட நிலையில் அவர் முன் ஜாமீன் பெற்றார். இந்த நிலையில் கடந்த மாதம் 18-ந்தேதி சென்னை அசோக்நகரில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி அலுவலகத்தில் இலங்கை முள்ளிவாய்க்கால் இனப்படுகொலைக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடை பெற்றது. இதில் பேசிய அக்கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் கமலுக்கு ஆதரவாக சில கருத்துக்களை தெரிவித்தார். “கோட்சே ஒரு இந்து பயங்கரவாதி. காந்தியடிகள் ஒரு இந்து தீவிரவாதி” என்று திருமாவளவன் பேசிய பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியது. இது தொடர்பாக இந்து மக்கள் முன்னண...
தோற்றாலும் சாதித்த கமல்… அரசியல் கட்சிகள் கண்ணை உறுத்தும் ம.நீ.ம. வாக்கு வங்கி…!

தோற்றாலும் சாதித்த கமல்… அரசியல் கட்சிகள் கண்ணை உறுத்தும் ம.நீ.ம. வாக்கு வங்கி…!

Uncategorized
      தோற்றாலும் சாதித்த கமல்... அரசியல் கட்சிகள் கண்ணை உறுத்தும் ம.நீ.ம. வாக்கு வங்கி...! தமிழ்நாட்டில் அ.தி.மு.க. கூட்டணி, தி.மு.க. கூட்டணி, தினகரனின் அமமுக, சீமானின் நாம் தமிழர் ஆகியோருக்கு இடையில் புதிய வரவாக பாராளுமன்ற தேர்தலில் களம்கண்ட கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் வேட்பாளர்கள் என்ன சாதித்தார்கள். நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் தமிழ்நாட்டின் காஞ்சிபுரம், பெரம்பலூர் ஆகிய தொகுதிகளை தவிர்த்து 36 தொகுதிகளில் போட்டியிட்ட கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி கணிசமான வாக்குளை பெற்றுள்ளது முதல் சாதனை. பல இடங்களில் அக்கட்சியின் வேட்பாளர்கள் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளனர். இது இரண்டாவது சாதனை. ஒட்டுமொத்தமாக 36 தொகுதிகளிலும் மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளர்கள் 15 லட்சத்து 32 ஆயிரத்து 992 வாக்குகளை பெற்றனர். ஒரு அரசியல் கட்சி ஆரம்பித்த சில...
சோமாரிகளுக்கு… காட்டமான கமல் டிவீட்

சோமாரிகளுக்கு… காட்டமான கமல் டிவீட்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், நடிகர்கள்
  மக்கள் நீதி மைய தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் மத்திய மாநில அரசுகளை விமர்சித்தும், அரசியல்வாதிகளை கடுமையாக விமர்சித்தும் சமூகவலைதள பக்கத்தில் எழுதி இருக்கிறார். அதன் விவரம்: சீப்பை ஒளித்து வைத்து, கல்யாணத்தையும் நிறுத்த நினைக்கின்றனர் மத்திய / மாநில அரசுகள். மக்கள் எடுத்து விட்ட முடிவை தாமதப்படுத்தலாமே தவிர தடை செய்ய முடியாது. 12 ஆழ்வார்களாலோ, 63 நாயன்மார்களாலோ, “இந்து” என்கின்ற மதக்குறிப்பு சொல்லப்படவில்லை. முகலாயர் அல்லது அதற்கு முன் ஆள வந்தாராலோ “இந்து” என நாமகரணம் செய்யப்பட்டோம். ஆண்டு அனுபவித்துச் சென்ற ஆங்கிலேயர் அந்த அடைமொழியை வழிமொழிந்தனர். நமக்கென பல்வேறு அடையாளங்கள் இருக்கும் பொழுது, மாற்றான் கொடுத்த பட்டயத்தை நாம் “பெயராக”, “மதமாகக்” கொள்வது எத்தகைய அறியாமை... நாம் “இந்தியர்” என்கின்ற அடையாளம் சமீபத்தியது தான் எனினும் காலம் கடந்து வாழக்கூடியது....
தேர்தலில் போட்டியிட சாதி மதம் குறிப்பிட வேண்டாம் – கமல் அதிரடி

தேர்தலில் போட்டியிட சாதி மதம் குறிப்பிட வேண்டாம் – கமல் அதிரடி

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், நடிகர்கள்
  கமலின் மக்கள் நீதி மய்யம் கட்சியில் வேட்பாளர் தேர்வுக்கான விருப்பமனுத் தாக்கல் நேற்று முன்தினம் தொடங்கியது. அந்த விருப்பமனுக்களில் வேட்பாளர்களின் சாதி குறிப்பிடக் கூடாது என ம.நீ.ம. தெரிவித்துள்ளது. நாடாளுமன்றத் தேர்தலுக்காக தமிழகத்தில் உள்ள அனைத்துக் கட்சிகளும் வேட்பாளர்களுக்கான விருப்பமனுக்களைத் விநியோகித்து வருகின்றனர். கூட்டணியில் உள்ள கட்சிகள் கூட தங்களுக்கு எந்தத் தொகுதி ஒதுக்கப்படும் என்ற விவரம் தெரியாவிட்டாலும் 40 தொகுதிகளுக்கும் விருப்பமனுக்களை தங்கள் கட்சியினருக்கு விநியோகித்து வருகின்றனர். கமலின் மக்கள் நீதி மய்யம் இதில் ஒருபடி முன்னேப் போய் தங்கள் கட்சி உறுப்பினர்கள் அல்லாதவரும் தங்கள் கட்சி சார்பில் போட்டியிட விருப்பமனுத் தாக்கல் செய்யலாம் என அறிவித்தது. இதனால் மக்கள் நீதி மய்யத்தில் விருப்பமனு வாங்கும் அளவுக்குக் கூட கட்சியில் உறுப்பினர்கள் இல்லையா என்று வி...