திங்கட்கிழமை, செப்டம்பர் 14
Shadow

சோமாரிகளுக்கு… காட்டமான கமல் டிவீட்

 

மக்கள் நீதி மைய தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் மத்திய மாநில அரசுகளை விமர்சித்தும், அரசியல்வாதிகளை கடுமையாக விமர்சித்தும் சமூகவலைதள பக்கத்தில் எழுதி இருக்கிறார்.
அதன் விவரம்:

சீப்பை ஒளித்து வைத்து, கல்யாணத்தையும் நிறுத்த நினைக்கின்றனர் மத்திய / மாநில அரசுகள்.

மக்கள் எடுத்து விட்ட முடிவை தாமதப்படுத்தலாமே தவிர தடை செய்ய முடியாது.

12 ஆழ்வார்களாலோ, 63 நாயன்மார்களாலோ, “இந்து” என்கின்ற மதக்குறிப்பு சொல்லப்படவில்லை. முகலாயர் அல்லது அதற்கு முன் ஆள வந்தாராலோ “இந்து” என நாமகரணம் செய்யப்பட்டோம்.

ஆண்டு அனுபவித்துச் சென்ற ஆங்கிலேயர் அந்த அடைமொழியை வழிமொழிந்தனர்.

நமக்கென பல்வேறு அடையாளங்கள் இருக்கும் பொழுது, மாற்றான் கொடுத்த பட்டயத்தை நாம் “பெயராக”, “மதமாகக்” கொள்வது எத்தகைய அறியாமை…

நாம் “இந்தியர்” என்கின்ற அடையாளம் சமீபத்தியது தான் எனினும் காலம் கடந்து வாழக்கூடியது.

நாம், நம் அகண்ட தேசத்தை மதத்திற்குள் குறுக்க நினைப்பது வர்த்தக / அரசியல் மற்றும் ஆன்மீக ரீதியாகவும் பிழையான தேர்வாகும்.

புரியலன்ற சோமாரிகளுக்கு….

“கூடி வாழ்ந்தால் கோடி நன்மை” என்று எத்தனை முறை தமிழனுக்கு பழமொழி சொல்லியிருக்கின்றோம்.

“கோடி”ன்ன உடனே “பணம்” ஞாபகம் வந்தால் நீ தலைவன் அல்ல, அரசியல்வாதி அல்ல. வெறும் வியாதி!! “தமிழா” நீ தலைவனாக வேண்டும். இதுவே என் வேண்டுகோள்.

கமல் ட்வீட்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன