புதன்கிழமை, ஏப்ரல் 29
Shadow

Tag: Omicron

அமிதாப் பச்சனுக்கு இரண்டாவது முறையாக கொரோனா பாதிப்பு !

அமிதாப் பச்சனுக்கு இரண்டாவது முறையாக கொரோனா பாதிப்பு !

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
உலகம் முழுவதும் கொரோனா தொற்றுக்கு பல்வேறு நாடுகளின் தலைவர்கள், திரைப் பிரபலங்கள் பாதிக்கப்பட்டு வருவது தொடர் கதையாகி உள்ளது. இந்நிலையில் இந்தி திரையுல சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் இரண்டாவது முறையாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். 79 வயதான அமிதாப் பச்சனுக்கு நேற்று நடத்தப்பட்ட பரிசோதனையில் கொரானா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது குறித்து தமது டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ள அமிதாப், தன்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் தயவு கூர்ந்து பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார். எனினும் அவர் வீட்டில் தனிமைப்படுத்தப் பட்டுள்ளாரா அல்லது மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டாரா என்பது குறித்து தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை. முன்னதாக கடந்த 2020 ஆம் ஆண்டு முதல்முறையாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட அமிதாப், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றபின் குணமடைந்தது...
குஜராத்தில் புதிய வகை ஒமைக்ரான் வைரஸ் அறிகுறி!

குஜராத்தில் புதிய வகை ஒமைக்ரான் வைரஸ் அறிகுறி!

HOME SLIDER, NEWS, செய்திகள்
கொரோனா வைரஸ்  அடிக்கடி உருமாற்றம் பெற்று புதிய வகையாக மாறி பரவி வருகிறது. இதுவரை காமா, பீட்டா, டெல்டா, டெல்டா பிளஸ், ஒமைக்ரான் என்று பல்வேறு வடிவங்களை கொரோனா வைரஸ் எடுத்து விட்டது. ஒமைக்ரான் வைரசில் இருந்து 4 வகையான துணை உருமாற்றங்கள் நிகழ்ந்தன. அதில் பிஏ1, பிஏ.2 ஆகிய 2 வகை வைரசுகள் தற்போது உலகம் முழுக்க பரவி உள்ளன. இந்த நிலையில் பிஏ.1, பிஏ.2 ஆகிய 2 வைரசுகளும் கலந்து எக்ஸ்-இ என்ற புதிய வகை கொரோனா வைரசை தோற்றுவித்துள்ளன. இந்த எக்ஸ்-இ வைரஸ் முந்தைய கொரோனா வைரசுகளை விட 10 மடங்கு அதிவேகமாக பரவும் ஆற்றல் கொண்டது. இது ஒருவரை தாக்கினால் உடலில் எத்தகைய பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பது இதுவரை உறுதியாகவில்லை. என்றாலும் இந்த வைரஸ் பெரிய பாதிப்பை ஏற்படுத்தாது என்று பெரும்பலான நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். உலகம் முழுக்க சுமார் 600 பேருக்கு எக்ஸ்-இ கொரோனா வைரஸ் இருப்பது உறுதிப்படுத்...
எளிதாக கருதப்பட்ட ஒமைக்ரான் 5 லட்சம் பேரை பலிவாங்கியுள்ளது: ‘WHO’ எச்சரிக்கை!

எளிதாக கருதப்பட்ட ஒமைக்ரான் 5 லட்சம் பேரை பலிவாங்கியுள்ளது: ‘WHO’ எச்சரிக்கை!

HOME SLIDER, NEWS, உலக செய்திகள், செய்திகள்
கொரோனா தொற்றின் மாறுபாடாக கருதப்படும் ஒமைக்ரான் கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் தென் ஆப்பரிக்காவில் இருந்து முதல்முறையாக பரவத் தொடங்கியது. இது மற்ற நாடுகளுக்கும் வேகமாக பரவி வருகிறது. ஆனால், ஒமைக்ரானால் பெரிதாக பாதிப்பு இல்லை என்றே கருதி வந்த நிலையில், உலகளவில் கடந்த நவம்பர் மாதம் முதல் இதுவரை சுமார் 5 லட்சம் பேர் உயிரிழந்துள்ளதாக உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து உலக சுகாதார மையத்தின் மேலாளர் அப்டி மஹமுட் கூறியதாவது:- கொரோனாவின் மாறுபாடான ஒமைக்ரான் தொற்று அறிவிக்கப்பட்டது முதல், இதுவரை உலகளவில் 130 மில்லியன் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சுமார் 5 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். இது கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இறந்தவர்களின் எண்ணிக்கையில் அரை மில்லியன் இறப்புகள் பதிவாகியுள்ளது. இது மிகவும் அபாயகரமான விஷயம். கொரோனாவின் மேலாதிக்க மாறுபாடாக கருதப்பட்ட டெல்டா தொற்ற...
கொரோனா 3-ம் அலை பாதிப்பு ஒரே வாரத்தில் 45 சதவீதம் குறைந்தது!

கொரோனா 3-ம் அலை பாதிப்பு ஒரே வாரத்தில் 45 சதவீதம் குறைந்தது!

HOME SLIDER, NEWS, செய்திகள்
கொரோனாவின் உருமாறிய வடிவமான ஒமைக்ரான் வைரஸ் பரவலால் கடந்த டிசம்பர் இறுதியில் இருந்து இந்தியாவில் தினசரி பாதிப்பு மீண்டும் உயரத் தொடங்கியது. தினசரி பாதிப்பு 6 ஆயிரத்தில் இருந்து நாள்தோறும் படுவேகமாக உயர்ந்தது. முதல் 2 அலைகளை விட 6 மடங்கு வேகத்தில் தினசரி பாதிப்பு அதிகரித்ததால் சுகாதாரத்துறையினர் அதிர்ச்சி அடைந்தனர். அதே நேரம் நாடு முழுவதும் மக்களுக்கு 160 கோடி டோசுக்கும் மேல் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டிருந்ததால் உயிரிழப்புகள் குறைவாகவே இருந்தது. மேலும் நோயின் தீவிரமும் குறைவாகவே காணப்பட்டதால் தொற்று பாதிப்புக்கு உள்ளானவர்களில் பெரும்பாலானோர் வீட்டு தனிமையிலேயே குணம் அடைந்தனர். இதனால் 3-ம் அலை குறுகிய காலத்தில் உச்சம் அடைந்தது. கடந்த மாதம் 21-ந்தேதி 3.47 லட்சம் பேர் பாதிப்புக்குள்ளானதே இந்த அலையின் உச்சமாக சுகாதாரத்துறையினர் அறிவித்தனர். அதன் பிறகு தினசரி பாதிப்பு நாள்தோறு...
நடிகை ஷோபனாவுக்கு ஒமைக்ரான் பாதிப்பு

நடிகை ஷோபனாவுக்கு ஒமைக்ரான் பாதிப்பு

Uncategorized
  நடிகை ஷோபனாவுக்கு ஒமைக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக அவர் தனது சமூகவலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொண்ட போதும் எனக்கு ஒமைக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. உடல் வலி, குளிர் நடுக்கம், தொண்டை கரகரப்பு ஆகியவை எனக்கு அறிகுறிகளாக இருந்தன.  முதல் நாளில் இத்தனை அறிகுறிகள் இருந்தன. பின்னர் படிபடியாக அந்த அற்குறிகள் குறையத்தொடங்கியது. தடுப்பூசியின் 2 டோஸ்களையும் செலுத்திக்கொண்டது எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது. அது வைரசில் இருந்து 85 சதவிகிதம் பாதுகாப்பு அளிக்கிறது. அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும். வைரஸ் பெருந்தொற்று இந்த ஒமைக்ரானுடன் முடிவுக்கு வர வேண்டும் என பிரார்த்திக்கிறேன்’ என தெரிவித்துள்ளார்....
சென்னை: 2 டோஸ் தடுப்பூசி போடாதவர்களுக்கு தீவிர சிகிச்சை தேவைப்படுகிறது- மருத்துவர்கள் தகவல்!

சென்னை: 2 டோஸ் தடுப்பூசி போடாதவர்களுக்கு தீவிர சிகிச்சை தேவைப்படுகிறது- மருத்துவர்கள் தகவல்!

HOME SLIDER, NEWS, செய்திகள்
சென்னை: 2 டோஸ் தடுப்பூசி போடாதவர்களுக்கு தீவிர சிகிச்சை தேவைப்படுகிறது- மருத்துவர்கள் தகவல்! சென்னையில் கொரோனா பரவல் கடந்த அலையைவிட தற்போது வேகமாக இருந்தாலும் பாதிப்பு குறைவாகவே உள்ளது. லேசான அறிகுறி மட்டுமே இருப்பதால் பலருக்கு ஆஸ்பத்திரிகளில் தங்கி சிகிச்சை பெற வேண்டிய சூழ்நிலை ஏற்படவில்லை. ஓமந்தூரார் அரசு ஆஸ்பத்திரி, ஸ்டான்லி ஆஸ்பத்திரி, கீழ்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரி, ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரி, கிங் இன்ஸ்டிடியூட் ஆகியவைகளில் மொத்தம் 1090 ஐ.சி.யூ படுக்கைகளில் 58 படுக்கைகள் அதாவது 6 சதவீத படுக்கைகள் மட்டுமே நிரம்பி உள்ளன. 3,747 ஆக்சிஜன் படுக்கைகளில், 18 சதவீதம் (699 படுக்கைகள்) மட்டுமே நிரம்பி உள்ளன. பெரும்பாலான நோயாளிகளுக்கு ஆக்சிஜன் ஆதரவு அல்லது தீவிர சிகிச்சை தேவைப்படவில்லை. அரசு பொது மருத்துவமனை டீன் டாக்டர் தேரனிராஜன் கூறுகையில், 231 நோயாளிகள் எஸ் ஜீன் வீ...
பிப்ரவரி மாதத்திற்குள் இந்தியாவில் ஒமைக்ரான் பாதிப்பு உச்சத்தை எட்டும் – அமெரிக்க சுகாதார ஆய்வாளர் தகவல்!

பிப்ரவரி மாதத்திற்குள் இந்தியாவில் ஒமைக்ரான் பாதிப்பு உச்சத்தை எட்டும் – அமெரிக்க சுகாதார ஆய்வாளர் தகவல்!

HOME SLIDER, NEWS, செய்திகள்
பிப்ரவரி மாதத்திற்குள் இந்தியாவில் ஒமைக்ரான் பாதிப்பு உச்சத்தை எட்டும் - அமெரிக்க சுகாதார ஆய்வாளர் தகவல்! டெல்லி, கர்நாடகா, ராஜஸ்தான், கேரளாவைத் தொடர்ந்து மகாராஷ்டிராவில் ஒமைக்ரான் வைரஸ் பாதிப்பு அதிக அளவில் பதிவாகி உள்ளது. இதையடுத்து பல்வேறு மாநிலங்கள் தொற்று பரவலைத் தடுக்க கட்டுப்பாடுகள் மற்றும் இரவு ஊரடங்கு உத்தரவை  அமல்படுத்தி உள்ளன. இந்நிலையில் அமெரிக்காவின் சுகாதார அளவீடுகள் மற்றும் மதிப்பீட்டு நிறுவன தலைவர் டாக்டர் கிறிஸ்டோபர் முர்ரே,  இந்தியாவில் ஒமைக்ரான் பாதிப்பு குறித்து புதிய தகவல்களை வெளியிட்டுள்ளார். அதன்படி:  இந்தியாவில் ஒமைக்ரான் அலை தொடங்கியுள்ளது.  கடந்த ஆண்டு டெல்டா வைரஸ் அலையின் தாக்கத்தை விட இதில் அதிகம் பேர் பாதிக்கப்படுவார்கள்.  ஒமைன்ரான் வைரஸால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை  அடுத்த மாதம் சுமார் ஐந்து லட்சம் வரை உயரக்கூடும். ஒமைன்ரான் வைரஸின் வீரியம் குறைவானது....
தமிழகத்தில் நாளை முதல் மீண்டும் இரவுநேர ஊரடங்கு – அரசு அறிவிப்பு!

தமிழகத்தில் நாளை முதல் மீண்டும் இரவுநேர ஊரடங்கு – அரசு அறிவிப்பு!

HOME SLIDER, NEWS, செய்திகள்
தமிழகத்தில் நாளை முதல் மீண்டும் இரவுநேர ஊரடங்கு - அரசு அறிவிப்பு! தமிழகத்தில் கொரோனா தொற்று மீண்டும் வேகமாக பரவி வரும் நிலையில், நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் கூடுதல் கட்டுப்பாடுகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டார். கொரோனா தடுப்பு பணி தொடர்பாக கலைவாணர் அரங்கத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில்  சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், மருத்துவ நிபுணர்கள் மற்றும் அதிகாரிகள் பங்கேற்று பல்வேறு ஆலோசனைகள் மற்றும் பரிந்துரைகளை வழங்கினர். இந்நிலையில், தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் நாளை முதல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணி வரை ஊரடங்கு அமலில் இருக்கும். அனைத்து பொழுதுபோக்கு பூங்காக்கள், கேள...
தமிழகத்தில் கொரோனா 3-வது அலை தொடங்கி விட்டது- அமைச்சர் தகவல்!

தமிழகத்தில் கொரோனா 3-வது அலை தொடங்கி விட்டது- அமைச்சர் தகவல்!

HOME SLIDER, NEWS, செய்திகள்
தமிழகத்தில் கொரோனா 3-வது அலை தொடங்கி விட்டது- அமைச்சர் தகவல்! சென்னை சைதாப்பேட்டையில் மெகா தடுப்பூசி முகாமை மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பார்வையிட்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- தமிழகத்தில் 86.22 சதவீதம் பேர் முதல் தவணை தடுப்பூசி போட்டுள்ளார்கள். 58.82 சதவீதம் பேர் 2-வது தவணை தடுப்பூசி போட்டுள்ளார்கள். சென்னையை பொருத்த வரை 5 லட்சம் பேர் இன்னும் முதல் தவணை தடுப்பூசியே போட்டுக்கொள்ள வில்லை. அனைவருக்கும் முதல் தவணை தடுப்பூசியை விரைந்து போடுவதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. கொரோனா 3-வது அலை தொடங்கிவிட்டது. உலக அளவில் வேகமாக பரவிக்கொண்டு இருக்கிறது. கொரோனாவின் உருமாற்ற வைரஸ்களான டெல்டாவும், ஒமைக்ரானும் சேர்ந்து இந்த அலையில் வேகமாக தாக்குகிறது. உலக அளவில் கடந்த ஏப்ரல் மாதம் ஒரேநாள் தொற்று 29 லட்சத்து 4 ஆயிரமாக இருந்தது. அதுதான் உ...
ஒமைக்ரானை கட்டுப்படுத்த ஒத்துழைப்பு தாருங்கள்- மு.க.ஸ்டாலின் காணொலியில் வேண்டுகோள்!

ஒமைக்ரானை கட்டுப்படுத்த ஒத்துழைப்பு தாருங்கள்- மு.க.ஸ்டாலின் காணொலியில் வேண்டுகோள்!

HOME SLIDER, NEWS, செய்திகள்
ஒமைக்ரானை கட்டுப்படுத்த ஒத்துழைப்பு தாருங்கள்- மு.க.ஸ்டாலின் காணொலியில் வேண்டுகோள்! முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி பதிவில் ஆங்கில புத்தாண்டு வாழ்த்து செய்தி வெளியிட்டுள்ளார். வணக்கம் உங்கள் எல்லோருக்கும், என் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். இந்த 2022-ம் ஆண்டு மிகவும் நன்றாக இருக்க வேண்டும் என்பதுதான் எல்லோருடைய எதிர்ப்பார்ப்பு, நம்பிக்கை. அப்படி நன்றாக இருக்க வேண்டும் என்றால் கடந்த ஆண்டுகள் தந்த பாடங்களை நாம் மறந்துவிடக்கூடாது. கொரோனா என்ற நோய் தொற்றின் முதலாவது அலை மற்றும் இரண்டாவது அலையில் இருந்து நாம் மீண்டு வந்திருக்கிறோம். குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால், இரண்டாவது அலை உச்சகட்டத்தில் இருந்த போது தான் உங்களுடைய முதல்- அமைச்சராக மட்டும் அல்ல. உங்களுடைய நலனுக்கும் நான் பொறுப்பேற்றுக் கொண்டேன். இரண்டாவது அலையை கட்டுப்படுத்துவது தான் என்னுடைய முதல் வேலையாக இர...