செவ்வாய்க்கிழமை, மே 14
Shadow

Tag: tn local body election

தேசியக்கொடியை இறக்கி விட்டு காவி கொடியை ஏற்றுவது தான் தேசப்பற்றா? தேர்தல் பிரச்சாரத்தில் கனிமொழி கேள்வி

தேசியக்கொடியை இறக்கி விட்டு காவி கொடியை ஏற்றுவது தான் தேசப்பற்றா? தேர்தல் பிரச்சாரத்தில் கனிமொழி கேள்வி

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், தமிழக அரசியல்
  சென்னை மயிலாப்பூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பல வட்டங்களில்  போட்டியிடும் திமுக வேட்பாளர்களை ஆதரித்து, திமுக மகளிரணி செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி பிரச்சாரம் செய்தார். அப்போது மேடையில் பேசிய அவர், கூறுகையில், திமுக வாக்குறுதிகளை நிறைவேற்ற வில்லை என எதிர்கட்சியினர் குற்றம் சாட்டுகின்றனர். ஆனால், குடும்ப அட்டைக்கு செல்பேசி தருவதாக அவர்கள் ஆட்சியில் சொன்னார்கள் செய்தார்களா?  மகளிருக்கு மானிய விலையில் ஆட்டோ வழங்குவதாக சொன்னார்கள் செய்தார்களா? என கேள்வி எழுப்பினார். கஜானாவை காலி செய்து விட்டு சென்ற பின்பும், பால் விலை குறைவு, மகளிருக்கு பேருந்து பயணம் இலவசம் உள்ளிட்ட  திட்டங்களை முதலமைச்சர் நிறைவேற்றி வருகிறார் என்றும் திமுகவை பார்த்து கேள்வி கேட்பதற்கு அதிமுகவிற்கு அருகதை இல்லை என கூறினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறுகையில்,  தமிழ்நாட்டில்...
திமுக வேட்பாளர்களின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்ட தூத்துக்குடி கடம்பூர் பேரூராட்சியில் தேர்தல் ரத்து!

திமுக வேட்பாளர்களின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்ட தூத்துக்குடி கடம்பூர் பேரூராட்சியில் தேர்தல் ரத்து!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், தமிழக அரசியல்
  தேர்தல் அலுவலர்கள் வழிகாட்டு நெறிமுறைகளை முறையாக பின்பற்றாததன் காரணமாக, தூத்துக்குடி மாவட்டம் கடம்பூர் பேரூராட்சியில் தேர்தலை ரத்து செய்வதாக மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.   இதுதொடர்பான அறிக்கையில், தூத்துக்குடி மாவட்டம் கடம்பூர் பேரூராட்சிக்கான தேர்தல் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறும், தூத்துக்குடி மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள கடம்பூர் பேரூராட்சியில் 12வார்டுகளுக்கு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு  33 பேர் மனுத்தாக்கல் செய்திருந்தனர். கடந்த 5ந்தேதி நடைபெற்ற  வேட்புமனு பரிசீலனையில்  1வது வார்டில் திமுக சார்பில் போட்டியிட்ட  ஜெயராஜ், 2வது வார்டில் தி...
உள்ளாட்சி தேர்தலில் விஜய் ரசிகர் மன்றம் திமுகவுக்கு ஆதரவு

உள்ளாட்சி தேர்தலில் விஜய் ரசிகர் மன்றம் திமுகவுக்கு ஆதரவு

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், தமிழக அரசியல், நடிகர்கள்
  தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளிலும் விஜய் ரசிகர் மன்றம் திமுகவிற்கு ஆதரவாக பிரச்சாரத்தில் ஈடுபடும். தூத்துக்குடி மாவட்ட விஜய் ரசிகர் மன்ற தலைவரும், தென் மாவட்ட விஜய் மக்கள் இயக்கம் ஒருங்கிணைப்பாளருமான பில்லா ஜெகன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குப்பதிவு பிப்ரவரி 19ம் தேதி நடைபெறுகிறது. வேட்பு மனு தாக்கல் நேற்றுடன் நிறைவுப்பெற்ற நிலையில், வரும்7ம் தேதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படவுள்ளது. கடந்த ஆண்டு நடைபெற்ற ஊரக உள்ளாட்சித் தேர்தலில் விஜய் மக்கள் இயக்கத்தினர் பல இடங்களில் சுயேச்சையாக போட்டியிட்டனர்.   மொத்தம் 169 பேர் போட்டியிட்ட நிலையில், இதில் 129 பேர் வெற்றி பெற்றனர். வெற்றி பெற்றவர்களை நடிகர் விஜய் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்து புகைப்படம் எடுத்துகொண்டார். இதனை தொடர்ந்து நகர்ப்புற...
பட்டியலில் பெயர் வருவதற்கு முன்பே வேட்பு மனுத்தாக்கல் செய்த திமுக நகர செயலாளர் மனைவி! அதிர்ச்சியில் உ.பி.க்கள்!

பட்டியலில் பெயர் வருவதற்கு முன்பே வேட்பு மனுத்தாக்கல் செய்த திமுக நகர செயலாளர் மனைவி! அதிர்ச்சியில் உ.பி.க்கள்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
    வேட்பாளர் பட்டியல் வெளியாவதற்கு முன்பாகவே மாநகராட்சி தேர்தலுக்கு தி.மு.க நகரச் செயலாளரின் மனைவி வேட்புமனு தாக்கல் செய்த விவகாரம் அக்கட்சியினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது. நகராட்சியாக இருந்த கடலூர், மாநகராட்சியாகத் தரம் உயர்த்தப்பட்ட பின்பு முதல் தேர்தலைச் சந்திக்கவிருக்கிறது. வரும் 19-ம் தேதி நடக்கவிருக்கும் தேர்தலுக்காக, கடந்த ஜனவரி மாதம் 28-ம் தேதி முதல் வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுவருகின்றன. புதிதாகத் தரம் உயர்த்தப்பட்டிருக்கும் கடலூர் மாநகராட்சியில் இருக்கும் 45 வார்டுகளைச் சேர்ந்த 42,479 வாக்காளர்கள் வாக்களிக்கவிருக்கின்றனர். நேற்று முன்தினம் 30-ம் தேதி கடலூர் மாநகராட்சி, ஆறு நகராட்சிகள் மற்றும் 14 பேரூராட்சிகளுக்கான வேட்பாளர் பட்டியலை அ.தி.மு.க வெளியிட்டது. அதையடுத்து அந்த வேட்பாளர்கள் பிரசாரத்தில் இறங்கியிருக்கிறார்கள். அதேசமயம் ...
”விலையில்லா விருந்தகம்”, தெருவோர ஏழைகளுக்கு இலவச உணவு என அசத்தல் செயல்களுடன் களமிறங்கிய விஜய் மக்கள் இயக்கம்!

”விலையில்லா விருந்தகம்”, தெருவோர ஏழைகளுக்கு இலவச உணவு என அசத்தல் செயல்களுடன் களமிறங்கிய விஜய் மக்கள் இயக்கம்!

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, செய்திகள், தமிழக அரசியல், நடிகர்கள்
    அரசியலை தனக்கு அணுக்கமான துறையாக விஜய் கருதுகிறார். தன் படங்களிலிருந்தே அரசியலுக்கான விதைகளை தூவி வரும் விஜய், அண்மையில் நடைபெற்று முடிந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் 'விஜய் மக்கள் இயக்கத்தை' களமிறக்கி அரசியல் ஆழம் பார்த்தார். அதில் விஜய்க்கு நல்ல பலனும் கிடைத்தது. இத்தனைக்கும் அந்த தேர்தலில் விஜய்யின் புகைப்படமோ, விஜய் மக்கள் இயக்கத்தின் கட்சி கொடியோ பயன்படுத்த கூடாது என்ற அறிவிப்பு இருந்தபோதிலும் 169 இடங்களில் களமிறங்கி 121 இடங்களை தட்டி தூக்கினர். இதில் அரசியல் தளத்தில் மட்டுமல்லாமல், பொதுமக்களிடையேயும் கவனம் ஈர்த்தது. இந்த தேர்தல் வெற்றி விஜய்க்கு உற்சாகத்தை அளித்திருக்க கூடும்.   அடுத்தடுத்த தேர்தல்களில் களம் காண இந்த தேர்தல் பலமான கடைக்கால் அமைத்துள்ளது. ஊரக உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்றவர்களை நேரில் சந்தித்து விஜய் வாழ்த்தியத...
பிப்ரவரி 19ல் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்!

பிப்ரவரி 19ல் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், தமிழக அரசியல்
    தமிழக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் தேதியை மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதன்படி பிப்ரவரி 19ம் தேதி வாக்குப் பதிவு நடைபெறுகிறது. தேர்தலில் பதிவான வாக்குகள் பிப்ரவரி 22ம் தேதி தேதி எண்ணப்படவுள்ளது. தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளின் பதவிகாலம் முடிந்தும் அவற்றுக்கு தேர்தல் நடத்தப்படாமல் இருந்தது.   இந்நிலையில், புதிதாக உருவாக்கப்பட்ட 9 மாவட்டங்கள் நீங்கலாக பிற மாவட்டங்களில் முதலில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. அதனை தொடர்ந்து நெல்லை, விழுப்புரம், காஞ்சிபுரம், வேலூர் தென்காசி, கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய 9 மாவட்டங்களுக்கு கடந்த ஆண்டு அக்டோபர் 6 மற்றும் 9ம் தேதிகளில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. இதனை தொடர்ந்து தமிழ்நாட்டில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 490 பேரூராட்சிகள் என அனை...
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: கட்சி, வேட்பாளர் பெயரில் சுவரொட்டி ஒட்ட தடை!

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: கட்சி, வேட்பாளர் பெயரில் சுவரொட்டி ஒட்ட தடை!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், தமிழக அரசியல்
  நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் புதிய கையேட்டை வெளியிட்டுள்ளது.  அதில், வேட்பாளர் மற்றும் கட்சி பெயரில் சுவரொட்டி ஒட்ட தடை விதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் கடந்த ஆண்டு நடைபெற்று முடிந்த நிலையில், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் விரைவில் நடைபெறவுள்ளது. இதற்கான தேதி ஒருசில நாட்களில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், அரசியல் கட்சிகள், தேர்தலில் போட்டியிட விரும்புவர்களிடம் விருப்ப மனுவை பெற்று வேட்பாளர் தேர்வில் மும்முரமாக உள்ளன. இந்நிலையில், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள 18 பக்க அறிக்கையில், இந்த முறை நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வேட்பாளர்கள் செலுத்த வேண்டிய காப்புத் தொகை (டெபாசிட்) இரட்டிப்பாக உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி, மாநகராட்சி உறுப்பினர் பதவிக்கு ...