ரஜினிகாந்த் ஆன்மீக அரசியல் தவறாகப்போய் முடியும் – டி.டி.வி தினகரன்
ஆன்மீக அரசியல் தவறாகப்போய் முடியும் என்பது எனது கருத்து: டி.டி.வி தினகரன்
நடிகர் ரஜினிகாந்த் தனிக்கட்சி தொடங்கி ஆன்மீக அரசியல் செய்யப்போவதாக கடந்த ஆண்டு டிசம்பர் 31-ம் தேதி அறிவித்தார். தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த அறிவிப்பு குறித்து பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
ஆர்.கே நகர் சட்டமன்ற உறுப்பினர் டி.டி.வி தினகரன் சென்னை அடையாற்றில் உள்ள அவரது இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்,அப்போது பேசிய அவர்...
விசாரணை ஆணையத்தில் கேட்டுக்கொண்டதின் பேரில் வீடியோ ஆதாரத்தை கொடுத்து உள்ளோம்,ஏற்கனவே வெற்றிவேல் கொடுத்தின் தொடர்ச்சிதான் தற்போது கொடுத்துள்ளோம்.
நடிகர் ரஜினிகாந்த் ஆன்மிகம் என்று சில வார்த்தையை பேசி உள்ளார், ஆன்மிகம் என்ற வார்த்தையை அரசியலில் பயன்படுத்துவது தவறாக தான் முடியும்.
ரஜினி சிஸ்டம் சரியில்லை என்கிறார்,சிஸ்டம் எப்போதும...









