அமித்ஷா தலை மேல் தொங்கும் கத்தியாக போலி என்கவுண்ட்டர் வழக்கு… மும்பை ஐகோர்ட்டில் புது வழக்கு..!
குஜராத்தில் 2005-ம் ஆண்டு சொராபுதீன் ஷேக், போலி என்கவுண்ட்டரில் கொல்லப்பட்டது தொடர்பாக அரசியல்வாதிகள், உயர் அதிகாரிகள், போலீஸ் அதிகாரிகள் மீது வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் சி.பி.ஐ. விசாரணை நடத்தி, பாரதீய ஜனதா தலைவர் அமித் ஷா உள்ளிட்ட 23 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.
இந்த வழக்கில் இருந்து அமித் ஷாவை சி.பி.ஐ. தனிக்கோர்ட்டு விடுவித்து விட்டது. இதேபோன்று, குஜராத், ராஜஸ்தான் போலீஸ் அதிகாரிகளும் விடுவிக்கப்பட்டனர். இந்த நிலையில் அமித் ஷாவை சி.பி.ஐ. தனிக்கோர்ட்டு விடுவித்ததை எதிர்த்து சி.பி.ஐ. மேல்முறையீடு செய்யவில்லை. இதன் காரணமாக சி.பி.ஐ. மீது மும்பை ஐகோர்ட்டில் மும்பை வக்கீல்கள் சங்கம் ஒரு பொது நல வழக்கு தாக்கல் செய்து உள்ளது.
அதில், “இந்த வழக்கில் விசாரணை நடத்திய சி.பி.ஐ. முன்னணி புலனாய்வு அமைப்பு ஆகும். அப்படி இருக்கிறபோது, சட்டத்தின் ஆட்சியை தனது செயல்கள் மூலம் க...








