தமிழ்த்தாய் வாழ்த்துக்கு எழுந்து நிற்பது மரபல்ல மட (த்தனமான) விளக்கம்..!
பாஜக ராஜாவையும் சர்ர்ச்சைகளையும் பிரிக்கவே முடியாது போல... ஒன்னு அவர் பேசியது சிக்கலை ஏற்படுத்தும் அல்லது சிக்கல் வர்றமாதிரி அவர் பேசுவார்... இந்த முறை அவர் ஏற்பாடு செய்த கூட்டத்தில் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு சங்கர மடத்தின் விஜயேந்திரர் எழுந்து நிற்காமல் அவமரியாதை செய்து சிக்கலை ஏர்படுத்திக் கொண்டார்.
ஆண்டாள் குறித்து தினமணி நாளிதழில் வைரமுத்து தவறாக எழுதியதாக சர்ச்சை கிளம்பியதையடுத்து வைரமுத்துவும் தினமணி ஆசிரியர் வைத்தியநாதனும் திருவில்லிப்புத்தூர் ஆண்டாள் சன்னதியில் விழுந்து மன்னிப்பு கேட்கவேண்டும் என்று கடந்த சில நாட்கலாக பலத்த சர்ச்சைகளும், விவாதங்களும் நடந்து வந்த நிலையில் , வைத்தியநாதன் ஆண்டாள் சன்னதியில் விழுந்து வணங்கி மன்னிப்பு கேட்டார். அதே சமயம் , இவ்விவகாரத்தில் வைரமுத்து ‘வருத்தம்’ மட்டும் தெரிவித்த செயலை மறக்கடிக்கும் விதமாக புது விவகாரம் கிடைத்துள்ளது.
சென்னையில் பா...









