வியாழக்கிழமை, ஜூலை 9
Shadow

Author: Kodanki

விக்ரம் ஸ்ரீதரன் எழுதி, இயக்கும் ‘ரெட்ரம்’

விக்ரம் ஸ்ரீதரன் எழுதி, இயக்கும் ‘ரெட்ரம்’

CINI NEWS, HOME SLIDER, செய்திகள்
‘எச்சரிக்கை இது மனிதர்கள் நடமாடும் இடம்’ வெற்றியைத் தொடர்ந்து, சுந்தர் அண்ணாமலை தயாரிப்பில், ‘தெகிடி’ புகழ் அசோக் செல்வன், சம்யுக்தா ஹோர்நாட் நடிப்பில், வெளிவரவிருக்கும் க்ரைம் திரைப்படம் ‘ரெட்ரம்’ காக்க காக்க, பச்சைக்கிளி முத்துச்சரம், வேட்டையாடு விளையாடு உள்ளிட்ட இயக்குனர் கெளதம் வாசுதேவ் மேனன் திரைப்படங்கள், அட்டகத்தி, சூடு கவ்வும், பிட்சா ஆகியவற்றுக்கு நிர்வாக தயாரிப்பாளராக பணியாற்றிய சுந்தர் அண்ணாமலையின் இரண்டாவது திரைப்படம் ‘ரெட்ரம்’. வியப்பூட்டும் திகில் மற்றும் மிரட்டல் காட்சி அமைப்புகளும், சுவராஸ்யமான காதல் காட்சிகளும், ரசிகர்களை இருக்கை நுனியில் அமரச் செய்யும் விதத்தில் சிறப்பாக படமாக்கப்பட்டுள்ளது. சென்னை, அதன் சுற்றுபுறங்கள் மற்றும் உதகமண்டலத்தின் அடர்ந்த காட்டு பகுதிகளில் படமாக்கப்பட்டுள்ள விதம் ரசிகர்களின் கவனத்தை பெரிதாக ஈர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 'ஃபர்ஸ்ட் லுக...
மிஸ் இந்தியா எலைட் 2019 பட்டம் வென்ற அழகி அபூர்வி சைனிக்கு விஜய்சேதுபதிதான் பிடிக்குமாம்..!

மிஸ் இந்தியா எலைட் 2019 பட்டம் வென்ற அழகி அபூர்வி சைனிக்கு விஜய்சேதுபதிதான் பிடிக்குமாம்..!

CINI NEWS, HOME SLIDER, நடிகைகள்
  *விஜய்சேதுபதி தான் பிடிக்கும் - அபூர்வி சைனி ( மிஸ் இந்தியா எலைட்2019 ) சென்னையை சேர்ந்த அபூர்வி சைனி என்பவர் மார்ச் 17ஆம் தேதி டெல்லியில் நடைபெற்ற "ரூபாறு பேஸ் ஆப் பியூட்டி இன்டர்நேஷனல் இந்தியா " என்கின்ற அழகி போட்டியில் கலந்து கொண்டு "ரூபாறு மிஸ் இந்தியா எலைட் 2019" என்ற பட்டத்தை வென்றார் . இந்தியா முழுவதும் இருபதுக்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்ட இந்த போட்டியில், அபூர்வி வென்றார். அபூர்வி தற்போது எஸ் .ஆர் .எம் பல்கலைக்கழகத்தில் இன்ஜினியரிங் படித்து வருகிறார் . இவருக்கு தற்போது 21 வயது ஆகிறது . தனது 19ஆவது வயதில் மாடலிங் துறையில் கால் பதித்த இவர் "ரிலையன்ஸ் ஜுவேல்ஸ் மிஸ் இந்தியா சென்னை மற்றும் டைம்ஸ் ஆப் இந்தியா, பிரெஷ் பேஸ் சோசியல் ஸ்டார் போன்றவற்றில் பங்கேற்று பட்டத்தை வென்றுள்ளார் . தெற்கு மண்டலம் நடத்திய "ரூபாரூ மிஸ் சவுத் இந்தியா " என்ற அழகு போட்டியில் கலந்து கொண்டு ...
ஜி.வி.பிரகாஷின் வித்தியாசமான குப்பத்து ராஜா

ஜி.வி.பிரகாஷின் வித்தியாசமான குப்பத்து ராஜா

CINI NEWS, HOME SLIDER, Uncategorized, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களால் 'டான்ஸ் மாஸ்டர்  ' என்றே அழைக்கப்படுகிறார் பாபா பாஸ்கர். நவநாகரீக நடன அமைப்புகளை கொடுக்க அவர் பெரும் முயற்சிகள் எடுத்தாலும், உள்ளூர் விஷயங்களை கலந்து கொடுக்கவும் தவறியதில்லை. அதனால் தான் அனைத்து தரப்பு ரசிகர்களுக்கும் பிடித்த நடன இயக்குனராகவும் இருக்கிறார். பல கொண்டாடப்படும் வெற்றி பாடல்களுக்கு நடனம் அமைத்த பாபா பாஸ்கர், குப்பத்து ராஜா படத்தின் மூலம் இயக்குனராகி இருக்கிறார். சமீபத்தில் வெளியான குப்பத்து ராஜா டிரெய்லர் 'லோக்கல்' பின்னணியை கொண்டிருக்கிறது என்று கூறப்படுகிறது, இது குறித்து பாபா பாஸ்கர் கூறும்போது, "உண்மையில் நான் 'லோக்கல்' என்ற வார்த்தையை ஏற்றுக் கொள்ளவில்லை, மாறாக அதை 'நேட்டிவிட்டி' என்று தான் அழைப்பேன். நம்மை சுற்றியுள்ள மக்கள் கிராமங்கள் மற்றும் அண்டை மாநிலங்களின் நேட்டிவிட்டியை பார்த்து வியக்கிறார்கள். சேரிகள் என்பவை உண்மை...
வக்கிரபுத்திக்கு வழி சொல்லும் சூப்பர் டீலக்ஸ் – கோடங்கி விமர்சனம்

வக்கிரபுத்திக்கு வழி சொல்லும் சூப்பர் டீலக்ஸ் – கோடங்கி விமர்சனம்

HOME SLIDER, REVIEWS, விமர்சனம்
  தலைக்கனம் பிடித்த இயக்குனரின் வக்கிரபுத்திக்கு வழி சொல்லும் சூப்பர் டீலக்ஸ்... காமத்தையும் ஆபாச வார்த்தைகளையும் கலந்து விட்டால் சினிமாவில் ஜெயித்தது விடலாம் என்று எந்த மடையன் சொல்லிக் கொடுத்தானோ தமிழ் சினிமாவின் சாபக்கேடு விஜய்சேதுபதி நடித்துள்ள சூப்பர் டீலக்ஸ். விஜய்சேதுபதி திருநங்கை ஷில்பாவாக அரை மணி நேரத்திற்கு வருகிறார். பாவம் திருநங்கைகள் என சொல்லும் அளவுக்கு அத்தனை பாவமான காட்சிகள். அருவருப்பான காட்சிகள். ஆபாசமான சித்தரிப்பு.இயக்குனர் தியாகராஜ குமாரராஜாவின் மட்டமான சிந்தனை காட்சிக்கு காட்சி. சமந்தா நடித்த கதாபாத்திரம் மிக மிக கேவலமான காட்சியமைப்பு. ஆபாசத்தின் உச்சம். சரி கதை என்ன அப்படின்னு பாத்தா... சமந்தா - பஹத் பாசில் ஜோடி விருப்பம் இல்லாத புருஷன் பொண்டாட்டி. புருஷன் இல்லாத போது முன்னாள் கல்லூரி காதலனை வீட்டுக்கு வரச் சொல்லி தகாத உறவு வைத்துக் கொள்ளும...
ஐரா – கோடங்கி விமர்சனம்

ஐரா – கோடங்கி விமர்சனம்

HOME SLIDER, REVIEWS, விமர்சனம்
  நயன்தாரா முதல் முதலாக இரட்டை வேடங்களில் நடித்துள்ள படம்தான் ‘ஐரா’. மா, லட்சுமி என்ற இரு குறும்படங்களை இயக்கிய சர்ஜுன் என்பவர் இப்படத்தை இயக்கியுள்ளார். யமுனா என்ற கதாபாத்திரத்தில் வரும் நயன்தாரா, மீடியாவில் பணிபுரிகிறார். வீட்டில் திருமண பேச்சு எடுப்பதால், கோபித்துக் கொண்டு பொள்ளாச்சியில் உள்ள தனது பாட்டி வீட்டிற்கு வந்து விடுகிறார் யமுனா. அங்கு ஒரு வண்ணத்துப்பூச்சி அமானுஷ்யமாக யமுனாவை வட்டமிட்டுக் கொண்டே இருக்கிறது. இது ஒரு புறம் இருக்க, மற்றொருபுறம் கலையரசன் சந்திக்கும் சிலர் மர்மமான முறையில் இறந்து கொண்டிருக்கின்றனர். மர்மமான முறையில் இறப்பவர்களை கொல்வது இறந்து போன பவானி(மற்றொரு நயன்தாரா)தான் என்று கண்டுகொள்கிறார் கலையரசன். யமுனாவையும் பவானி கொல்ல நினைக்கிறார். எதற்காக யமுனாவை பவானி கொல்ல நினைக்கிறார்..?? மற்ற நபர்களை பவானி ஏன் கொன்றார்..?? கலையரசனுக்கு பவானிக்கும் என்ன தொ...
ராதாரவிக்கு விஷால் கடும் கண்டனம்.

ராதாரவிக்கு விஷால் கடும் கண்டனம்.

CINI NEWS, HOME SLIDER, செய்திகள்
நயன்தாரா நடிப்பில் வெளியாகவிருக்கும் கொலையுதிர் காலம் படத்தின் டீசர் வெளியீட்டு விழாவில், நடிகர் ராதாரவி,நயன்தாராவை பற்றி தரக்குறைவாகவ கடுமையாக விமர்சித்திருந்தார். அவரின் இந்த பேச்சு பெண்களை மட்டுமல்லாது, ஆண்கள் மனதையும் புண்படுத்தியது. பல  பிரபலங்களும் ராதாரவியின் பேச்சுக்கு கடும் கண்டனங்களை தெரிவித்துள்ள நிலையில், விஷால் தனது ட்விட்டர் பக்கத்தில் ராதாரவிக்கு எதிராக கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அதில் அவர், “ராதாரவி அவர்களே, நடிகர் சங்கத்தின் பொதுச் செயலாளர் இருக்கும் நான், சமீபத்தில் பெண்களை பற்றி நீங்கள் இழிவாகப் பேசியதற்காகவும்,  உங்களது முட்டாள்தனத்திற்காகவும் உங்களுக்கு எதிராக கண்டன கடிதத்தில் கையொப்பமட வேண்டும் என்பது தான் எனது விருப்பம். உங்கள் பெயரிலும் ஒரு பெண் பெயர் சேர்ந்திருப்பதால் அந்தப் பெயரை நீக்கிவிட்டு,இப்பொழுது முதல் உங்களை ரவி என்றே அழைத்துக்கொள்ளுங்கள்” என நடிகர் வ...
அக்னி தேவி விவகாரத்தில் அடாவடி செய்த பாபி சிம்ஹாவுக்கு ரெட் போட திட்டம்!

அக்னி தேவி விவகாரத்தில் அடாவடி செய்த பாபி சிம்ஹாவுக்கு ரெட் போட திட்டம்!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  'அக்னிதேவி'  படம் பல தடைகளை தாண்டி ரிலீஸ் ஆகியுள்ளது. இந்த வாரம் கோலாகலாமாக ரிலீஸாகி, கோபதாபங்களுடன் மல்லுக்கட்டு நடந்துகொண்டிருக்கும் 'அக்னிதேவி' என்ற தமிழ்த் திரைப்படம் 300 க்கும் அதிகமான தியேட்டர்களில் ஓடிக் கொண்டிருக்கிறது. எழுத்தாளர் ராஜேஷ்குமார் நாவலின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட இந்த அக்னி தேவி ரோஜா நாயகி மதுபாலாவின் வில்லி கெட்டப்பால் ரசிகர்களிடம் பெரிய வரவேற்பைப் பெற்று நன்றாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்தப் படத்தில் முக்கியக் கதாபாத்தில் நடிக்க ஒத்துக் கொண்டு, படப்பிடிப்பில் உச்சாணிக் கொம்பில் உட்கார்ந்து கொண்டு குடைச்சல் கொடுத்த பாபிசிம்ஹாவின் டார்ச்சர் தாங்காமல் அவரை தேவையான அளவு 'நடிக்க' வைத்து அனுப்பி விட்ட இயக்குநரும், இணைத் தயாரிப்பாளருமான ஜான் தான் நினைத்தபடி, எழுத்தாளர் ராஜேஷ்குமாரின் எழுத்தை மெருகேற்றி, ரசிகர்களுக்குப் பிடிக்கும் வகையில் படமாக்கினா...