புதன்கிழமை, ஜூலை 8
Shadow

Author: Kodanki

விஜய்சேதுபதியின் மகன் திருடன் …இது ‘சிந்துபாத்’ அப்டேட்!

விஜய்சேதுபதியின் மகன் திருடன் …இது ‘சிந்துபாத்’ அப்டேட்!

CINI NEWS, செய்திகள்
பண்ணையாரும் பத்மினியும், சேதுபதி ஆகிய படங்களை விஜய் சேதுபதியை வைத்து இயக்கிய அருண்குமார், மீண்டும் விஜய் சேதுபதி நடிக்க ‘சிந்துபாத்’ படத்தினை இயக்கியுள்ளார். இப்படத்தின் டீஸர் நேற்று மாலை வெளியானது. இந்த படத்தில் நடிகை அஞ்சலி விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்துள்ளார். இதுமட்டுமில்லாமல் விஜய் சேதுபதியின் மகனான சூர்யாவும் இந்த படத்தில் அறிமுகமாகிறார். டீஸரில் கூட விஜய் சேதுபதி, சூர்யாவை கழுத்தில் தூக்கி வைத்திருப்பது போன்ற ஒரு காட்சியும் வரும். ஏற்கனவே நானும் ரௌடிதான் என்ற படத்தில் குட்டி விஜய் சேதுபதியாக கொஞ்ச நொடிகளே வந்திருப்பார். இதை அடுத்து சிந்துபாத் படம் முழுவதுமாக நடித்திருக்கிறார் என்று படக்குழுவே தெரிவித்துள்ளது. இந்த படத்தில் விஜய் சேதுபதியும், அவரது மகன் சூர்யாவும் திருடர்கள் போன்ற கதாபாத்திரத்தில் நடிப்பதாகவும் கூறப்படுகிறது....
ராஜபீமாவை முடித்த ஆரவ்!

ராஜபீமாவை முடித்த ஆரவ்!

CINI NEWS, செய்திகள்
நரேஷ் சம்பத் இயக்கத்தில் ஆரவ் நடிக்க உருவாகி வந்தது ‘ராஜபீமா’. இப்படத்தினை குறித்து படத்தின் இயக்குனர் பேசும்போது, "ஆம் உண்மையிலேயே பல்வேறு இடங்களில், குறிப்பாக அடர்ந்த காடுகளில் படப்பிடிப்பை நடத்தியது மிகப்பெரிய சவாலாக இருந்தது. சில விஷயங்களை காகிதங்களில் கதையில் எழுதும்போது நன்றாக இருக்கும், ஆனால் படப்பிடிப்பில் எதிர்பாராத அனுபவங்களை சந்தித்தது, தாண்ட முடியாத பெரிய தடையாக இருந்தது. குறிப்பாக, யானையுடன் நடித்த நாயகன் ஆரவ்விற்கு இது கடினமாக இருந்தது. அவர் படப்பிடிப்புக்கு முன்பே யானையுடன் நட்பாக இருந்த போதிலும், முற்றிலும் எதிர்பாராத விஷயங்கள் இருந்தது. காடுகளில் வழுக்கும் பாறைகள் மற்றும் தரைகள் இன்னொரு தடங்கலாக இருந்தது. இருப்பினும், படப்பிடிப்பை சிறப்பாக முடித்து விட்டு வந்திருப்பதால் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறோம்" என்றார் இயக்குனர் நரேஷ் சம்பத். தயாரிப்பாளர் எஸ்.மோகன் கூறும்போது, ...
மக்களவை தேர்தல் ஏப்ரல் 11ல் தொடங்கி  7 கட்டங்களாக நடைபெறுகிறது!

மக்களவை தேர்தல் ஏப்ரல் 11ல் தொடங்கி 7 கட்டங்களாக நடைபெறுகிறது!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
*மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறுகிறது.* *ஏப்ரல் 11ஆம் தேதி முதல் கட்ட தேர்தல் நடைபெறுகிறது.* *இரண்டாவது கட்ட தேர்தல் - ஏப்ரல் 18ஆம் தேதி.* *மூன்றாவது கட்ட தேர்தல் ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெறும்.* *வாக்குப்பதிவு எந்திரங்களை கொண்டு செல்லும் வாகனங்களில் ஜி.பி.எஸ் பொருத்தப்படும் - *10 லட்சம் காவல்நிலையங்கள் தேர்தல் ஆணையத்துடன் இணைக்கப்பட்டுள்ளன *மாற்றுத்திறனாளிகள், முதியோருக்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன - *பிரச்சனைக்குரிய வாக்குசாவடிகளில் சிசிடிவி பொருத்தப்படும் - *வாக்கு எந்திரத்தில் வேட்பாளர்களின் புகைப்படங்கள் இந்தமுறை இடம்பெறும் *சொத்து விவரங்களை வேட்பாளர்கள் முழுமையாக தாக்கல் செய்யாவிட்டால் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்படும் தலைமை தேர்தல் ஆணையர்.* *பொதுமக்கள் புகார் அளிக்கும் விதமாக இலவச மொபைல் ஆப் அறிமுகப்படுத்தும்.* *தேர்தல் தொடர்பான புகார்களை...
“ஷாருக்கான் போல இந்திய அளவில் ஹரிஷ் கல்யாண் புகழ் பெறுவார்’ ; பொன்வண்ணன் பாராட்டு

“ஷாருக்கான் போல இந்திய அளவில் ஹரிஷ் கல்யாண் புகழ் பெறுவார்’ ; பொன்வண்ணன் பாராட்டு

CINI NEWS, செய்திகள்
பிக் பாஸ் சீசன்-2 மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த ஹரிஷ் கல்யாணுக்கு பியார் பிரேமா காதல் என்கிற படம் வெற்றியை கொடுத்து ஒரு கதாநாயகனுக்கான அந்தஸ்தையும் கொடுத்தது. இதையடுத்து தற்போது இஸ்பேட் ராஜாவும் இதயராணியும் என்கிற படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார் ஹரிஷ் கல்யாண். விஜய்சேதுபதி நடித்த புரியாத புதிர் என்கிற படத்தை இயக்கிய ரஞ்சித் ஜெயக்கொடி இந்த படத்தை இயக்கியுள்ளார். காளி படத்தில் கதாநாயகிகளில் ஒருவராக நடித்த ஷில்பா மஞ்சுநாத் இதில் கதாநாயகியாக நடிக்க, பொன்வண்ணன், பாலசரவணன் மற்றும் மாகாபாஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். சாம்.சி.எஸ் இந்தப்படத்திற்கு இசையமைத்துள்ளார். வரும் மார்ச் 15-ம் தேதி இந்த படம் ரிலீஸாவதை முன்னிட்டு இந்த படத்தின் படக்குழுவினர் பத்திரிகையாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய நடிகரும் இயக்குனருமான பொன்வண்ணன், “ஹரிஷ் கல்யாணை பார்க்கும்போது அவர் தமிழில் மட்டுமல்ல இந்திய...
’நீயா -2’ படப்பிடிப்பில் ராய் லக்‌ஷ்மிக்கு ஏற்பட்ட கஷ்டம் – இயக்குனர் கூறிய உண்மை!

’நீயா -2’ படப்பிடிப்பில் ராய் லக்‌ஷ்மிக்கு ஏற்பட்ட கஷ்டம் – இயக்குனர் கூறிய உண்மை!

செய்திகள்
பாலு மகேந்திராவின் உதவி இயக்குனராக பணிபுரிந்த எல் சுரேஷ் இயக்கத்தில் ஜெய், ராய் லக்‌ஷ்மி, கேத்ரின் தெரசா மற்றும் வரலக்‌ஷ்மி சரத்குமார் நடிப்பில் உருவாகியுள்ளது ‘நீயா -2’. இவ்விழாவில் இயக்குநர் வெற்றி மாறன் பேசும்போது சுரேஷ் நானும் ஒன்றாக பணியாற்றியிருக்கிறோம். தொடர்ந்து போராடிக்கொண்டே இருப்பார். சுரேஷ் சோர்வடைந்து நான் பார்த்தது கிடையாது. எந்த சூழ்நிலையிலும் உறுதியைக் கைவிடமாட்டார். வெற்றிக்கு எது ஏற்றதோ அதை சிறப்பாக செய்யகூடிய ஆற்றல் அவரிடம் இருக்கிறது. இப்படத்தைப் பார்க்கும் போது வெற்றியடையும் என்று தோன்றுகிறது. பிரியதர்ஷினி ஜம்போ சினிமாஸ்-க்கு நன்றி சொல்லணும். இப்படத்தில் பணியாற்றியதில் மகிழ்ச்சி. ட்ரைலர் பார்க்கும்போது மிகப்பெரிய படமாக உருவாகியிருக்கிறது. நிச்சயம் வெற்றியடையும். விஜி நடன இயக்குநர் லட்சுமி உயரமாக இருப்பார், கேத்தரின் உயரம் குறைவாக இருப்பார் ஆனால் ஒரே பிரேமில் இருவ...
சத்ரு விமர்சனம்

சத்ரு விமர்சனம்

REVIEWS, விமர்சனம்
பரியேறும் பெருமாள் படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு, கதிரின் நடிப்பில் வெளியாகியுள்ள படம் தான் ‘சத்ரு’. சப்-இன்ஸ்பெக்டர் பதவியேற்று மிடுக்கான அதிகாரியாக வருகிறார் கதிர். நேர்மை, துணிச்சலின் காரணமாக பதவியேற்ற சில காலத்திலேயே 2 முறை சஸ்பெண்ட். சென்னையில் 5 இளைஞர்கள் குழந்தைகளை கடத்தி அதன் மூலம் பணம் சம்பாதித்து வருகின்றனர்.ஒரு மிகப்பெரிய தொழிலதிபரின் குழந்தையை கடத்திவிடுகிறது இந்த கும்பல். வழக்கு கதிரின் கைக்கு வருகிறது. கடத்திய கும்பல் 5 கோடி கேட்டு மிரட்ட, ஒருவழியாக அந்த கும்பலின் ஒருவனை கண்டுபிடித்து அவனை சுட்டுக் கொன்றுவிடுகிறார் கதிர். சிறுவனையும் காப்பாற்றிவிடுகிறார். மேலதிகாரி சொன்னதை கேட்காமல் பணி செய்ததால் கதிரை மூன்று மாதம் சஸ்பெண்ட் செய்கிறார் காவல்துறை மேலதிகாரி. நண்பனை இழந்த அந்த நால்வரும், கதிரின் குடுபத்தில் உள்ள அனைவரையும் கொல்ல நினைக்கிறது. கதிரின் அண்ணன் குழந்தைய...
பூமராங் விமர்சனம்

பூமராங் விமர்சனம்

REVIEWS, விமர்சனம்
தீ விபத்து ஒன்றில் சிக்கி தனது முகத்தை முழுவதும் இழந்து அகோரமாக காட்சியளிக்கிறார் சிவா. சிவா இருக்கும் அதே மருத்துவமனையில் உயிருக்கு போராடிக் கொண்டு கோமாவில் இருக்கிறார் சக்தி (அதர்வா). முக மாற்று அறுவைசிகிச்சை மூலமாக அதர்வாவின் முகத்தை எடுத்து சிவாவிற்கு வைக்கின்றனர். சிகிச்சை முடிந்ததும் வீட்டிற்கு திரும்புகின்றார்  சிவா. இவரின் அழகை கண்டு இவர் மீது காதலில் விழுகிறார் மேகா ஆகாஷ். வாழ்க்கை இப்படியாக செல்ல, சிவாவை கொல்ல நினைக்கின்றனர் சிலர். அதன் பிறகுதான் தெரிகிறது, தன்னுடைய புதிய முகம் தான் இந்த கொலை முயற்சிக்கு காரணம் என்று. அந்த சக்தி யார் என்று தெரிந்து கொள்ள அவரின் கிராமத்திற்கு செல்கிறார் சிவா. ப்ளாஷ்பேக் தொடர்கிறது. சக்தி (அதர்வா), ஆர் ஜே பாலாஜி, இந்துஜா மூவரும் நண்பர்கள். நன்கு படித்துமுடித்துவிட்டு ஒரு ஐ டி கம்பெனியில் வேலை பார்த்து வருகின்றனர். திடீரென்று ஒருநாள் இவர்களோடு சேர...
7 பேர் விடுதலையை வலியுறுத்தி மார்ச் 9ல் பிரமாண்டமான மனித சங்கிலி போராட்டம்!

7 பேர் விடுதலையை வலியுறுத்தி மார்ச் 9ல் பிரமாண்டமான மனித சங்கிலி போராட்டம்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  உச்ச நீதி மன்றத்தின் விடுதலை தீர்ப்பைத் தாண்டியும் எழுவரின் விடுதலையை ஆளுநர்தான் தீர்மானிக்க வேண்டும் என்பது எவ்வளவு முரணான காரியம்?? தண்டனை தருவதற்கும் நீதியை நிலைநாட்டவும் உருவாக்கப்பட்ட சட்ட அமைப்பைத் தாண்டி எம் அண்ணன்மார்களின் அக்காவின் விடுதலை அரசியலமைப்பு இக்கட்டுக்குள் சிக்கித் தவிப்பது கொடும் வேதனை... அரசியல் கட்சிகளாகப் பிரிந்து நின்றாலும்.. இந்த விடுதலையை விட்டுக்கொடுக்காமல் பாதுகாப்பதில் மட்டும் இருபெரும் மத்திய கட்சிகளும் கைகோர்த்தே நிற்கின்றன. மாநில கட்சிகளுக்கும் வாய்திறக்கா அதிகாரம்.. என்ன செய்யவென்று புரியாமல் திணறும் எழுவரின் உறவும் தாய் தந்தையரும்.. அதுவும் அற்புதம்மாள்... ஒரு அற்புத அன்னை. விழாத கட்சியினரின் கைகளில்லை. எல்லோரிடமும் கெஞ்சிவிட்டார். அரசியல் சார்பற்று அனைவரிடமும் ஒரு அன்னையாக கேட்டுவிட்டார். எல்லா அன்னைகளும் மகவை பத்து மாத...