புதன்கிழமை, ஜூலை 8
Shadow

Author: Kodanki

மீண்டும் காவல்துறை அதிகாரியாக நடிக்கும் அருண் விஜய்!

மீண்டும் காவல்துறை அதிகாரியாக நடிக்கும் அருண் விஜய்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  மீண்டும் காவல்துறை அதிகாரியாக நடிக்கும் அருண் விஜய்! விடாமுயற்சி, பொறுமை, கடின உழைப்பு ஆகியவை மட்டுமே அருண் விஜயை மிகப்பெரிய இடத்தில் கொண்டு சேர்க்கவில்லை. அத்தோடு மிகவும் பொருத்தமான கதைகளை தேர்ந்தெடுக்கும் அவரது படைப்பாற்றல் மற்றும் கதை திறனும் அனைத்து தரப்பு ரசிகர்களின் கவனத்தை அவர் பால் ஈர்க்க காரணம். அவர் இப்போது தென்னிந்திய சினிமாவில் 'திரில்லர்' வகைகளின் பிராண்ட் தூதராகவே மாறி விட்டார் என்று சொல்லும் அளவுக்கு அவரது திரைப்படங்கள் ஒரிஜினல் மற்றும் டப்பிங் பதிப்பு என இரண்டிலுமே மிகப்பெரிய ஆர்வத்தையும், வரவேற்பையும் பெறுகிறது. தமிழில் மிகப்பெரிய வெற்றியை பெற்ற அவரது மெடிக்கல் கிரைம் த்ரில்லர் 'குற்றம் 23', தெலுங்கு மற்றும் இந்தி பதிப்புகளிலும் (கத்தர்நாக் போலிஸ்வாலா) நல்ல வரபேற்பை பெற்றதன் மூலம் இது தெளிவாகிறது. இயக்குநர்கள் கண்ணன் மற்றும் மிலன் ஆகியோரிடம் உதவி இயக்குனரா...
தமிழ் பேசும் நாயகிகள் தமிழ் சினிமாவுக்கு அவசியம் – பூமரங் விழாவில் அதர்வா ஆசை

தமிழ் பேசும் நாயகிகள் தமிழ் சினிமாவுக்கு அவசியம் – பூமரங் விழாவில் அதர்வா ஆசை

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  மசாலா பிக்ஸ் சார்பில் ஆர். கண்ணன் தயாரித்து இயக்க, அதர்வா முரளி, மேகா ஆகாஷ், இந்துஜா, ஆர்ஜே பாலாஜி, சதீஷ் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் 'பூமராங்'. அர்ஜூன் ரெட்டி புகழ் ரதன் இசையமைத்திருக்கும் இந்த படம் வரும் மார்ச் 8ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது. இந்த படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. எல்லாமே இருந்தா தான் படம் எடுப்பேன் என சொல்லாமல் இருப்பதை வைத்து படத்தை மிகச்சிறப்பாக எடுப்பவர் இயக்குனர் கண்ணன். மோதலில் தான் காதல் உருவாகும் என்பது போல, எனக்கும் கண்ணன் சாருக்கும் உரசலில் தான் நட்பு ஆரம்பித்தது. எனக்கு கதை எழுதுவதில் ஒரு நம்பிக்கை வர முக்கிய காரணம் இவன் தந்திரன் படம் தான். ஒரு ஹீரோவாக இருந்தாலும் எந்த பிரதிபலனும் பாராமல் உதவக் கூடியவர் அதர்வா. பல காட்சிகளில் எனக்கும் நல்ல முக்கியத்துவம் கொடுக்க சொன்னார். அவரின் அர்ப்பணிப்பு மிக அபாரமானது. நதிநீர...
மீண்டும் சினிமா பக்கம் திரும்பிய நக்மா!

மீண்டும் சினிமா பக்கம் திரும்பிய நக்மா!

CINI NEWS, HOME SLIDER, செய்திகள்
ரஜினியின் பாட்ஷா, அஜித்தின் சிட்டிசன் உள்ளிட்ட படங்க்ளில் நடித்து ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் வந்தவர் நடிகை நக்மா. 2000 ஆம் ஆண்டில் பல முன்னனி நாயகர்களுடன் நடித்து வந்து கொடிகட்டி பறந்தார். பின், திரையுலகில் இருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். அங்கு அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளர் பதவியும் கொடுக்கப்பட்டது. பின், அது பறிக்கப்பட்டவுடன் , அரசியலில் இனி எடுபடாது என எண்ணிய நக்மா மீண்டும் திரையுலகம் பக்கம் திரும்பியுள்ளார். தெலுங்கில் இரண்டு படங்களில் நடித்து வருகிறார். அதில், அல்லு அர்ஜுனுக்கு அம்மாவாகவும் ஒரு கேரக்டரில் நடித்து வருகிறார் நக்மா. தமிழில் நல்ல படங்கள் வந்தால் நிச்சயம் நடிப்பேன் எனவும் நக்மா கூறியுள்ளார்....
கார்த்தி-விஜய்சேதுபதி உள்ளிட்ட 201 பேருக்கு கலைமாமணி விருது

கார்த்தி-விஜய்சேதுபதி உள்ளிட்ட 201 பேருக்கு கலைமாமணி விருது

CINI NEWS, HOME SLIDER, செய்திகள்
2011ம் ஆண்டு வரை வழங்கப்பட்டு வந்த கலைமாமணி விருதுகள், கடந்த 8 ஆண்டுகளாக வழங்கப்படாமல் இருந்தது. இந்நிலையில் மொத்தம் 8 ஆண்டுகளுக்கான கலைமாமணி உள்ளிட்ட கலைத்துறைக்கான உயரிய விருதுகளை பெறும் கலை வித்தகர்கள், திரைக் கலைஞர்கள், நாடகக் கலைஞர்கள் குறித்த விவரங்களை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி, 2011ம் ஆண்டுக்கான கலைமாமணி விருதுகளுக்கு நடிகர்கள் பாண்டு, ஆர். ராஜசேகர், நடிகை குட்டி பத்மினி, பிண்ணனிப் பாடகி பி.எஸ். சசிரேகா, நடன இயக்குநர் புலியூர் சரோஜா உள்ளிட்ட பல்வேறு கலைத்துறை சார்ந்த 30 கலை வித்தகர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். தொடர்ந்து 2012ம் ஆண்டுக்கான விருதுகள் பட்டியலில் நடிகைகள் டி. ராஜஸ்ரீ, பி.ஆர். வரலட்சுமி, இயக்குநர் சித்ரா லட்சுமணன் உள்ளிட்ட, பல்வேறு கலைப்பிரிவுகளை சேர்ந்த 30 பேருக்கு கலைமாமணி விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. 2013ம் ஆண்டுக்காக, நடிகர்கள் பிரசன்னா, ஆர். பாண்டியர...
முதல் சோலோ பெண் சூப்பர் ஹீரோ திரைப்படம் கேப்டன் மார்வெல்

முதல் சோலோ பெண் சூப்பர் ஹீரோ திரைப்படம் கேப்டன் மார்வெல்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள்
  மார்வெல் சினிமாட்டிக் யுனிவர்ஸின் முதல் சோலோ பெண் சூப்பர் ஹீரோ திரைப்படம் கேப்டன் மார்வெல். ப்ரீ லார்சன், சாமுவேல் எல் ஜாக்சன் ஆகியோர் நடிக்க, அன்னா  போடென், ரையான் ஃப்ளெக் இயக்கியிருக்கிறார்கள். மார்வெல் ஸ்டுடியோஸ் மிக பிரமாண்டமாக தயாரித்திருக்கும் இத்திரைப்படம் மகளிர் தினத்தை முன்னிட்டு வரும் மார்ச் 8ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது. இந்தியாவிலும் ஆங்கிலம், தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் வெளியாகும் இந்த படத்தின் அறிமுக விழா சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் தமன்னா பாட்டியா, சமந்தா அக்கினேனி, காஜல் அகர்வால், ரகுல் பிரீத் சிங் மற்றும் டிஸ்னி இந்தியா தலைமை அதிகாரி பிக்ரம் துக்கல் ஆகியோர் கலந்து கொண்டனர். இதுவரை 20 மார்வெல் சூப்பர் ஹீரோ படங்களை கொடுத்திருக்கிறோம். ஒவ்வொரு படத்திலும் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் கூடிக் கொண்டே வந்திருக்கிறார்கள். அவெஞ்சர்ஸ் இன்ஃபினிட்டி வ...
90ml ஓவியாவுக்கு வாழ்த்து சொன்ன ஆரவ்..!

90ml ஓவியாவுக்கு வாழ்த்து சொன்ன ஆரவ்..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  நடிகை ஓவியா நடிப்பில் இன்று வெளியான 90ml திரைப்படத்திற்கு வாழ்த்து தெரிவித்து நடிகர் ஆரவ் பதிவு ஒன்று வெளியிட்டுள்ளார் பிக் பாஸ் நிகழ்ச்சியில் முதல் சீசனின் வெற்றியாளர் ஆரவ் மற்றும் ஓவியா பிக் பாஸ் வீட்டிலிருந்தபோதே காதல் கிசுகிசுவில் சிக்கினர். வெட்கத்தைவிட்டு வெளிப்படையாக ஆரவிடம் காதலைச் சொல்லியும், அவர் ஏற்க மறுத்ததால் மனமுடைந்த ஓவியா பிக் பாஸ் நிகழ்ச்சியைவிட்டு பாதியிலேயே வெளியேறினார். இதையடுத்து,பிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்தவுடன் இருவரும் நண்பர்களாகச் சகஜமாகப் பழகி வருகின்றனர்.   https://twitter.com/Nafeez_Arav/status/1098473222897422336?s=19 இந்நிலையில், ஓவியா நடிப்பில் 90 ML திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது.அதற்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் ஆரவ் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்று வெளியிட்டுள்ளார் அதில், 'இது உன் வாழ்வில் மிகப்பெரிய திருப்புமுனையான ...
நட்பே துணை’ எனது நிறுவனத்தின் சிறந்த படமாக இருக்கும் – சுந்தர்.சி

நட்பே துணை’ எனது நிறுவனத்தின் சிறந்த படமாக இருக்கும் – சுந்தர்.சி

CINI NEWS, HOME SLIDER, MOVIES, செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  'நட்பே துணை' எனது நிறுவனத்தின் சிறந்த படமாக இருக்கும் - சுந்தர்.சி நடிகர் ஹரிஷ் உத்தமன் பல படங்களில் சண்டை அடிதடி என்று நடித்தாயிற்று, சற்று வித்தியாசமான பாத்திரம் கிடைத்தால் மகிழ்ச்சியாக இருக்கும் என்று நினைத்தேன். அதுபோலவே இப்படத்தில் கிடைத்ததில் மகிழ்ச்சி. நான் நடித்த படங்களிலேயே இந்த படம் தான் எனக்கு மிகவும் பிடித்த படம். நடன இயக்குனர் சிவராஜ் ஷங்கர் பேசும்போது மீசைய முறுக்கு படத்திற்கு பிறகு 'ஹிப்ஹாப் தமிழா' ஆதியுடனும் சுந்தர்.சியுடனும் பணியாற்றுவதில் மகிழ்ச்சி. இப்படம் எனக்கு மிகப்பெரிய அனுபவமாக இருந்தது. நடிகர் ராஜ்மோகன் பேசும்போது ஒவ்வொரு கல்லூரிக்கும் நேர்மறையான எண்ணங்களை ஏற்படுத்த செல்வேன். ஆனால் 'ஹிப்ஹாப் தமிழா' ஆதி தன் படம் மூலமாக நேர்மறையான சிந்தனையை கூறியிருக்கிறார். நடிகர் எரும சாணி விஜய் இப்படத்தின் மூலம் எனக்கு நிறைய நண்பர்கள் கிடைத்தி...
பாக்.பிடியில் சிக்கிய இந்திய விமானி அபிநந்தன் இன்று இந்தியாவிடம் ஒப்படைக்கப்படுகிறார்..!

பாக்.பிடியில் சிக்கிய இந்திய விமானி அபிநந்தன் இன்று இந்தியாவிடம் ஒப்படைக்கப்படுகிறார்..!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
இந்திய விமானப்படை விமானி அபிநந்தன் பாகிஸ்தான் படையிடம் சிக்கியது, நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. புலவாமாவில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் கடந்த 14-ந்தேதி நடத்திய கொடூர தாக்குதலாலும், அதைத் தொடர்ந்து 26-ந்தேதி பாகிஸ்தானுக்கு இந்திய போர் விமானங்கள் சென்று பயங்கரவாதிகள் முகாம்களை லேசர் குண்டுகள் போட்டு அழித்து கொடுத்த பதிலடியாலும் எல்லையில் பதற்றம் நிலவி வந்தது. இந்த நிலையில்தான், நேற்று முன்தினம் காஷ்மீரில் தாக்குதல் நடத்த பாகிஸ்தான் போர் விமானங்கள் வந்தன. அவற்றை இந்திய போர் விமானங்கள் விரட்டியடித்து, தாக்குதல் முயற்சியை வெற்றிகரமாக முறியடித்தன. ஆனால் இந்த நடவடிக்கையின்போது எதிர்பாராதவகையில் ‘மிக்-21’ ரக போர் விமானம் ஒன்றை இந்தியா இழக்க நேரிட்டது. அந்த விமானம் பாகிஸ்தான் எல்லையில் விழுந்ததால், அதில் இருந்த இந்திய விமானப்படை விமானி அபிநந்தனை, பாகிஸ்தான் சிறை பிடித்தது. இவர் ச...