செவ்வாய்க்கிழமை, ஜூலை 7
Shadow

Author: Kodanki

தமிழக அரசால் மட்டும் தமிழ் ராக்கர்சை ஒழிக்க முடியாது; அமைச்சர் கடம்பூர் ராஜூ

தமிழக அரசால் மட்டும் தமிழ் ராக்கர்சை ஒழிக்க முடியாது; அமைச்சர் கடம்பூர் ராஜூ

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள்
  ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள 2.0 படம் தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் வெளிவந்துள்ளது.  இப்படத்தை தமிழ் ராக்கர்சில் வெளியிடுவோம் என மிரட்டல் வந்தது.  இதனால் இணையதளங்களில் வெளியிட தடைக்கோரி தயாரிப்பு நிறுவனம் லைகா கேட்டுக்கொண்டது. தமிழ் ராக்கர்ஸ் உள்பட 2 ஆயிரம் இணையதள முகவரிகளை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்து லைகா நிறுவனம் கோரிக்கையை விடுத்தது. வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் 2.0 படத்தை தமிழ் ராக்கர்ஸ் உட்பட 12,567 இணையதளங்களில் வெளியிட தடைவிதித்து உத்தரவிட்டது. 3டி தொழில் நுட்பத்தில் படம் தயாரான நிலையில் அதனை திரையில் பார்க்க வசதியாக பல்வேறு திரையரங்குகளில் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன.  எனினும், கடந்த 29ந்தேதி படம் வெளியான சில மணிநேரங்களில் தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தில் வெளியிடப்பட்டது.  இது தமிழ் திரையுலகில் பெருத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த ...
தொழில் அதிபர் ஆக வழி காட்டும் செட்டிநாடு புட்ஸ்..!

தொழில் அதிபர் ஆக வழி காட்டும் செட்டிநாடு புட்ஸ்..!

HOME SLIDER, NEWS, செய்திகள்
உயர்ந்த தயாரிப்பாக இருக்க வேண்டும், தரமானதாகவும், பாரம்பரியம் மாறாத சுவையுடன் திகழ வேண்டும் என்பதுதான் உணவு பொருட்களை வாங்கும் மக்களின் எண்ணமாகும். இதை முழுமையாக பூர்த்தி செய்கிறது செட்டிநாடு புட்ஸ் நிறுவனம். ஆரோக்கியமான உணவு என்றால் அனைவருக்கும் நிம்மதி பிறந்த உணர்வுதான். எப்போதும் பாரம்பரியம் மாறாத சுவையுடன் உணவுப் பொருட்களை தயாரித்து முதலிடம் வகிக்கின்றனர் செட்டிநாடு புட்ஸ் நிறுவனத்தினர். இவர்களின் தயாரிப்புகள் அனைத்தும் மக்களின் மனம் கவர்ந்தவை. ரெடி மிக்ஸ்சில் புளியோதரை பேஸ்ட், வத்தல் குழம்பு, செட்டிநாடு காரக்குழம்பு ஆகியவை மிகவும் பிரபலமானவை. அதுமட்டுமா! பொடி வகைகளில் இட்லி மிளகாய் பொடி, இட்லி பூண்டு பொடி, பருப்பு பொடி, கறிவேப்பிலை பொடி, பூண்டு அரிசி பொடியும் மிகவும் சிறந்த இடம் பிடித்தவை. இவர்களின் தயாரிப்புகள் அனைத்து வீட்டுச்சுவையுடன் தயாரிக்கப்படுகிறது. முக்கியமாக செட்...
குழந்தை திருமணத்திற்கு ஆதரவாக பேசிய பா.ஜ.க. –  தேர்தல் ஆணையம் நோட்டீஸ்

குழந்தை திருமணத்திற்கு ஆதரவாக பேசிய பா.ஜ.க. – தேர்தல் ஆணையம் நோட்டீஸ்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  ராஜஸ்தான் சட்டசபைக்கான தேர்தல் வருகிற டிசம்பர் 7ந்தேதி நடைபெற உள்ளது. இதற்கான தேர்தல் பிரசார பணிகளில் கட்சிகள் ஈடுபட்டு வருகின்றன.  இந்த நிலையில், சோஜத் சட்டசபை தொகுதியின் பெண் வேட்பாளராக போட்டியிடும் பா.ஜ.க.வின் சோபா சவுகான் என்பவர் தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசினார். அவர் பேசும்பொழுது, குழந்தை திருமணம் நடைபெற தடையாக இருக்கமாட்டேன் என கூறினார்.  தடை செய்யப்பட்ட குழந்தை திருமணம் ராஜஸ்தானில் சில இடங்களில் இன்னும் தொடர்கதையாக நடந்து வருகிறது. இந்த நிலையில் சவுகானுக்கு இந்த விவகாரத்தில் விளக்கம் கேட்டு தேர்தல் அதிகாரி நோட்டீஸ் அனுப்பி உள்ளார் ஆட்சி அதிகாரத்திற்காக மதத்தின் பெயராலும், சடங்கு சம்பிரதாயங்களின் பெயராலும் பல பொய் வாக்குறுதிகளை கொடுப்பது பாஜகவுக்கு ஒன்றும் புதிதில்லை. மத்தியில் ஆட்சியை பிடிப்பதற்காக நாட்டு மக்களுக்கு பல பொய்களை சொல்லி ஆட்சியை பிடித்துக்...
ரூ.10 லட்சம் செலவில் சமூக சேவகருக்கு வீடு கட்டி தரும் லாரன்ஸ்

ரூ.10 லட்சம் செலவில் சமூக சேவகருக்கு வீடு கட்டி தரும் லாரன்ஸ்

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, செய்திகள், நடிகர்கள்
நடிகரும் நடன இயக்குனருமான ராகவா லாரன்ஸ் கஜா புயலால் வீடு இழந்தவர்களில் 50 பேருக்கு தனது சொந்த செலவில் வீடு கட்டித்தரப்போவதாக அறிவித்தார். அதற்கான பயனாளிகளை தேர்வு செய்யும் பணிகளையும் மேற்கொண்டு வருகிறார். முதல் கட்டமாக சமூக வலைதளங்களில் வெளியான தகவல்களை வைத்து ஒரு வயதான பெண்மணிக்கும், சமூக சேவகர் ஆலங்குடி கணேசனுக்கும் வீடு கட்டி தர இருக்கிறார். ஆலங்குடி கணேசனுக்கு 10 லட்ச ரூபாய் செலவில் லாரன்ஸ் கட்டித்தரும் வீட்டுக்கான பூமி பூஜை  நடைபெற்றது. இதுகுறித்து ராகவா லாரன்ஸ் கூறியதாவது:- ஏழையின் இதயத்தில் இரக்கம் அதிகமாக இருக்கும் என்பார்கள். வாழ்ந்தாலும் உள்ளத்தால் உயர்ந்த இடத்தை எட்டிப் பிடித்தவர் ஆலங்குடி 515 கணேசன். அனாதையாக பிறந்தவர் யாரும் இல்லை. ஆனால் யாரும் அனாதையாக இறக்கக் கூடாது என்கிற உயர்ந்த சிந்தனையால் ஏறக்குறைய 500 அனாதை சடலங்களை அந்தந்த மத முறைப்படி ஈமக்கிரியை செய்...
ஜோத்பூர் அரண்மனையில் பிரியங்கா சோப்ரா – நிக் ஜோனஸ் திருமணம்

ஜோத்பூர் அரண்மனையில் பிரியங்கா சோப்ரா – நிக் ஜோனஸ் திருமணம்

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகைகள்
பிரபல நடிகை பிரியங்கா சோப்ரா-நிக் ஜோனஸ் திருமணம் ஜோத்பூர் அரண்மனையில் நேற்று கிறிஸ்தவ முறைப்படி நடந்தது. அவர்கள் இந்து முறைப்படி இன்று (ஞாயிற்றுக்கிழமை) மீண்டும் திருமணம் செய்து கொள்கின்றனர். பாலிவுட்டில் இருந்து ஹாலிவுட் வரை சென்று புகழ்பெற்ற பிரபல நடிகை பிரியங்கா சோப்ரா, தன்னைவிட சுமார் 10 வயது இளையவரான அமெரிக்க பாடகர் நிக் ஜோனசை காதலித்து வந்தார். பாலிவுட் மற்றும் ஹாலிவுட் திரையுலகில் மிகுந்த பரபரப்பாக பேசப்பட்ட இந்த ஜோடிக்கு கடந்த சில நாட்களுக்கு முன் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. பிரியங்கா சோப்ரா இந்து மதத்தையும், நிக் ஜோனஸ் கிறிஸ்தவ மதத்தையும் பின்பற்றுபவர் என்பதால் இரண்டு முறையிலும் திருமணம் செய்ய அவர்கள் முடிவு செய்தனர். அதன்படி ராஜஸ்தானில் உள்ள ஜோத்பூர் அரண்மனையில் டிசம்பர் 1 (நேற்று) மற்றும் 2-ந்தேதிகளில் திருமணம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி நேற்று ஜோத்பூரில் உ...
பிரதமர் மோடி பதவியில் இருப்பது நாட்டின் சாபக்கேடு – வைகோ குற்றச்சாட்டு

பிரதமர் மோடி பதவியில் இருப்பது நாட்டின் சாபக்கேடு – வைகோ குற்றச்சாட்டு

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
இலக்கியப்பீடம் மாத இதழ் ஆசிரியராக இருந்த மறைந்த விக்கிரமனின் 3-ம் ஆண்டு நினைவு விழா, இலக்கியப்பீடம் மாத இதழ் மற்றும் அனைத்து இந்திய தமிழ் எழுத்தாளர்கள் சங்கம் சார்பில் சென்னை தியாகராயநகரில் உள்ள வாணி மகாலில் நேற்று நடைபெற்றது. விழாவில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, கவிஞர் ரமணனுக்கு, எழுத்தாளர் சிவசங்கரி வழங்கும் இலக்கியப்பீடம்-சிவசங்கரி விருது மற்றும் ரூ.10 ஆயிரத்துக்கான பொற்கிழி ஆகியவற்றை வழங்கினார். விழா முடிவில் வைகோ நிருபர்களிடம் கூறியதாவது: நாட்டின் 90 கோடி விவசாயிகளின் பிரதிநிதிகளாக லட்சக்கணக்கான விவசாயிகள் டெல்லியில் போராட்டம் நடத்தி உள்ளனர். 4 மாத காலமாக சாலையில், வெயிலிலும், மழையிலும், பனியிலும் கிடந்த விவசாயிகளை பார்க்க 5 நிமிடம் ஒதுக்காத பொறுப்பற்ற ஒரு பிரதமர் பதவியில் இருப்பது இந்த நாட்டின் சாபக்கேடு என்று நினைக்கிறேன் வெளிந...
கஜா புயலில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் எம்ஜிஆர் பாணியில் கிராம பெருசுகளோடு பாசம் காட்டிய கமல்ஹாசன்!

கஜா புயலில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் எம்ஜிஆர் பாணியில் கிராம பெருசுகளோடு பாசம் காட்டிய கமல்ஹாசன்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், நடிகர்கள்
கஜா புயலில் கடுமையாக பாதிக்கப்பட்ட பகுதிகளில் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் பாணியில் கிராம மக்களோடு சகஜமாக பழகி பாட்டிகளிடம் பாசத்தை கொட்டிய நடிகர் கமல்ஹாசன். மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் தனது கட்சியினரோடு புயல் பாதித்த பகுதிகளில் தீவிர சுற்றுப்பயணம் மேற்கொண்டு மக்கள் குறைகளை கேட்டு வருகிறார். தஞ்சை மாவட்டம் தம்பிக்கோட்டை கிழக்காடு பகுதியில் டீக்கடையில் அமர்ந்து கட்சியினருடன் கமல் டீ குடித்தார். அவரை பார்த்ததும் அங்கிருந்த பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். அங்கிருந்தவர்களுக்கு கமல் டீ வாங்கி கொடுத்தார். டீக்கடையில் கமல்ஹாசன் பேசிக் கொண்டிருந்தபோது பாட்டி ஒருவர் வாஞ்சையுடன் கன்னத்தை பிடித்து பேசினார். அவருடன் பாசமாக பேசிய கமல் குறைகளை கேட்டறிந்தார். மீனவர் கிராமமான ஏரிப்புறக்கரை கிராமத்திற்கு சென்ற கமல்ஹாசன் கிராமம் முழுவதையும் சுற்றிப் பார்த்தார். கமலிடம் தங்கள் குறைக...
அரசு பள்ளியில் அமைச்சர் வழங்கிய விலையில்லா சைக்கிள்களில் கர்நாடக அரசு முத்திரை

அரசு பள்ளியில் அமைச்சர் வழங்கிய விலையில்லா சைக்கிள்களில் கர்நாடக அரசு முத்திரை

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே தழுதாளி கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவ-மாணவிகளுக்கு நேற்று விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் அமைச்சர் சி.வி.சண்முகம் கலந்துகொண்டு அந்த பகுதியில் உள்ள 9 அரசு பள்ளிகளை சேர்ந்த ஆயிரத்து 524 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்களை வழங்கினார். அதில், சில சைக்கிள்களின் முன்புறத்தில் இருந்த கூடையில், வட்டவடிவில் இருந்த முத்திரையில் மாணவி படிப்பது போன்ற படத்துடன், கன்னட மொழியில் சில வாசகங்கள் பொறிக்கப்பட்டு இருந்தது. தமிழக அரசின் முத்திரை இல்லாமல், கர்நாடக அரசின் முத்திரையுடைய சைக்கிள்கள் வழங்கப்படுவது பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கிடையே இந்த சைக்கிள் பற்றி அதிர்ச்சியான தகவல்களும் வெளியாகி வருகின்றன. கர்நாடக மாநில அரசு சார்பில், அங்குள்ள பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்கள் வழங்கப்பட்டு வ...
“டத்தோ” ராதாரவியா? வெறும் ராதாரவியா? தொடரும் டத்தோ கவுரவ சர்ச்சை!

“டத்தோ” ராதாரவியா? வெறும் ராதாரவியா? தொடரும் டத்தோ கவுரவ சர்ச்சை!

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
  தொடரும் சர்ச்சை... டத்தோ கொடுத்தவர் கைது! நடிகர் ராதாரவி மீது பல்வேறு சர்ச்சைகள் சுற்றி சுழன்று வந்தாலும் சமீபத்திய பரபரப்பு சர்ச்சை ராதாரவி தன் பெயருக்கு முன் போடச் சொல்லி கட்டாயப்படுத்தும் "டத்தோ" என்ற கவுரவம் வாங்கப்பட்டதா? வழங்கப்பட்டதா? போட்டுக்கொண்டதா? ஏன் இப்படி கேள்விகள் எழுகிறது என்றால்... நம்மூர் அரசியவாதிகள் தொடங்கி சீப்பு சோப்புடப்பா விற்கும் தொழிலதிபர்கள் வரை தங்கள் பெயருக்கு முன்னால் "டாக்டர்" பட்டம் போட்டுக் கொ(ல்)ள்கிறார்கள். சரி "டத்தோ" என்கிற கவுரவம் மலேசிய மன்னர் குடும்பம் வழங்கும் ஒரு தனி கவுரவம். மலேசிய அரசு இந்தியாவில் ஷாருக்கான் ஒருவருக்கு மட்டுமே இந்த கவுரவத்தை வழங்கி உள்ளது. சமீப காலமாக நடிகர் ராதாரவி தன் பெயருக்கு முன் டத்தோ என போட்டுக் கொள்கிறார். அதோடு அவர் நடிக்கும் படங்களிலும் டத்தோ ராதாரவி என்றே டைட்டில் போடச் சொல...
இலங்கை அரசில் மற்றொரு அதிரடி ராஜபக்சே பிரதமர் அலுவலக செலவுகளை செய்வதற்கு தடை

இலங்கை அரசில் மற்றொரு அதிரடி ராஜபக்சே பிரதமர் அலுவலக செலவுகளை செய்வதற்கு தடை

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  இலங்கை அதிபர் சிறிசேனா கடந்த அக்டோபர் மாதம் 26-ந்தேதி பிரதமர் விக்ரமசிங்கேவை அதிரடியாக நீக்கிவிட்டு, முன்னாள் அதிபர் ராஜபக்சேவை பிரதமராக நியமித்தார். அன்று முதல் இலங்கையில் அரசியல் நெருக்கடி உருவானது. பின்னர் சிறிசேனா, சுமார் 20 மாதங்கள் முன்னதாகவே நாடாளுமன்றத்தை கலைத்துவிட்டு, உடனே தேர்தல் நடத்த உத்தரவிட்டார். ஆனால் சுப்ரீம் கோர்ட்டு அதிபரின் முடிவை ஏற்கமறுத்து, தேர்தல் நடவடிக்கைகளை நிறுத்திவைத்தது. விக்ரமசிங்கே, ராஜபக்சே இருவரும் தாங்கள் தான் பிரதமர் என்று அறிவித்தனர். விக்ரமசிங்கே தன்னை நீக்கியது செல்லாது, தனக்கே நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை உள்ளது என்று கூறிவந்தார். சபாநாயகர் கரு ஜெயசூரியா, ராஜபக்சே தனது பெரும்பான்மையை நிரூபிக்கும் வரை அவரை சட்டப்படி பிரதமராக இந்த அவை ஏற்றுக்கொள்ளாது என்று அறிவித்தார். விக்ரமசிங்கேவின் ஐக்கிய தேசிய முன்னணி ராஜபக்சே மீது 3 நம்பிக்கையி...