புதன்கிழமை, ஜூலை 1
Shadow

Author: Kodanki

ஏஆர் முருகதாஸ் வெளியிட்ட ஜருகண்டி பர்ஸ்ட் லுக்..!

ஏஆர் முருகதாஸ் வெளியிட்ட ஜருகண்டி பர்ஸ்ட் லுக்..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
நடிகர் ஜெய் நடிப்பில் இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் 'கலகலப்பு 2' படம் பிப்ரவரி 9-ஆம் தேதி வெளியாகவுள்ளது. இதனை தொடர்ந்து இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் ஜெய் நடிப்பில் 'பார்ட்டி' படம் பிப்ரவரி 9-ஆம் தேதி வெளியாகவுள்ளது. இதனை அடுத்து நடிகர் ஜெய் 'எத்தன்' படத்தை இயக்கிய இயக்குனர் சுரேஷ் இயக்கத்தில் 'நீயா 2' என்ற படத்திலும், அறிமுக இயக்குனர்களான ஷியாம் மற்றும் பிரவின் ஆகியோர் இணைந்து இயக்கவுள்ள 'மாங்கல்யம் தந்துனானே னா' என்ற படத்திலும், இயக்குனர் பிச்சுமணி இயக்கும் 'ஜருகண்டி' படத்திலும் தற்போது பிசியாக நடித்து வருகிறார். இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக நடிகை மற்றும் மாடல் அழகியான ரெபா மோனிகா ஜான் நடித்து வருகிறார். இவர் இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் ஜெய் மற்றும் பல திரை வட்டாரங்கள் நடிப்பில் உருவாகியுள்ள 'பார்ட்டி' படத்தில் கீர்த்தி என்ற காதாபாத்திரத்தில் இணைந்துள...
பாலாவின் நாச்சியார் படத்தோடு மோதும் கிருஷ்ணவின் வீரா..!

பாலாவின் நாச்சியார் படத்தோடு மோதும் கிருஷ்ணவின் வீரா..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
இயக்குனர் ராஜா ராமன் இயக்கத்தில் நடிகர் கிருஷ்ணா நாயகனாக நடித்துள்ள படம் 'வீரா'. இந்த படத்தில் நடிகர் கருணாகரன் நண்பன் கதாபத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படத்திற்கு பாக்கியம் சங்கர் கதை அமைத்துள்ளார். இந்த படத்தில் நடிகர் கிருஷ்ணாவிற்கு ஜோடியாக நடிகை ஐஸ்வர்யா மேனன் இணைந்துள்ளார். இவர் முன்னதாக தமிழ், கன்னடா, மலையாளம் போன்ற மொழிகளில் ஐந்து படங்களில் நடித்துள்ளார். இவர் தமிழ் திரையுலகில் அறிமுகமான முதல் படம் 'தீயா வேல செய்யணும் குமாரு'. இந்த படத்தில் நாயகி ஹன்சிகாவுக்கு தோழி கதாபத்திரத்தில் நடித்திருந்தார் இதனை தொடர்ந்து இவர் நாயகியாக அறிமுகமாகும் படம் 'வீரா'. இந்த படம் டிசம்பர் மாதம் வெளியாவதாக படக்குழு அறிவித்தது. ஆனால் இந்த படம் வெளியாகும் நாளில் கிட்டத்தட்ட 8 படங்கள் வெளியாக இருந்தது. இதனால் திரையரங்குகள் கிடைக்காமல் தள்ளி போனது. இந்நிலையில் தற்போது இந்த படத்தின் வெளியீடு தேதியை நட...
மார்ச் கடைசிக்கு போன  விஷாலின் இரும்புத்திரை ரிலீஸ்..!

மார்ச் கடைசிக்கு போன விஷாலின் இரும்புத்திரை ரிலீஸ்..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
விஷால் நடிப்பில் அடுத்ததாக வெளியாக இருக்கும் படம் `இரும்புத்திரை'. பி.எஸ்.மித்ரன் இயக்கியிருக்கும் இந்த படத்தில் அர்ஜூன் வில்லனாக நடித்திருக்கிறார். விஷால் ஜோடியாக சமந்தா நடித்திருக்கிறார். டெல்லி கணேஷ், கோபி, ரோபோ ஷங்கர், வின்சென்ட் அசோகன் உள்ளிட்ட பலரும் முக்கிய கதபாத்திரத்தில் நடித்திருக்கும் இந்த படம் சமூகத்தின் முக்கிய பிரச்னை ஒன்றை மையப்படுத்தி உருவாகி இருப்பதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். விஷால் அவரது சொந்த தயாரிப்பு நிறுவனமான விஷால் பிலிம் பேக்டரி மூலம் தயாரித்திருக்கும் இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகி இருக்கும் இந்த படத்தின் ரிலீஸ் தேதி தொடர்ந்து தள்ளிப்போகி வரும் நிலையில், படம் வருகிற மார்ச் 29-ஆம் தேதி ரிலீசாகும் என்று விஷால் அவரது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். ஏற்கனவே பொங்கலுக்கு ரிலீஸ் ஆகும்...
மோடி கருத்துக்கு எதிர்ப்பு… பாஜக ஆபீஸ் வாசலில் பகோடா கடை போட்ட இளைஞரகள்..!

மோடி கருத்துக்கு எதிர்ப்பு… பாஜக ஆபீஸ் வாசலில் பகோடா கடை போட்ட இளைஞரகள்..!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
மோடி கருத்துக்கு எதிர்ப்பு... பாஜக ஆபீஸ் வாசலில் பகோடா கடை போட்ட இளைஞரகள்..! சமீபத்தில்  தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த பிரதமர் மோடியிடம், ஒவோர் ஆண்டும் ஒரு கோடி வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என கடந்த 2013-ல் கொடுத்த வாக்குறுதி குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த பிரதமர் மோடி, "பக்கோடா விற்று நாள் ஒன்றுக்கு ரூ.200 சம்பாதிப்பவர்கூட வேலைவாய்ப்பை பெற்றவர்தானே" என பதிலளித்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் 'கர்நாடகா ஃபார் எம்ப்ளாய்மென்ட்' (Karnataka for Employment) என்ற அமைப்பைச் சேர்ந்த இளைஞர்கள் பாஜக அலுவலகம் முன்னர் பக்கோடா கடை போட்டு தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தனர். அவர்கள் அனைவரும் நீல நிறையில் உடை அணிந்திருந்தனர். இந்த அமைப்பானது, வேலையில்லை என்றால் வாக்கு இல்லை என்ற கொள்கையோடு செயல்பட்டு வருகிறது. மேலும், இந்த அமைப்பின் தலைவர் முட்டுராஜ் கூறும்போது,...
“ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்” படத்தின் Sneak Peek வீடியோ

“ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்” படத்தின் Sneak Peek வீடியோ

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள்
ஆறுமுக குமார் இயக்கத்தில் உருவாகி வரும் படம் ஒரு ‘ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்’. இப்படத்தில் விஜய்சேதுபதி, கெளதம் கார்த்திக் இணைந்து நடிக்கின்றனர். ஆறுமுக குமார் இயக்கத்தில் உருவாகி வரும் படம் ஒரு ‘ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்’. இப்படத்தில் விஜய்சேதுபதி, கெளதம் கார்த்திக் இணைந்து நடிக்கின்றனர். மேலும், நிஹாரிகா, ரமேஷ் திலக் உடன் நடிக்கின்றனர். ஜஸ்டின் பிரபாகரன் இப்படத்திற்கு இசையமைக்கிறார். இப்படத்தின் மோஷன் போஸ்டர் யூ-டியூபில் வெளியாகி நல்ல வரவேற்ப்பு பெற்றது. இப்படம் வரும் பிப்ரவரி 2-ம் தேதி வெளியாக உள்ள நிலையில் தற்போது இப்படத்தின் Sneak Peek வீடியோ காட்சி வெளியிட்டுள்ளது படக்குழு....
பத்மாவத் படத்துக்கு பாகிஸ்தான் அனுமதி… மலேசியாவில் தடை..!

பத்மாவத் படத்துக்கு பாகிஸ்தான் அனுமதி… மலேசியாவில் தடை..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள்
தீபிகா படுகோனே, ரன்வீர்சிங், ஷாகித் கபூர் நடித்துள்ள பத்மாவத் படத்துக்கு தடை விதித்து மலேசியா நாட்டு தணிக்கை குழு  உத்தரவிட்டுள்ளது. 14-ம் நூற்றாண்டில் சித்தூர் சாம்ராஜ்ஜியத்தை ஆட்சி செய்த ராணி பத்மாவதியை மையமாக வைத்து பத்மாவதி என்ற பெயரில் வரலாற்று திரைப்படம் தயாரானது. இதில் ராணி பத்மாவதி மற்றும் ராஜபுத்ர வம்சத்தினர் குறித்தும் அவதூறான காட்சிகள் இடம்பெற்று இருப்பதாக கூறி படத்துக்கு தடை விதிக்கக் கோரி சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. ஆனால், சுப்ரீம் கோர்ட்டு தடை விதிக்க மறுத்துவிட்டது. இதற்கிடையே, கடந்த வியாழக்கிழமை இந்தியா முழுவதும் பத்மாவத் திரைப்படம் வெளியாகி, 4 நாள்களில் 100 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வருவாயை ஈட்டியுள்ளது. இந்நிலையில், முஸ்லிம்கள் உணர்வை புண்படுத்துவதாக மலேசியாவில் பத்மாவத் படத்துக்கு தணிக்கை குழு தடை விதித்து உள்ளது. இதுதொடர்பாக தணிக்கை வாரிய அதிகார...
ஆர்கானிக் திருடன் – விஜய்சேதுபதி விளக்கம்!

ஆர்கானிக் திருடன் – விஜய்சேதுபதி விளக்கம்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
அறிமுக இயக்குனர் ஆறுமுக குமார் இயக்கத்தில் விஜய்சேதுபதி, கௌதம் கார்த்திக், காயத்ரி, நிகாரிகா முதலானோர் நடித்துள்ள படம் ‘ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்’. இந்த படம் வருகிற 2-ஆம் தேதி வெளியாகிறது. இதனையொட்டி இப்படத்தின் புரொமோஷன் வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வர, இந்த பட விளம்பரங்களில் ‘ORGANIC THIEF’ என்ற வார்த்தையை மையப்படுத்தியுள்ளார்கள். இந்நிலையில் ‘ORGANIC THIEF’ என்றால் என்ன என்பதற்கு விஜய்சேதுபதி விளக்கம் அளித்துள்ளார். ‘ஒரு திருடன் திருடும்போது அந்த திருட்டு, யாரது மனதையும் புண்படுத்தவோ வேதனைப்படுத்துவது மாதிரியோ இருக்கக் கூடாது, அப்படி திருடுபவர் தான் ஆர்கானிக் திருடன்’ என்று விளக்கம் தந்துள்ளார் விஜய்சேதுபதி! ஸ்ரீசரவணன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு ஜஸ்டின் பிரபாகர் இசை அமைத்துள்ளார்....