புதன்கிழமை, ஜூலை 1
Shadow

Author: Kodanki

ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து கொடுக்க வேண்டிய நாளின்று!

ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து கொடுக்க வேண்டிய நாளின்று!

HOME SLIDER, செய்திகள்
தமிழகம் முழுவதும் இன்று (மார்ச் 11) இரண்டாவதுகட்டமாக, ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் நடைபெற உள்ளது. போலியோ சொட்டு மருந்து முகாம்கள் தமிழ்நாட்டில் சிறப்பாக நடைபெறுவதால் தமிழ்நாடு 14ஆவது வருடமாகப் போலியோ இல்லாத நிலையை அடைந்துள்ளதாகத் தமிழக அரசு வெளியிட்ட செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்படுகிறது. இந்த மருந்து குழந்தைகளுக்கு ஏற்படும் போலியோ எனும் இளம்பிள்ளைவாத நோயை ஒழிக்க வழங்கப்படுகிறது. இதற்காக ஆண்டுதோறும் இரண்டுகட்ட சிறப்பு முகாம்கள் நடத்தப்படும். தமிழக சுகாதாரத் துறை சார்பில் குழந்தைகளுக்கு முதல் தவணையாக கடந்த ஜனவரி 28ஆம் தேதி போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது. இரண்டாவது தவணையாக இன்று காலை 7 மணி முதல் 5 மணி வரை மாநிலம் முழுவதும் போலியோ தடுப்பு சொட்டு ...
இலங்கைக் கலவரம் குறித்து விசாரணை நடத்த கமிஷன் : சிறிசேனா அறிவிப்பு

இலங்கைக் கலவரம் குறித்து விசாரணை நடத்த கமிஷன் : சிறிசேனா அறிவிப்பு

HOME SLIDER, செய்திகள்
இலங்கையில் கண்டி மாகாணத்தின் மத்திய பகுதி ஒன்றில், பெரும்பான்மை சிங்கள பெளத்த மக்களுக்கும், சிறுபான்மை முஸ்லிம் மக்களுக்கும் இடையே எற்பட்ட மோதலை அடுத்து, மார்ச் மாதம் 6-ஆம் தேதி, அங்கு அவசர நிலை பிறப்பிக்கப்பட்டது. இதனை அங்குள்ள எதிர்கட்சிகள் கடுமையாக எதிர்த்துள்ளன. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், பிரதமர் ரணில் விக்ரம சிங்கேவும், கலவரத்தை சரியான முறையில் கையாள தவறிவிட்டனர் என்று எதிர்கட்சிகள் கடுமையாக தாக்கி உள்ளன. அதே சமயம் இலங்கைகண்டியில் முஸ்லிம்களின் வீடுகள், வர்த்தக நிலையங்கள், மசூதிகள் தாக்குதல்களுக்கு இரையாகின. கடந்த திங்கள் முதல் சனிக்கிழமை வரை நடந்த வன்முறை சம்பவங்களில் இரண்டு பேர் உயிரிழந்தனர். இந்த வன்முறை சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த கமிஷன் ஒன்றை இலங்கை அதிபர் சிறிசேனா அமைத்துள்ளார். அந்த விசாரணை கமிஷனில் 3 ஓய்வு பெற்ற நீதிபதிகள் உறுப்பினர்களாக இருப்பார்கள். அந்த ...
பத்திரிக்கையாளர் ஞானியை போன்ற ஒரு கேரக்டரில் சத்யராஜ் நடிக்கும் ‘நோட்டா’

பத்திரிக்கையாளர் ஞானியை போன்ற ஒரு கேரக்டரில் சத்யராஜ் நடிக்கும் ‘நோட்டா’

சினி நிகழ்வுகள்
ஸ்டுடியோகிரீன் சார்பில் கே.ஈ. ஞானவேல்ராஜா தயாரிக்கும் புதிய படத்திற்கு ‘நோட்டா ’என பெயரிடப்பட்டுள்ளது. தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு மொழிகளில் ஒரே சமயத்தில் தயாராகும் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று வெளியிடப்பட்டது. இதற்கான பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் விமர்சையாக நடைபெற்றது. இதில் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா, படத்தின் நாயகன் விஜய் தேவரகொண்டா, நாயகி மெஹ்ரீன், நடிகர் சத்யராஜ், படத்தின் இயக்குநர் ஆனந்த் சங்கர், ஒளிப்பதிவாளர் சாந்தா ரவி.கே. சந்திரன், இசையமைப்பாளர் சாம் சி.எஸ், கலை இயக்குநர் கிரண், எடிட்டர் ரேமாண்ட் டெரீக் க்ராஸ்தா, ஸ்டைலீட் ஷ்ராவ்யா சர்மா என படத்தில் பணியாற்றும் தொழில்நுட்ப கலைஞர்களும், தயாரிப்பாளர் ஷிபு தமின்ஸ், முன்னணி இயக்குநர்கள் பா. இரஞ்சித், எஸ்எம்எஸ் ராஜேஷ், டீகே, ஷாந்தகுமார், விஜய் வரதராஜ், சந்தோஷ் பி. ஜெயக்குமார் ஆகியவர்களு...
மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல் ஈரோடு,கோபி டூர் ஸ்டார்ட்!

மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல் ஈரோடு,கோபி டூர் ஸ்டார்ட்!

HOME SLIDER, செய்திகள்
ஈரோடு, சத்தியமங்கலம், கோபிசெட்டிபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் தனது சுற்றுப்பயணத்தை மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல் இன்று தொடங்குகிறார். முன்னதாக கமல்ஹாசன் மதுரையில் கடந்த மாதம் 21ஆம் தேதி நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் மக்கள் நீதி மய்யம் என்ற தனது கட்சியின் பெயரையும் கொடியையும் அறிமுகப்படுத்தினார். அதன் பின்னர் அரசியல் நடவடிக்கைகளில் வேகமெடுத்த அவர், தினமும் தனது கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். அடுத்த பொதுக்கூட்டத்தை ஏப்ரல் முதல் வாரத்தில் திருச்சியில் நடத்தவுள்ளதாக அவர் அறிவித்த நிலையில், மகளிர் தினத்தை முன்னிட்டு நேற்று முன்தினம்(மார்ச் 8) சென்னை ராயப்பேட்டையில் உள்ள ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் மகளிர் தின விழாவை நடத்தினார். போக்குவரத்து சோதனையின்போது காவலர் தாக்கியதில் உயிரிழந்த உஷாவின் குடும்பத்தினருக்குத் தமிழக அரசு ரூ. 7 லட்சம் அறிவித்துள்ள நிலையில், ரூ. 10 லட்சம் நிதியுதவ...
ஸ்ரீதேவி மரணத்தில்  மர்மா? – மத்திய அரசு மறுப்பு

ஸ்ரீதேவி மரணத்தில் மர்மா? – மத்திய அரசு மறுப்பு

சினி நிகழ்வுகள்
பிரபல நடிகை ஸ்ரீதேவி, துபாயில் திருமண நிகழ்ச்சி ஒன்றுக்காக சென்றிருந்தபோது, கடந்த பிப்ரவரி 24-ஆம் தேதி  திடீரென மரணம் அடைந்தார். அவரது மரணம், திரையுலகைச் சேர்ந்தவர்களுக்கும், அவரது ரசிகர்களுக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவரது மரணத்துக்கான காரணம் உடனடியாகத் தெரியவில்லை என்பதால், அதில் மர்மம் இருப்பதாகப் பரபரப்பாக பேசப்பட்டது. அதனால், அவரது உடலை இந்தியாவுக்கு கொண்டு வருவதில் தாமதம் ஏற்பட்டது. ஸ்ரீதேவியின் உடல், துபாய் நகரில் உள்ள மருத்துவக் குழுவினரால் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. பின்னர், அவர் தங்கியிருந்த ஹோட்டலின் குளியலறையில் நேரிட்ட விபத்தில் உயிரிழந்ததாக துபாய் அதிகாரிகள் முடிவு செய்தனர். அதன் பிறகு, அவரது உடல், இந்தியாவுக்கு பிப்ரவரி 27-ஆம் தேதி தனி விமானம் மூலம் வரப்பட்டது. ஸ்ரீதேவியின் உடல் மும்பையில் உள்ள அவரது வீட்டிலும், பின்னர் வீட்டுக்கு அருகில் உள்ள மைதானத்தில...
நம்ம தமிழகத்தில்தான் காவலர்கள் தற்கொலை அதிகம்!

நம்ம தமிழகத்தில்தான் காவலர்கள் தற்கொலை அதிகம்!

HOME SLIDER
இந்தியர்களின் சராசரி ஆயுட்காலம் 67 வயது எனும் நிலையில் தமிழகக் காவலர்களின் பலர் அற்பாயுளில் இறந்து விடுவது அதிகரித்து வருகிறது. 24 மணிநேரமும் ‘காவலர்'களாக மட்டுமே வாழும் பணிச் சூழல்தான் காவலர்களின் முதல் எதிரி. குடும்பத்துடன் நேரம் செலவிடுதல், நண்பர்களுடன் இணைந்திருத்தல், பொழுதுபோக்கு, சமூகக் கலப்பு என சராசரி குடிமக்கள் அனுபவிக்கும் உரிமைகள் காவலர்களுக்கு மறுக்கப் படுகிறது மனஅழுத்தம் அதிகம்: பெரும்பாலான காவலர்கள் படபடப்பு, புலம்பல், சந்தேகம், குழப்பம், தெளிவின்மை என எதிர்மறை உணர்ச்சிகளில் அவர்கள் உழல்கின்றனர். முக்கியமாக குடும்பத்துடன் நேரம் செலவிடவும் அன்பு செலுத்தவும் பணிச்சூழல் இடமளிக்க வில்லை. இதனால், ஏற்படும் மன அழுத்தம் தற்கொ லைக்கும் இளவயது மரணங்களுக்கும் காரணமாகிறது என்று கடந்த சில வருடங்களாகவே தகவல்கள் வெளி வந்த நிலையில் தற்போதும் காவலர்கள் தற்கொலை செய்துகொள்வதில் தமிழகம் முதலிடத்...
சென்னை கே.கே. நகரில் கல்லூரி வாசலில் மாணவி கொலை! – திடுக் தகவல்கள்

சென்னை கே.கே. நகரில் கல்லூரி வாசலில் மாணவி கொலை! – திடுக் தகவல்கள்

HOME SLIDER, செய்திகள்
சென்னை கே.கே.நகரில் உள்ள மீனாட்சி கல்லூரியில் வாசலில் வைத்து நேற்று அஸ்வினி என்ற முதலாமாண்டு பி.காம். மாணவியை அழகேசன் என்ற இளைஞர் கொலை செய்தார். முதலில் அழகேசனின் ஒருதலை காதலை ஏற்றுக்கொள்ளாததால் அஸ்வினி கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் தற்போது அஸ்வினி கொலையில் புதிய திருப்பமாக பல தகவல்கள் வெளியாகி உள்ளன. கொலை செய்த இளைஞர் அழகேசனும், கொலை செய்யப்பட்ட அஸ்வினியும் சிறு வயது முதலே நன்கு அறிந்தவர்கள். படிப்பு சரியாக வராததால், கிடைத்த வேலையைப் பார்த்த அழகேசன், தண்ணீர் கேன் போடுவது, மாநகராட்சி ஒப்பந்த ஊழியராக பணியாற்றுவது என்று கடுமையாக உழைத்துப் பணம் சேர்த்துள்ளார். தந்தையை இழந்து வறுமையில் வாடிய அஸ்வினியின் கல்விச் செலவுக்கு அழகேசன் உதவியுள்ளதாக கூறப்படுகிறது. இது அஸ்வினியின் தாய்க்கும் தெரிந்தே நடந்துள்ளது. இவர்கள் இருவரின் காதலும் அஸ்வினியின் உறவினர்களுக்கு தெரிய வர, அ...
கேரள அரசு விருது பெறும் கேணி பட இயக்குநர் எம் ஏ நிஷாத்!

கேரள அரசு விருது பெறும் கேணி பட இயக்குநர் எம் ஏ நிஷாத்!

CINI NEWS, சினி நிகழ்வுகள்
தமிழக - கேரள எல்லையில் நடக்கிற தண்ணீருக்கான பிரச்சினையை மையமாக வைத்து சமீபத்தில் வெளியான திரைப்படம் "கேணி". பார்த்திபன், ஜெயப்பிரதா, ரேவதி, அனு ஹாசன், ரேகா, நாசர், ஜாய் மேத்யூ, பார்வதி நம்பியார், எம்.எஸ்.பாஸ்கர், தலைவாசல் விஜய், ஆகியோரின் நடிப்பில் உருவாகியிருந்த இப்படத்தில், தண்ணீருக்கு யார் சொந்தக்காரன்?.. நிலம், ஆகாயம், காற்று போல தண்ணீரும் எல்லாருக்கும் பொதுவானது தானே?.. அதை எப்படி தனிமனிதன் சொந்தம் கொண்டாட முடியும்? என ஏராளமான கேள்விகளை முன் வைத்திருந்தார் இயக்குநர் எம் ஏ நிஷாத்.    ப்ராகிரண்ட் நேச்சர் ஃப்லிம் கிரியேஷன்ஸ் சார்பில் சஜீவ் பீ.கே, ஆன் சஜீவ் தயாரிப்பில், தமிழ், மலையாளம் என இரண்டு மொழிகளுமே வெளியாகி இருந்த இந்தப்படத்தில்  கிட்டத்தட்ட முல்லைப் பெரியாறு பிரச்சினை போலவே இருந்த கதையை மிகவும் கவனமுடன் கையாண்டிருந்தார் இயக்குநர்.    தமிழகத்தில் பத்திரிக்கையாளர்களின் பாராட்...
மீளமுடியாத நோயுள்ளவர்களுக்கு ‘கருணைக்கொலை’ – இந்திய  சுப்ரீம் கோர்ட் அனுமதி

மீளமுடியாத நோயுள்ளவர்களுக்கு ‘கருணைக்கொலை’ – இந்திய சுப்ரீம் கோர்ட் அனுமதி

NEWS, செய்திகள்
சுப்ரீம் கோர்ட்டில், ‘காமன்காஸ்’ என்ற தன்னார்வ தொண்டு அமைப்பு 2005-ம் ஆண்டு ஒரு பொது நல வழக்கு தொடுத்தது. அந்த வழக்கில், ‘தீராத நோய் உடையவர்கள், செயலற்ற நிலையில் முடங்கி, படுத்த படுக்கையாக கிடந்து வாழ விரும்பாதபோது, விதிமுறைகளுக்கு உட்பட்டு, அவர்களுக்கு அளிக்கப்பட்டு வருகிற செயற்கை சுவாசத்தை அகற்றி, கருணை கொலை செய்வதற்கு அனுமதிக்க வேண்டும்’ என்று கூறப்பட்டு இருந்தது. அது மட்டுமின்றி, ‘அரசியல் சாசனம் பிரிவு 21-ன் கீழ், கண்ணியத்துடன் வாழ்வதற்கு எப்படி ஒரு மனிதருக்கு அடிப்படை உரிமை இருக்கிறதோ, அதே போன்று கண்ணியத்துடன் மரணத்தை தழுவுவதற்கும் உரிமை உண்டு என்று அறிவிக்க வேண்டும்’ என கூறப்பட்டு இருந்தது. இந்த வழக்கை சுப்ரீம் கோர்ட் விசாரணைக்கு ஏற்றது. இதில் டெல்லி மருத்துவ கவுன்சில் ஒரு தரப்பினராக சேர்ந்து கொள்ளவும், கருணை கொலை தொடர்பான ஆவணங்களை தாக்கல் செய்யவும் சுப்ரீம் கோர்ட் 2006-ம் ஆண்...
கேளிக்கை வரியை எதிர்த்து திரையரங்குகள் 16-ந்தேதி முதல் மூடப்படும்..!

கேளிக்கை வரியை எதிர்த்து திரையரங்குகள் 16-ந்தேதி முதல் மூடப்படும்..!

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள்
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தினர் டிஜிட்டல் சேவை அமைப்புகளின் கட்டண விகிதங்களை எதிர்த்து கடந்த 1-ந்தேதி முதல் புதிய படங்களை திரைக்கு கொண்டுவராமல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு உள்ளனர். இதனால் திரையரங்குகளில் வசூல் குறைந்துள்ளது. கூட்டம் வராததால் பல தியேட்டர்களில் சினிமா காட்சிகளும் ரத்து செய்யப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தின் அவசர கூட்டம் சென்னையில் நேற்று நடந்தது. இந்த கூட்டத்துக்கு சங்கத்தின் பொதுச்செயலாளர் பன்னீர்செல்வம் தலைமை தாங்கினார். தமிழ்நாடு முழுவதிலும் உள்ள திரையரங்கு உரிமையாளர்கள் கூட்டத்தில் கலந்துகொண்டனர். இதில் பல்வேறு பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்பட்டன. திரையரங்குகளுக்கு அரசு 8 சதவீதம் கேளிக்கை வரி விதித்துள்ளது. இந்த வரியை முற்றிலும் நீக்கவேண்டும் என்று வற்புறுத்தப்பட்டது. திரையரங்குகளுக்கான லைசென்ஸ் ...