ஞாயிற்றுக்கிழமை, ஜூன் 28
Shadow

Author: Kodanki

போதைக்கு அடிமையான ரெஜினா..!

போதைக்கு அடிமையான ரெஜினா..!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகைகள்
தமிழில் ‘கேடி பில்லா கில்லாடி ரங்கா’, ‘ராஜதந்திரம்’ படம் மூலம் புகழ் பெற்றவர் நடிகை ரெஜினா. இவரது நடிப்பில் தற்போது ‘சிலுக்குவார்பட்டி சிங்கம்’, ‘நெஞ்சம் மறப்பதில்லை’, ‘பார்ட்டி’ ஆகிய படங்கள் உருவாகி வருகிறது. மேலும் கார்த்திக், கௌதம் கார்த்திக் நடிப்பில் உருவாகும் ‘மிஸ்டர் சந்திரமௌலி’ படத்திலும் நடித்து வருகிறார். இவர் தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கிலும் முன்னணி நடிகையாக வலம் வந்துக் கொண்டிருக்கிறார். தற்போது தெலுங்கில் நானி தயாரித்து வரும் படம் ‘அவே’, இந்த படத்தில் ரவி தேஜா, காஜல் அகர்வால், நித்யா மேனன் ஆகியோரிடம் ரெஜினா நடித்து வருகிறார். இதில், போதைக்கு அடிமையான பெண்ணாக நடிக்கிறார் ரெஜினா. இது பற்றி கூறியுள்ள அவர், “எனக்கு பெயர் சொல்லும் படமாகவும், வேடமாகவும் இது அமையும்’ என்றார். மேலும் இந்த வேடம் மிகவும் சவாலாக இருந்ததாகவும் ரெஜினா கூறியிருக்கிறார்....
உயிரிழப்பு, காயங்களுக்கான விபத்து காப்பீடு எவ்வளவு?: தமிழக அரசு அறிவிப்பு

உயிரிழப்பு, காயங்களுக்கான விபத்து காப்பீடு எவ்வளவு?: தமிழக அரசு அறிவிப்பு

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
சாலைப் பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் போக்குவரத்து பணியாளர்களின் சிறந்த செயல்பாடுகளையும் மீறி தவிர்க்க முடியாத சூழ்நிலைகளில், சாலை விபத்துகள் நடைபெறுகின்றன. விபத்து இழப்பீட்டினை சரியான நேரத்தில் வழங்க முடியாததால் கடந்த ஆண்டு ஜூலை 23-ந்தேதி வரையிலான தகவல் அடிப்படையில் 652 அரசு பஸ்கள் நீதிமன்ற பிணையில் உள்ளன. மேலும், சுங்க கட்டணமாக மாதம் ஒன்றுக்கு சராசரியாக ரூ.12 கோடியை அரசு போக்குவரத்துக்கழகங்கள் செலுத்துகின்றன. அண்டை மாநிலங்களில் காப்பீடு மற்றும் சுங்கவரி செலுத்தும் வகையில் பஸ் கட்டணங்களுடன் ஒரு பகுதியாக வசூலிக்கப்படுகின்றன. ஆனால், தமிழ்நாட்டில் தற்போது காப்பீட்டுத் தொகை மற்றும் சுங்கவரி பயண கட்டணத்துடன் வசூலிக்கப்படுவதில்லை. எனவே விபத்து இழப்பீடு, விபத்து தடுப்பு மற்றும் சுங்க கட்டணத்துக்கான ஒருங்கிணைந்த நிதி ஒன்றை புதிதாக உருவாக்க தமிழக அரசு முடிவெடுத்து உள்ளது. இந்த நிதியத்தின் க...
சிவகார்த்திகேயன் வெளியிட்ட அதர்வா  நடிக்கும் ‘பூமராங்’ டைட்டில் லுக்..!

சிவகார்த்திகேயன் வெளியிட்ட அதர்வா நடிக்கும் ‘பூமராங்’ டைட்டில் லுக்..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
‘இவன் தந்திரன்’ படத்தைத் தொடர்ந்து ‘பூமராங்’ எனும் புதிய படத்தை இயக்கவிருக்கிறார் ஆர்.கண்ணன். அதர்வா நாயகனாக நடிக்கும் இப்படத்தில் அவருக்கு ஜோடியாக ‘எனை நோக்கிப் பாயும் தோட்டா’ படத்தில் நடிக்கும் மேகா ஆகாஷ் நடிக்கிறார். இவர்களுடன் ஆர்.ஜே.பாலாஜி, சதீஷ், உபென் பட்டேல், சுஹாசினி மணிரத்னம் ஆகியோரும் நடிக்கிறார்கள். ராதன் இசையமைக்கும் இப்படத்திற்கு பிரசன்னா எஸ் குமார் ஒளிப்பதிவு செய்ய, எடிட்டிங் பணிகளை மேற்கொள்கிறார் ஆர்.கே.செல்வா. ‘பூமராங்’ படத்தின் டைட்டில் லுக் போஸ்டரை  சிவகார்த்திகேயன் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார். இன்று இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் துவங்கியுள்ளது. இப்படத்தை இயக்குனர் கண்ணனே சொந்த பேனரில் தயாரிப்பது குறிப்பிடத்தக்கது....
‘தளபதி’யை தொடர்ந்து ‘கேணி’யில் இணைந்த கே.ஜே.யேசுதாஸ், எஸ்.பி.பி..!

‘தளபதி’யை தொடர்ந்து ‘கேணி’யில் இணைந்த கே.ஜே.யேசுதாஸ், எஸ்.பி.பி..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள்
ஃப்ராகிரண்ட் நேச்சர் ஃபிலிம் கிரியேஷன்ஸ்’ நிறுவனம் சார்பாக சஜீவ் பி.கே., ஆன் சஜீவ் ஆகியோர் தயாரித்துள்ள படம் ‘கேணி’. ‘கிணறு’ என்ற பெயரில் மலையாளத்திலும் உருவாகியுள்ள இந்த படத்தை மலையாளத்தில் 7 படங்களை இயக்கியுள்ள எம்.ஏ.நிஷாத் இயக்கியுள்ளார். இவர் தமிழில் இயக்கும் முதல் படமான ‘கேணி’யில் நாசர், பார்த்திபன், பசுபதி, ஜெயப்பிரதா, ரேவதி, அனுஹாசன், ரேகா, அர்ச்சனா, பிளாக் பாண்டி என பெரும் நட்சத்திர பட்டாளமே நடித்திருக்கிறது. இந்த படத்தின் பாடல்களுக்கு மலையாள இசை அமைப்பாளர் எம்.ஜெயச்சதிரன் இசை அமைக்க, ‘விக்ரம் வேதா’ படப் புகழ் சாம்.சி. பின்னணி இசை அமைத்துள்ளார். இந்த படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா  சென்னையில் நடைபெற பாடல்களை நடிகை சுஹாசினி வெளியிட்டார். இந்த படம் குறித்து இயக்குனர் எம்.ஏ.நிஷாத் கூறும்போது, ‘‘கேணி’ நான் இயக்கும் முதல் தமிழ் படம். நான் இதற்கு முன் இயக்கிய அனைத்து மலையா...
‘கீ’க்காக ‘இரும்புத்திரை’ ரிலீஸை தள்ளி வைத்த விஷால்..!

‘கீ’க்காக ‘இரும்புத்திரை’ ரிலீஸை தள்ளி வைத்த விஷால்..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, Trailer, சினி நிகழ்வுகள், செய்திகள், டிரைலர்கள், நடிகர்கள்
‘கீ’க்காக ‘இரும்புத்திரை’ ரிலீஸை தள்ளி வைத்த விஷால்! ஜீவா, நிக்கி கல்ராணி நடிப்பில் அறிமுக இயக்குனர் காளீஸ் இயக்கியுள்ள படம் ’கீ’. மைக்கேல் ராயப்பனின் ‘குலோபல் இன்ஃபோடெயின்மென்ட்’ நிறுவனம் சார்பில் அவரது மகன் செராபியன் ராயசேவியர் தயாரித்துள்ள இந்த படத்திற்கு விஷால் சந்திரசேகர் இசை அமைத்துள்ளார். இந்த படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் நடிகரும், தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவரும், நடிகர் சங்க செயலாளருமான விஷால் உட்பட பல திரையுலக பிரபலங்கள் கலந்து கொண்டனர். https://youtu.be/IWqeTxCdsrk மைக்கேல் ராயப்பன் இதற்கு முன் தயாரித்த ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ படம் பெரும் நஷ்டத்தை ஏற்படுத்த, இது சம்பந்தமாக சிம்பு மீது தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளித்திருந்தார் மைக்கேல் ராயப்பன். இந்த விஷயத்தின் மீது ஏன் விஷால் நடவடிக்கை எடுக்கவில்லை என்று இவ்விழாவில் பேசு...
எம்.ஜி.ஆர். பட தொடக்க விழாவில் பரபரப்பை ஏற்படுத்திய ரஜினி – கமல்

எம்.ஜி.ஆர். பட தொடக்க விழாவில் பரபரப்பை ஏற்படுத்திய ரஜினி – கமல்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
எம்.ஜி.ஆர். தயாரித்து நடித்து இயக்கிய படம் ‘உலகம் சுற்றும் வாலிபன்’.1973-ல் வெளியாகி மிகப்பெரிய சாதனை படைத்த இந்த படம் அந்த காலகட்டத்தில் மிகவும் பேசப்பட்டது. இந்த படத்தின் இறுதியில், ‘விரைவில் கிழக்கு ஆப்ரிக்காவில் ராஜு’ என்று எம்.ஜி.ஆர். தனது உலகம் சுற்றும் வாலிபன் படத்தின் 2-வது பாகம் பற்றி டைட்டில் போட்டு இருந்தார். இந்த படத்தை கிழக்கு ஆப்ரிக்காவின் பின்னணியில் பிரமாண்டமாக தயாரிக்க எம்.ஜி.ஆர். திட்டமிட்டிருந்தார். ஆனால் அவர் தீவிர அரசியலில் இறங்கியதால், அந்த படம் தயாராகவில்லை. எம்.ஜி.ஆரின் அந்த கனவை நிறைவேற்றும் வகையில், ‘கிழக்கு ஆப்ரிக்காவில் ராஜு’என்ற தலைப்பில் எம்.ஜி.ஆரின் அனிமே‌ஷன் படத்தை வேல்ஸ் பிலிம் இண்டர்நே‌ஷனல் சார்பில் ஜசரிகணேஷ், பிரபுதேவா ஸ்டுடியோஸ் சார்பில் பிரபுதேவா ஆகியோர் தயாரிக்கிறார்கள். அருள் மூர்த்தி இயக்குகிறார். இந்த படத்தின் தொடக்கவிழா எம்.ஜி.ஆரின் 101-வத...
முத்தையா இயக்கத்தில் கவுதம் கார்த்திக் நடிக்கும் புதிய படம் ‘தேவர் ஆட்டம்’

முத்தையா இயக்கத்தில் கவுதம் கார்த்திக் நடிக்கும் புதிய படம் ‘தேவர் ஆட்டம்’

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள்
முத்தையா இயக்கத்தில் கவுதம் கார்த்திக் நடிக்கும் புதிய படத்திற்கு 'தேவர் ஆட்டம்' என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. 'குட்டிப்புலி', 'கொம்பன்', 'மருது', 'கொடிவீரன்' ஆகிய படங்களை இயக்கியவர் முத்தையா. தற்போது கவுதம் கார்த்திக்கை நாயகனாக வைத்து புதிய படமொன்றை இயக்க உள்ளார். இப்படத்துக்கு 'தேவர் ஆட்டம்' என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் இப்படத்தைத் தயாரிக்கிறது. மார்ச் முதல் வாரம் 'தேவர் ஆட்டம்' படப்பிடிப்பு தொடங்க உள்ளது. நாயகி, தொழில்நுட்பக் கலைஞர்கள் உள்ளிட்ட விவரங்களை படக்குழு விரைவில் அறிவிக்க உள்ளது. ஒரு குறிப்பிட்ட வட்டாரம், சமூகத்தின் வாழ்க்கை முறையை தன் படங்களில் பதிவு செய்வது முத்தையாவின் வழக்கம். இந்த முறை 'தேவர் ஆட்டம்' என்றே தலைப்பு வைத்திருப்பது பேசுபொருளாக மாறியுள்ளது....