வியாழக்கிழமை, ஜூலை 2
Shadow

Author: Kodanki

எஸ்வி சேகர் தனது  பதிவுக்கு வருத்தம் மட்டுமே தெரிவித்தாரே தவிர அதை மறுக்கவில்லை  -_சென்னை உயர்நீதிமன்றம்  கண்டனம்

எஸ்வி சேகர் தனது பதிவுக்கு வருத்தம் மட்டுமே தெரிவித்தாரே தவிர அதை மறுக்கவில்லை -_சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், நடிகர்கள்
எஸ்வி சேகர் தனது பேஸ்புக் பதிவுக்கு வருத்தம் மட்டுமே தெரிவித்தாரே தவிர அதை மறுக்கவில்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. நிர்மலா தேவி விவகாரம் தொடர்பாக சென்னையில் ராஜ்பவனில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் செய்தியாளர்கள் சந்திப்புக்கு ஏற்பாடு செய்தார். அந்த சந்திப்பின்போது பெண் நிருபர் ஒருவரின் கேள்விக்கு அவரது கன்னத்தை தட்டினார் ஆளுநர். இதற்கு அந்த பெண் நிருபர் கடும் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து ஆளுநர் மன்னிப்பும் கேட்டார். எனினும் மன்னிப்பை ஏற்றுக் கொண்ட பெண் நிருபர் கன்னத்தை கிள்ளயதற்கு ஆளுநர் சொன்ன காரணத்தை ஏற்கவில்லை என்றார் இந்நிலையில் எஸ்வி சேகர் தனது பேஸ்புக் பக்கத்தில் ஒரு கருத்தை பதிவிட்டிருந்தார். அதில் பெண் நிருபர்களின் தரத்தை தாழ்த்தும் அளவுக்கு அவர்களை கடுமையாக அவதூறாக விமர்சனம் செய்திருந்தார். இந்த கருத்து தமிழகத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. ...
3 வாரங்களாக தப்பி ஓடும் எஸ்.வி.சேகர்…முன்ஜாமீன் மனு மீண்டும்  டிஸ்மிஸ்

3 வாரங்களாக தப்பி ஓடும் எஸ்.வி.சேகர்…முன்ஜாமீன் மனு மீண்டும் டிஸ்மிஸ்

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
பெண் பத்திரிகையாளர்களை இழிவுபடுத்தி சமூக வலைதளத்தில் பதிவிட்டது தொடர்பான வழக்கில் பாஜகவை சேர்ந்த நடிகர் எஸ்.வி.சேகர் தாக்கல் செய்த முன்ஜாமீன் மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. பத்திரிகையாளர் லட்சுமி சுப்பிரமணியனின் கன்னத்தில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தட்டிக் கொடுத்தது சர்ச்சையானது. இந்த விவகாரத்தில் பெண் பத்திரிகையாளர்களை மிகவும் இழிவுபடுத்தி ஒரு பதிவை தமது சமூக வலைதளத்தில் எஸ்.வி.சேகர் பகிர்ந்திருந்தார். இது கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இப்பதிவு தொடர்பாக எஸ்.வி.சேகர் மீது போலீசில் புகார் கொடுக்கப்பட்டது. சென்னை போலீசாரும் ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவுகளில் எஸ்.வி.சேகர் மீது வழக்கு பதிவு செய்தனர். இதையடுத்து எஸ்.வி.சேகர் தலைமறைவானார். அத்துடன் முன்ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் எஸ்.வி.சேகர் மனுத் தாக்கல் செய்தார். இம்மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் எஸ்....
இளைஞர்களை வழிநடத்த, தமிழகத்தில் மாற்றம் காண அரசியல் களம் புகும் ஆர்.ஜே.பாலாஜி

இளைஞர்களை வழிநடத்த, தமிழகத்தில் மாற்றம் காண அரசியல் களம் புகும் ஆர்.ஜே.பாலாஜி

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், நடிகர்கள், விமர்சனம்
தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக வலம் வரும் ஆர்.ஜே.பாலாஜி அரசியலில் நுழையப்பபோவதாக சுவர்சித்திரங்கள் வரைப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்ப்படுத்தியுள்ளது. ரேடியோ ஜாக்கியான ஆர்.ஜே.பாலாஜி, தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி காமெடியன்களுள் ஒருவராக வலம் வருகிறார். அவ்வப்போது சமூக பிரச்சனைகளுக்கும் குரல் கொடுத்து வருகிறார். டுவிட்டரில் கருத்துக்களை வெளியிட்டு அவ்வப்போது பரபரப்பை ஏற்படுத்தி வரும் ஆர்.ஜே.பாலாஜி தற்போது அரசியலில் களமிறங்க இருப்பதாக வெளியான தகவலால் பரபரப்பு கூடியுள்ளது. ஆங்காங்கே சுவர்களில், மே 18-ஆம் தேதி இளைஞர்களை வழிநடத்த தமிழகத்தில் மாற்றம் காண அரசியல் களம் புகும் ஆர்.ஜே.பாலாஜி அவர்களே வருக! வருக!! வரவேற்கிறோம். மே 18-ஆம் தேதி அறிவுப்புக்காக காத்திருக்கிறோம் என்று வரையப்பட்டிருந்தது....
பழம்பெரும் நடிகர் நீலகண்டன் உடல்நலக் குறைவால் சென்னையில் காலமானார்

பழம்பெரும் நடிகர் நீலகண்டன் உடல்நலக் குறைவால் சென்னையில் காலமானார்

CINI NEWS, HOME SLIDER, Photos, செய்திகள், நடிகர்கள்
பழம்பெரும் நடிகர் ஆர்.நீலகண்டன் (வயது 82) உடல்நலக் குறைவால் சென்னையில் காலமானார். தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிப் படங்களில் நடித்துள்ள நீலு, நூற்றுக்கு நூறு, கௌரவம், வேலும் மயிலும் துணை, அவ்வை சண்முகி, சூரிய வம்சம், காதலா காதலா, தீனா, பம்மல் கே.சம்பந்தம், அந்நியன், ரெண்டு உள்ளிட்ட 150-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். மேடை நாடகங்கள், தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ள இவர், நீண்ட நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் சிகிச்சை பெற்றுவந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று மாலை காலமானார். கடைசியாக இவர் சிம்பு நடிப்பில் வெளியான `அன்பானவன் அடங்காதவன் அசராதவன்' படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது....
தள்ளிப்போன கோலிசோடா-2 ரிலீஸ்

தள்ளிப்போன கோலிசோடா-2 ரிலீஸ்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், விமர்சனம்
ரஃப் நோட் புரொடக்‌ஷன் நிறுவனம் தயாரிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘கோலிசோடா-2’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது ரிலீஸ் தேதி தள்ளிப்போயுள்ளதாக இயக்குநர் விஜய் மில்டன் அவரது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். தயாரிப்பாளர் சங்கத்தின் முதற்முயற்சியை கருத்தில் கொண்டு படத்தை அடுத்த மாதம் அதாவது, ஜூன் 14-ஆம் தேதி வெளியிட திட்டமிட்டுள்ளோம் என்று விஜய் மில்டன் கூறியிருக்கிறார். கடந்த 2014-ஆம் ஆண்டு வெளியாகிய ‘கோலிசோடா’ படத்தின் இரண்டாவது பாகமாக உருவாகி இருக்கும் இந்த படத்தில், சமுத்திரக்கனி, கிஷோர், சுபிக்ஷா, சரவணன் சுப்பையா, பரத்சீனி, இசக்கி பரத், வினோத், ரேகா, ரோகினி, ஸ்டண்ட் சிவா உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இயக்குனர் கவுதம் மேனன் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். அடையாளத்துக்கும், அங்கீகாரத்துக்கும் போராடுவதை மையமாக வைத்து உருவாகி...
இதுவரை இல்லாத புதிய தோற்றத்தில் சிவகார்த்திகேயன்

இதுவரை இல்லாத புதிய தோற்றத்தில் சிவகார்த்திகேயன்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள், விமர்சனம்
சிவகார்த்திகேயன், சமந்தா, சிம்ரன் நடிப்பில் உருவாகும் படம் ‘சீமராஜா’. தென்காசி, குற்றாலம் பகுதிகளில் வளர்ந்த ‘சீமராஜா’ படம் தமிழ் சினிமாவின் 48 நாட்கள் வேலை நிறுத்தம் காரணமாக இடையில் நின்றது. வேலை நிறுத்தம் முடிவுக்கு வந்ததால் மீண்டும் படப்பிடிப்புக்கு தயாராகி வருகிறது ‘சீமராஜா’ படக்குழு. மே 24-ஆம் தேதி தலக்கோணத்தில் படப்பிடிப்பை தொடரவிருக்கிறார்கள். இந்த காட்சிகளுக்காக சிவகார்த்திகேயன் இதுவரை நடிக்காத புதிய தோற்றத்தில் நடிக்கவுள்ளார். இந்த தோற்றத்துக்காக தாடி வளர்த்து வருகிறார். ப்ளாஷ்பேக்கில் இடம்பெறவுள்ள இந்த தோற்றம் இன்னொரு கதாபாத்திரமாக இருக்கலாம் என்கிறார்கள். ஸ்டன்ட் இயக்குநர் அனல் அரசு சிவகார்த்திகேயன் பங்குபெறும் சண்டைக்காட்சியை படம் பிடிக்கவுள்ளார். இதற்கிடையே இன்று படத்தின் இயக்குநர் பொன்ராமின் பிறந்தநாளை படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடினர். அதன் பிறகு 10 நாட்கள் செ...
நாளை செம போதயோடு வரும் அதர்வா

நாளை செம போதயோடு வரும் அதர்வா

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களுள் ஒருவர் அதர்வா. அவரது நடிப்பில் `செம போத ஆகாதே' மற்றும் `இமைக்கா நொடிகள்' உள்ளிட்ட படங்கள் ரிலீசுக்கு தயாராகி இருக்கின்றன. இதில் `செம போத ஆகாதே' படம் வருகிற மே 18-ஆம் தேதி வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், படத்தின் புதிய டிரைலர் ஒன்று நாளை மாலை 6 மணிக்கு ரிலீசாக இருப்பதாக நடிகர் அதர்வா அவரது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். பத்ரி வெங்கடேஷ் இயக்கியிருக்கும் இந்த படத்தில் அதர்வா ஜோடியாக மிஷ்டி, அனைகா சோதி நடித்துள்ளனர். அர்ஜய், ஜான் விஜய், கருணாகரன், எம்.எஸ்.பாஸ்கர், மனோபாலா, பிரின்ஸ் நிதிக் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். யுவன் ஷங்கர் ராஜா இசையில், கோபி அமர்நாத் ஒளிப்பதிவில் உருவாகி இருக்கும் இந்த படத்தை கிக்கஸ் என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்திருக்கிறது. `பானா காத்தாடி' படத்திற்கு பிறகு...
சென்னை சூப்பர் கிங்ஸ்க்கு எதிராக பிங்க் ஜெர்ஸி அணிந்து விளையாடுகிறது ராஜஸ்தான் ராயல்ஸ்

சென்னை சூப்பர் கிங்ஸ்க்கு எதிராக பிங்க் ஜெர்ஸி அணிந்து விளையாடுகிறது ராஜஸ்தான் ராயல்ஸ்

HOME SLIDER, NEWS, செய்திகள்
ஐபிஎல் தொடரின் 43-வது லீக் ஆட்டம் நாளை இரவு 8 மணிக்கு ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் மைதானத்தில் நடைபெறுகிறது. இதில் ராஜஸ்தான் ராயல்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்த போட்டியின்போது கேன்சர் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர்கள் பிங்க் கலர் ஜெர்ஸி அணிந்து விளையாடுகிறார்கள். ராஜஸ்தானில் உள்ள சவாய் மான்சிங் மெடிக்கல் காலேஜ் சார்பில் ‘கேன்சர் அவுட்’ என்ற நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேப்டன் ரகானே, ஹெய்ன்ரிச் கிளாசன், மஹிபால் லாம்ரோர், கிருஷ்ணப்பா கவுதம் கலந்து கொண்டு பிங்க் கலர் ஜெர்ஸியை அறிமுகம் செய்து வைத்தனர். கேன்சருக்கு எதிராக வழிப்புணர்வு பிரசாரத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் இணைந்துள்ளது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன ரகானே கூறுகையில் ‘‘ஒரு விளையாட்டு வீரராக நான் என்ன நினைக...
உலகமே உற்றுநோக்கும் வரலாற்றில் எழுதக்கூடிய அந்த சந்திப்பு சிங்கப்பூரில் நடக்க உள்ளது

உலகமே உற்றுநோக்கும் வரலாற்றில் எழுதக்கூடிய அந்த சந்திப்பு சிங்கப்பூரில் நடக்க உள்ளது

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
அடுத்தடுத்து ஏவுகணை சோதனைகள், அணு ஆயுத பரிசோதனை என சர்வதேச நாடுகளை மிரட்டி வந்த வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன், தற்போது தனது சேட்டைகளை மூட்டை கட்டி வைத்து மற்ற நாடுகளுடன் இணக்கமான போக்கை கடைப்பிடிக்க விரும்புகிறார். கடந்த மாதம் தென்கொரியா அதிபர் மூன் ஜேஇன் உடன் கிம் நடத்திய வரலாற்று சிறப்பு மிக்க பேச்சுவார்த்தை உலக நாடுகளிடையே வரவேற்பை பெற்றுள்ள நிலையில், அமெரிக்க அதிபர் டிரம்ப் உடன் நடத்த உள்ள பேச்சுவார்த்தை அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. டிரம்ப் - கிம் சந்திப்பு நடத்த பல்வேறு நகரங்கள் பரிசீலிக்கப்பட்டன. இந்நிலையில், ஜூன் 12-ம் தேதி சிங்கப்பூரில் கிம் ஜாங் அன்னை சந்திக்க உள்ளேன். உலக அமைதிக்கு நாங்கள் எடுத்துக்கொள்ளும் முயற்சியின் சிறப்பு மிக்க தருணம் என டிரம்ப் தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.  ...